Thursday, June 4, 2009

ஈரல் கூட்டு - Liver Gravy

தே.பொருட்க‌ள்

ஈரல் = கால் கிலோ

தக்காளி = ஒன்று

வெங்காயம் = இரண்டு

இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு மேசை கரண்டி

மிள‌காய் தூள் = ஒரு தேக்க‌ர‌ண்டி

உப்பு தூள் = தேவைக்கு

ம‌ஞ்ச‌ள் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி

க‌ர‌ம் ம‌சாலா தூள் = கால் தேக்க‌ர‌ண்டி

ப‌ச்ச‌ மிள‌காய் = இர‌ண்டு (பொடியாக‌ அரிந்த‌து)

கொத்து மல்லி தழை = சிறிது

ப‌ட்டை = ஒரு சிறு துண்டு

எண்ணை = நான்கு தேக்கரண்டிசெய்முறை1. ஈர‌லை சுத்த‌ம் செய்து மேலே உள்ள‌ மெல்லிய‌ இழையை இர‌ண்டு முன்று முறை க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக்க‌வும்.2. ஒரு வாய‌க‌ன்ற‌ வான‌லியை காய‌வைத்து அதில் எண்ணை ஊற்றி ப‌ட்டை போட்டு வெடிக்க‌ விட‌வும்.3.அடுத்து வெங்காய‌ம் + இஞ்சி பூண்டு + த‌க்காளியை ஒன்ற‌ன் பின் ஒன்றாக‌ வ‌த‌க்க‌வும்.

4.த‌க்காளி சுருண்ட‌தும் ஈரலை போட்டு உப்பு + ம‌ஞ்ச‌ள் தூள் சேர்த்து அதிக‌ தீயை வைத்து கிள‌ற‌வும்.5.அடுத்து மிள‌காய் தூள்,க‌ர‌ம் ம‌சாலா தூள் சேர்த்து கிள‌றி தீயை குறைத்து வைத்து மூடி போட்டு சிறிது நேர‌ம் வேக‌ விட‌வும்.

6. க‌டைசியாக‌ கொத்தும‌ல்லி த‌ழை ம‌ற்றும் ப‌ச்ச‌ மிள‌காயை பொடியாக‌ ந‌ருக்கி சேர்த்து கிள‌றி இர‌க்க‌வும்.

குறிப்பு:ஆட்டு ஈர‌ல் இர‌த்த‌ம் க‌ம்மியாக‌ இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு மிக‌வும் ந‌ல்ல‌து.

ரொம்ப‌ நேர‌ம் வேக‌ விட்டால் க‌ல்லு மாதிரி ஆகிவிடும். க‌ருப்பாக‌வும் ஆகிவிடும்.ஹிமோகுளொபின் க‌ம்மியாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள், க‌ர்பிணி பெண்க‌ள் இதை வார‌ம் முன்று முறை சாப்பிட்டால் இர‌த்த‌த்தின் அள‌வு கூடும்.

6 கருத்துகள்:

ஹர்ஷினி அம்மா said...

ஜலீலா அக்கா ஈரல் கூட்டு நல்லா இருக்குஅக்கா...உங்க குறிப்பில் உள்ள பயன் எல்லாம் ஆட்டு ஈரலுக்கு மட்டும் தானா?... கோழி ஈரலுக்கு இல்லையா அக்கா?

Jaleela said...

//ஜலீலா அக்கா ஈரல் கூட்டு நல்லா இருக்குஅக்கா...உங்க குறிப்பில் உள்ள பயன் எல்லாம் ஆட்டு ஈரலுக்கு மட்டும் தானா?... கோழி ஈரலுக்கு இல்லையா அக்கா?///ஹர்ஷினி அம்மா வாங்க வாங்க‌ (இது வரை உங்கள் பெயர் என்ன வென்று தெரியல்) ஹாஷினியா?

உங்க‌ள் பாராட்டுக்கு மிக்க‌ ந‌ன்றி.

இதில் குறீப்பில் குறிப்பிட்ட ஆட்டு ஈரல் இரத்தத்தில் அளவை அதிக படுத்தும், இன்னும் ஒன்று மண்ணீரல் அதாவது மண்பத்தை இது இன்னும் நல்ல எபக்ஃட். அயர்ன் டானிக்கில் இதை தான் சேர்க்கிறார்கள்.

கோழி ஈரல் உடலுக்கு பலம் என்பார்கள் ,ஆண்களுக்கு ரொம்ப நல்லது.

பார்த்திருப்பீங்களே எம்டன் மகனில் நாசர் பரத்துக்கு ஊட்டி விடுவாரே.. ஹி ஹி


பெண்களுக்கு கோழி ஈரல் சூடு எப்பாவாவது சாப்பிடலம், அது சாப்பிடும் போது குளிர்ச்சியா ஏதாவது சாப்பிட்டு கொள்ளனும்.


இது ஒரு க‌ர்பிணி பெண்ணுக்கு 9 மாத‌த்தில் ஹிமோ குளோபின் க‌ம்மியாகி ரொம்ப‌ சோர்ந்த‌ நிலையில் இருந்தார்க‌ள்.
இந்த‌ ஈர‌ல், ம‌ண் ப‌த்தை, புரோகோலி, அத்தி ப‌ழ‌ம், கீரை வ்கைக‌ள், தினம் சாப்பிட‌ சொல்லி. அவ‌ர்க‌ளுக்கு டெலிவ‌ரி ஆகும் போது ஹிமோகுளோபின் அள‌வு 11 ஆகி விட்ட‌து.

ஹர்ஷினி அம்மா said...

ஜாலீலா அக்கா நானே தான் அக்கா.:-)... என் பெயர் எல்லார்க்கும் குழப்பத்தை தந்ததால் தான் ”ஹர்ஷினி அம்மா” வை வைத்து விட்டேன்... இதில் ஒரு பொருமையும் கூட :-)

அக்கா இன்னைக்கு உங்க ஆட்டு ஈரல் தான்... ரொம்ப சுவையா இருந்த்தது... நான் கோழி ஈரல் தான் செய்வேன்... உங்க விளக்கத்திற்க்கு நன்றி அக்கா.

Jaleela said...

ஒகே அப்ப நானும் ஹர்ஷினி அம்மா என்றே அழைக்கிறேன்,

உங்கள் பிளாக்கில் இரண்டு முன்று முறை பின்னூட்டம் அளித்தேன், வந்துச்சா இல்லையான்னு தெரியல.
இப்ப கூட கடைசியா இரண்டு நாள் முன் நாப்கின் ஹோல்டருக்கு போட்டேன். வந்ததா?

ஈரல் சுவையாக இருந்ததா? ஆமாம் நல்ல இருக்கும் . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.
இன்னும், நிறைய மெதேட் இருக்கு. உங்கள் மெயில் ஐடி எனக்கு தந்தால் நல்ல இருக்கும்,


உங்கள் பிளாக் ரொம்ப நல்ல இருக்கு,சூப்பரா இருக்கு, அத பார்த்து தான் எனக்கே போட ஆசை வந்தது.

ஹர்ஷினி அம்மா said...

அக்கா உங்கள் பின்னுட்டங்கள் எல்லாம் வந்தது அக்கா... உங்களிடம் இருந்து சமையயில் பாராட்டு கிடைக்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கு அக்கா நன்றி

/உங்கள் பிளாக் ரொம்ப நல்ல இருக்கு,சூப்பரா இருக்கு, அத பார்த்து தான் எனக்கே போட ஆசை வந்தது./

ரொம்ப நன்றி ஜலீலா அக்கா :-)

Jaleela said...

ஹர்ஷினி நான் சும்மா ஏதேச்சையா தான் ஆரம்பித்தேன்.நீங்க‌ளும் சூப்ப‌ரா போட்டு இருக்கீங்க‌.
ரொம்ப அழகா போட்டு இருக்கீங்க.

இப்ப பையன் ஊருக்கு போனதில் இருந்து மனசே சரியில்லை அதான் இப்படி ஓவ்வொரு பதிவா போட்டு கொண்டு இருக்கேன்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா