Saturday, March 14, 2015

தேர்வு நேரம் பிள்ளைகளுக்கு என்ன உணவு கொடுக்கலாம்?




நியுடெல்லா ஸ்ரீகண்ட் ( ஸ்ரீகாந்த் இல்லை)

&
தேர்வு நேரம் கொடுக்கவேண்டிய சில உணவுவகைகள்

நியுட்டெல்லா என்றால் பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிச்சது, என் சின்ன பையனுக்கு முன்று வேளைக்கும் பிரட்டில்,  ரொட்டியில் தடவி கொடுத்தால் வேற எதுவும் தேவையுல்லை , திடீருன்னு பசி எடுத்தால் நியுட்டெல்லா தான் 
அவனுக்கு பள்ளிக்கு லன்ச் பாக்ஸ் க்கு அடிக்கடி அவன் கொண்டு போவது

இட்லி, தோசை, மைதா தோசை, ரொட்டி , பிரட் பன் எல்லாவற்றிலும் அவனுக்கு நியுட்டேல்லாதான் தடவி கொடுக்கனும்.

டோனட் செய்து அதன் மேல் சாக்லேட் சாஸுக்கு பதில் நியுடெல்லாதான் தடவி கொடுப்பேன்.
இது ஆங்கில பிலாக்கில் ரஃபீதா செய்து இருந்ந்தார்கள் , ஏற்கனவே லஸ்ஸி போல் அடிப்பது தான் , அவர்கள் ஸ்ரீகன்ட்ஆக செய்து இருக்கிறார்கள்.



Nutella Srikhand

தேவையானவை



தயிர் - 175 கிராம்
நியுட்டெல்லா - 1 மேசைகரண்டி அல்லது தேவைக்கு
பொடியாக இடித்த வால்நட் - 2 அல்லது தேவைக்கு


செய்முறை 

தயிரை ஒரு மஸ்லின் துணியில் வடிய விடவும்.
1 மணி நேரம் அல்லது ஒரு நாள் முன்பே பிரிட்ஜில் வைத்து வடிய விடலாம்..

வடிய விட்டால் தண்ணீர் வடிந்து மிககெட்டியான தயிர் கிடைக்கும். 

அதில் நியுட்டெல்லா, வால்நட் சேர்த்து நன்கு கலக்கி கொடுக்க வேண்டியது.

மிக அருமையான சுவையான டெசர்ட் ரெடி.






தேர்வு நேரத்தில் பிள்ளைகளுக்கு தயிரியில் சர்க்கரை கலந்து கொடுப்பது நல்லது, வட நாட்டில் தயிரில் சர்க்கரை கலந்து கொடுப்பார்கள், காலங்காத்தால தயிரா என்று கேட்கீறீர்களா?
அதற்கு பதில் இந்த நியுட்டெல்லா ஸ்ரீகண்ட் தயாரித்து கொடுக்கலாமே/

தேர்வு ஆரம்பம், எல்லாபிள்ளைகளும் டென்ஷனில் இருக்கிறார்களோ இல்லையோ அம்மா மார்களுக்கு தான் அதிக டென்ஷன்.
பிள்ளைகளுக்கு எக்சாம் டென்ஷன் என்றால் ஏதாவது சாப்பிட்டு கொண்டே இருக்கனும் போல இருக்கும்
இந்த நேரத்தில் அதிக பசி எடுக்கும், ஏதாவது சாப்பிட்டு கொண்டே இருக்கனும் போல இருக்கும்.
நல்ல சத்துள்ள ஸ்நாக்ஸ் வகைகள் லைட்டான உணவுவகைகளை கொடுப்பது நல்லது.

டென்ஷன் கொஞ்சம் கூலாகும், வெரும் தயிர் கொடுப்பதற்கு பதிலாக அதை வடிகட்டி வரும் கெட்டி தயிரில் நியிட்டெல்லா வால்நட் அல்லது பாதாம் பொடியாக அரிந்து கலந்து கொடுங்கள்.
ஹெவியான சாப்பாட்டை தவிர்க்கவேண்டும்.
கொஞ்சம் ஜூஸ், பழங்கள் , நட்ஸ் என அப்ப அப்ப கொடுத்துட்டே இருக்கனும்,

தயிர் சாதம் , லெமன் சாதம் என்று கொடுத்தால் எளிதாக ஜீரணம் ஆகும்.
அதிகமசாலாக்கள் சேர்த்து செய்த உணவை தவிருங்கள்.


ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரையை சூப்பாக சாலட் , சட்னியாக செய்து கொடுங்கள்.

வல்லாரை கீரை



கீரைவகைகளில் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்வது வல்லாரை கீரை, இதை சாலாட், சூப் , சட்னி, கஞ்சியாக பிள்ளைகளுக்கு செய்து கொடுக்கலாம்.



ஆகையால் சாப்பாட்டை கொடுப்பதை விட அப்ப அப்ப ஏதாவது சத்துள்ள நொருக்கு ஐட்டம் கள் கொடுக்கனும் , சில்லுன்னு ஒரு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்துடனும். அது டானிக் போல புத்துணர்வு கொடுக்கும். 

டென்ஷன் ஆனால் சீக்கிறம் பீபீ தான் ஏற ஆரம்பிக்கும். ஆகையால் ரிலாக்ஸ் ஆக இருங்கள்.வீனாக டென்ஷன் ஆகி தலைவலிய இழுத்துகொண்டால் அதே உங்கள் பிள்ளைகளுக்கு டென்ஷன் தான்..




தேர்வு நேர உணவு, Nutella Srikhand








https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, March 10, 2015

கருப்பு உளுந்து இனிப்பு சுண்டல் - Black Urad Dhal Sundal






கருப்பு உளுந்து இனிப்பு சுண்டல் -Black Urad Dhal Sundal

இடுப்பெலும்பை பலப்படுத்தும் கருப்பு உளுந்து, இதில் உளுந்து சாதம், உளுந்து களி, உளுந்து புட்டு உளுந்து சுண்டல் போன்றவை செய்யலாம்.
வட இந்தியர்கள் தால் மக்கானி என்று ஒரு குழம்பு வைப்பார்கள் அது கருப்பு உளுந்து மற்றும் ராஜ்மாவில் செய்வது. இது பூப்பெய்திய பெண்களுக்கு , கர்பிணி பெண்களுக்கு, பிள்ளை பெற்றவர்களுக்கு இடுப்பெலும்பு பலம் பெற கருப்பு உளுந்தில் இது போன்ற உணவு வகைகளை சமைத்து கொடுக்கலாம்.
ஆண்களுக்கும் நல்லது.கூடுமான வரை இட்லிக்கு, அடை வகைகளுக்கு அரைக்கும் போது வெள்ளை உளுந்துக்கு பதில் கருப்பு உளுந்தும் சேர்த்து செய்வது நல்லது.




கருப்பு உளுந்து


கருப்பு உளுந்து - 100 கிராம்
துருவிய தேங்காய் - கால் கப்
சர்க்கரை - 2 மேசைகரண்டி
உப்பு -அரை சிட்டிக்கை
ஏலக்காய் பொடி - அரை சிட்டிக்கை







செய்முறை

கருப்பு உளுந்தை இரவே ஊறவைத்து காலையில் குக்கரில் வேகவைத்து தண்ணிரை வடிக்கவும்.
வெந்த உளுந்தில் தேங்காய், ஏலக்காய் பொடி, உப்பு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து சாப்பிடவும்


டிப்ஸ்: பெண்களுக்கு ஏற்படும் மாதாந்திர இடுப்பு வலி வயிற்று வலிக்கு கருப்பு உளுந்து மிகவும் நல்லது. காலை டிபனுக்கு பதில் இதை செய்து சாப்பிட்டு கொள்ளலாம். இதை புட்டாக , உளுந்து சாதம் , உளுத்தங்களியாக செய்து சாப்பிடலாம்.

இதே போல் முழு பாசி பயறிலும் செய்யலாம்.
Whole Moong Dal Sundal

ஆரோக்கிய சமையல், ஹெல்தி காலை உணவு, - Healthy Brakfast


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, March 2, 2015

Prawn and Prawn Head Soup /இறால் தலை சூப் - வீடியோ சமையல்




இறால் தலை சூப்


என் வீடியோ சமையல்கள் - My cookery video's



ஏறகனவே உள்ள வீடியோவில் இறால் தலை சுத்தம் செய்வது எப்படின்னு பார்த்தோம் , இது வரை பார்க்கவதவர்கள் மேலே லின்க் கொடுத்து இருக்கிறேன் அதை கிளிக் செய்து பார்த்து கொள்ளுங்கள்.

இறால் தலை வைத்து எப்படி சூப் தயாரிப்பதுன்னு பார்போம்.

எல்லாம் போன வருடமே எடுத்து வைத்ததுதான்.

பின்னாடி அதிக சத்தம் குக்கர் சவுண்ட் இப்படி எல்லாம் இருக்கு நல்ல பின்னாடி உள்ள சவுண்ட எப்படி எடிட் செய்து ஆஃப் செய்வதுன்னு தெரியல.

ஏதாவது வீடியோ எடிட்டிங் காணொளி இருந்தால் யாராவது இங்க கமெண்டில் லின்க் கொடுங்கள்.
Prawn and Prawn Head Soup /இறால் தலை சூப் - வீடியோ சமையல்


 Prawn & Prawn Head Soup


Ingredients


For Stock 

Prawn Head – 15
Onion - 1 
Dry Rosemarry – 1 tspn
Whole Black Pepper - 8 nos
Big Cardamom - 1
Garlic – 2 pod
Whole coriander – 1 tspn
Bay leaf – 4 to 5

Salt – to taste
Knorr veg soup cube – 1 no
Fresh corn – half cup


For tempering 

Butter
Chopped Prawn -5 Nos
Spring Onion – 2 Stick
Soy Sauce – 1 tbspn
White pepper pwd – 1 tspn
Egg – 1 no
milk - 1/4 cup
White sauce or Cream of chicken packet or broccoli almond soup packet - 1



ஸாடாக் தயாரிக்க தேவையான பொருட்கள்
இறால்  தலை - 15
வெங்காயம் 1
ட்ரை ரோஸ் மேரி
முழு மிளகு
பெரிய ஏலக்காய்
பூண்டு - 2 பல்லு
முழு கொத்து மல்லி
பிரிஞ்சி இலை
வெஜிடேபுள் சூப் கியுப் - 1


தாளிக்க
பட்டர்
பொடியாக அரிந்த இறால் - 5
வெங்காய தாள் - 2 ஸ்டிக்
சோயா சாஸ் - 1 மேசைகரண்டி
வெள்ளை மிளகு தூள் - 1 தேக்கரண்டி
கிரீம் ஆஃப் சிக்கன் சூப் பாக்கெட் - 1 
அல்லது ஏதாவது ரெடி மேட் சூப் பாக்கெட் 
முட்டை - 1
பால் -  கால் கப்
ஃப்ரஷ் கார்ன் - அரை கப்
கார்ன் ப்ளார் மாவு - தேக்கரண்டி




செய்முறை

குக்கரில் ஸ்டாக் க்கு தேவையான எல்லா பொருட்களையும் சேர்த்து முன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைத்து ஸ்டாக்கை வடித்து கொள்ளவும்.

தனியாக ஒரு சட்டியில் பட்டர் சேர்த்து அதில் இறாலை குட்டி குட்டியாக கட் செய்து சேர்த்து, பூண்டு , வெங்காயம், வெங்காய தாள் சோயா சாஸ் சேர்த்து வதக்கவும்.
வடித்து வைத்த ஸாடாக்கை சேர்க்கவும்.
கிரீம் ஆஃப் கார்  அரை பாக்கட் அளவு தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.
ப்ரஷ் ஹோல் கார்னை உப்பு போட்டுவேக வைத்து லேசாக மசித்து கொள்ளவும்.
ஒரு தேக்கரண்டி அளவு  கார்ன் ஃப்லார் மாவை சிறிது கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.கால் கப் பாலும் ஊற்றி கொதிக்க விடவும்

முட்டையை நன்கு அடித்து சிறிது சிறிதாக ஊற்றி கட்டி பிடிக்காமல் கிளறவும்.

கடைசியாக பார்சிலி இலை, உப்பு , மிளகு தூள் தூவி சூடாக தேவையான ஸ்நாக்ஸ் உடன் சாப்பிட அருமையாக இருக்கும்.



என் வீடியோ சமையல்கள் - My cookery video's




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975https://www.facebook.com/Samaiyalattakaasamhttp://www.chennaiplazaki.com/

Monday, February 23, 2015

வரகரிசி பொங்கல் - Kodo Millet Pongal








வரகரிசி - வரகு அரிசி பொங்கல்- Kodo Millet Pongal


  1. வரகரிசி – 200 கிராம்
  2. பாசி பருப்பு – 75 கிராம்
  3. பெருங்காயம் – 2 சிட்டிக்கை
  4. மஞ்சள் தூள் – ஒரு சிட்டிக்கை
  5. உப்பு - தேவைக்கு
  6. தண்ணீர் – 4 டம்ளர் ( 800 மில்லி)
    நெய் – ஒரு தேக்கரண்டி

தாளிக்க

  1. எண்ணை + நெய் – 2 மேசைகரண்டி
  2. சீரகம்- ஒரு தேக்கரண்டி
  3. மிளகு – ஒரு தேக்கரண்டி
  4. பச்சமிளகாய்- பொடியாக அரிந்தது  அரை தேக்கரண்டி
  5. இஞ்சி – பொடியாக அரிந்தது அரை தேக்கரண்டி
  6. பொடியாக அரிந்த பாதாம் , பிஸ்தா – 2 மேசைகரண்டி




 செய்முறை
  1. பாசிப்பருபை லேசாக வருத்து கொள்ளவும், வரகரிசி பாசிப்பருப்பு இரண்டையும் களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
  2. குக்கரில், அரிசி பருப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள், உப்பு, நெய் சேர்த்து 800 மில்லி தண்ணீர் சேர்த்து மூடி போடாமல்  கொதிக்கவிட்டு பிறகு குக்கரை மூடி 3 , 4 விசில் விட்டு இரக்கவும்.
  3. ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து நன்கு கிளறி விட்டு கட்டியில்லாமல் கிளறி வைக்கவும்.
  4. தனியாக சிறிய தாளிக்கும் சட்டியில் மேலே தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வெந்த பொங்கலுடன் சேர்த்து கலக்கி இரக்கவும்.
  5. சுவையான வரகரிசி பொங்கல் ரெடி.

வரகரிசி - வரகு அரிசி என்பது பழங்கால மக்கள் பயன்படுத்திய ஆரோக்கியமான அரிசிவகை, இந்த ஆரோக்கியமான அரிசி வகைகளான குதிரைவாலி,சாமை, வரகரசி, இப்போது மக்களிடையே மீண்டும் வரவேற்பை பெற்றுள்ளது சந்தோஷமான விடயம்.
இது சென்னையில் நீல்கிரீஸில் கிடைக்கும், வாங்கி செய்து பாருங்கள்.
வரகரிசி பொங்கல்/Kodo millet pongal
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Friday, February 20, 2015

My Fans and Ac's செய்து அனுப்பிய குறிப்புகள்

என்னுடைய Fan's எல்லாம் செய்து அனுப்பிய குறிப்புகளை பார்த்து நான்


இங்கு கணக்கில்லாமல் சமையல் குறிப்புகள் போட்டு கொண்டு இருக்கிறேன், இதை பார்த்து பலர் பயன் அடைகின்றனர்.அதை அவர்கள் செய்து எனக்கு போட்டோ அனுப்பும் போது அதன் சந்தோஷமே தனிதான்..

ஆனால் யாரும் கருத்து தெரிவிப்பதில்லை செய்து பார்த்தார்களா? எப்படி இருந்தது ,உங்கள் வீட்டில் பாராட்டை பெற்றீர்களா? என்பதை நான்  தெரிந்து கொள்ளவது, முடிந்தால் இந்த வலைதளம் பார்த்து செய்து பார்ப்பவர்கள் நீங்க செய்து பார்த்த சமையல் போட்டோவை  என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

என் குறிப்பை  செய்து பார்த்ததில் என் முகநூல் தோழிகள் மற்றும் என் அன்பான அறுசுவை தோழிகள் செய்து பார்த்து எனக்கு அனுப்பி என்னை குளு குளு ஏசியில் குளிரவைத்து விட்டார்கள்.

ஜலீலாவின் அட்டகாசத்தில் இருந்து தோழிகள் செய்து அனுப்பிய ரெசிபி லின்குகள் கிழே கொடுத்துள்ளேன்.

அப்சரா அறுசுவை தோழி - அரபிக் குபூஸ் 

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ....
ஜலீலா அக்கா...
துபாய் ல இருக்கும் போது உங்க குறிப்பை பார்த்து செய்தது குப்பூஸும்,ஹமூஸும்.இப்ப ஞாபகப்படுத்திட்டீங்களா?நஃப்ஸ் விடல அதான் பாலக் வாங்கும் வரை வெய்ட் பண்ண முடியாமல்,இன்னைக்கு வெறும் ஹமூஸ்,குப்பூஸ் செய்துட்டேன் அக்கா...
ஹமூஸ்க்கு கறுப்பு எள் சேர்த்து செய்ததால் கலர் மட்டும் மாறியிருக்கும் மற்றப்படி சூப்பர்...







என் மிட்டாகானாவை செய்து எனக்கு போட்டோவுடன் அனுப்பியதற்கு மிக்க நன்றி ஸாதிகா அக்கா.
கீழை சமையலில் மிகவும் கை தேர்ந்த ஸாதிகா அக்காவும் என் மிட்டாகானாவை சுவைத்து அவர்கள் குடும்பத்தில் அனைவரும் ருசித்து சாப்பிட்டதாக சொன்னதை கேட்டு எனக்கு மிக்க மகிழ்சி.






My Fans and Ac's, Tried and Tasted from Samaiyal attakaasam &cookbookjaleela


முட்டை புளி குழம்பு - ஆயிஷா பஹ்ரைன்





மோர் குழம்பு - கதீஜா - ஜப்பான்









Egg Pepper Dosai
Mufeeda - Fb Group Friend




Bread Halwa - Mumtaj - Fb + Business Friend




Mitta Khana - Shadiqa akkaa - (All in All my Friend)











முகநூல் தோழி ( சின்ன பொண்ணு ( அன்பு தங்கை) ஜாஃப் காதர்) முன்று குறிப்புகளை அட்டகாசமாக செய்து அனுப்பி உள்ளார்கள். மிக்க நன்றி ஜாஃப்



//Thanx ka... sema taste ah irunthuchu.. en paiyanukum rmba pudichiruku..//

Ennai kaththirikkaay - Jaf Khader - Fb Friend





Beetroot Kadalai paruppu kuuttu - Jaf Khader - Fb Friend





 Puri - Ayisha Malaysia - FB Friend

மைதா பூரி சிறப்பு விருந்தினர் பதிவில் மலேசிய குறிப்பை அனுப்பிய ஆயிஷா கீழே உள்ள மைதா பூரியை செய்து அனுப்பி இருக்கிறார்கள்.
ரொம்ப சந்தோஷம் ஆயிஷா.




Baked Fish - Rahila -  Arusuvai Friend

Baked whole fish ராஹிலா அறுசுவை தோழி இதை கிங் பிஷில் செய்து அனுப்பு இருக்காங்கக சுவை மிக அருமையாக இருந்தது, இனி பொரித்து சாப்பிடுவதை விட இப்படி தான் செய்ய போகிறேன் என்றார்கள்.



  https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, February 14, 2015

ட்ரை கலர் தோசை – டூப்ளிகேட் புல்ஸ் ஐ ஆம்லேட் தோசை - Indian Flag Dosai


ட்ரை கலர் தோசை – ஆம்லேட் தோசை


குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொண்டு சொல்ல இது போல் கலர்ஃபுல்லாக செய்து கொடுத்தால் அம்மாமார்களின் கவலை தீர்ந்தது, உங்கள் வீட்டு பிள்ளைகளின் டிபன் பாக்ஸ் காலி ஆகி ஒன்ஸ்மோர் கேட்பார்கள்.





தேவையான பொருட்கள்
தோசைமாவு தேவைக்கு ( 1 கப் (அ) 2 கப்)

தக்காளி கேரட் சட்னி

வதக்கி அரைகக
எண்ணை – அரை தேக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
கருவேப்பிலை பொடி – அரை தேக்கரண்டி

தக்காளி – முன்று
கேரட் – 1
மிளகாய் தூள் – கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 2 மேசைகரண்டி
உப்பு – தேவைக்கு
காஞ்ச மிளகாய்  - 2
பூண்டு – 1 பல்

தாளிக்க
எண்ணை – ஒரு தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கருவேப்பிலை -  சிறிது
உளுந்து  - அரை தேக்கரண்டி
 செய்முறை
தக்காளி பொடியாக அரியவும், கேரட்டை துருவிவைக்கவும்.
வதக்க கொடுத்துள்ளவைகளை வதக்கி ஆரவைக்கவும்.
ஆறியது மிக்சியில் கட்டியாக அரைத்து எடுக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து அரைத்த சட்னி கலவையை சேர்த்து கொதிக்க விட்டு இரக்கவும்,


பாலக் பெஸ்டோ / டிப் . சட்னி

தேவையானவை
பாலக் கீரை – ஒரு கப்
உப்பு – தேவைக்கு
பச்சமிளகாய் – இரண்டு
பூண்டு – 1 பல் பெரியது
வால்நட் – 5
சர்க்கரை – ஒரு பின்ச்

செய்முறை

பாலக் கீரையை கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடிக்கவும்.

வெண்ணீரை கொதிக்கவிட்டு , ஒரு சிட்டிக்கை உப்பு, சர்க்கரை, இட்லி சோடா கால் சிட்டிக்கை சேர்த்து பாலக்கீரையை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இரக்கி வெண்ணீரை வடித்து விட்டு குளிர்ந்த நீரில் கழுவி மீண்டும் தண்ணீரை வடிக்கவும்.
மிக்சியில் வடித்த பாலக், பச்சமிளகாய், தேவைக்கு உப்பு, பூண்டு , வால்நட் சேர்த்து நன்கு அரைக்கவும்.

கிரீன் தோசைக்கான பில்லிங்கும், ரெட் தோசைக்கான பில்லிங்கும் ரெடி

தேவையான அளவு தோசை மாவை முன்று பாகங்களாகா பிரித்து
ஒரு பாக மாவுடன் பாலக் கலவையை கலக்கவும்.
அடுத்த பாக மாவுடன் ஏதும் கலக்க வேண்டாம்.
அடுத்த பாக மாவுடன் தக்களி கேரட் சட்னியைகலந்து வைக்கவும்.

தவ்வாவை சூடு படுத்தி உள்ளங்கை சைஸ் குட்டி குட்டி தோசைகளாக சுட்டு எடுக்கவும்.

குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸ்க்கு தோசை தனியாக சட்னி தனியாக வைத்து அனுப்பாமல் இப்படி அழகாக மாவிலேயே சேர்த்து கலர்ஃபுல்லாக அனுப்பலாம்.


மற்றொரு வகை

கலவையை மாவில் கலக்காமல் முதலில் தோசைமாவை தவ்வாவில் ஊற்றி விட்டு முதலில் வட்ட வடிவமாக ரெட் சட்னியை சுழற்றவும், அடுத்து வெள்ளை மாவை அதை சுற்றிலும் ஊற்றவும்.
அடுத்து பாலக் பெஸ்டோ கலந்த மாவை சுற்றிலும் ஊற்றவும்.




Independence Day Recipe அன்று போஸ்ட் செய் ய செய்து வைத்து பப்லிஷ் பண்ண மறந்துட்டேன்.
இந்த மூவர்ண  தேசிய கொடியில் ரெசிபி செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். நாட்டு பற்று. என் பள்ளி சீருடை கலரும் இது தான்.


இது என் மகனுக்காக அடிக்கடி இப்படி செய்வது.என் மகன் ஹனீபுதீனுக்கு இன்று பிறந்த நாள் தூஆ செய்து கொள்ளுங்கள்,




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, February 10, 2015

சிறப்பு விருந்தினர் பதிவு -பாசிப்பருப்பு காய்கறி தேங்காய் பால் ஆணம் - பத்ரியா

சிறப்பு விருந்தினர் பதிவு - அரசர்குளம்   ஸ்பெஷல் பாசிபருப்பு ஆணம்.




பாசிப்பருப்பு ஆணம்
இது பத்ரியா Sirajudeen னுடைய குறிப்பு


பத்திரிக்கையாகட்டும், முகநூலாகட்டும், ஒரு டீக்கடை பெஞ்ச் இல்லாமல் இருக்காது, பலடீக்கடைகளில் தம்பி சிராஜ் வைத்து டீக்கடை ஒரு வித்தியாசமானது 
சமையல்,பொது அறிவு, மார்க்க சம்பந்த பட்ட வினாவிடைகள் பல போட்டிகளை நடத்துகிறார்.பல பேர் பரிசுகளும் வாங்கி இருக்கிறார்கள்.
அதில் நபி மொழி ஸஹீஹ் புகாரி ஹதீஸ் தமிழ் குர் ஆன் டாட் காமில் இருந்து  மாதம் இருமுறை வினா விடைகள் கேட்கப்படும். நிறைய போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை ஆகையால்   கொஞ்சம் இஸ்லாம் மார்க்க அறிவையும் வளர்த்துகொள்ளலாம் என்று இது ஒன்றில் மட்டும் மாதம் இரண்டு முறை கலந்து கொள்கிறேன். 

8 கேள்விகள் கொடுக்கப்படும். ஆனால் 20 நிமிடத்துக்குள் முடிக்கனும். அதில்  ஒரு முறை மட்டும்   எனக்கு ரூபாய் 100 க்கான புத்தகம் பரிசாக கிடைத்தது.

சமையல் போட்டியில் முன்றாம் பரிசும் கிடைத்தது , இதிலும் ரூபாய் 100 க்கான புத்தகம் பரிசாக கிடைத்து.




சிராஜ் நான் ஊரில் இருக்கும் போது குடும்பத்துடன் எங்க சென்னை ப்ளாசா கடைக்கு இரண்டு முறை வந்து புர்கா எடுத்து சென்றார். சிராஜுக்கு ஒரு மகன் , ஒரு மகனார் செம்ம வாலு.
சிராஜ் மனைவி பத்ரியா கடைக்கு வந்த கொஞ்ச நேரம் பழக்கம் தான், அருமையான தங்கை, அவங்க டீக்கடைசமையல் போட்டிக்கு போஸ்ட் பண்ண குறிப்பை தான் நான் இங்கு செய்து பதிந்துள்ளேன்.
அவங்க சொந்த ஊர் அரசர் குளம். பாசிப்பருப்பை அவரவர் ஊர் வழக்கப்படி பல வகைகளில் செய்வார்கள், அதில் இது பத்ரியாவின் ஊரானா அரசர்குளத்து ஸ்பெஷல் பாசிப்பருப்பு ஆணம்.





வடை பஜ்ஜி என்ற வலைதளத்தை எழுதி வரும் சிராஜின் மனைவி பத்ரியாவின் குறிப்பு இது. 
ஆணம் என்றால் குழம்பு/சால்னா. 
பாசிப்பருப்பு ஆணம்.
எல்லாரும் சுலபமாக செய்து பார்க்கலாம்.
பாசிபருப்பு முட்டை ஆணம்
பாசிப்பருப்பு காய்கறி ஆணம்
பாசி பருப்பு தேங்காய் பால் ஆணம்

எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்

நாங்க வெரும் பாசிப்பருப்பு கிச்சிடி, பாசிப்பருப்பில் முட்டையை பொரித்து போட்டு செய்வோம்.ஆனால் இது சற்று வித்தியாசம், இதன் மகிமையே தின் தேங்காய் பாலில் பருப்பை வேகவைத்தது தான் அவ்வளவு ருசி.
அடுத்து அதில் முட்டை சேர்ந்தால் இன்னும் நல்ல இருக்கும்.
இன்னும் தேங்காயை கீறி சேர்த்தால் சாப்பிடும் போது சுவை இன்னும் நல்ல இருக்கும்.


பாசிப்பருப்பு ஆணம்.


தேவையான பொருட்கள் :

1. பாசி பருப்பு - 3 கைப்பிடி அளவு
2. சின்ன வெங்காயம் - 20
3. தக்காளி - 2
4. மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்
5. தேங்காய் பால் - முழு தேங்காயின் திக்கு பால் மற்றும் தண்ணி பால் 2 முறை எடுத்துக்கொள்ளவும்.
6. முருங்கைக்காய் - 1
7. கத்தரிகாய் - 2
8. கேரட் - 2
9. இளம் தேங்காய் - 10 கீறல்கள் ( கிடைத்தால் மட்டும் போடலாம் )
10. முட்டை - ஒரு ஆளுக்கு ஒன்னு வீதம்
11. உப்பு - தேவையான அளவு

தாளிக்க :

12. நெய் - தேவையான அளவு ( எண்ணெயும் பயன்படுத்திக் கொள்ளலாம்)
13. கடுகு மற்றும் உளுந்து - ஒரு டீ ஸ்பூன்
14. கறிவேப்பிலை - தேவையான அளவு
15. காஞ்ச மிளகாய் - 3 
16. சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் - தேவையான அளவு
17. மிளகாய் தூள் - ஒரு டீ ஸ்பூன்


செய்முறை

பாசிபருப்பை லேசாக வறுத்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.

குக்கரில் ஊறவைத்த பாசிப்பருப்பை சேர்த்து தண்ணீயாக எடுத்த தேங்காய் பால் சேர்த்து மஞ்சள் பொடி, வெங்காயம் , தக்காளியை சேர்த்து 3 விசில் விட்டு இரக்கவும்.


வெந்ததும் . அதில் மீதி இருக்கும் தண்ணீ தேங்காய் பால், கேரட், முருங்கக்காய், கத்திரிக்காய் ,உப்பு இளம் கீரல் தேங்காய் சேர்த்து குக்கரை முடிபோடாமல் திறந்தே வைத்து வேக விடவும். மூடி போட்டு ஒரு விசில் விட்டால் கத்திரிக்காய், முருங்கக்காய் உடைந்து விடும்.



காய்கள் வெந்ததும் முட்டைகளை உடைத்து முழுசாக அதில் ஊற்றி கிளறாமல் தீயின் தனலை சிம்மில் வைத்து வேக விடவும். முட்டை வெந்ததும் கடைசியாக திக்கான தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட்டு இரக்கவும்.,
 தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து பருப்புடன்  சேர்த்து கலக்கி இரக்கவும்.


மிக அருமையான ருசியான பாசிபருப்பு காய்கறிதேங்காய் பால் ஆணம் ரெடி.

வெரும் சாதம் ரொட்டி, பூரிக்குஇந்த சைட் டிஷ் அருமையாக இருக்கும்.


Non vegetarian Thali Menu
Plain Rice
Bindi/Okra/Vendaikaay/Ladies Finger  Stir Fry /poriyal
Rasam
Moong Dhal Veg & Coconut Milk Salna
King Fish Fry



கவனிக்க: இது நான் செய்து பார்த்ததில் , நான் ப்ரஷ் தேங்காய் பால் எடுக்கல , தேங்காய் பவுடர் தான் கரைத்து ஊற்றினே, கடைசியாக முட்டையும் ஊற்றவில்லை, , இளம் தேங்காய் கீறியதும் போடவில்லை, இதெல்ல்லாம் போடமலே சட்டி காலியாகிவிட்டது, ஆனால் இதெல்லாம் சேர்த்து இருந்தால் நீங்க திரும்ப திரும்ப நிறைய செய்யவேண்டியதாக இருக்கும்.

நாங்க வெரும் பாசிப்பருப்பு கிச்சிடி, பாசிப்பருப்பில் முட்டையை பொரித்து போட்டு செய்வோம்.ஆனால் இது சற்று வித்தியாசம், இதன் மகிமையே தின் தேங்காய் பாலில் பருப்பை வேகவைத்தது தான் அவ்வளவு ருசி.
அடுத்து அதில் முட்டை சேர்ந்தால் இன்னும் நல்ல இருக்கும்.
இன்னும் தேங்காயை கீறி சேர்த்தால் சாப்பிடும் போது சுவை இன்னும் நல்ல இருக்கும்.

நான் இதில் ஒரு பச்ச மிளகாயை சேர்த்து கொண்டேன். மற்றும் தாளிக்கும் போது இரண்டு பல் பூண்டை பொடியாக நறுக்கி சேர்த்து கொண்டேன்.

மொத்ததில் பதிரியா சிராஜின் குறிப்பு சூப்பரோ சூப்பர்.






https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/