புனித தியாக திருநாள் வாழ்த்துக்கள்/ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்
இந்தியாவில் இன்று பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும் புனித தியாக திருநாள் வாழ்த்துக்க்ள், இந்த பெருநாள் அன்று இஸ்லாத்தின் 5 கடமைகளும் ஒன்றான ஹஜ்செல்வதை வசதி உள்ளவர்கள் ஹஜ் சென்று தங்கள் கடமையை நிறைவேற்றுவார்கள்.
ஹஜ் க்கு செல்லாதவர்கள் பெருநாளுக்கு ஒரு நாள் முன்பு நோன்பு வைக்கனும்.இந்த நோன்பு வைப்பதால் நாம் செய்த சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்.
இந்த நோன்புக்கு பெயர் "
அரஃபா நோன்பு" என்பதாகும்.
ஹஜ் க்கு சென்றவர்கள் அரஃபா என்ற மைதானத்தில் ஒன்று கூடுவார்கள்.
நானும் குடும்பத்துடன் ஹஜ் செல்லவேண்டும் என்று நாட்டம் வைத்துள்ளேன். அதை அல்லாஹ் சீக்கிரம் நிறைவேற்றி வைக்க எனக்காக துஆ செய்யுங்கள்.
நோன்பு பெருநாள் , ஹஜ் பெருநாள் தொழுகை என்பது , இறைவனுக்கு நன்றி செல்லுத்தும் பொருட்டு உலகில் உள்ள அனைத்து முஸ்லீம் களும் காலை சூரியன் உதமாகும் போது இரண்டு ரக் அத்தை கொண்ட தொழுகையை நிறைவேற்றுவதாகும்.
ஹஜ் பெருநாள் தொழுது முடித்து வந்து நாம் சமைத்து வைத்திருக்கும் இனிப்பு பண்டத்தை சாப்பிடவேண்டும்.
எப்போதும் வெளிநாடுகளில் ஒரு நாள் முன் பெருநாள், மறுநாள் இந்தியாவில் வரும். இந்த முறை இரண்டு நாள் தள்ளி வந்துள்ளது.
இங்கு துபாயில் சனிக்கிழமை - 04.10.14 அன்று பெருநாள் நல்லபடியாக முடிந்தது.
நாங்கள் இங்குள்ள ஈத்கா என்னும் தொழுகை திடலில் குடும்பத்துடன் சென்று தொழுது வந்தோம்.
இந்த தடவை 5 வருடமாக எங்க கூட இல்லாமல் இந்த முறை என் பெரிய பையன் எங்களுடன் வந்து சேர்ந்து பெருநாள் கொண்டாடியது மிக்க மகிழ்சி.
இந்த வருடம் ஹஜ் பெருநாளுக்கு நான் செய்தது.
காலை டிபன்
- ஷீர் குருமா/Sheer Kurma
- மட்டன் சேமியா/Mutton Semiya
- ஊறுகாய் / Pickle
- இஞ்சி டீ/Ginger Tea
மதியம்
- மட்டன் பிரியாணி(Mutton Biriyani)
- எண்ணை கத்திரிக்காய்(ennai kaththirikkaay) (Bringal Curry)
- ஓமம் தயிர் பச்சடி (Ajwain Raita)
- பாதாம் ஹல்வா ( Badam /Almond Halwa)
- சாலட் ( Salad)
- லெமன் பிளாக் டீ ( Lemon Black Tea)
இரவு
- ப்ரட் புல்ஸ் ஐ ( Bread Bulls Eye)
- மசாலா டீ ( Masala Chai)
படங்கள் பிறகு இணைக்கிறேன்
ஹஜ் பெருநாளுக்கு எல்லாரும் ஆடு அறுத்து அதை உறவினர்களுக்கும் , தெரிந்தவர்களுக்கும் பண்டமாற்று போல் ஒருவருக்கு ஒருவர் பங்கிட்டு கொடுப்பார்கள், அப்படி எல்லாவீடுகளில் இருந்து வரும் கறிகளை பதப்படுத்துவார்கள். முன்றில் ஒரு பங்கை ஏழைகளுக்கும் கொடுப்போம்.
போன வருடம் ஹஜ் பெருநாள் அன்று ஊரில் இருந்தேன். அப்போது மாமியார் வீட்டில் , குர்பாணி கொடுத்தபோது கிட்னி, ஈரல், மட்டன் எல்லாவகைகளையும் தனித்தனியாக செட்டி நாடு மட்டன், மிளகு ஈரல், கிட்னி ஃப்ரை, என பலவகைகளை எல்லோருக்கும் செய்து கொடுத்து சந்தோஷப்படுத்தினேன், எல்லாரும் ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிட்டது போல் இருக்கு என்றார்கள்.
அம்மாவீட்டில் கறி தக்குடி எல்லாரும் சேர்ந்து போட்டோம்.
முக்கியாமாக துண்டு கறிகளை
உப்பு கண்டம் போடுவார்கள்.உப்பு கன்டம் கறி தயாரித்து வெளிநாடுகளில் உள்ளவர்கள் பேக்கிங் செய்து அனுப்புவார்கள்.
கறியை சுத்தம் செய்து தண்ணீரை வடித்து அதில் அவரவர் விருப்ப மசாலாவை சேர்த்து பிரட்டி சிறிது நேரம் ஊறவைத்து சனல் கயிற்றை கோணி ஊசியில் கோர்த்து இந்தகறியை தூர தூரமாக கோர்த்து கொடுப்போல் காயவைக்கவேண்டும்.காய்ந்த கறியை ஈரமில்லாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து தேவைக்கு தட்டி பொரித்து சாப்பிடலாம்.
இதை தண்ணீர் படாமல் வைத்து தேவைக்கு எடுத்து தட்டி அப்பளம் பொரிப்பது போல் பொரித்து ரசம் சாதம், பருப்பு சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.ஏற்கனவே 4 வருடம் முன் போட்ட பதிவு தான் மீண்டும் இப்போது லின்க் கொடுத்துள்ளேன்.
நிறைய பேருக்கு வந்து குமியும் கறியை வைத்து என்ன செய்வதென்று தெரியாது
இந்த குர்பாணி கறியை வைத்து
1. உப்பு கன்டம்
2.கறி தக்குடி
3. ஸ்பேர் பாட்ஸ் பிரியாணி
4. கட்லட் செய்தும் ஃப்ரீஜரில் ஸ்டோர் செய்யலாம்.
உப்புகன்டம் கறி ( காயப்போட்ட கறி/தட்டுகறி)
http://samaiyalattakaasam.blogspot.com/2010/11/uppu-kandam.html
இதில் மசாலாவகைகள் அவரவர் விருப்பத்துக்கு, சீரகதூள் , கரம்மசாலா தூள் சோம்பு தூள் வகைகளும் சேர்த்து கொள்வதாக இருந்தாலும் சேர்த்து கொள்ளலாம்.,
ஆட்டு ஈரல் பிரியாணி
இதை ஸ்பேர் பார்ட்ஸ் ரைஸ் என்று கீரையுடன் செய்வோம் , இந்த ஹஜ் பெருநாளில் செய்யசரியாக இருக்கும். ரெசிபி படங்கள் தான் சரியாக இல்லை.
அனைவருக்கும் புனித தியாக திருநாள் வாழ்த்துக்கள்
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/