Monday, June 25, 2012

மருதாணி கோன் செய்யும் போது

இது என் தங்கை பசிராவின் டிப்ஸ்

1. மருதாணி கோன் செய்யும் போது ஸ்பூனால் எடுத்து போடுவார்கள் அது சரியா உள்ளே விழாது.ஆகையால் முதலில் ஊரில் நாட்டங்கடையில் சர்க்கரை அரிசி போன்றவைக்கு பெரிய பொட்டலம் மடிப்பார்கள் அது போல் பொரிய பொட்டலமா கோன் செய்து கலக்கிய மருதாணியை எல்லாம் அதில் போடுங்கள்.

2. இப்போது சிறிய சிறிய கோன்கள் தயாரித்து சல்வர்டேப் போட்டு ஒட்டுங்கள்.


3. அடுத்து பெரிய கோனின் அடியில் கொஞ்சம் பெரிய ஹோலாக கட் செய்து சிறிய கோனில் விட்டு முக்கால் பாகம் வந்ததும் மடித்து டேப் போட்டு ஒட்டி கொள்ளுங்கள்.

4. இது போல் நிறைய செய்து கல்யாண வீட்டில் எல்லோருக்கும் ஒவ்வொரு கோன் கொடுக்கலாம்.


5. பியுட்டி பார்லர் வைத்து இருப்பவர்களுக்கும் இது போல் செய்வது சுலபம்.

6. நாமும் நிறைய தயாரித்து பிரீஜரில் போட்டு வைத்து கொள்ளலாம்.தேவைக்கு எடுத்து பயன் படுத்தலாம்.
7.விருந்தினர்கள் வந்தாலும் குழந்தைகளுக்கு போட்டு விடலாம்.





Friday, June 15, 2012

குழந்தைகளின் நகத்தை

1. குழந்தைகளின் நகத்தை உடனே உடனே வெட்டி விட வேண்டும்.
ரொம்ப பார்த்து ஜாக்கிரதையாக வெட்டனும், ஷாஃப்ட் நகவெட்டி வைத்து வெட்ட வேண்டும்.
2.குழந்தைகள் குளித்து முடித்ததும் அவர்களின் கையை ஈர படுத்தி லேசாக நாம் கடித்தால் உடனே வந்துவிடும்.நக வெட்டி போட்டால் கையை ஆட்டினால் குத்தி விடும் .


2. நகத்தை வெட்ட வில்லை என்றால் முகம் முழுவதும் கீறிக்கொண்டு ஒரே வீல் வீல் என்று அழுவார்கள்.
உங்களுக்கும் பார்த்தால் ஒன்றும் புரியாது எதற்காக அழுகிறார்கள் என்பது, எங்கே கீறியதும் என்றும் உங்களுக்கு தெரியாது.

Wednesday, June 6, 2012

குழந்தைகளுக்கு ஆறு மாதத்திலிருந்து


ஆறு மாதத்திலிருந்து எல்லா உணவும் கொஞ்ச கொஞ்சமாக பழக்க படுத்தலாம். நல்ல மசித்து முன்று ஸ்பூன் அளவில் கொடுத்தால் போதும்.

ஆறு மாதம் முதல் லேசான காரம், புளிப்பு,இனிப்பு எல்லா சுவையையும் கொடுத்து பழக்க படுத்தனும்.

மில்க் பிக்கிஸ் பிஸ்கேட், மேரி பிஸ்கேட் கூட ஒன்று வெண்ணீரில் ஊறவைத்து ஊட்டி விடலாம்.

சாதம் நல்ல குழைய வேகவைத்து அதில் கீரை வெந்த தண்ணீர் சேர்த்து ஒரு சொட்டு நெய் உருக்கி சேர்த்து ஊட்டி விடவும்.

பிறகு பருப்பு வேகவைத்து அதையும் சேர்த்து சாததில் கலந்து நன்கு மசித்து கொடுக்கலாம்.
பருப்பு சிருபருப்பு சேர்த்து கொண்டால் நல்ல வெந்து விடும் ஈசியாக ஜீரணம் ஆகும்.

கிழங்கு வகைகளை வேகவைத்தும் ஊட்டி விடலாம்.


ஆப்பிலை வேக வைத்து தோல் கொட்டையை நீக்கிவிட்டு மிக்சியில் அரைத்து ஊட்டி விடலாம்.

கிச்சிடி போல் அரிசியுடன் கேரட், உருளை, எலும்பில்லாத சிக்கன் சிறிது சேர்த்து பூண்டு, சிறிது மிளகு தூள் சேர்த்து வேகவைத்து மசித்து அல்லது மிக்சியில் கூழ் போல் அரைக்காமல் முக்கால் பதம் அரைத்து ஒரு விரலால் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விடவும்.

(தொடரும்)

Sunday, June 3, 2012

வரனும் ஆனா எப்ப வருவேன்னு தெரியல





பதிவுலக தோழ தோழியர்களே எல்லாரும் நலமா? என்ன கொஞ்சம் நாளா ஜலீலாக்காவ காணுமே தேடினீங்களா? என்ன செய்வது தீடீருன்னு உடல் நலம் சரியில்லாம போய்விட்டது. இவ்வளவு நாள் ஹாஸ்பிட்டலில் இருந்து வந்தேன். இப்ப பரவாயில்லை. ஒன்னும் இல்ல சாதாரான இருமல் தான் சீரியஸ் ஆகிவிட்டது. இனி தான் உடல் நலம் தேறிவரனும். கை துரு துன்னுவருது ஆனா டைப் பண்ண முடியல, சீக்கிரம் வரனும் ஆனால் எப்ப நல்ல ஆகிவருவேன்னு தெரியாது.. எனக்காக துஆ செய்யுங்கள்.

என்னை கவனித்து கொண்டு ஆதரவு கொடுத்த என் கணவர், என் பிள்ளைகள், இரு தோழிகள் ஹபஷியா குடும்பத்தினர் மற்றும் சல்மா வுக்கும் மிக்க நன்றி என் அதிக துஆக்களும் நீங்களும் அவர்களுக்கு துஆ செய்யுங்கள்.


ஒரு நாளைக்கு எத்தனை பேர் வந்து பார்த்து பயனடைகிறீர்கள், ஏன் ஒரு கமெண்ட் போட கூட மனமில்லையா? ஒரு பதில் போட்டால் எனக்கும் சந்தோஷமாக இருக்கும் இல்லையா? சில பழைய பயனுள்ள பதிவுகள் நிறைய  யாரும் படிக்காதது நிறைய இருக்கு . ஏற்கனவே இருப்பதை போன மாதமே  ரீபோஸ்ட் கொடுத்து வைத்துள்ளேன். அனைவரும் பயனடைந்து கொள்ளுங்கள்.



டிஸ்கி: சென்னை ப்ளாசா பக்கமும் வாங்க. அப்டேட் டிசைன்ஸ் வரும் யாருகும் ஆர்டர் தேவை என்றால் மெயில் பண்ணுங்கள். இதன் முலம் நிறைய தோழிகள் புர்கா விபரம் கேட்டு இருக்கிறார்கள் சிலர் ஆர்டரும் கொடுத்து இருக்கின்றனர். ரொம்ப சந்தோஷம்.




Friday, May 18, 2012

குழந்தைகளுக்கு டயப்பருக்கு பதில்

குழந்தைகளுக்கு டயப்பர் போட்டு அப்படியே அடைத்து வைபப்தால் தேவையற்ற ரேஷ், புண்கள் , எரிச்சல், அலர்ஜி ஏற்படுகின்றன.

அதை தவிர்க்க தேவையான நேரம் மட்டும் டயப்பர் பயன் படுத்தி கொண்டு மற்ற நேரங்களில் கீழே படத்தில் காட்டியுள்ளவாரு செய்து பயன் படுத்தலாம்.

2 மணி நேரத்துக்கு ஒரு முறை துணி நனைந்து இருக்குதான்னு செக் பண்ணனும்.

பிறந்த குழந்தைகளுக்கு  3 மாதம் வரை இருக்கும் இடம் விட்டு அசைய வாய்ப்பில்லை கை காலை ஆட்டி கொண்டு இருப்பார்கள்.

அப்போது கீழே ரப்பர் ஷீட் விரித்து நியுஸ் பேப்பர் கொஞ்சம் திக்காக வைத்து விட்டு சின்ன மெல்லிய துணியை கட்டினால் போதும். ஈரம் ஆனதும் பேப்பரை எடுத்து விட்டு வேர பேப்பர் மாற்றி கொள்ளலாம்.

வெது வெதுப்பான வெண்ணீரில் பஞ்சை நனைத்து துடைத்து விட்டு வேற துணி மாற்றி விட்டு கீழே மறுபடி பேப்பரை மாற்றி விடுங்கள்

துணியை அதிகம் துவைக்க தேவையில்லை, பேம்பரும் செலவாகாது,

குழந்தைகள் இரவில் தூங்கும் போது டயப்பர் தேவைதான் பேம்பர் போடும் போது தேஙகாய் என்னை அல்லது ஆலிவ் ஆயில் தடவி போட்டு விடுங்கள்.


1. குழந்தைகளுக்கு டயப்பருக்கு பதில் நாமே நேப்கின் செய்து  பயன் படுத்துங்கள்.

2. அது வெள்ளை கலர் பெரிய சதுர வடிவ நாப்கீனை மடித்து வைத்து பிளாஸ்கிட் அதன் மேல் போடு ஜட்டியும் இருக்கிறது அதை பயன் படுத்தலாம்.




3. இதனால் தேவையில்லாத ரேஷிலிருந்து பாது காத்து கொள்ளலாம்.


4. ஒரு நாளைக்கு நான்கு இருந்தால் கூட போதும், மொத்தமா ஊறவைத்து துவைத்து கொள்ளலாம்.

5. அம்மா பாட்டிகளின் ஷாஃப்டான காட்டன் சேலை யும் இது போல் நாப்கின்கள் நிறைய கிழித்துவைத்து பயன் படுத்தலாம்.

ஒரு சேலையை கிழித்தால் இரண்டுமாதத்துக்கு தேவையான் நாப்கின் துண்டுகள் கிடைக்கும்




6. அதே போல் ஆண்களின் காட்டன் லுங்கியை நன்கு அலசி கிழித்து பயன் படுத்தலாம்.

7.. படத்தில் காட்டியுள்ளபடி செய்து பயன் படுத்தவும்.

ஆக்கம்

ஜலீலாகமால்
(தொடர்ரும்)

Tuesday, May 15, 2012

கேழ்வரகு இட்லி - Ragi Idli






கேழ்வரகு (ராகி)இட்லி
தேவையானவை
கேழ்வரகு மாவு -  100 கிராம்
இட்லி மாவு – ஒரு குழிகரண்டி
உளுந்து – 25 கிராம்
வெந்தயம் – கால் தேக்கரண்டி
இட்லி சோடா – ஒரு சிட்டிக்கை
உப்பு – தேவைக்கு

செய்முறை
ராகி மாவை லேசாக வறுத்து கொள்ளவும். உளுந்தையும் வெந்தயத்தையும் 1 மணி நேரம் ஊறவைத்து மை போல் அரைத்து கொள்ளவும்.
அரைத்த உளுந்துடன் இட்லி மாவு, ராகிமாவையும் சேர்த்து தேவைக்கு தண்ணீர் ஊற்றி (இட்லிமாவு பத்த்தில்)கலக்கி 8 மணி நேரம் புளிக்க விடவும்.
புளித்த மாவில் இட்லி சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கி இட்லிகளாக வார்க்கவும்.
டயட்டுக்கு ஏற்ற சுவையான டிபன். தக்காளி பூண்டு சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். சர்க்கரை வியாதிகார்களுக்கு ஏற்ற டிபன்.

குறிப்பு: வெளிநாடுகளில் சமைக்கும் பேச்சுலர்கள் மிகச்சுலபமாக செய்து விடலாம். ராகி மாவு எல்லா  தமிழ்க்டைகள், ஆதில் சூப்பர் மார்கெட்களில்  கிடைக்கின்றன. உளுந்து வெந்தயம் ஊறவைப்பதற்கு பதிலாக மிக்சியில் பொடித்தும் மாவுடன் ஊறவைத்துகொள்ளலாம்.இட்லிமாவுக்கு பதில் அரிசிமாவும் சேர்த்து கொள்ளலாம். ரெடி மிக்ஸ் போல மிக்ஸ் செய்தே புளிக்கவைத்து செய்யலாம். ரொம்ப ஈசியான இட்லி, நல்ல் சாஃப்டாக வரும்.
.







Friday, May 11, 2012

சந்தோஷமான அவார்டு

Token of appreciation from the Healthy Morsels Team





கர்பிணி பெண்களுக்கான ஆரோக்கிய சமையலுக்கு ஈவண்ட் 


முன்று பேர் சேர்ந்து நடத்தியதில்என்னுடைய இந்த மட்டன் சூப்பும் தேர்வாகி உள்ளது. மிகவும் சந்தோஷம் 





மட்டன் எலும்பு சூப்



அருசுவையில் முதல் முதல் குறிப்பு கொடுக்க ஆரம்பித்ததில் எனக்கு தெரிந்து நான் தான் தனித்தனியாக தலைப்பில் இது கர்பிணி பெண்களுக்கு, குழந்தைகளுக்கு, இது சர்கக்ரை வியாதி உள்ளவர்களுக்கு ,டயட் செய்பவர்களுக்கு என்று பிரித்து பிரித்து சுட்டி காட்டி போட்டதாக ஞாபகம். .. அதற்கு பிறகு எல்லோரும் அப்படி போட ஆரம்பித்தனர்.



கர்பிணிபெண்களுக்கு பிள்ளை பெற்றவர்களுக்கு என்று கொடுத்த போது நிறைய பேருக்கு எல்லா குறிப்பும் உதவி இருக்கும். 

ஆனால் பயனடைந்தவர்கள் பலர் நன்றி சொல்லி மெயில் அனுப்பி இருக்கின்றனர். ஆனால் சிலருக்கு மனமில்லை..கேட்பதோடு சரி.
யாருக்காக இருந்தாலும் நேரம் ஒதுக்கி எனக்கு தெரிந்ததை சொல்வேன்.

இப்ப அதற்கு தகுந்த மாதிரி இந்த ஈவண்டில் கர்பிணி பெண்களுக்காக நான் நான் கொடுத்த குறிப்பு இடம் பெற்றிருக்கு என்று நினைக்கும் போது ரொம்ப  ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.




உங்கள் சப்போர்ட் இல்லன்னா  இவ்வளவு குறிப்பு கொடுத்து இருக்கமுடியாது
உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி, 

இன்னும் கர்பிணி பெண்களுக்கான சத்தான சமையல் மற்றும் மினிமீல்ஸ் கள் போட இருக்கிறேன்.
 தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.உங்கள் கருத்தும் ஓட்டுக்களும் மிகவும் உற்சாகத்தை தரும்.