Thursday, October 25, 2012

ஷாஹி மட்டன் பிரியாணி - Shahi Mutton Biriyani







ஷாஹி  மட்டன் பிரியாணி
மட்டனில் வேகவைக்க
மட்டன் - 350 கிராம் கிராம்
மிளகு- அரை ஸ்பூன்
கிராம்பு - 3
பட்டை - ஒரு துண்டு
கருப்பு ஏலக்காய் - ஒன்று
பூண்டு - அரை ஸ்பூன் பொடியாக நறுக்கியது
வெங்காயம் - ஒன்று மீடியம் சைஸ்
கீ ரைஸ்
எண்ணை + நெய் இரண்டு மேசை கரண்டி
ஷாஜீரா அரை தேக்கரண்டி
பிரியாணி இலை இரண்டு
கரம் மசாலா - ஒரு ஸ்பூன்
முந்திரி – 6
தரமான பாசுமதி அரிசி  கால் கிலோ
கிரேவிக்கு
எண்ணை + நெய் இரண்டு மேசை கரண்டி
வெங்காயம் ஒன்று பெரியது
தயிர் – 100 மில்லி
காஷ்மீரி சில்லி பொடி ஒரு தேக்கரண்டி
கொத்துமல்லி தூள் அரை தேக்கரண்டி
ஜாதி பத்திரி தூள் – ¼ தேக்கரண்டி
பச்சமிளகாய்  ஒன்று



செய்முறை

மட்டன் வேகவைக்க வேண்டியவைகளை போட்டு
4 டம்ளர் தண்ணீர் ஊற்றி முன்று விசில் விட்டு வேகவைக்கவும்.
ரைஸ் குக்கரில் நெய்யை ஊற்றி ஷாஜிரா ,பிரியாணி இலை சேர்த்து வதக்கி வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.
பிறகு அரிசி சேர்த்து சிறிது நேரம் வதக்கி கரம் மசாலா பொடி சேர்க்கவும்.
வெந்த மட்டன் தண்ண்ணீரை முன்று டம்ளர் சேர்த்து ரைஸ்குக்கரை ஆன் செய்து கீ ரைஸ் உதிரியாக தயாரிக்கவும்

தனியாக வாயகன்ற வானலியில் நெய் + எண்ணையை ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி , இஞ்சி பூண்டு , பச்ச்ச மிளகாய் சேர்த்து வதக்கவும்.
மட்டன் சேர்த்து மிளகாய் தூள், உப்பு, கொத்துமல்லி தூள்,தயிர் சேர்த்து நன்கு வதக்கவும். மீதி உள்ள மட்டன் தண்ணீரை தாளித்த கிரேவியுடன் சேர்த்து தீயின் தனலை அதிகப்படுத்தி நன்கு கிளறி , மசாலா சேர்ந்ததும். மட்டன் துண்டுகளைதனியாக எடுத்து வைக்கவும்.
ரெடியாக தயாரித்து வைத்து உள்ள கீரைஸை கால் பாகம் எடுத்து தனியாக வைக்கவும்

முக்கால் பாகம் உள்ள கீரைஸின் மீது கிரேவி மட்டன் போட்டு கிளறி மேலே எடுத்து வைத்த சாதத்தை சேர்த்து கலர் பொடி () குங்குமபூ கரைசலை தூவி 15 நிமிடம் தம்மில் விடவும்.
சுவையான ஷாஹி மட்டன் பிரியாணி ரெடி.






இதில் தக்காளி கிடையாது. மணமும் சுவையும் ஹோட்டலில் செய்வது போலவே இருக்கும்


Linking to Asiya's Feast of sacrifice 

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

ஸ்...ஸ்... சூப்பர்...

நன்றி...

நட்புடன் ஜமால் said...

நல்லாத்தான் இருக்கு பார்க்கவே, ஆனால் சிக்கனும் மீனும் தான் இறங்குது உள்ளே ...

Asiya Omar said...

பார்க்கவே அருமையாக இருக்கு.சூப்பர்.என்னுடைய இவெண்ட்டிற்கு லின்க் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

Priya Suresh said...

Pasikuthu paathathume,delicious and flavourful briyani.

Jaleela Kamal said...

நன்றி தனபாலன் சார்

ஜமால் மீனு , சிக்கன் தானே , மட்டனுக்குபதில் அதை சேர்த்துக்கோங்கோஓ

வருகைக்கு மிக்க நன்றி


நன்றி ஆசியா

பிரியா பசிக்குதா உடனெ செய்யுங்கள்


Unknown said...

வாவ் அக்கா பிரியாணியினை பார்ர்கும் பொழுதே அப்படியே சாப்பிடனும் போல இருக்கு அக்கா.. சூப்பர்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா