--///பேபி
அதிரா தக்காளி அவ்வளவா பயன் படுத்த மாட்ட்டாங்க, அன்பு
இமா அக்கா ஏதோ ஒரு பதிவில் இங்கு தக்காளிக்கு தடா என்று சொன்னார்கள்//
அவர்களுக்காக நான் ஸ்பெஷலா தயாரித்த பிரியாணி.
ஜிங்காபிரியாணி எண்டதும் கெதியா பாட்ட போட்டு ஜிங்கு ஜிங்கு ந்னு ஆடப்படாதாக்கும்.
தக்காளி இல்லாம எங்க வீட்டில் பிரியாணியே கிடையாது.
ஆனால் இது 18 வருடகாலம் முன் உள்ள துண்டு பேப்பரில் படித்தது..
// ஹைத்ராபாத் பிரியாணியில் கூட தக்காளி சேர்க்க மாட்டார்கள்.
நான்கைந்து முறை தான் தக்காளி இல்லாம பிரியாணி செய்து இருக்கேன்.என் பையனுக்கு தக்காளி நிறைய போட்டா பிடிக்காது. என் பையனுக்காக முயற்சி செய்தது/,
கிட்னி ஸ்டோன் இருப்பவர்கள் தக்க்காளி பயன் படுத்த மாட்டார்கள். அவர்களும் இது போல் தயாரித்து சாப்பிடலாம்.
//
தேவையானவை
இறால்(ஜிங்கா) - 200 கிராம்
இறால் தலை - 100 கிராம்
தயிர் - 3 மேசைகரண்டி
வெங்காயம் - முன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 தேக்கரண்டி
பட்டை,லவங்க தூள் - கால் தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - இரண்டு சிட்டிக்கை
சீரக தூள் - ஒரு ஸ்பூன்
ஓமம்(Ajwan) தூள் - கால் தேக்கரண்டி்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
நெய்+எண்ணை - அரை கப்
கொத்து மல்லி புதினா - சிறிது
பழுத்த சிவப்பு மிளகாய் - இரண்டு
அரிசி வேகவைக்க
தரமான பாசுமதி அரிசி - 400 கிராம்
பிரியாணி இலை - இரண்டு
ஷாஜீரா( caraway seed)- அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
சூடான பால் - ஒரு மேசை கரண்டி
சாஃப்ரான் - 6 இதழ்
செய்முறை
இறால் தயிரில் செய்வதால் வேக ரொம்ப நேரம் எடுக்காது. ரொம்ப சீக்கிரமாக தயாரித்துவிடலாம்.
இறாலை தோலெடுத்து இறாலையும், தலையையும் ஆய்ந்து கழுவிவை வைக்கவும்.(இது தான் கொஞ்சம் கழ்டமான வேலை) தலை சேர்த்து செய்வதால் இன்னும் கூடுதல் ருசி கிடைக்கும்.
வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைக்கவும்.
தயிரில் பட்டை கிராம்பு பொடி,மிளகாய் தூள் ,சீரகத்தூள், ஓமம் தூள், உப்பு, ஏலக்காய் தூள், தனியாத்தூள், போட்டு நன்கு கலக்கி வைக்கவும்.
வாயகன்ற வானலியை காயவைத்து எண்ணை + நெய்யை ஊற்றி வெங்காயத்தை போட்டு நன்கு பொன் முறுவலாக வதக்கவும்.அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட், பாதி கொத்துமல்லி புதினா போட்டு நன்கு வதக்கவும்.
மற்றொரு அடுப்பில் சாதம் வடிக்க உலையை கொதிக்கபோடவும்.
தண்ணீருடன் பிரியாணி இலை , ஷாஜீரா, மீதி உள்ள கொத்துமல்லி புதினா, கரம்மசாலாதூள் சேர்த்து கொதிக்க விடவும்.
இஞ்சி பூண்டு வாடை போனதும் மசால கலக்கிய தயிர் கலவை + இறால் சேர்த்து நன்கு வதக்கி சிறிது நேரம் மசாலாக்களை ஒரு சேர கொதிக்க விடவும், தீயின் தனலை சிம்மில் வைக்கவும்.
உலை கொதித்ததும் அரிசி தட்டி முக்கால் பதத்தில் வடிக்கவும்.
கிரிப்பான இறால் கிரேவியில் அரிசியை தட்டி சமப்படுத்தவும்.
சாஃப்ரானை மேலே ஊற்றி 20 நிமிடம் தம்மில் விடவும்.
சுவையான ஜிங்கா தயிர் பிரியாணி ரெடி
மியாவ் க்கு ரொம்ப பிடிச்சிருக்குமுன்னு நினைக்க்றேன்.பூஸார் சாப்பிட்டு பார்த்து ஒகே சொல்லிட்டார்... இனி பேபி அதிராவும் இமாக்காவும் தாரளமாக சாப்பிடலாம்.
இதில் பிரியாணி மசாலா (அ) இலங்கை கறி மசாலாத்தூள் ஏதும் சேர்ப்பதா இருந்தால் தாராளமாக 1 தேக்கரண்டி சேர்த்து கொள்ளலாம்.
இறால் தலை வறுத்து சாப்பிட்டால் நல்ல இருக்கும், சிலர் வறுத்து சம்பல் வைப்பார்கள். நான் இறால் தலை பெரிய தா இருந்தால் சில நேரம் பஜ்ஜியும் போடுவதுண்டு, அதே போல் சேமியா, கார உப்புமா, பிரியாணி வகைகளிலும் சிறிது சேர்ப்பேன் சுவை கூடுதலாக இருக்கும், குச்சிபோல் நீட்டி கொண்டு இருக்கும் மீசைகளை வெட்டிட்டு போடனும். பிடித்தவர்கள் அதனுடன் சாப்பிடலாம் பிடிக்காதவரக்ள் அதை எடுத்து விட்டு சாப்பிடாலாம்.
( ஜிங்கா என்பது இறால்.) சாரி முதலே சொல்ல மறந்துட்டேன்.