//துபாயில் ஜுமேரா பீச்சில் இரவில் குளிர்காலத்தில் ஒரு சிறிய பொட்டி கடை போல் இருக்கும். அங்கு அரேபியர்களும், இந்திய கூட்டமும் அலை மோதும் இந்த முழு மீன் சாப்பிட. இது கிரில், சுடுவது எல்லாம் கிடையாது, அப்படியே எண்ணையில் போட்டு ஒரு வயகன்ற ஆழ கிடாயில் போட்டு பொரித்து எடுப்பது.
இது ஒரு பெரிய டேபிளில் நடுவில் இந்த மீனை வைத்து சுற்றி எல்லோரும் மொத்தமாக உட்கார்ந்து குபூஸுடன் சாப்பிடுவார்கள்.
அங்கு பல வகையான பெரிய பெரிய மீன்கள் இருக்கும் நாம் எதை காண்பிக்கிறோமோ அதை உடனே நம் கண் முன்னால் பொரித்து தருவார்கள்.
அதே போல் நாம் வீட்டிலும் குடும்பத்தோடு இது செய்து சாப்பிடலாம்.//
தே.பொருட்கள்
முழு மீன் = இரண்டு
உப்பு = தேவைக்கு
காஷ்மீரி சில்லி பொடி = ஒரு மேசை கரண்டி
இரண்டு தேக்கரண்டி (அ) முழு பூண்டில் பாதி (பூண்டை அரைத்தும் போடலாம்).
பூண்டு பொடி = ஒரு தேக்கரண்டி (அ)
மிளகு தூள் = அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் = அரை தேக்கரண்டி
ரெட் கலர் பொடி = இரண்டு சிட்டிக்கை (தேவைபட்டால்)
எலுமிச்சை சாறு = ஒரு மேசை கரண்டி
செய்முறை
மீனை முழுசாக கழுவி சுத்தம் செய்து வயிற்றில் உள்ள அழுக்கை அகற்றி விட்டு சைடில் உள்ள முள்ளை கத்திரியால் கட் பண்ணவும்.
அதில் மேலே குறிப்பிட்ட அனைத்து மசாலாக்களையும் போட்டு ஊறவைக்கவும்.
ஒரு வாயகன்ற பெரிய பேனில் எண்ணை ஊற்றி நல்ல நிதானமாக மொருகலாக பொரித்தெடுக்கவும்.
குறிப்பு:
நிறைய ஊர் களிலும் இது போல் மீனை முழுசாக பொரித்து கொடுக்கிறர்கள், ஆனால் எண்ணை பழசாக கூட இருக்கலாம், வீட்டில் நாம் ஆரோக்கியமாக செய்து சாப்பிடலாம்.
இருக்கும்
சாலட், குபூஸுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
அவரவர் விருப்பமான மீனை முழுசாக பொரித்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழுங்கள்.
ஆக்கம்
ஜலீலா
Tweet | ||||||
5 கருத்துகள்:
படம் பார்த்தாலே நாவில் நீர் ஊறுகிறது. இப்போ கமெண்ட் ஆப்ஷன் ஒழுங்காக வேலை செய்கிறது போல் உள்ளதே?!
ம்ம்ம் சூப்பர் ஜலிலாக்கா!!
ஆமாம் சுகைனா, இப்ப கமெண்ட் ஆப்ஷன் ஒகே, ஆனால் பாலோவர்ஸ் தான் ஆட் ஆகல்.
நிறைய டவுட் இருக்கு, நீங்க பிஸியாக இருப்பீர்கள் அதான் கேட்கல.
பிள்ளைகள் எல்லோர்ம் நலமா?
இதில் பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி.
டியர் மேனகா நலமா? ஷிவானி குட்டி எப்படி இருக்கா?
//ம்ம்ம் சூப்பர் தான்//
என் பிள்ளைகளுக்கு இப்படி தான் பிடிக்கும்.
padamee saappaida thoondukirathu.. intha vaaram ithu thaan veettila.... pakirvukku vaalththukkal
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா