Wednesday, April 25, 2012

சௌராஷ்ட்ரிய சிக்கன் கிரேவி



சௌராஷ்ட்ரிய சிக்கன் கிரேவி

கோழி - கால் கிலோ 
உப்பு - தேவையான அளவு 
தாளிக்க: 
எண்ணெய் - நான்கு தேக்கரண்டி 
கடுகு - ஒரு தேக்கரண்டி 
கறிவேப்பிலை - ஒரு கொத்து 
வெங்காயம் - இரண்டு 
தக்காளி - ஒன்று 
அரைக்க: 
மிளகு - இரண்டு தேக்கரண்டி 
சீரகம் - ஒரு தேக்கரண்டி 
கிராம்பு - நான்கு 
கொத்தமல்லி தழை - கால் கப் (பாதி அரைக்க, பாதி மேலே தூவ) 
பூண்டு - ஐந்து பல் 
கசகசா - ஒரு மேசைக்கரண்டி





செய்முறை

முதலில் அரைக்க கொடுத்துள்ளவற்றை மையாக அரைத்து கொள்ளவேண்டும். 
தாளிக்க வேண்டியவைகளை தாளித்து கோழியை சேர்த்து உப்பு போட்டு வேக விடவும். 
பாதி வெந்ததும் அரைத்து வைத்ததை போட்டு நல்ல கிளறி சிம்மில் வைத்து நன்கு வேக விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

என் பள்ளி தோழி  (சௌராஷ்ட்ரிய தோழி) சித்ரா சொல்லி கொடுத்தது.
நாங்க கடுகு சேர்த்து அவ்வள்வா மட்டன், சிக்கன் சமைத்த்தில்லை, ஆனால் இது கொஞ்சம் வித்தியமாக இருக்கும். கொஞ்சம் கார சாரமாக இருக்கும்.
சளி தொந்தரவின் போது இப்படி செய்து சாப்பிடலாம்.
பரிமாறும் அளவு : 3 நபர்களுக்கு

Saturday, April 21, 2012

அரபு நாடுகளில் பெண்கள் தொழுகை



அபுதாபி கிராண்ட் மாஸ்க்




அரபு  நாடுகளில் பெண்கள் தொழுகை.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 நம் அனைவருக்கும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக


இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்று ஐவேளை தொழுகை ஆகும்

ஐந்து கடமைகளில் மிக முக்கியமானதும்மறுமை நாளில் முதலில் கேட்கப்படும் கேள்வியும் தொழுகையப் பற்றிதான்!தொழுகையினால் உடல் சுத்தம் மற்றும் மனச் சுத்தம் கிடைக்கிறது. .

////அரபு நாடுகளில் யு ஏ யில் உள்ள எல்லா இடங்களில் மற்றும் சவுதி கத்தார்,குவைத் பஹ்ரின் போன்ற் நாடுகளில் பள்ளிவாசல்களிலேயே பெண்களுக்கு என தனியாக தொழுகை இடம் உண்டு. 
இது முன்பு துபாய் வந்த புதிதில் எனக்கு தெரியாது, எங்கு வெளியில் செல்வதாக இருந்தாலும் மாலை மக்ரீப் வீட்டிலேயே தொழுதுட்டு செல்வோம்.

இதே போல நோன்பு காலங்களிலிலும் தினம் தராவீஹ் தொழுகைஇரவு தொழுகை பள்ளிவாசலிலே தொழும் வசதி உள்ளது.சில பெண்கள் வீடுகளிலும் தொழுகை நடத்துகின்றனர்.

அதே போல் பெருநாள் தொழுகைக்கும் வீட்டிலேயே தொழுது கொள்வோம். ஆண்கள் மட்டும் பள்ளி வாசலில் போய் தொழுவார்கள்.பிறகு தான் ஈத்காவில் தொழுகை நடப்பது தெரிய வந்தது. அதிலிருந்து ஓவ்வொரு வருடமும் பெருநாள் தொழுகைக்கு ஈத்கா (திறந்த வெளி மைதானாம்) சென்று தொழுவது. 


ஈத்கா பெண்கள் தொழுகை இடம்



அங்கு ஆண்களுக்கு , பெண்க்ளுக்கு என தனித்தனி  இடம் உண்டு. ஓவ்வொரு வருடமும் பெருநாள் தொழுகை எப்போது வரும் எனறு காத்து கொண்டு இருப்பேன்.

சொந்தங்கள் மற்றும் பல நாட்டு மக்களை அங்கு காணலாம்.
இங்கு அதிகாலை 6 மணிக்கெல்லாம் நாங்க சென்று விடுவோம்.

ஈத்கா 




ஆனால் இப்போது தொழுகை பள்ளிவாசலில் மட்டும் தான் என்று இல்லை. துபாய் மற்றும் அரபு நாடுகளில் எங்கு வெளியில் ஷாப்பிங்  சென்றாலும் தொழுகை களாவாகும் என  கவலை பட தேவையில்லை.
இப்ப ரொம்ப வசதியாக போச்சு எந்த நேரத்திலும் வெளியில்     இகிளம்பலாம். அந்த அந்த வக்துக்கு வழியில் இருக்கும் பள்ளி வாசல்களில் தொழுதுகொள்ளலாம்.


 எல்லா இடங்களிலும் அரை கிலோ மீட்டர் தொலைவிற்குள் கண்டிப்பாக பள்ளி வாசல்கள் உண்டு. அங்கேயே பெண்களுக்கென்று பிரேயர் ஹாலும் தனியாக இருக்கும்.இது பள்ளிவாசல்களின் பின்புறம் அமைந்து இருக்கும்.
அங்கேயே பாத்ரூம் வசதிகள் ஒலு எடுக்கும் வசதிகள் தொழும் இடம்உள்ளேயே குர் ஆன்தொழுகை விரிப்பு தொழும் போது போட்டுகொள்ளுங்கள் துப்பட்டாக்கள் எல்லாமே இருக்கும்.





ஏழு எமிரேட்ஸிலும் (துபாய், ஷார்ஜா, அபுதாபி,புஜேரா,ராசல் கைமா, உம்முல் கொய்ன் ) பெட்ரோல் பங்குகள், தொலை தூரம் , ஹைவே சென்றாலும் அங்காங்கே உள்ள பெட்ரோல் பங்குகளிலும் பெண்களுக்கு தொழுகை வசதி உள்ளது. அங்காங்கே மஸ்ஜீத் களும் இருக்கின்றன.




எப்போதும் ஜும்மாவை வைத்து கொண்டு எங்க ஹஸுக்கு எங்கும் போக பிடிக்காது. ஒன்று தொழுதுட்டு கிளம்பனும் , இல்லை அதிகாலை பஜர் தொழுதுட்டு கிளம்பி ஜும்மாவிற்கு முன் போய் சேர்ந்து விடனும்.


ஒரு முறை ருவைஸ் போகும் போது 5 மணி நேர பயணம் வெள்ளிக்கிழமை வழியில் ஜும்மாவுக்கு ஒரு காடு மாதிரி இடம ஆனால் பள்ளிவாசல் இருந்தது,
அங்கு சென்று பள்ளிவாசலின் பின் புறம் உள்ள பெண்களுக்கான தொழுகை இடத்தில் தொழுதுட்டு கொஞ்சம் நேரம் இளைப்பாறி விட்டு கிளம்பினோம்.
அங்கு பல நாட்டு பெண்கள் தொலை தூரம் போகிறவர்கள் தொழுகைக்காக அங்கு வந்து தொழுத்துட்டு சொல்கின்றனர்.

அதே போல் மஸ்கட் போகும் போது 5 லிருந்து 6 மணி நேர பயணம் , அங்கும் வழியில் தொழும் நேரம் செக்கிங் இட்த்தில் வண்டி நின்றது. அங்கு மக்ரீப் தொழுகை தொழுதுட்டு சென்றோம்.


பள்ளி வாசலில் மட்டும் என்றில்லை உள்ள எல்லா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், ஹாஸ்பிட்டல்கள், எல்லா இடத்திலும் பெண்களுக்கு தனியாக தொழும் இடம் உண்ட்ய்.


ஊருக்கு செல்ல ஏர்போர்ட் சென்றாலும் அங்கும் தனியாக தொழுகை இடம் உண்டு.



இங்கு துபாயில் ஷாப்பிங்க் காம்பள்ஸ் களில் ,கேரிபோர், கே.எம் ட்ரேடிங் ரீஃப் மால் எல்லா இடத்தில் பெண்கள் குழந்தையுடன் சென்று தொழுது விட்டு ரெஸ்டும் எடுத்துக்கொள்ளலாம்.





//இதனால் ஐ வேளை தொழுகைகளை அந்த அந்த வக்துகளிலிலேயே முடித்து கொள்ளலாம்.களாவாகும் வாய்ப்பில்லை..///அல்ஹம்துலில்லாஹ். 
.

தொழுகை என்பது முஸ்லிம்களின் மதக் கடமைகளுள் ஒன்றாகும். வயதுவந்த எல்லா முஸ்லிம்களும் தினமும் ஐந்து வேளை அல்லாவைத் தொழ வேண்டும். இஸ்லாத்தின் முக்கிய கடமைகளுள் தொழுகை ஒன்றென்பதால் மிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இதற்கு விலக்களிக்கப்படுகிறது.


மனிதன்  ஒரே  ஒரு  நோக்கத்திற்காகவே  படைக்கப்பட்டுள்ளான்.
"என்னை வணங்குவதற்காகவே  ஜின்களையும்  மனிதரையும் 
படைத்திருக்கின்றோம் என்று  அல்லாஹ்  கூறுகிறான் {51:56}
                                                                                                         மனிதர்கள்  இவ்வுலகில்  தன்னைப்படைத்த இறைவனை   வணங்கி          
வாழ வேண்டும்வணக்கத்தில் மிகச்  சிறந்தது  தொழுகை. தீர்ப்பு 
நாளில்  மனிதன் தான்  இவ்வுலகில்  செய்த  ஒவ்வொரு செயலுக்கும்
பதில்  அளித்தே  ஆக வேண்டும்.இவ்வாழ்கையில் அவனுக்களிப்பட்ட  
அருட்கொடைகளைப்  பற்றி  அவன் விசாரனை செய்யப்படுவான்.

பின்னர்  உங்களுக்கு  இறைவன்  புரிந்த  அருளைப்பற்றியும் அந்நாளில்
நீங்கள்  கேட்கப்படுவீர்கள்.என்று  குர்ஆன  கூறுகிறது  [102:8}.
 ஆனால் கடுமையான  அந்நாளில்  கேட்கப்படும்  முதல் கேள்வி 
தொழுகையைப்  பற்றியதாகும்.




தொழுகையின் முக்கியத்துவம்
அறிவிப்பாளர் அபூஹுரைரா  (ரலி)
உங்களில் ஒருவருடைய வீட்டு வாயிலின் அருகில் ஆறு ஒன்று ஓடுகிறது என வைத்துக் கொள்வோம். அதில் அவர் ஒவ்வொரு நாளும் ஐவேளை குளித்து வந்தாரென்றால்,அவருடைய உடலில் சிறிதளவாயினும் அழுக்கு எஞ்சியிருக்குமா?” என நபி   அவர்கள் தம் தோழர்களிடம்வினவினார்கள்.
அதற்குத் தோழர்கள், “இல்லைஅவருடைய உடலில் சிறிதளவும் அழுக்கு இராது” என்றார்கள்இது போன்றுதான் ஐவேளைத் தொழுகையும் அல்லாஹ்  இத்தொழுகைகளின்மூலம் பாவக்கறைகளைப் போக்குகின்றான்” என்று நபி அவர்கள் அருளினார்கள். (புகாரிமுஸ்லிம்


Thursday, April 19, 2012

Chennai Plaza - சென்னை ப்ளாசா



விடுமுறைக்கு சென்னை செல்பவர்கள் சென்னை ப்ளாசா கடைக்கு கண்டிப்பாக செல்லவும்.
சென்னையில் உங்களுக்கு தெரிந்த தோழ தோழியர்களுக்கு தெரியபடுத்தவும்.

சென்னை ப்ளசா கடையில் உள்ள பொருட்கள்.கீழே உள்ள படத்தில் காணலாம்.




Latest High Neck  Arabic Burka  அப்படியே இங்கு வாங்க , புது மாடல் அரபிக் புர்கா 

மொத்தமாக ஆர்டர் தேவைப்பட்டாலும் தர தயாராக இருக்கிறோம்.
ஹிஜாப் வகைகளுக்கு மிகவும் வரவேற்பு உள்ளது.


எல்லா பொருட்களும் நியாமான விலையில் கிடைக்கும். 

CHENNAI PLAZA

No, 277/30 Pycrofts Road,1st Floor, 
(opp:shoba cut piece)
Triplicane , Chennai 600 005
Tel: 91 44 4556 6787
Mr.Mohideen Mob: 91 9840814366
Mr.Ibrahim Mob: 91 98 43709497

Email id: 
chennaiplazaik@gmail.com

feedbackjaleela@gmail.com

Sunday, April 15, 2012

மட்டன் எலும்பு சூப் & மினி மீல்ஸ் (பிள்ளை பெற்றவர்களுக்கு)











இது கர்பிணி பெண்களுக்கு மற்றும் பிள்ளை பெற்றவர்களுக்கு செய்யும் சூப்பாகும். குழந்தை பெறும் நேரத்தில் உடல் இளகி தெம்பில்லாமல் இருக்கும் அதற்கு இந்த சூப்பை செய்து தினமும் மதிய உணவிற்கு பொரியல் அவித்த முட்டையுடன் சாப்பிடுவது நல்லது. சூப்பாகவும் குடிக்கலாம்.
இந்த சூப்பை ஒரு நாள் கறி எலும்பிலும், ஒரு நாள் சிக்கன் எலும்பிலும் செய்து குடிக்கவும்.

ஹிமோகுளோபின் கம்மியாக உள்ளவர்கள் ஆட்டு ஈரலிலும் மட்டனிலும்  சூப் செய்து சாப்பிட்டால் ஒரே மாதததில் ஹிமோகுளோபின் அளவு கண்டிப்பாக அதிகரிக்கும் . இது என் அனுபவ குறிப்பு .

தெம்பிழந்து இருக்கும் நோயாளிகளுக்கும் தினசரி இந்த சூப் கொடுத்து வந்தால் மிகவும் நல்லது.

பூப்பெய்திய பெண்களுக்கும் தினசரி உணவில் கொடுத்து வந்தால் இடுப்பெலும்பு பலம் பெறும்.
இதை குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் போது கால் முட்டி பலம் பெற  சிக்கனில், ஆட்டுக்காலில் அல்லது மட்டனில் கொடுக்கலாம்.
சளி அதிகமாக இருந்தாலும் உடனே சரியாகும். தேவைக்கு  சிறிது மிளகு கூட்டிகொள்ளலாம்.





தேவையான பொருட்கள்

    எலும்பில் வேக வைக்க வேண்டியது

·  கறி உடைய மார்கண்டம் எலும்பு - ஆறு துண்டு
·  வெங்காயம் - ஒன்று
·  தக்காளி - ஒன்று
·  இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
·  உப்பு - தேவைக்கு
·  மிளகு தூள் - அரை தேக்கரண்டி
·  தனியாதூள் - ஒரு மேசை கரண்டி
·  தேங்காய் பால் - கால் டம்ளர்
    
தாளிக்க

·  நெய் (அ) நல்லெண்ணை - இரண்டு தேக்கரண்டி
·  கரம் மாசாலா தூல் - கால் தேக்கரண்டி
·  வெங்காயம் - கால்
·  இஞ்சி பூண்டு பேஸ்ட் - கால் தேக்கரண்டி
·  கொத்து மல்லி தழை - கொஞ்சம்





செய்முறை
·  எலும்பை கழுவி சுத்தம் செய்து முன்று கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வேகவைக்கவும்.
·  வெந்ததும் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.
·  நெய்யில் தளிக்க வேண்டியவைகளை போடு தாளித்து சூப்பில் கலக்கவும்.

குறிப்பு:
இந்த சூப்பை ஒரு நாள் கறி எலும்பிலும், ஒரு நாள் சிக்கன் எலும்பிலும் செய்து குடிக்கவும். ஹிமோகுளோபின் கம்மியாக உள்ளவர்கள் ஆட்டு ஈரலில் சூப் செய்து சாப்பிட்டால் உடனே சரியாகும்.



sending to umm mymoonah's healthy morsel pregnancy and anyone can cook.



பூண்டு முட்டை சாதம் (கர்பிணி பெண்களுக்கு)

தமிழ்குடும்பம் (பூண்டு முட்டை சாதம்) 

Sunday, April 8, 2012

துபாயில் பேச்சுலர்கள் வாழ்க்கை (மசாலா மிக்ஸ்) பாகம் - 4



இங்கு பார்க்கும் பல பேர்களை மையமாக வைத்து எழுதுகிறேன். இதை படிப்பவரக்ள் கொஞ்சம் உஷாராகலாம்.

முன்பு பதிவுகளை படிக்க இங்கே சொடுகவும்






பேச்சுலர் வாழ்க்கை என்பது சரியான படிப்பினை தான். பெற்றோர்களுடன் இருக்கிறவரை கவலை இல்லை எல்லாம் அம்மா அப்பா பார்த்து பார்த்து செய்வார்கள். ஆனால் மேற்படிப்பு, வேலை என போகும் போது குடும்பத்தை விட்டு தனியாக வாழும் நிலையில் எல்லா ஆண்களும் இருக்கின்றனர். முதலில் தன் வேலைகள் அனைத்தையும் தானே பொறுப்பாக செய்ய கற்று கொள்ளவேண்டும். வீட்டை போல் வசதி எங்குமே எதிர்பார்க்க முடியாது.
எங்க வீட்டில் கிளீன் பண்ணது கிடையாது. குடித்த டம்பளர கழுவினதில்ல, துணி துவைக்க தெரியாது என பெருமை பேசி திரியக்கூடாது. சிலருக்கு தான் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும். நல்ல படிச்சி வேற வழி இல்லாம வேலை தேடி அலுத்து போய் விசா முடியும் தருனத்தில் ஏதாவது வேலை கிடைத்தால் போதும் என்று படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லாத வேலையும் சிலர் பார்க்கின்றனர். படிப்புகோ வேலைக்கோ , ஹாஸ்டலிலோ அல்லது மற்ற நாடுகளிலோ கிடைத்த இடம் , ரூம் மெட்களுடன் அட்ஜஸ்ட் செய்து  வாழ கற்று கொள்ளனும். சின்ன சின்ன எளிமையான சமையல் வேலைகளை கற்று கொண்டால் இன்னும் சுலபமாக இருக்கும்.




சகவாசம் – இங்கு துபாயில் பல நாடுகளில் உள்ள மக்கள் வசிக்கின்றனர். (மற்ற வெளிநாடுகளிலும் அப்படி தான் என நினைக்கிறேன்) இந்தியர், பங்களாதேசி, பாக்கிஸ்தானி, நேபாளி , பிலிப்பைனி என பல நாட்டவர்கள் இருக்கின்றனர். ரூம் தேர்ந்தெடுக்கும் போதும்  நல்ல நண்பர்களாக பார்த்து தேர்ந்தெடுக்கனும் அவரத்துக்கு கிடைத்த ரூமில் போய் தங்கி இருந்தாலும் நடைமுறையில் நல்ல தெரிந்தவர்களுடன் தங்குவது நல்லது. தப்பி தவறி பிலிப்பைனிகளோடு போய் தங்கிடாதீங்க  அவர்கள் ஹலால் புட் சாப்பிடுவதில்லை. பூனை,பாம்பு, போர்க் போன்றவைதான் சமைப்பார்கள். அப்படி தான் 15 வருடம் முன் ஒருவர் இங்கு பெரிய கம்பேனியில் வேலைக்கு சேர்ந்து கூட வேலைபார்க்கும் பிலிப்பைனி பேச்சுலர்களுடன் வேற வழி இல்லாமல் தங்கி இருந்தார். கிச்சனில் நுழைய முடியாதாம் நாற்றம் கொடல பெறட்டிடுமாம். இரண்டு மாதம் கூட வேலை பார்க்கல ஊருக்கே ஓடி விட்டார். நல்ல சகவாசம் தேடி தங்கி இருப்ப்து நல்லது.











திருட்டு – கண்டிப்பாக பேச்சுலர்கள் தங்கும் அறையில் அவரவர் பொருட்களை பாஸ்போட், பணம் ஊருக்கு போக அம்மா, மனைவி, தங்கைமார்களுக்கு வாங்கி வைத்துள்ள நகைகள், துணிமணிகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது. ஹே தினம் கூட இருக்கும் ஆட்கள் தானே யார் எடுக்க போகிறார்கள் என்று அலட்சிமாக இருக்காதீர்கள்.

 குடும்பத்தை பிரிந்து சம்பாதிக்கும் ஓவ்வொரு காசும் உங்கள் உழைப்பு. அதிலும் விழிப்புணர்வு தேவை. அப்படி தான் ஒருவர் வருட கண்க்காக சேர்ந்து வைத்திருந்த  2000 திர்ஹம் திடீரென கான போய்விட்ட்து. ஒன்றும் புரியல அவருக்கு போலிஸில் கம்ப்ளெயிண்ட் கொடுத்தால் கடைசியில் விசாரனை செய்த்தில் பண நெருக்கடியில் ரூமில் உள்ளவர்களே திருடி இருக்கிறார்கள். இங்கு போலிஸ் விசாரனை ஏதாவது கம்ப்லெயின்ட் என்றால் நேராக ஒன்றும் கேட்கமாட்டார்கள் மொத்த ரூமில் உள்ள ஆட்களை ஒன்னா கொண்டு போய் உள்ளே வைத்துடுவாங்க. ( கவல படவேண்டாம் முட்டிக்கு முட்டி தட்டமாட்டாங்க) நல்ல பிரியாணி சோறு போட்டு ப்ரியா தங்கிட்டுவரலாம். பணவிஷியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் வையுங்கள். யாரையும் நம்மாதீர்கள்.

இப்ப இருக்கிற சூழ்நிலையில் எங்க பார்த்தாலும் திருட்டு ரொம்ப அதிகம். மற்றநாடுகளிலும் காலேஜில் ஹாஸ்டலில் தங்கி இருப்பவர்கள் மொபைல், பாஸ்போர்ட், லேட்டாப் எல்லாம் வைத்திருப்பவர்கள், கவனமாக வைத்திருக்கவேண்டும்.



எச்சரிக்கை – வெளிநாடுகளில் இரண்டு ரும் பிலாட்டுகளில் நடுத்தர பேச்சுலர்கள் மொத்தமாக 20 பேச்சுலர்கள் தங்கி இருப்பார்கள். சாப்பாடு இரண்டு முன்று பேச்சுலர்கள் மாற்றி மாற்றி சமைப்பார்கள். கொஞ்சம் பேருக்காக இருந்தால் ரைஸ் குக்கரிலோ , அல்லது ஈசியாக வடித்தோ சாப்பிடலாம். ஒரு  ரூமில் 10 பேர் , மற்றொரு ரூமில் 1பேர் இருப்பார்கள். எல்லாம் மொத்தமாக சேர்ந்து மெஸ் ஆரம்பித்து சமைத்து சாப்பிடுவார்கள் .  மதிய சாப்பாட்டிற்கு காலையிலோ அல்லது இரவோ வடித்து வைக்க்கனும், ஒரு பேச்சுலர் ரூமில் மதிய சாப்பாட்டிற்கு சாதம்  வடிக்கும் போது சரியாக பிடிமானம் இல்லாத்தால் சோறு வடிக்கும் போது மேலே வயிற்றிலேயெ கொஞ்சம் கொட்டி விட்டதாம். சமைக்கும் போது கண்டிப்பாக நிதானம் தேவை. பெரிய சட்டியில் சாதம் வடிப்பதாக இருந்தால் அதற்கு ஏற்றார்போல கையில் இருந்து  வழுக்காத நல்லகாட்டன் துணியாக இரண்டு சின்ன துண்டுகளாக பிடித்து தூக்கினால் ஈசியாக இருக்கும். அதே நேரம் கேஸ் அடுப்பில் முன்னாடி வைத்து சமைக்கும் போது சரியான பிடிமானம் இல்லாமல் தவறி விழவும் வாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளில் சமைக்கும் பேச்சுலர்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் எச்சரிக்கையாக சமைப்பது நல்லது.




இழப்பு   ஒரு இடத்தில் புட் பாயிசன் என முன்று பேர் மருத்துவ மனை சேர்க்கப்பட்டு அதில் ஒருவர் இறந்து விட்டார். இரண்டு பேர் சிகிச்சை பெற்று நல்ல ஆகிவிட்டனர்.
இது சிலர் ஊரிலிருந்து பலகாரம் கொண்டு வந்த்தால் என்று சொன்னார்கள்.இல்ல ஊரில் இருந்து சிக்கன் கொண்டு வந்தார் அதானால் தான் என்றார்கள், ஆனால் இரண்டுமே இல்லை. இங்கு நம்ம ஊரை விட சிறிய கரப்பான் பூச்சியும், மூட்டை பூச்சியும், எலியும் அதிகம். எல்லாபேச்சுலர்களும் சலவைக்கு துணியை போடுவதால் அதன் மூலம் கண்டிப்பாக வரும். இல்லை டேக்சி, சினிமா தேட்டர்களில் இருந்து அழகாக கொண்டு வந்துடுவாங்க. அப்படி இருக்கும் போது எல்லா இட்த்திலும் பெஸ்ட் கன்ரோல் அடிப்பார்கள். அப்படி அடிக்கும் போது எல்லோரும் அலுவலகம் சென்றதும் அடித்தால் மாலை வரை எல்லா மூட்டை பூச்சி, கரப்பான் எல்லாம் செத்து கிடக்கும். இது தெரியாமல் மதியம் டுட்டி முடிச்சி வந்தவர் அப்படியே தூங்கிட்டார் அதானால் மூச்சு திணறிவிட்ட்து என்றார்கள்.அதனால் தான் இறந்துவிட்டார் என்றார்கள், இங்கு போலிஸில்ஒரு கேஸ் மாட்டினா அவ்வளவு தான் அதை டீல் பண்ணி முடிக்க ஒரு மாதம் ஆகும். ஆபிஸில் இருந்து வந்ததும் இருக்கும் டயர்டில் அப்படியே படுக்காமல். எல்லாத்தையும் செக் பண்ணிட்டு படுக்கலாம்.
சாப்பாட்டு பொருட்கள் மற்றவர்களுக்கு வாங்கி வருவதாக இருந்தால்எண்ணை சிக்கு ஸ்மெல் உள்ள மைசூர் பாக்கு, பீலிச்சிங் தண்ணி வாசனை வர ஸ்வீட் அயிட்டம் இது போது கண்ணை மூடி கொண்டு வாங்கி வராதீங்க, இங்கு வந்து மற்றவர்களுக்கு ஏதும் ஆச்சு ந்னா மாட்டுவது நீங்க தான். அப்படியே ஊரிலிருந்து ரெடி மேட் ஃபுட் அயிட்டங்கள், காரம் இனிப்பு வாங்கி வருவதாக இருந்தால் சீக்கிரம் கெட்டு போகாத பொருளா, எக்ஸ்பேரி டேட் செக் செய்து வாங்கி வரவும்

பயணம்: ஊருக்கு வரும் போதும் சரி கிளம்பும் போதும் சரி விமான நிலையத்தில் சரியாக எவ்வள்வு எடை கொண்டு போக அனுமதிக்கிறார்கள் என்பதை சரியாக தெரிந்து கொண்டு பேக் பண்ணுங்கள் அன்பு தொல்லையால் எல்லாரும் கொடுக்கிற அதிரசம் ஹல்வா, முறுக்கு சீடை ,ஊறுகாய் ,நெய் அவ்வளத்தையும் அடைத்து கொண்டு வந்தால் கஸ்டம்ஸில் வெயிட் அதிகமானால் பயண டென்ஷனில் ஏற்போர்டில் அவ்வளத்தையும் பிரித்து போட்டு கொண்டு தலய பிச்சிக்க வேண்டியதாக இருக்கும்.
அதுவும் இல்லாமல்  துணிமணி , சர்டிபிகேட் வைத்திருக்கும் அதே பெட்டியில் மேற்கொண்ட உணவு பொருட்களை திணித்து  கொண்டு வருவதால் அவ்வளவும் எண்ணை கறையாகிடும்.
கண்டிப்பாக பேச்சுலர்கள் ஓவ்வொரு விஷியத்திலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

தொடரும்... 

ஆக்கம் 
ஜலீலாகமால்