Sunday, April 27, 2014

புட்டு பால்ஸ்/லட்டு (குழந்தைகளுக்கு) - Puttu Laddu



புட்டு உருண்டை, புட்டு லட்டு, புட்டு பால்ஸ்


தினம் குழந்தைகளை சாப்பிட வைக்க என்ன டிபன் செய்வது என்று கவலை படும் தாய்மார்களுக்கும் இதோ ஈசியான புட்டு பால்ஸ் தயாரித்து கொடுங்கள். இதை அரிசி, ராகி ( கேழ்வரகு), ரவை போன்ற வற்றிலும் தயாரிக்கலாம்.

பிள்ளைகள் சாப்பிடும் அளவை பொருத்து சின்ன சின்ன தாக உருண்டை பிடித்து வையுங்கள்.,



தேவையானவை
சிகப்பரிசி அல்லது பச்சரிசி  புட்டு மாவு –  ஒரு கப்

தேங்காய் துருவல்  - அரை கப்
சர்க்கரை – அரை கப்
நெய் – இரண்டு தேக்கரண்டி


செய்முறைஒரு டம்ளர் தண்ணீரில் சிட்டிக்கை உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தெளித்து உதிரியாக மாவை விறவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு இட்லி பானையில் ஈர துணியை விரித்து மாவை கட்டி யில்லாமல் உதிரியாக வைத்து 15 நிமிட அவித்து எடுக்கவும்.

வாயகன்ற பேசினில் வெந்த புட்டு மாவை கொட்டி அதில் சர்க்கரை , தேங்காய் பூ உருக்கிய நெய் , வாழை பழம் சேர்த்து விரவி உருண்டைகளாக பிடித்து தேவைக்கு மேலே தேங்காய் பூ தூவவும்.


குழந்தைகளுக்கு இப்படி ஈசியாக உருண்டை பிடித்து வைத்தால் சாப்பிட இலகுவாக இருக்கும்.

பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு, ஆபிஸ்க்கு டிபனுக்கு இப்படி செய்து எடுத்து சென்றால் நோகமாக ஒரு ஸ்பூனை போட்டு சாப்பிடலாம். 


ஆனால் இந்த புட்டு கை கொண்டு விரவி வைப்பதால் காலை செய்தால் 10 , 11 மணிக்குள் சாப்பிட்டு முடித்து விடவேண்டும்.

ஆபிஸ் செல்லும் தாய் மார்களுக்கும் இப்படி செய்து கொடுப்பது பிள்ளைகளுக்கு நிமிஷத்தில் 4 உருண்டையை ஊட்டி விடலாம்.

**************************


சமையல் அட்டகாசம் முக நூல் பேஜ் 999 லைக்ஸ் ஐ எட்டி உள்ளது,
நான் இது வரை யார் லைக் பண்ணாங்க . 500 ,  600 ன்னு பார்த்தில்லை.

திடீருன்னும் இன்று பார்த்ததும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை/


இங்கு ஒரு நாளைக்கு 1500 நபர்கள் வந்து என் தளத்தை பார்வையிடுகிறீர்கள்.

ஆனால் யாரும்கருத்து தெரிவிக்க வருவதில்லை . இங்கு இல்லை என்றாலும் என் முக நூல் பேஜில் இங்குள்ள குறிப்புகளை பயனடைந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாமே நானும் மிகவும் சந்தோஷப்படுவேன்.

தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் தோழ தோழியர்களுக்கும் என் நன்றிகள்.


அப்படியே எங்க கடை சென்னை ப்ளாசா முக நூல் பேஜுக்கும் லைக் கொடுத்து எல்லாருக்கும் தெரியப்படுத்துங்கள்



சென்னை ப்ளாசா முக நூல் பேஜ்   -  லைக்  பண்ணுங்கோ ///

சென்னை ப்ளாசா வெப்சைட்   - 1

சென்னை ப்ளசா வெப்சைட் - 2 

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, April 22, 2014

சிறப்பு விருந்தினர் பதிவு- 5 - ஜப்பானீஸ் ஷ்ரிம்ப் அண்ட் வெஜ் டெம்புரா - செய்யது கதீஜா


பாரம்பரிய சமையலுடன் சிறப்பு விருந்தினராக இன்று நம்முடன் ஜப்பானியர்களின் குறிப்பை பகிர இருப்பவர் திருமதி செய்யது கதீஜா.



செய்யது கதீஜா காயல் பட்டிணத்தை சேர்ந்தவர், தற்சமயம் வசிப்பது ஜப்பானில் மூன்று பிள்ளைகள் இரண்டு மகன்களும், ஒரு செல்ல மகளும்.


ஒரு அழகான குட்டி பெண் பிள்ளைகளை , குழந்தை பிறந்தால் அதை பார்த்ததும் அந்த காலத்தில் ஜப்பான் பொம்மை மாதிரியே இருக்கு என்று சொல்வார்கள்.
அதே போல் தான் என் சின்ன தங்கையையும் பிறந்திருந்த போது ஜப்பான் பொம்மையே தான் என்று எங்க டாடியின் தோழர் அடிக்கடி சொல்வார்.



 அது போல் கதீஜாவின் அழகு செல்லமும் ஜப்பான் பொம்மையே தான். ஆண்டவன் அவர்கள் விரும்பிய வண்ணம் அவள் நன்றாக வர துஆ செய்வோமாக‌

 கதீஜாவின் முதல் பையன் இன்ஷாப் புகாரி அழகாக தமிழில் பாடி இருக்கிறார்.அதையும் கேளுங்கள்




காயல் பட்டிண ஸ்பெஷல் ரெசிபிகளை செய்து அசத்துவார்கள்.   பல காயல் பட்டின பாரம்பரிய ரெசிபிகளையும், ஜப்பானில் பிரத்தி பெற்ற ரெசிபிகளையும் அறுசுவை டாட் காமிலும் முக நூல் பேஜிலும்  My recipes  என்ற முகவரியிலும் பகிர்ந்து வருகிறார்.



எனக்கு கதீஜாவை அறுசுவை டாட் காம் மூலமாக தான் தெரியும் அங்கு கூட்டாஞ்சோறு தோழிகள் குறிப்புகளில் கதீஜாவின் குறிப்புகளும் இடம் பெற்று இருக்கின்றன, அதில் அனைத்து குறிப்புகளும் அருமையாக இருக்கும் , அதில் அவர்கள் செய்துள்ள புதினா ரசம் வித்தியாசமான குறிப்பு.

https://www.facebook.com/katheeja.seyed

Katheeja FB page - My Recipes 

https://www.facebook.com/pages/My-recipes/623293551041855
http://www.arusuvai.com/tamil/node/3106
http://www.arusuvai.com/tamil/expert/1377


ஜப்பானில் தமிழ் பாட்டு  இது அவங்க மகன் இன்சாஃப் புகாரி பாடியது. கேட்டு மகிழுங்கள்.

நான் சமையலில் இந்த அளவுக்கு வர என்  கணவருக்கு முக்கிய பங்கு இருக்கு அவங்க தான் நான் எது சமைத்தாலும் நல்லா இருக்குன்னு பாராட்டி எனக்கு சமையலின் மீது ஆர்வம் வர அவர் முக்கிய காரணமாக இருக்கிறார்.
மையல் புதுசா கத்துகிறவஙளுக்கு என்னுடைய அட்வைஸ் என்ன என்றால் நீங்க எது செய்ய ஆரம்பித்தாலும் நல்லா இருக்குமா?சரியா வருமா? என்று நினைக்காதீங்க சரியா வரும். டேஸ்டா இருக்கும்னு நினைத்து செய்யுங்கள் கண்டிப்பாக நல்லா அமையும். நீங்களும் ஒரு சமையல் வல்லுனராக வரலாம்.என்னுடைய சமையல் திறனை வெளிப்படுத்தியதுக்கு அறுசுவை. காமிற்க்கு பங்கு இருக்கிறது.

செய்யது கதிஜா அவர்கள் நம்முடன் பகிர இருப்பது ஜப்பான் நாட்டு பாரம்பரிய சிற்றுண்டியான ஜப்பானீஸ் ஸ்ரிபம்ப் அன்ட் வெஜ் டெம்புரா.
இது நம்மூர் பஜ்ஜி போல ஆனால் எந்த வித காரமும் இல்லாமல் செய்வது. டெம்புரா பவுடர் என தனியாக கிடைக்கிறது, அது கிடைக்காதவர்கள் கார்ன் ப்ளார் மாவையே பயன் படுத்தலாம்.


 ஜப்பானீஸ் ஷ்ரிம்ப் அண்ட் வெஜ் டெம்புரா
Japanese Shrimp and Veg Tempura

தேவையான பொருட்கள்

  1. ஷ்ரிம்ப் - 15
  2.  முட்டை - 1
  3. மைதா மாவு - 1 கப்
  4. தெம்புரா மாவு (அ) கார்ன்ப்ளார் - 1/4 கப்
  5. எண்ணெய் - பொரிக்க
  6. உப்பு - தேவைக்கு
  7. ப்ரட் க்ரம்ப்ஸ்  - 1 கப்
  8. கத்தரிக்காய் - 1
  9. முள்ளங்கி - 150 கிராம்
  10. வெங்காயம் - பாதி




செய்முறை


  1. ஷ்ரிம்பை சுத்தம் செய்து கட்டிங் போர்டில் வைத்து கத்தியை கொண்டு மேலே மெதுவாக அழுத்தவும்.
  2. இப்படி செய்யும் போது பொரிக்கும் சமயம் ஷ்ரிம்ப் வளையாமல் இருக்கும்.
  3. கத்தரிக்காயை மெல்லியதாக சீவி வைக்கவும்.
  4. வெங்காயத்தையும், முள்ளங்கியையும் தேவையான சைஸில் கட் செய்து கொள்ளவும்.\
  5. ஒரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றி 1 கப் ஐஸ் வாட்டர் சேர்த்து நன்கு நுரை பொங்க அடித்துக்கொள்ளவும்.
  6. மாவில் சோடா உப்பு, உப்பு சேர்த்து சலித்து அதில் முட்டை கலவையை  ஊற்றி கட்டிகலில்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
  7. ரஸ்க் தூளை ஒரு தட்டில் போட்டு வைக்கவும்.
  8. ஷ்ரிம்ப்,காய்கறிகள் மீது கார்ன் மாவை டஸ்ட் செய்து வைக்கவும்.
  9. பின் ஒவ்வொரு ஷ்ரிம்பாக மாவுகலவையில் முக்கி ரஸ்க் தூளில் பிரட்டி சூடான எண்ணெயில் போட்டு தீயை மீடியமாகவைத்து பொரித்து எடுக்கவும்.

  1. நூடுல்ஸ், உதோன், சோபா soba உடன் சாப்பிடலாம்.சோயாசாஸ் தொட்டும் சாப்பிட மிக அருமையாக இருக்கும்.


மேலே உள்ளது தான் டெம்புரா மிக்ஸ் இது சிக்கன் பஜ்ஜி , வெண்டைக்காய் குர்குரேவுக்கு சிக்கன் ப்ரைக்கு நான் பயன் படுத்துவது  நல்ல கிரிஸ்பியாக வரும்.இது கிடைக்க வில்லை என்றால் கார்ன் மாவு  + மைதாமாவு சேர்த்து கலக்கி டிப் செய்து கொள்ளலாம். 
*******************************************

நீங்களும்  உங்கள் பாரம்பரிய சமையல் குறிப்புகளை இங்கு என்னுடன் பகிர  விரும்பம் உள்ளவர்கள் உங்கள் ஊரின் பாரம்பரிய சமையல் குறிப்புகள் அல்லது நீங்கள் வசிக்கும் நாட்டின் பாரம்பரிய சமையல் குறிப்புகளை என்னுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்ன குறிப்பாக இருந்தாலும், அதாவது டிபன் வகைமதிய உணவிற்கு செய்யும் கறி வகைகள்மாலை நேர சிற்றுண்டி மற்றும் இரவு சாப்பாடு வகைகள்.குழந்தைகளுக்கு செய்யும் உணவு, கர்பிணி பெண்களுக்கான உணவு, பூப்பெய்திய பெண்களுக்கான உணவு, பிள்ளை பெற்றவர்களின் பத்திய உணவு, திருமணத்தில் செய்யும் முக்கிய வகை உணவு, விஷேச நாட்களில் செய்யும் பலகாரம்மற்றும் பல.....வகைகளை அனுப்பலாம்.. நானும் சிலரை அழைக்கிறேன்...விருப்பம் உள்ளவர்கள்  இங்கு கிழே என் பதிவின் கீழ் கருத்து தெரிவிக்கலாம்  அல்லது கிழே கொடுக்கப்பட்டுள்ள என் முகவரிக்கு மெயில்  அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.


feedbackjaleela@gmail.com or cookbookjaleela@gmail.com

Burka & Hijab @ Chennaiplaza

https://www.facebook.com/Samaiyalattakaasam


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, April 16, 2014

இனிப்பு மக்ரூனி - Sweet Macaroni








இனிப்பு மக்ரூணி/ஸ்வீட் பாஸ்தா

தேவையான பொருட்கள்
1.   வேகவைத்த்து பாஸ்தா/மக்ரூணி  - விரும்பி வடிவம் – 200 கிராம்
2.   பால் அரை  - லிட்டர்
3.   ஸ்வீட்டன் கண்டென்ஸ்ட் மில்க் – 90 கிராம்
4.   ஏலக்காய் – 2
5.   பட்டை – ஒரு சிறிய துண்டு
6.   நெய் – ஒரு மேசை கரண்டி
7.   முந்திரி – 6
செய்முறை
1.   முந்திரியை பொடியாக நறுக்கி அல்லது இரண்டாக வெட்டி நெய்யில் வறுத்து வைக்கவும்.
2.   பாலை ஏலக்காய்பட்டை சேர்த்து  நன்கு கொதிக்கவிடவும்.
3.   பால் சிறிது வற்றியதும் வேகவைத்த மக்ரூணியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
4.   கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து கிளறி வறுத்து வைத்த முந்திரியை சேர்த்து நன்கு கிளறிஇரக்கவும்.







கவனிக்க :

கண்டெஸ்ட் மில்க் சேர்த்த்தும் அப்படியே கொதிக்க விடக்கூடாதுஇல்லை என்றால்அடிபித்துவிடும்.
கண்டென்ஸ்ட் மில்க் இல்லை என்றால் சர்க்கரை 100 கிராம் சேர்க்கவும்.மக்ரூனியை வேகவைத்துவைத்து கொண்டால் நிமிஷத்தில் தயாரித்து விடலாம்.
சமைக்கும் போது மக்ரூனியை வேக வைப்பதாக இருந்தால் குக்கரில் ஒரு டம்ளர் மக்ரூணிஎன்றால் முன்று டம்ளர் அளவு தண்ணீரை கொதிக்கவைத்து மக்ரூணியை சேர்த்து கிளறி குக்கரைமூடி 3, 4  விசில் விட்டு இரக்கவும்.பிறகு குக்கர் ஆவி அடங்கியதும் வடித்து சேர்க்கவும்.

https://www.facebook.com/pages/Chennai-Plaza


/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, April 8, 2014

தேன் சிக்கன் வறுவல் - Chicken Fry with Honey






ஹனி சிக்கன் ஃப்ரை /தேன் சிக்கன் வறுவல்
Chicken Fry with Honey

தேன் சிக்கன் வறுவல்
தேவையான பொருட்கள்

சிக்கன் – 500 கிராம்
மிளகாய் தூள் – 11/2 தேக்கரண்டி
கார்லிக் சில்லி டொமோட்டோ கெட்சப் – ஒரு மேசை கரண்டி
தேன் – ஒரு மேசை கரண்டி
உப்பு – ஒன்னறை தேக்கரண்டி
மைதா – ஒரு மேசை கரண்டி
கார்ன்ப்ளார் மாவு  - ஒரு மேசைகரண்டி
முட்டை வெள்ளை கரு  - ஒன்று
ரெட் கலர் பொடி – சிறிது
சோயா சாஸ் – ஒரு தேக்கரண்டி
எண்ணை – பொரிக்க தேவையான அளவு

செய்முறை

சிக்கனை வினிகர் சேர்த்து நன்றாக சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.

மிள்காய் தூள், உப்பு, கார்லிக் சில்லி டொமேட்டோ கெட்சப்,தேன், மைதா, கார்ன் மாவு, சோயா சாஸ், முட்டை வெள்ளை கரு,ரெட் கலர் பொடி அனைத்து மசாலாக்களையும் ஒன்றாக சிக்கனில் சேர்த்து பிறட்டி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஒருவாயகன்ற வானலியில் எண்ணை ஊற்றி காயவைத்து ஊறிய சிக்கன் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான தேன் சிக்கன் ப்
ரை ரெடி


இது கிரிஸ்பியாக இருக்காது நல்ல மெத்துன்னு ஷாப்டாக இருக்கும். ஹோட்டலில் சாப்பிடுவது போல் இருக்கும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சில்லி கார்லிக் கெட்சப் கிடைக்கவில்லை என்றால் சாதாராண கெட்சப்புடன் முன்று பல் பூண்டு மற்றும் முழு சிவப்பு மிளகாய் இரண்டு சேர்த்து நன்கு அரைத்து சேர்க்கவும்.
இதை  எலும்புடன் கூடிய துண்டுகள் அல்லது எலும்பில்லாத துண்டுகளிலும் செய்யலாம். 
ஆக்கம்
ஜலீலாகமால்
துபாய்.








https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, April 1, 2014

சிறப்பு விருந்தினர் பதிவு - சங்கரா மீன் வறுவல் - ஷாமா நாகராஜன்






பாரம்பரிய சமையலுடன் சிறப்பு விருந்தினராக அறிமுக படுத்தபடுவர் இன்று  திருமதி ஷாமா நாகராஜன்.
ஷாமாவை வலை உலகிற்கு வந்த பிறகு தான் தெரியும் , என் ஆங்கில வலைப்பூவில் என் குறிப்புகளுக்கு கருத்து தெரிவிப்பார்கள். 
அவர்கள் வலைப்பூவில் குழந்தைகளோடு குழந்தையாக அவர்களும் சேர்ந்து தயாரித்து மிக சுலபமான வரைபடங்கள், வாழ்த்து அட்டைகள், பண்டிகை கால வாழ்த்து அட்டைகள்,  கைவேலைபாடுகள் எல்லாவற்றையும் செய்து  இந்த பிளாக்கில் பகிர்ந்துள்ளார்கள். பள்ளொ விடுமுறையில் உங்க வீட்டு வாண்டுகளை சமாளிக்க 
கீழே உள்ள லின்கில் சென்று அவர்களுக்கு சொல்லி கொடுங்கள். 
http://myhandicraftscollection.blogspot.ae/





சமையலில் அதிக ஆர்வம் புது புதுவகையான சமையலை அவர்கள் குழந்தைககளுக்காக முயற்சிப்பதை இங்கு பகிர்ந்துவருகிறார்கள். 500 க்கும் மேற்பட்ட சைவம் , மற்றும் அசைவ சமையல் குறிப்புகள் இங்கு குவிந்துள்ளன.
http://www.easy2cookrecipes.blogspot.ae/2014/03/dry-fruits-curry.html
சமையலில் தூள்வகைகளை அப்படியே சேர்த்து செய்வதைவிட அரைத்து செய்யும் வகைகளுக்கு ருசி அதிகம். பாரம்பரிய சிறப்பு விருந்தினர் பதிவில் ஷாமா நாகராஜன் அவர்கள் பாட்டியின் மீன் வறுவலை நம்முடன் இங்கு பகிர்ந்து இருக்கிறார்கள்.


இதே போல் பாரம்பரிய குறிப்பான கருப்பட்டி ஆப்பம் நானும் செய்து பார்த்துள்ளேன் மிக அருமை.,
***************************************


I am Shama Nagarajan from Madurai ...After marriage settled in Hyderabad , a happy small family with two lovely kids . I started experimenting on new recipes to gain mu kids interest for their food . I have a passion for cooking and crafting ....I own two blogs for cooking Easy2Cook Recipes and for crafts Colourful Imaginations: www.myhandicraftscollection.blogspot.com .

 Earlier worked as a HR in a private concern  and gave up the job for my kids . At present a happy home maker . 

I am delighted to be a guest on Jaleela akka's Samayal Attakasam . She have such a wonderful collection of recipes for all ages. I love her simple way of explaining the recipes and humble approach with the fellow bloggers.She is an energetic blogger
************************************


.I am here to share an authentic ,my grandmother's signature fish fry. 
Red Spapper Fry. 

 சங்கரா மீன் வறுவல்
தேவையான பொருட்கள்: 

சங்கரா மீன் / சிவப்பு ஸ்நாப்பர் - 500 கிராம் 
உப்பு   - தேவைக்கு
தயிர்  -  1tspn
எண்ணை - பொரிக்க தேவையான அளவு

அரைக்க: 

காய்ந்த மிளகாய் - 10 -15 
மிளகு - 1 தேக்கரண்டி 
கொத்தமல்லி விதை - 1 தேக்கரண்டி 
பெருஞ்சீரகம்  - 1 தேக்கரண்டி 
சீரகம் - 1 தேக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி 
பூண்டு -
இஞ்சி - ஒரு சிறிய துண்டு 

செய்முறை: 


  1. மீனை கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைக்கவும்.
  2. அரைக்க கொடுத்துள்ள மசாலாக்களை மையாக அரைக்க்கவும்.
  3. அரைத்த மசாலாஉடன் தயிர் / மோா் ஒரு தேக்கரண்டி சேர்த்து மீனை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.   
  4.  பின் கடாயில் அளவான எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக பொறிக்க வேண்டும். சுவையான மீன் வறுவல் ரெடி.
Sankara Meen varuval 


INGREDIENTS: 
Sankara / Red Snapper - 500 gms

Salt to taste
oil - Required qty
curd - 1 tsp

To grind : 

Red Chillies - 10 -15
Pepper - 1 tsp
Coriander seeds - 1 tsp
Fennel seeds - 1 tsp
Jeera - 1 tsp
Turmeric powder - 1 tsp
Garlic cloves - 2 
Ginger - a small piece


METHOD OF PREPARATION :


1 . Marinate the fish with the grinded masala and keep it aside for 1 hour. with a tsp of curd/butter milk.

2. Shallow fry the fish  in a pan till golden brown ..


ஷாமாவின் சமையலறை டிப்ஸ்:


1. தோசை நல்ல மொரு மொருப்பாக வர


இட்லி அரிசி – 6 கப்
உளுந்து  - ஒரு கப்
வெந்தயம்ஒரு ஸ்பூன்

மேற்கண்டவைகளை ஊற வைத்து அரைக்கும் போது இரண்டு கைப்பிடி அவல் சேர்ர்த்து அரைக்கவம், இப்படி அரைத்து  தோசை சுட்டால் மொருகலாக வரும்.
மாவு அரைக்கும் போது முதலில் உளுந்தை அரைத்து விட்டு பிறகு அரிசியை அரைக்க வேண்டும். நன்கு கையால் கலக்கி பிறகு உப்பு சேர்த்து புளிக்க வைக்கவும். மாவு புளித்த்தும் இரண்டு பாகமாக பிரித்து முதலில் ஒரு பாகத்தை சமைக்கவும். பிறகு தேவைக்கு பயன் படுத்தவும். கரண்டி போட்டு கலக்கி பயன்  படுத்திய மாவு சீக்கிரமாக ரொம்ப புளிப்பு தன்மையாக இருக்கும்.பாதிமாவை எடுத்து வைப்ப்தால் பிறகு தேவைக்கு பயன் படுத்தி கொள்ளலாம்.

2. குழம்பில் புளிப்பு சுவை அதிகமாகிவிட்டால் கொஞ்சம் , மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
3.குழம்பு மிகவும் காரமாகி விட்டால் தக்காளியை பிழிந்து சேர்த்து கொதிக்க விடவும்.
கடாய் மற்றும் சமைக்கும் பாத்திரத்தில் உள்ள பிசு பிசுப்பை நீக்க பாத்திரத்தை வெண்ணீர் வைத்து கழுவ்வும்.
4.புதினா , கொத்துமல்லி , கருவேப்பிலை, பச்ச மிளகாய் ஃப்ரஷாக இருக்க அதன் காம்புகளை பிரித்து தனித்தனியாக கவரில் போட்டு பிரிட்ஜில் வைக்க்வும்.
5.பருப்புசிலி செய்ய ரொம்ப நேரம் கடாயில் கிளறும் போது கை வலி ஏற்படலாம் அதை தவிர்க்க இட்லி பானையில் வைத்து அவித்து செய்தால் சுலபமாக கிளறிவிடலாம்.




Special Guest Post with Traditional Food






அறுசுவை தோழிகள், தமிழ் குடும்ப தோழிகள்,முக நூல் தோழியர்கள் வலை உலக தோழ தோழியர்கள் மற்றும் இதை பதிவை பார்ப்பவர்கள் யாருக்கும் விரும்பம் உள்ளவர்கள் உங்கள் ஊரின் பாரம்பரிய சமையல் குறிப்புகளை என்னுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்ன குறிப்பாக இருந்தாலும், அதாவது டிபன் வகைமதிய உணவிற்கு செய்யும் கறி வகைகள்மாலை நேர சிற்றுண்டி மற்றும் இரவு சாப்பாடு வகைகள்.குழந்தைகளுக்கு செய்யும் உணவு, கர்பிணி பெண்களுக்கான உணவு, பூப்பெய்திய பெண்களுக்கான உணவு, பிள்ளை பெற்றவர்களின் பத்திய உணவு, திருமணத்தில் செய்யும் முக்கிய வகை உணவு, விஷேச நாட்களில் செய்யும் பலகாரம்மற்றும் பல.....வகைகளை அனுப்பலாம்.. 

விருப்பம் உள்ளவர்கள்  இங்கு கீழே என் பதிவின் கீழ் கருத்து தெரிவிக்கலாம்  அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள என் முகவரிக்கு மெயில்  அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.


feedbackjaleela@gmail.com or cookbookjaleela@gmail.com

சமையல் அட்டகாங்கள் முக நூல் பேஜ்

சென்னை ப்ளாசா முகநூல் பேஜ்

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/