Saturday, October 23, 2010

கருவேப்பிலை பொடி,முடி வளர கொசுறு கருவேப்பிலை


கருவேப்பிலை காய்கறி கடைகளில் கொசுறு கொடுப்பார்கள்.அது ஒன்றும் அவ்வளவு விலையும் கிடையாது.
முடி கரு கருவென வளற கருவேப்பிலை ஒரு கப்பும், வெந்தயம் இரண்டு ஸ்பூனும் காயவைத்து பொடித்து வைத்து கொள்ளுங்கள். அதை தேங்காய் எண்ணை (அ) நல்லெண்ணையில் ஊறவைத்து தலையில் தேய்க்கவும்.

கருவேப்பிலை கொத்துமல்லி ரசம்
கருவேப்பிலையை நன்கு அரைத்து வடைகளாக தட்டி தேங்காய் எண்ணையிலும் போட்டு நன்கு ஊறவைத்து தலைக்கு தேய்க்கலாம்


கருவேப்பிலை பொடி


கருவேப்பிலை - ஒரு கப்
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு மேசை கரண்டி
மிளகு - ஒரு ஸ்பூன்
பூண்டு = தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளுங்கள்


மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் லேசாக வருத்து பொடித்து வைத்து கொள்ளுங்கள்.
ஒல்லியாக உள்ளவர்கள் ஒரு மேசை கரண்டி கருவேப்பிலை பொடி, நெய் ஒரு ஸ்பூன், சாதம் கலந்து சாப்பிடுங்கள்.டயட்டில் இருப்பவர்கள் ஆலிவ் ஆயில் (அ) நல்லெண்ணை கலந்து சாப்பிடவும்.


கருவேப்பிலை பொடி திரிப்பவர்கள் அத்துடன் சிறிது மிளகு, கடலை பருப்பு கூட வருத்து சேர்த்து பொடித்து கொள்ளலாம்.


இட்லி பொடி, ரசப்பொடி, சாம்பார் பொடி,பிஸிபேளா பாத் பொடி ,பாகற்காய் போன்ற பொடி வகைக தயாரிக்கும் போது ஒரு கைப்பிடி அளவிற்கு காயவைத்து அதையும் சேர்த்து திரித்து கொள்ளுங்கள்.


கீரீன் வெஜ் குருமாவில் கருவேப்பிலை, கொத்து மல்லி தழை, புதினா அரைத்தும் சேர்த்துக்கொள்ளலாம்.


வறுத்து பொடித்து செய்யும் எல்லா விதமான சமையலுக்கும் ஒரு கை பிடி கருவேப்பிலையை சேர்த்து கொள்ளுங்கள்.

தலை முடி கருகருவெனவளற கருவேப்பிலையை காயவைத்து தூளாக்கி நல்லெண்ணையுடன் காய்ச்சி நன்கு ஊறவைத்து வடிக்கட்டி அந்த எண்ணையை தினம் தேய்த்து வரலாம்.


வாரம் ஒரு முறை கருவேப்பிலை குழம்பு , கருவேப்பிலை சாதம், செய்து சாப்பிடுவதும் நல்லது.

கருவேப்பிலை, கொத்துமல்லி அரைத்து விட்டும் ரசம் செய்து சாப்பிடலாம்.


தாளிப்பில் போடும் கொசுறு கருவேப்பிலை, ரசம் குழம்பு சாப்பிடும் போது தூக்கி எறியாமல் அதை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் அது முடி வளற உதவும்.


பகோடா செய்யும் போது நிறைய கருவேப்பிலையை பைனா சாப் செய்து போட்டு கொள்ளுங்கள்.

52 கருத்துகள்:

Premalatha Aravindhan said...

Thanks for sharing the info about curry leaves,wounderful tips...

ஜெய்லானி said...

ஹும் படிக்க நல்லாதான் இருக்கு ஆனா நடக்கனுமே..!! ச்சே.. வளரனுமே. அட ச்சே...கொட்டுராதாவது குறையனுமே ...!! அவ்வ்வ்வ்வ்வ்

LK said...

ubayogamaana pathivu

ஜெய்லானி said...

யக்காவ் முக்கியமானதை விட்டுட்டீங்களே.!! கண்ணுக்கு மிக..மிக...மிக நல்லது தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முடி வளருதோ இல்லையோ.....ஆனா கண்ணுக்கு கண்ணாடி போட வேண்டி வராது..!!

kasthurirajam said...

useful tips for each and every one.Thanks for sharing

மதுரை சரவணன் said...

useful tips. thank u for sharing.

புவனேஸ்வரி ராமநாதன் said...

குறிப்புகளுக்கு நன்றி.

Mrs.Menagasathia said...

useful tips,thxs akka!!

asiya omar said...

பயனுள்ள டிப்ஸ்.

நட்புடன் ஜமால் said...

தலைக்கு தேய்க்க எதுவுமே உபயோகிப்பதில்லை - ஒத்துக்க மாட்டேங்குது

ஆனால் உள்ளுக்கு உட்கொள்வதுண்டு

நல்ல டிப்ஸுங்க - நன்றி.

பட்டாபட்டி.. said...

//கண்ணுக்கு மிக..மிக...மிக நல்லது தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முடி வளருதோ இல்லையோ.....ஆனா கண்ணுக்கு கண்ணாடி போட வேண்டி வராது..!!
//

நல்ல வேளை .. கண்ணு வளருமுனு சொல்லாம விட்டீங்க
ஜெய்லானி..//
தலை முடி கருகருவெனவளற கருவேப்பிலையை காயவைத்து தூளாக்கி நல்லெண்ணையுடன் காய்ச்சி நன்கு ஊறவைத்து வடிக்கட்டி அந்த எண்ணையை தினம் தேய்த்து வரலாம்.
//

உண்மை.. கெமிக்கல்ஸ் கலந்த ஷாம்பு உபயோகிப்பதை விட..இது எவ்வளவோ நல்லது...

தேவன் மாயம் said...

நல்ல தகவல் !!

rk guru said...

என்ன இப்படி சமையல் கலையிலே எரகிண்டிங்க ......

வெறும்பய said...

நல்ல பயனுள்ள தகவல்..

PriyaRaj said...

Good tips for hair ...romba useful aa eruku ..thanx for sharing ...

ஸாதிகா said...

அட அருமையான பகிர்வு ஜலி.

ராஜ நடராஜன் said...

//கருவேப்பிலை காய்கறி கடைகளில் கொசுறு கொடுப்பார்கள்.அது ஒன்றும் அவ்வளவு விலையும் கிடையாது.//

கொசுறு அந்தக்காலம்:)

உங்களை மாதிரி இன்னொரு பதிவர் சொன்னாங்கன்னு கருவேப்பிலையும் தேங்காய் எண்ணெயும் சேர்த்து சூடு செய்து தலை முடிக்கு தேய்த்துப் பார்த்தேன்.ரசத்தோட வாசம் தலைக்கு வந்ததுதான் மிச்சம்.மாற்றங்கள் ஒன்றும் காணோம்.

ஆனால் ஒன்று.விளம்பரத்துல முடியைக் காத்துல ஆட விடுறாங்கன்னு தலைக்கு எண்ணை சேர்த்துக்காம இருந்தா ஆண்களுக்கு தலை சொட்டை நிச்சயம்.

Akila said...

very helpful post dear.... book marked....

அஹமது இர்ஷாத் said...

ப‌ய‌னுள்ள‌ ப‌திவுங்க‌ ஆல் இன் ஆல் ஜ‌லீலாக்கா..அருமை..

Jaleela Kamal said...

பிரெமலதா வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஜெய்லானி ம் கருவேப்பிலை பொடி செய்து வைத்து கொள்ளலாமே.
ஆனால் வெளி நாட்டு தண்ணிக்கு நிறைய பேருக்கு ஒன்ற் நரை முடி அல்லது முடி கொட்டுவது.

Jaleela Kamal said...

நன்றி எல்.கே

Jaleela Kamal said...

மதுரை சரவணன் வருகைக்கும், கருத்திற்கும் மிகக் நன்றி

Jaleela Kamal said...

கஸ்தூரி ராஜம் கருத்துக்கு நன்றி

Jaleela Kamal said...

நன்றி புவனா

Jaleela Kamal said...

நன்றி மேனகா

நன்றி ஆசியா

Jaleela Kamal said...

சகோ ஜமால். சாப்பிட உட்கொள்ளலலாம், பிள்ளைக்ளுக்கு சிறு வயதில் இருந்து இப்படி கொடுத்தால், ஓரளவுக்கு முடி கொட்டும் பிரச்சனையை தவிர்கலாம்.

Jaleela Kamal said...

பட்டா பட்டி வ்ருகைக்கு மிக்க நன்றி
முதல்ல உங்களுக்கு கன்ணுக்கு கண்ணாடி போட வேண்டியது தான்.
ஷாம்பு சொல்லல, தலைக்கு என்ணை தேய்க்க சொன்னேன்.

Jaleela Kamal said...

தேவம் மாயம் வருகைகும் கருத்த்க்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஆர்.கே குரு நன்றி

Jaleela Kamal said...

வெறும் பய வருக்கைக்கும் கருத்துக்கும் மிக்க ந்னறீ

Jaleela Kamal said...

நன்றி பிரியா ராஜ்

நன்றி ஸாதிகா அக்கா

Jaleela Kamal said...

ராஜ நடராஜன். நீங்கள் எப்படி எத்தனை மாதம் தொடர்ந்து தேய்த்தீர்கள் என்று தெரியல.
சில்ருக்கு ஒத்து கொள்ளும், சிலருக்கு ஒத்து கொள்ளாத்,

சுட சுடவும் தேய்க்க கூடாது.

அதான் உட்கொள்ல பல டிப்ஸுகள் கொடுத்துள்ளேனே/

வந்து கருத்திட்டமைக்கு மிக்க் நன்றி

Jaleela Kamal said...

நன்றி அகிலா
எல்லோருக்கும் இது பயனுள்ள டிப்ஸ்

Jaleela Kamal said...

இர்ஷாத் தம்பி, உஙக்ள்பாராட்டுக்கு மிக்க நன்றி

R.Gopi said...

அடடடடா....

இம்மாத்தூண்டு கொசுறு கருவேப்பிலைல இம்புட்டு விஷயங்களா!!??

பலே.... இந்த மாதிரி பண்றதுக்கு நம்ம ஜலீலாவால மட்டும் தான் முடியும்...

நாஞ்சில் மனோ said...

பதிவர்களே, நம்ம பாமரனை பிடிச்சி கொண்டு வாங்க,
கறிவேப்பிலைய மண்டையில நல்லா அரக்க தேச்சி விட்ருவோம்...
பாவம் ரெண்டு முடியை பிடிச்சிட்டு அவர் பண்ற அலப்பறைக்கு
இந்த ட்ரீட்மெண்ட்தான் கரெக்ட்டா இருக்கும்....
[[பாமரன் முகத்துல சந்தோஷத்தை பாருங்க]]

பாத்திமா ஜொஹ்ரா said...

ரொம்ப ரொம்ப நன்றி அக்கா,கறிவேப்பிலை எனக்கு ரொம்ப இஷ்டம்.இந்தப்பதிவுக்கு ஸ்பெஷல் நன்றி.

அன்புடன் மலிக்கா said...

நல்ல டிப்ஸ்க்கா.

நான்கூட இதை நிறையபேருக்கு சொல்லிருக்கேன் இப்படி செய்யலாமுன்னு.

சசிகுமார் said...

THANKS

ஜிஜி said...

நான் காலேஜ் படிக்கும் போது எங்க அம்மா அடிக்கடி செஞ்சு குடுக்குற
ரெசிபி கறிவேப்பிலை பொடி கலந்த கறிவேப்பிலை சாதம்.
அருமையாக இருக்கும்.
நல்ல பயனுள்ள தகவல்..

ஈரோடு தங்கதுரை said...

மிக பயனுள்ள பதிவு...

சசிகுமார் said...

தமிழனின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help

http://vandhemadharam.blogspot.com/2010/10/please-help.html

amina said...

ningka asiya medamin sisyaiyaa avangkaLaipoolavee nalla samaikiRiingka . avarkalidamulla niraiya samaiyal kurippu ingkeeyum irukku jalila

nalla tips thank's

Jaleela Kamal said...

கோபி உங்க்ள் பராட்டுக்கு மிக்க நன்றி + சந்தோஷம்.

நாஞ்சில் மனோ வருகைக்கும், கருத்திற்கும் மிக்க் நன்றி,
ந்ல்ல வழுக்கையானதும் தேச்சி பிரயோஜனம் இல்ல , .

பாத்திமா வருகைக்கு மிக்க் நன்றி உங்க பக்கம் வரமுடியல.

நன்றி ம்லிக்கா , நல்லது

நன்றி சசி

நன்றி ஜி ஜி

நன்றி ஈரோடு தங்க துரை


சசி கண்டிப்பா வந்து பார்க்கிறேன்

ஆமினா எந்த ஆமினான்னு தெரியல, நீங்க முதலில் இங்க வந்துட்ட் அன்
அங்க போயிருந்தாலும் அப்படி தான் சொல்வீர்கல்.
வருகைக்கு நன்றி

அசோக்.S said...

Thanks dear friend

சசிகுமார் said...

அருமையான பகிர்வு

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

சூப்பர் குறிப்பு, மற்றும் சமையல் குறிப்பு ஜலீலாக்கா.

Geetha6 said...

அருமை!!!!

VijiParthiban said...

மிகவும் அருமையான தகவல் அக்கா.. நானும் இதை இனிமேல் செய்துவருகிறேன் அக்கா... கறிவேப்பிலை குறிப்பு அருமை அக்கா......

Usha Nandhini said...

I have followed this for 2 months. Now I can see improvement and my hair getting growth. It is really better than using lot of money on costly hair oils and chemical things.

Thanks,
Mahi
http://mahibritto.blogspot.com

SHIVAKUMAR PERIASAMY said...
Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா