சிறப்பு விருந்தினர் பதிவு - மலேஷியா ஸ்பெஷல் ஊசி மிளகாய் குழம்பு - ஆயிஷா மலேஷியா
சிறப்பு விருந்தினர்கள் பதிவு போட்டு மாதக்கணக்கில் ஆகிவிட்டது.
இனி முடிந்த போது பதிவிடுகின்றேன்.
ஆயிஷா மலேஷியா முகநூல் மூலம் அறிமுகமானவர். ஆயிஷா மலேஷிய பாரம்பரிய ஊசி மிளகாய் சிக்கன் குழம்பை நமக்காக இங்கு பகிர்ந்து இருக்கிறார்கள்.
அவரை பற்றின அறிமுகம் அவர் என்ன சொல்கிறார் என பார்ப்போம்.
எனது தாேழிகள் farhana basheer, hawa nooriya, மற்றும் sharmila மூலமாகத்தான் ஜலீக்கா அறிமுகம்.. டீ.க்கடை சமையல் போட்டியில் தான் எனக்கு நீங்க "great cook" என்று தெரியும். அதன் பின்னர் தான் உங்களுடைய ரெசிபிகளையும் blog கும் பாேய் பார்த்தேன், அதில் பாரம்பரிய குறிப்பில் மலேஷியாவின் பாரம்பரிய ஊசிமிளகாய் சிக்கன் குழம்பை இந்த பிலாக் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.
எனது சொந்த ஊர் சித்தார் கோட்டை,
வயது 29,
10 வயதில் மலேசியாவுக்கு வந்துட்டேன். ஊரில் 6 ஆம் வகுப்பு வரை படித்தேன். அதன் பின்னர் மலேசியா ஸ்கூல் மற்றும் மலேசியா யுனிவெர்சிட்டியில் டிக்ரி முடித்தேன். படிப்பு முடிந்ததும் கல்யாணம். கல்யாணம் ஆகி 6 வருடம் ஆகின்றன. எனக்கு ஒரு பையன் இருக்கான்,
பெயர் Muhammad Amirul Afiq,
2 வயது. மாமனார்,
மாமியாருடன் ஒரே வீட்டில் இருக்கேன். ஊரில் இருந்து வந்ததில் இருந்து எனக்கு இங்கு மலாய்,
மற்றும் chinese
நண்பர்கள் தான் அதிகம்.
எனக்கு மறுபடியும் சொந்த ஊர் நண்பர்கள் facebook
மூலமாகத்தான் கிடைத்தார்கள்.
இதுக்கு முன்பு நான் தமிழ் சமயல் blog
பக்கம் பாேனதில்லை. அம்மா,
அன்னி,
மாமியார் மற்றும் மலாய் blog
மூலமாகத்தான் நான் சமைக்க கத்துகிட்டேன்.
ஊரில் ஸ்கூலில் ஆறாம் வகுப்பு வரை தமிழ் மொழி தான் ஆகையால் அங்கு படித்ததால் எனக்கு தமிழ் எழுத படிக்க தெரியும்,
நான் மறக்கவும்
இல்லை. இதனால் தான் எனக்கு உங்கள் blog கும் படிக்க முடிகிறது.
நிறைய சமையல் குறிப்பு உள்ள ஜலீலாக்காவின் blog எனக்கு நம்ம ஊர் சமையல் செய்ய எனக்கு உதவியாக இருக்கும்.
எனக்கு மலாய் காரவங்க உணவு நன்றாக செய்யவரும். நான் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பாேது செய்ய கற்றுகொண்டேன்.
எனது கணவருக்கும் மலாய் காரவங்க உணவு ராெம்ப பிடிக்கும். மலாய் காரவங்க பாரம்பரிய உணவில் ஒன்றுதான் ஊசி மிளகாய் குழம்பு
மலேஷியாவில் மூன்று வகையான பாரம்பரிய உணவுகள் உள்ளன. மலாய்க்காரர்கள் பாரம்பரிய உணவு,சீனர்கள் பாரம்பரிய உணவு, மற்றும் இந்தியர்கள் பாரம்பரிய உணவு. மலாய்க்காரர்கள் பாரம்பரிய உணவில் தவிர்க்க முடியாத ஒன்றுதான், காய்ந்த மிளகாய், ஊசி மிளகாய், தேங்காய் பால், கவ்னி அரிசி, நெத்திலி கருவாடு,மற்றும் பலவிதமான இலைகள் சேர்த்த உணவுகள். மலாய்க்காரர்கள் தேங்காயில் இருந்து, தேங்காய் பால்,தேங்காய் தண்ணீர், தேஙகாய் துருவல்,"கெரிசே" என்று சொல்லப்படும் வருத்து அரைத்த தேஙகாய் துருவல் மற்றும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி பாரம்பரிய உணவுகள் செய்வார்கள்.
இங்கு பன்டான் இலை, மஞ்சள் இலை, எலுமிச்சை இலை, செராய் புல், மஞசள், இஞ்சி, லெங்குவாஸ் என சொல்லப்படும் கலங்கல் மற்றும் பலவிதமான பொருட்கள் மலாய்க்காரர்கள் சமயலில் சேர்க்க படிகின்றன. நான் இங்கு தேங்காய் பால், ஊசி மிளகாய், எலுமிச்சை இலை,மற்றும் செராய் புல் சேர்த்த சமயல் குறிப்பு எழுதி இருக்கேன்.என் குறிப்பு களை இங்கு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்சி.
ஊசி மிளகாய் கோழி குழம்பு
தேவையான பொருட்கள்:
அ சிக்கனில் கொதிக்க வைக்க
800 கிராம் - சுத்தமாக கழுவிய கோழி துண்டுகள்
2 - உருளைக்கிழங்கு(உரித்து, 4ஆக வெட்டவும்)
4 - lemongrass (எலுமிச்சை புல் (அ) செராய் பில்)
2 - நர்த்தங்காய் எலுமிச்சை இலைகள் (மெலிதாக நறுக்கிய) ((நார்த்தங்காய் இலை)
2- தக்காளி(6 ஆக வெட்டவும்)
1000 மில்லி கடைசி தேங்காய் பால் (தண்ணீர் கலந்த தேங்காய் பால்)
300 மில்லி கெட்டி தேங்காய் பால்
தண்ணீர் தேவைப்பட்டால்
உப்பு தேவையான அளவு
1 டீ கரண்டி சர்க்கரை (ருசிக்கு)
தேவையான பொருட்கள்:
ஆ (நன்றாக அரைக்கவும்)
20 -ஊசி மிளகாய்
1 அங்குல மஞ்சள்/ (அ)1 டீ கரண்டி மஞ்சள் தூள்
1 அங்குல இஞ்சி
6 சிறிய வெங்காயம்
செய்யும் முறை:
முதலில், கடாயில் அரைத்த பொருட்கள், lemongrass மற்றும் 1000 மில்லி கடைசி தேங்காய் பால் ஊத்தி, நன்கு கலந்து கொதிக்க விடவும்.
நல்லா கொதித்த பின், உருளைக்கிழங்கு, தக்காளி, உப்பு, சக்கரை, மற்றும் கோழி துண்டுகள் சேர்த்து வேக விடவும். அதை தொடர்ந்து கிளறி, கோழி வெந்ததும், கெட்டி தேங்காய் பால் மற்றும், நார்த்தங்காய் எலுமிச்சை இலைகள் சேர்த்து ஒரு கொதியுடன் அணைக்கவும். இந்த குழம்புக்கு எண்ணெய் தேவைபடாது. தேங்காய் பாலில் இருந்து தேவையான எண்ணெய் வெளியாகும் அதுவே போதுமானது.
கோழிக்கு பதிலாக, இந்த குறிப்பை மீன், இறால், மற்றும் இறைச்சி பயன் படுத்தி செய்து பார்க்கலாம. இதை சூடான சாதம் மற்றும் ரொட்டியுடன் பரிமாறலாம்.
நான் 13 வருடங்களா கேக் மற்றும் பிஸ்கட் செய்து வருகின்றென். எனக்கு 16 வயசுல எனது தந்தை ஒவன் வாங்கி தந்தார்கள். அப்பொழுது நான் ஸ்கூல் படித்து கொண்டுருந்தேன். எனக்கு கேக் செய்து காமிக்கிற சமயல் நிகழ்ச்சி பார்க்க ரொம்ப ஆர்வாக இருந்தது. ஒவன் வாங்குநதும்,நோன்பு பெருநாள் மற்றும் வீட்டில் உள்ள எல்லாம் விஷேசத்துக்கும் நான்தான் கேக் மற்றும் பிஸ்கட் செய்வேன். கல்யாணத்துக்கு அப்புரம் மாமியார் வீட்டுலயும், இப்ப நான் தான் எல்லோருக்கும் கேக் செய்து குடுப்பேன். பல தடவை எனக்கும் கேக் நன்றாக வராமல் இருந்திருக்கு. எனது கணவர்தான் மறுபடியும் செய்ய சொல்வார்கள். மறுபடியும் செய்யும் பொழுது,ஏற்கனவே செய்த தவறை மறுபடியும் செய்யமாட்டேன்.
எனக்கு தெரியும் ஒரு சில கேக் செய்யும் டிப்ஸை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.இனி அடுத்த பதிவுகளில் கேக் செய்ய டிப்ஸ்களும் கேக் ரெசிபியும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
ஆயிஷா அவர்கள் இதற்கு முன் அனுப்பிய பாரம்பரிய மலேசிய உணவு தெம்பே தவ்ஹீ ஃப்ரை இங்கு சென்று பார்க்கலாம்,மிக்க நன்றி ஆயிஷா.
பாரம்பரியம் பாதுக்காக்கபடுகிறது இங்கே இதை பார்வையிடும் உங்களுக்கும் உங்கள் ஊர் பாரம்பரிய சமையலை பகிர ஆர்வம் இருந்தால் எனக்கு புகைப்படத்துடன் உங்கள் குறிப்பை என் மெயிலுக்கு அனுப்பபலாம். இல்லை முக நூல் மெசேஜ் பாக்ஸிலும் கொடுக்க்கலாம். feedbackjaleela@gmail.com cookbookjaleela@gmail.com
Traditional Recipes with Special Guest Post/
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/