காது , மூக்கு தொண்டையில் தண்ணீர் போகாத வண்ணம் ஊற்றனும்.
நம் காலில் சரிவலாக படுக்க வைத்து ஊற்றினால் இப்படி தன்ணீர் உள்ளே போவதை தவிர்க்கலாம்.
2. இரண்டு காலையும் ஒண்று சேர்த்து சரிவலாக வைத்து கொண்டு குழந்தை தலை மேலே இருக்குமாறு வைத்து கொள்ளவும்.
3. கழுத்திலிருந்து மேலே வரை முதலில் நல்லதேய்த்து ஊற்றி விட்டு பிறகு தலையில் முன் பக்கமாக ஊற்றமால் பின் பக்கமாக ஊற்றவேண்டும்.ஊற்றும் போது இரண்டு காது மற்றும் நெற்றி பக்கம் கையை வைத்து கொண்டு ஊற்றவும்.
4. போன குறிப்பில் சொன்னபடி உடனே ஒரு பெரிய காட்டன் துப்பட்டாவில் சுருட்டி நன்கு பஞ்சை துடைப்பது போல் துடைத்து பவுடர் சிறிது உச்சந்தலையில் வைக்கவும். இது தண்ணீர் நின்றால் அதை எடுத்து விடும்.
5. எக்காரணத்தை கொண்டும் காதில் பட்ஸை போட கூடாது.
ஒரு சிறிய மெல்லிய மல் துணியை நன்கு சுருட்டி காதில் துடைக்கவும்.
6. குழந்தை குளித்து முடித்ததும் உடனே சாம்ராணி புகை மூட்டி அதில் உடம்பு, தலை,கால் போன்றவற்றை காண்பிக்கவும்.
சாம்ப்ராணி புகை காண்பிக்கும்போது மிகவும் கவனமாக பிடித்து கொள்ளுங்கள்.
இல்லை என்றால் துள்ளி விடுவார்கள்.
7. பிறகு நன்கு வயிற்றை நிரைத்து துணியில் சுற்றி உடனே தூங்க வையுங்கள்.
குளித்தால் குழந்தைகள் நல்ல தூங்குவார்கள், நல்ல தூங்கினால் தான் சதை வைக்கும். அமுல் பேபி போல் கொழு கொழு வென இருப்பார்கள்.
Tweet | ||||||
1 கருத்துகள்:
மிகவும் அழகாக சொல்லியிருக்கிங்க அக்கா
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா