அதை தவிர்க்க தேவையான நேரம் மட்டும் டயப்பர் பயன் படுத்தி கொண்டு மற்ற நேரங்களில் கீழே படத்தில் காட்டியுள்ளவாரு செய்து பயன் படுத்தலாம்.
2 மணி நேரத்துக்கு ஒரு முறை துணி நனைந்து இருக்குதான்னு செக் பண்ணனும்.
பிறந்த குழந்தைகளுக்கு 3 மாதம் வரை இருக்கும் இடம் விட்டு அசைய வாய்ப்பில்லை கை காலை ஆட்டி கொண்டு இருப்பார்கள்.
அப்போது கீழே ரப்பர் ஷீட் விரித்து நியுஸ் பேப்பர் கொஞ்சம் திக்காக வைத்து விட்டு சின்ன மெல்லிய துணியை கட்டினால் போதும். ஈரம் ஆனதும் பேப்பரை எடுத்து விட்டு வேர பேப்பர் மாற்றி கொள்ளலாம்.
வெது வெதுப்பான வெண்ணீரில் பஞ்சை நனைத்து துடைத்து விட்டு வேற துணி மாற்றி விட்டு கீழே மறுபடி பேப்பரை மாற்றி விடுங்கள்
துணியை அதிகம் துவைக்க தேவையில்லை, பேம்பரும் செலவாகாது,
குழந்தைகள் இரவில் தூங்கும் போது டயப்பர் தேவைதான் பேம்பர் போடும் போது தேஙகாய் என்னை அல்லது ஆலிவ் ஆயில் தடவி போட்டு விடுங்கள்.
1. குழந்தைகளுக்கு டயப்பருக்கு பதில் நாமே நேப்கின் செய்து பயன் படுத்துங்கள்.
2. அது வெள்ளை கலர் பெரிய சதுர வடிவ நாப்கீனை மடித்து வைத்து பிளாஸ்கிட் அதன் மேல் போடு ஜட்டியும் இருக்கிறது அதை பயன் படுத்தலாம்.
3. இதனால் தேவையில்லாத ரேஷிலிருந்து பாது காத்து கொள்ளலாம்.
4. ஒரு நாளைக்கு நான்கு இருந்தால் கூட போதும், மொத்தமா ஊறவைத்து துவைத்து கொள்ளலாம்.
5. அம்மா பாட்டிகளின் ஷாஃப்டான காட்டன் சேலை யும் இது போல் நாப்கின்கள் நிறைய கிழித்துவைத்து பயன் படுத்தலாம்.
ஒரு சேலையை கிழித்தால் இரண்டுமாதத்துக்கு தேவையான் நாப்கின் துண்டுகள் கிடைக்கும்
6. அதே போல் ஆண்களின் காட்டன் லுங்கியை நன்கு அலசி கிழித்து பயன் படுத்தலாம்.
7.. படத்தில் காட்டியுள்ளபடி செய்து பயன் படுத்தவும்.
ஆக்கம்
ஜலீலாகமால்
(தொடர்ரும்)
Tweet | ||||||