Wednesday, October 24, 2012

எண்ணை கத்தரிக்காய் கிரேவி - 1



எண்ணை கத்திரிக்காய் கிரேவி/தொக்கு/கூட்டு

தேவையானவை
சின்ன கத்திரிக்காய் கால் கிலோ
வெங்காயம் இரண்டு
தக்காளி இரண்டு
தக்காளி பேஸ்ட் இரண்டு மேசைகரண்டி
மிளகாய் தூள் முக்கால் தேக்கரண்டி
தனியாத்தூள் ஒன்னறை தேக்கரண்டி
பச்ச மிளகாய் இரண்டு
வறுத்து பொடிக்க
எள் ஒரு தேக்கரண்டி
சீரகம் ஒரு தேக்கரண்டி
வெந்தயம் கால் தேக்கரண்டி
பெருங்காயப்பொடி ஒரு சிட்டிக்கை
புளி ஒரு லெமன் சைஸ்
தாளிக்க
எண்ணை நான்கு தேக்கரண்டி
கடுகு அரைதேக்கரண்டி
மிளகு அரை தேக்கரண்டி
சீரகம் அரை தேக்கரண்டி
பூண்டு முன்று பல்
கருவேப்பிலை அரை கைப்பிடி
கொத்துமல்லி தழை சிறிது



செய்முறை

 கத்திரிக்காயை முழுவதும் வெட்டாமல் நாலாக கீரிவைக்கவும்.
வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை பொடித்து வைக்கவும்.
.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிற்கு முழுசாக நாலாக வெட்டிய கத்திரிக்காயை சேர்த்து கிளறவும்.
சேர்க்கவேண்டிய தூள் வகைகள் (மிளகாய் தூள்,உப்பு தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் ) சேர்க்கவும்.
நன்கு கத்திரிக்காவில் படும் படி பிரட்டி 5 நிமிடம் சிம்மில் வைக்க்வும்.

தக்காளி பொடியாக அரிந்து சேர்த்து, பச்சமிளகாய், புளியை கட்டியாக கரைத்து ஊற்றி, கொதிக்கவிடவும்.
பாதி வெந்த்தும் பொடித்த பொடியை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கிளறி தீயின் தனலைசிம்மில் வைத்து நன்கு கத்திரிக்காய் கிரேவி பதம் வந்து எண்ணை மேலே வந்த்தும் இரக்கவும்.
கொத்துமல்லி தூவி அலங்கரிக்கவும்.சுவையான எண்ணை கத்திரிக்காய் ரெடி

குறிப்பு:
பிரியாணிக்கு ஏற்ற சைட் டிஷ். மற்றும் பிளைன் சாதம், லெமன் சாதம், தயிர் சாத்துக்கும் ஏற்றது
எண்ணைக்கத்திரிக்காய் கிரேவி/தொக்கு/கூட்டு.
பெரும்பாலும் கறுப்பு எள் தான் சேர்ப்போம்.இதில் வெள்ளை எள் சேர்த்து இருக்கிறேன்
காரம் அதிகம் விரும்புவர்கள்  கால்தேக்கரண்டி மிளகாய் தூள் கூட சேர்த்து கொள்ளலாம்.



இந்த குறிப்பை ஆசியாவின் feast of sacricice ஈவண்டுக்கு  அனுப்புகிறேன்.

18 கருத்துகள்:

Menaga Sathia said...

மிக அருமையாக இருக்கு....

Asiya Omar said...

ரொம்ப அருமையாக செய்து காட்டியிருக்கீங்க ஜலீலா,என் இவெண்ட்டிற்கு இணைப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

வாவ்... சூப்பர்...

வீட்டில் செய்ததில்லை... குறித்துக் கொண்டார்கள்...

நன்றி...

'பரிவை' சே.குமார் said...

எண்ணெய் கத்திரிக்காய் படம் பார்க்கும் போதே சாப்பிடச் சொல்லுது...
அருமையான விளக்கம்.

Priya Suresh said...

Yummy yennai kathirikkai, super delicious.

இமா க்றிஸ் said...

எல்லோரும் மாறிமாறி கத்தரிக்காய் குறிப்பாகக் கொடுத்து நாவூற வைக்கிறீர்கள். சூப்பரா இருக்கு ஜலீ. வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

Unknown said...

வாவ் சூப்பராக இருக்கு.. பக்ரீத் க்கு ட்ரை பண்ணலாம்

Kanchana Radhakrishnan said...

அருமை.

GEETHA ACHAL said...

மிகவும் சூப்பராக இருக்கின்றது...நானும் இன்று ஆசியா அக்காவின் எண்ணெய் கத்திரிக்காய் தான் செய்து போஸ்ட் செய்து இருக்கின்றேன்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

ருசியானதோர் சமையல் குறிப்பு.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

Jaleela Kamal said...

நன்றி மேனகா


நன்றி ஆசியா

Jaleela Kamal said...

தனபாலன் சார் இது வரை செய்ததில்லையா? கண்டிப்பாக செய்து பார்த்து எப்படி இருந்ததது என்று சொல்லுங்கள்

Jaleela Kamal said...

வாங்க சே குமார் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி ப்ரியா

Jaleela Kamal said...

இமா உடனே செய்து பார்த்து விடுவது தான் நல்லது..

Jaleela Kamal said...

வாங்க பாயிஜா செய்து பாருங்கள்,

Jaleela Kamal said...

நன்றி காஞ்சனா

கீதா ஆச்சல் நீங்களும் இந்த ரெசிபி தான் போஸ்ட் பண்ணி இருக்கிங்களா? நல்லது

Jaleela Kamal said...

கோபு சார் வருகைக்கு மிக்க நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா