Tuesday, December 3, 2013

ஹைதராபாத் சிக்கன் 65 -Hyderabad Chicken 65






ஹோட்டல்களில் பெரும்பாலும் அசைவத்தில்அனைவரும் விரும்பி முதலில் ஸ்டார்டர் க்கு ஆர்டர் செய்வது சிக்கன் 65 அல்லது சிக்கன் லாலிபாப். அதை ஏற்கனவே நான் என் ரெசிபி இதற்கு முன் போஸ்ட் செய்துள்ளேன். இது ஹைதாரா பாத் சிக்கன் 65, சுவையோ மிக அருமை.

ஏற்கனவே நான் போட்டுள்ள சிக்கன் 65 குறிப்பை இங்கு காணலாம்
 Chicken 65
 இது மற்றொரு வகை ஹைதராபாத் ஸ்பெஷல் சிக்கன் 65
ஹைதராபாத் சிக்கன் 65
Hyderabad Chicken - 65

சிக்கன் – 900 கிராம்
மிளகாய் தூள் – 1 மேசைகரண்டி
உப்பு – தேவைக்கு
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைகரண்டி
முட்டை – 1
கார்ன்  மாவு + மைதா – தலா ஒரு மேசைகரண்டி
கரம் மசலா பொடி – கால் தேக்கரண்டி
எண்ணை பொரிக்க தேவையான அளவு

தாளிக்க

எண்ணை – 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது  - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை
பச்ச மிளகாய் – இரண்டு
தயிர் – இரண்டு மேசை கரண்டி
கலர் பொடி  - சிறிது
கொத்துமல்லி தழை சிறிது

செய்முறை

சிக்கனை எலுமிச்சை சாறு பிழிந்து நன்கு கழுவி தண்ணீரை முற்றிலும் வடிக்கவும். அதில் மிளகாய் தூள், உப்பு தூள், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, கார்ன் மாவு+ மைதா மாவு , முட்டை சேர்த்து நன்கு பிரட்டி ஒரு மணி நேரம்  ஊறவைக்கவும்.

ஊறிய சிக்கனை ஒரு வாயகன்ற வானலியில் எண்ணையை காயவைத்து ஊறிய சிக்கனை முக்கால் பத்த்துக்கு பொரித்து எடுக்கவும்.

பொரித்த சிக்கனை எண்ணையை வடித்துவைக்கவும்.
Menu
Bahara Khan
Mutton Potato Salna
Plain Dhall
Veg Dalcha
Hyderabad Chicken 65

மற்றொரு வாயகன்ற வானலியில் என்ணையை ஊற்றி காய்ந்த்தும் இஞ்சி பூண்டு, கருவேப்பிலை, பச்சமிளகாய், தயிர், கலர் பொடி சேர்த்து நன்கு கிளறி பிற்கு பொரித்த சிக்கனை இதில் சேர்த்து நன்கு சுருள கிளறி இரக்கவும்.
(Hyderabad Chicken - 65) ஹைதராபாத் சிக்கன் 65 ரெடி.
How to Make Hyderabad Chicken 65
Step by Step













சிக்கன் 65 என பெயர் வர காரணம் , ஹோட்டல்களில் மெனு கார்ட் வரிசையில் இந்த சிக்கன் ஃப்ரைக்கு 65 வது இடம்.அது எல்லோருக்கும் பிடித்து போகவே இந்த   சிக்கன் 65 பிரபலமாகி  உள்ளது. இதை பல வகைகளை செய்யலாம்.




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

9 கருத்துகள்:

Menaga Sathia said...

சூப்பர்ர் ...இப்பவே செய்து சாப்பிடனும் போல இருக்கு!!

ஸாதிகா said...

உடனே செய்து சாப்பிடத்தூண்டுகிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்... செய்முறை குறிப்பிற்கு நன்றி...

வாழ்த்துக்கள்...

enrenrum16 said...

சிக்கன் 65 பெயர்க்காரணம் புதுசா இருக்கே... :)

சிக்கனைப் பொரித்த பின், தாளிப்பது இப்போதான்கா பார்க்கிறேன்.. செய்து பார்க்கிறேன்.

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி மேனகா , உடனே செய்து பார்த்து ருசி எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

தனபாலன் சார் தொடர் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஆமாம் பானு , ஹோட்டல்களில் இது போல் பல உணவுகள் பிரபலம், இதில் எல்லோரும் அறிந்தது இந்த சிக்கன் 65, அடுத்து இதே போல் துபாயில் பிரபலமான ஒரு குறிப்பு ஒன்று போடுகிறேன். அதற்கும் ஒரு சூப்பரான‌ பெயர் இருக்கு..

இந்த குறிப்பை என் தங்கை பொண்ணு செய்து பார்த்துட்டு ரொம்ப சூப்பர் ஆன்டி சொன்னால் , எல்லோரிடமும் மிகுந்த பாராட்டை பெற்றாலாம்.

Asiya Omar said...

சூப்பர்.செய்முறை விளக்கப் படங்களுடன் அருமை.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா