பேலியோ வெஜ்ஜி - லன்ச் மெனு
கிரில்ட் மிக்ஸட் வெஜ்டேபுள்
Grilled Mixed Vegetables
#grill#vegetable#Paleo
தேவையான பொருட்கள்
...
காலிப்ளவர்
கத்திரிக்காய்
ஜுக்கினி
கேரட்
சிவப்பு குடமிளகாய்
பச்சை குடமிளகாய்
கோவைக்காய்
புடலங்காய்
எல்லாம் சேர்ந்தது முக்கால் கிலோ
ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி மிளகு தூள், இரண்டு மேசைகரண்டி எலுமிச்சை சாறு, உப்பு ஒரு தேக்கரண்டி, ஆச்சி கபாப் மசாலா ஒரு தேக்கரண்டி., கார்லிக் பட்டர் (அ ) ஆலிவ் ஆயில் 2 மேசைரண்டி
செய்முறை
காய் கறிகளை அரிந்து கழுவி மேலே கொடுக்கப்பட்டுள்ள மசலாக்களை சேர்த்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.
300 டிகிரி முற்சூடு படுத்திய ஓவனில் 30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
ஓவன் இல்லாதவர்கள் ஒரு நான்ஸ்டிக் தவ்வாவில் குறைவான தீயில் வைத்து வேகவைத்து எடுக்கவும்.
காய்கறிகள் மேலே உள்ள காய்கள் மற்றும் உங்களுக்கு விருப்பமான காய்களும் சேர்த்துகொள்ளலாம்.
பேலியோ டயட் ரெசிபிகள்
Paleo veggie grill
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
3 கருத்துகள்:
முற்சூடுன்னா ?
கொஞ்சம் விளக்கமா சொல்லிடுங்களேன்
.
இப்ப தான் மைக்ரோ வேவ் ஓவன் புதுசா வாங்கினோம், பேச்சிலர் ரூம்ல
அதிகபட்ச வெப்பம் வைக்கனுமா ?
முற்சூடு என்பது கிரில் ட்ரேவை உள்ளே வைப்பதற்கு முன் ஓவனை சூடு படுத்தனும்,
அதாவது ஓவன் கிரில் பண்ணுவதற்கு முன் சூடாக இருக்கனும். 180 டிகிரி அல்லது 200 டிகிரியில் செட் பண்ணி விட்டு 20 நிமிடம் எதுவும் வைக்காமல் சூடு படுத்தனும்.
அதில் 4 ஆப்ஷன் இருக்கும் அதில்மேல் ரேக் மட்டும் சூடு படுத்துவது, மிடில் ரேக் , கீழே உள்ள ரேக் மட்டும், மற்றும் மேல் கீழ் சீராக அப்படி செட்டிங் இருக்கும் நமக்கு ஏற்றார் போல செட் பண்ணிக்க வேண்டியது.
அதே போல் சிக்கன் கிரில் வைக்கும் போது மேலே கிழே இரண்டு செட்டிங்க ஒரே சுவிட்சில் இருக்கும் அது தான் பொதுவாக வைக்கனும். வெந்து விடும் ஆனால் நமக்கு கிரிஸ்பி ஆகாது, அதற்கு மேல் ட்ரே ஆப்ஷன் கிளிக் செய்து கடைசியாக 10 நிமிடம் வைக்கனும்
சூப்பர்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா