ரொம்ப ஈசியாக சத்தான குழிபணியாரம். நிமிஷத்தில் தயாரித்துவிடலாம்.
பரிமாறும் அளவு :2
தயாரிக்கும் நேரம் : 5நிமிடம்
சமைக்கும் நேரம்: 10 நிமிடம்
தேவையானவை
கோதுமை மாவு – 100 கிராம்
ரெடி மேட்( கார்ன்) முழு சோளம் – 50 கிராம்
துருவிய கேரட் – 3 மேசைகரண்டி
பொடியாக நருக்கிய பச்சமிளகாய்
பொடியாக அரிந்த வெங்காயம்
பொடியாக அரிந்த கொத்துமல்லி கருவேப்பிலை – 1 மேசைகரண்டி
உப்பு – ¼ தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
இட்லி சோடா – 1 சிட்டிக்கை
எண்ணை – பணியாரம் சுட தேவையான அளவு.
செய்முறை
எண்ணை தவிர மேற்கண்ட அனைத்து பொருட்களையும் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பத்த்துக்கு கரைக்கவும்.
பணியர கல்லை சூடு படுத்தி சிறிது எண்ணைவிட்டு மாவை ஊற்றி மூடி போட்டு பணியரங்களாக சுட்டெடுக்கவும்.
அழகான குட்டி குட்டி குழிபணியாரம் ரெடி.
புதினா அல்லது பொட்டு கடலை துவையலுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
புதினா அல்லது பொட்டு கடலை துவையலுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
மிக அருமையான சத்தான குழிபணியாரம் ரெடி.
Tweet | ||||||
3 கருத்துகள்:
வித்யாசமா இருக்கே
www.bhageerathi.in
new recipe to me. looks very nice :)
சூப்பர் அண்ட் ஈசி குறிப்பு ஜலீலாக்கா.. இப்பவே செய்வமோ என யோசிச்சேன்ன்.. ஆனா என்னிடம் பணியாரக் கல் இல்லை... எண்ணெயில் பொரிக்கப்படாதோ?
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா