இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும்.
சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில்.
https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw
மீனை உப்பு போட்டு கழுவி நன்கு சுத்தம் செய்து நடுவில் உள்ள முள்ளை எடுத்து விடவும்.
மீனை நடுவில் (சைடில் எலுமிச்சை அரை வில்லைகளாக கட் செய்து வைக்கவும். ஒரு ஸ்டீமரில் ஒரு தட்டு வைத்து அதன் மேல் இரண்டு மீனை யும் வைக்கவும்
பூண்டு தோல் எடுத்து விட்டு கழுவி அதையும் அதன் மேல் சேர்க்கவும். ,கொத்தவரங்காய் , பீன்ஸ் , நீளவாக்கில் அரிந்து மீனுடன் அவிய பரவலாக வைக்கவும். கேரட்டை ஒரு விரல் நீளத்துக்கு அரிந்து மீனில் சைடில் மேலே பரவலாக அடுக்கவும். ஸ்டீமரை மூடி – 15 நிமிடம் ஸ்டீம் செய்யவும்.
தனியாக ஒரு பேனில் பட்டர் சேர்த்து பொடியாக அரிந்த வெங்காயம் , பூண்டு பொடியாக அரிந்து சேர்த்து வதக்கவும்.
அடுத்து வெங்காய தாள் சேர்த்து வதக்கவும். அடுத்து ஆயிஸ்டர் ஸாஸ், சோயா ஸாஸ்,கருப்பு மிளகுதூள், உப்பு, டொமடோ கெட்சப்,பரவுன் சுகர், பட்டர் எல்லாம் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கி சிறிது நேரம் கொதிக்க விடனும்.
இப்போது ஸ்டீம் பண்ண மீன் மற்றும் காய்கறிகளை ஒரு தட்டில் அரேஞ்ச் செய்து மேலே செய்து வைத்த ஸாஸை மீன் காய் மேலே ஊற்றவும்.
பேரிட்சைபழத்தை சுடு வெண்ணீரில் ஊறவைத்து சிறிது ஷாப்ட் ஆனது கொட்டையை எடுத்து விட்டு மிக்சியில் ஊறவைத்த தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
ஒரு பேனில் பட்டரை உறுக்கி அதில் அரைத்த பேரிட்சை விழுதை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்
அடுத்து ஹைட் அன்ட் சீக் பிஸ்கேட்டை பொடித்து சேர்க்கவும். அடுத்து உப்பு, ப்ரவுன் சுகர் சேர்த்து நன்கு ஹல்வா பதத்துக்கு கிளறி கடைசியாக தேன் மற்றும் வறுத்த முந்திரியில் 35 கிராம் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
நன்கு கிளறி பரிமாறும் பவுளில் மாற்றி விட்டு மேலே மீதி இருக்கும் முந்திரியை கொண்டு அலங்கரிக்கவும்.
பர்பி, தேங்காய் பர்பி, பிஸ்கேட் தேங்காய் பர்பி, பிஸ்தா தேங்காய்பர்பி
தேங்காய் 250 கிராம்
ஹைட் அன்ட் சீக் பிஸ்கேட் அரை பாக்கெட்
ப்ரவுன் சுகர் 100 கிராம்
பிஸ்தா 30 கிராம்
முந்திரி 25 கிராம்
உப்பு அரை சிட்டிக்கை
நெய் 2 மேசைகரண்டி
பால் 2 மேசைகரண்டி
ஹைட் அன்ட் சீக் பிஸ்கேட்டை பொடித்து கொள்ளவும்
முதலில் நெய்யில் முந்திரியை வறுக்கவும்.
முந்திரியை எடுத்து விட்டு அதில் தேங்காயை சேர்த்து 7 நிமிடம் வதக்கவும்.
பிறகு ஹைட் அன்ட் சீக் பிஸ்கேட் மற்றும் பரவுன் சுகர் , பாதி பொடித்த பிஸ்தா, மற்றும் உப்பை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும். வறுத்த முந்திரியை பொடியாக நறுக்கி சேர்க்கவும்
நன்கு சுருள கிளறி ஒரு தட்டில் ஊற்றி சமப்படுத்தவும்.
மேலும் மீதி உள்ள பொடித்த பிஸ்தாவை மேலே தூவி, வேண்டிய வடிவில் கட் செய்யவும். பறிமாறும் தட்டில் பர்பியை மாற்றி விட்டு பிஸ்தா ப்ளேக்ஸ் தூவி அலங்கரிக்கவும்.சுவையான ஹட் அன்ட் சீக் பிஸ்தா ப்ளேவர் தேங்காய் பர்பி ரெடி.
பர்பி,தேங்காய் பர்பி, பிஸ்கேட் தேங்காய் பர்பி, பிஸ்தா தேங்காய் பர்பி,பாரம்பரிய சமையல்
ஒரு சந்தோஷமான விசியம் பார்லிஜி பிஸ்கட் நடத்திய பண்டிகை பலகாரங்கள் சமையல் போட்டிக்கு நான் அனுப்பிய (ஹைட் அன்ட் சீக் பிஸ்கேட் பேரிட்சை ஹல்வா மற்றும் ஹைட் அன்ட் சீக் தேங்காய் பிஸ்தா பர்பி) இரண்டும் தேர்வாகி போட்டியில் பங்கு பெற அழைப்பு வந்தது, நான் இது வரை நேரடி சமையல் போட்டிகளில் கலந்து கொண்டதில்லை இது தான் முதல் தடவை, அங்கு சென்று மறுபடி ஹைட் அன்ட் சீக் தேங்காய் பிஸ்தா பர்பி செய்து கொண்டு போய் வைத்தேன். அதில் 75 பேர் கலந்து கொண்டனர் 21 பேர் பைனல்க்கு தேர்வாகியதில் அதில் நான் ஒன்று.
My First Live cooking Video - Please see below link and give your valuable comment
இங்கு இந்த பதிவை பார்ப்பவர்கள் அந்த லைவ் குக்குங் யுடியுப் போஸ்டில் ஒரு உங்கள் கருத்துக்களை ஷேர்செய்யலாமே..
இனிப்பு,ஹல்வா,பண்டிகை கால பலகாரங்கள்
I am very happy to say and share that I have Participated in live cooking event organized by Parle Hide and seek biscuit at Sky walk, Chennai. I was selected 21 out of 75 participants. Since it is a living cooking it was really very thrilling. Also I met Chef Rakesh Raghunathan and discussed some Traditional Recipes.
16.12.18
பிறகு அங்கு 21 பேரையும் இரண்டு பேட்சாக சமைக்க சொல்லி 20 நிமிடம் கொடுத்தார்கள்.தேவையான பொருட்களும் அவர்கள் அங்கு என்ன வைத்துள்ளார்களோ அதில் தான் செய்யனும்.
எனக்கு ஒரேடென்ஷன் செலக்ட் ஆகிறோமோ இல்லையோ ஆனால் ஏதாவது ஒரு ரெசிபி செய்துடனும் என்று ஹல்வா செய்துட்டேன். கிழே படம் இனைக்கிறேன்.
அங்கு செப்ஃப் ராகேஷ் ரகுநாதன் அவர்களை சந்தித்தோம் அவரும் ஶ்ரீ கிருஷனா ஸ்வீட்ஸ் செப்ஃப் களும் தான் அனைவருடைய பலகாரங்களையும் டேஸ்ட் செய்து மார்க் கொடுத்த்தது, அங்கு செலக்ட் ஆன ரெசிபிகள் சர்க்கரை பொங்கல் , பால் கொழுக்கட்டை மற்றும் சாக்லேட் பர்பி.
கிழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பாருங்கள் லைவ் குக்கிங் ,
இன்னும் நான் ஹைட் அன்ட் சீக் பிஸ்கேட் சேர்த்து கேசரியும் செய்து எடுத்து சென்றேன், செஃப் என் ரெசிபிகளை ருசி பார்த்தார், ரொம்ப அருமையாக இருக்கிறது என்றார். பர்ஃபி,கேசரி, ஹல்வா முன்றையும் அவர்கள் ருசி பார்த்ததில் மிகவும் சந்தோஷம்.
அந்த பாக்ஸ் ல இருப்பது லைவ் குக்கிங்கு எனக்கு கொடுத்த தேவையான பொருட்கள் அப்படியே மீதி எங்களுக்கு தான் வீட்டுக்கு எடுத்து செல்ல சொன்னார்கள். வீட்டுக்கு வந்த பிறகு அந்த பொருட்களை வைத்து மேலே உள்ள பேன் கேக் செய்துபார்த்தேன் ஆஹா இதை கூட செய்து இருக்கலாமேன்னு தோன்றியது. இது ஒரு நல்ல அனுபவம். சென்னை அடிக்கடி இது போல உணவு திருவிஷா நடக்கிறது , வீட்டில் உள்ள அனைத்து பெண்களும் சூப்பராக கலக்குகிறார்கள்.
அரேபியர்களின் கப்ஸா ரைஸ் சமைப்பது எப்படி? அரபு நாடுகளில் அவர்கள் அன்றாடன் உண்ணும் உணவு வகைகளில் இந்த கப்ஸா சாதம்(ரைஸ்) மு...
About Me
Jaleela Kamal
சமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு.
தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.