Tuesday, January 4, 2011

சமையலறை டிப்ஸ்கள்
சின்ன சமையல் டிப்ஸ்கள் இதன் மூலம் வேலையை சுலபமாக்கி கொள்ளலாம்.

1. எல்லா அசைவ சமையலுக்கும், குருமாக்களுக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் அவசியம் அதை இஞ்சி அரை கிலோ , பூண்டு கால் கிலோ அளவில் உரித்து சுத்தம் செய்து அரைத்து வைத்து கொள்ளலாம். அரைத்ததும் அதனுடன் சிறிது உப்பு தூள்,கலந்து வைக்கவேண்டும்.
சின்ன பேமிலிக்கு ஒரு மாதம் வரை போதும். நல்ல ஒரு பெரிய பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும். வேண்டுமானால் நாலில் ஒரு பங்கை எடுத்து பிரீஜரிலும் வைக்கலாம்.
மையலை ரொம்பசுலமாகமுடிக்கலாம், நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்

2. புளிவிட்டு செய்யும் சமயலுக்கு வேலைக்கு சொல்பவர்கள் சுடு நீரில் ஊற போட்டு கரைக்கனும் என்ற அவசியம் இல்லை சிறிது உப்பு சேர்த்து இரவே ஊறபோட்டு விடலாம்.3. தேங்காய் நிறையஇருந்தால் அதில் உப்பை வி வைப்பார்கள், அதற்கு தில் த்தைகளாகபோட்டோ () பொடியாகஅரிந்தோ அதை ஒரு பாக்கெட்டில் போட்டு பிரீஜரில் வைத்து கொள்ளலாம். தேவையானபோது ட்னிக்கு,குருமாவிற்கு கொஞ்சம் எடுத்து சிறிது நேரம் ண்ணீரில் போட்டுவைத்தால் உடனே ண்டு ந்துவிடும்.4.ஆப்பத்துக்கு, இடியாப்பத்துக்கு தேங்காய்பால் ஊற்றி சாப்பிடபால் எடுக்கும் போது அத்துடன் ஏலாக்காய் சேர்த்து அரைத்தால் ல்லமாகஇருக்கும்.

5. தினம் இஞ்சி டீ குடிப்பர்கள் அதை போட்டு ட்டி கொண்டு இருக்காமல் ஒரு பெரியதுண்டு அளவிற்கு கொரகொரப்பாகஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு ப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து கொண்டால் தினம் டீ கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து போட்டு கொள்ளலாம்.அல்லது கேரட் துருவியில் தினம் ஒரு துண்டு துருவிக்கொள்ளலாம்

6.பொரித்தஎண்ணை றுபடி ன் டுத்தும் போது அதை டிகட்டி கொள்ளுங்கள். முடிந்தரை கொஞ்சமா எண்ணை ன் டுத்தி பொரிக்கவும். மீதியை முன்று நாட்களுக்குள் முடிக்கபாருங்கள்.

7.அடுத்த நாள் என்ன சமைக்க போகிறோம் என்பதை ஒரு நாள் முன்பே யோசித்து தேவையானதை வாஙகி வைத்து கொள்ளுங்கள்.காலையில் சமைக்கும் போது டென்ஷன் இல்லாமல் இருக்கும்.
8. முருங்கக்காய் அதிகமாக இருந்தால் அதை அப்ப்டியே பிரிட்ஜில்வைத்து காயவிடாதீர்கள்.அதை தோலெடுத்து ஒரு விரல் நீளத்துக்கு அரிந்து ஒரு கவரில் போட்டு பிரீஜரில் போட்டு வையுங்கள். முருங்கக்காய் சேர்த்து சமைக்கும் போது அப்ப எடுத்து அப்படியே கழுவி சேர்த்து கொள்ளலாம், இரண்டு நிமிடத்தில் வெந்துவிடும்.


9. குருமாக்களில் தேங்காயின் அளவை குறைத்து கொண்டு பாதம் சேர்த்து அரைத்து ஊற்றலாம். இது கொலஸ்ராயிலின் அளவை கட்டுபடுத்தும் குழந்தைகளுக்கும் மூளை வளர்சி அதிகரிக்கும். ரிச் டேஸ்டும் கிடைக்கும்.

10 . கருவேப்பிலை பிரெஷாக வாங்கி அதை கழுவி தண்ணீரை வடித்து ஒரு பேபப்ரில் சுருட்டி பிரிட்ஜில் வைத்தால் கொஞ்சம் நாள் ஆனதும் பொடித்தால் தூளாகிவிடும், அதை பிஸிபேளாபாத் இட்லி பொடி, மற்றும் பொடித்த கருவேப்பிலை சேர்த்து வதக்கி அரைக்கும் சமையலுக்கு பயன் படுத்தலாம்.

11.சேமியா ,ரவை போன்றவைகளை தேவைக்கு வறுத்து வைத்து கொண்டால் நிமிஷத்தில் உப்புமா, சேமியா பிரியாணி ஈசியாக தயாரித்து விடலாம்.


12. ஒரு கிலோ அளவிற்கு தோசைமாவு அரைத்து வைத்து கொண்டால் அந்த வாரம் முழுவதும் இட்லி, தோசை, ஆப்பம், ஊத்தாப்பம், குழிபணியாரம் என வாரமுழுவதும் டிபன் டென்ஷன் இருக்காது. அவசரத்துக்கு கை கொடுக்கும் தோசை மாவு.

13.கொண்டைக்கடலையை நிறைய ஊறவைத்து வேகவைத்து பிரீஜரில் போட்டு வைத்தால் சுண்டல், பூரிக்கு சென்னா, சாலட் , ஹமூஸ் போன்றவை எளிதாக தயாரிக்கலாம்.

14.மோர் குழம்புக்கு வறுத்து அரைக்க வேண்டியவைகளை நிறைய செய்து வைத்து முன்று பாகமாக பிரித்து பிரீஜரில் வைத்தால் சட்டுன்னு மோர்குழம்பும் ரெடி.

15. புளி பேஸ்ட் தயாரித்து ஐஸ் கியும் செய்து வைத்தால் புளி குழம்பு, வத்தல் குழம்பு, மீன் குழம்பு, கருவாட்டு குழம்பு, ரசம் எல்லாவற்றிற்கும் பயன் படும்.

16.தினம் சப்பாத்தி சாப்பிடுபவர்கள் மாவு நிறைய குழைத்து பாக்கெட்டுகளாக போட்டு ஃபீரிஜரில் வைக்கலாம்.31 கருத்துகள்:

asiya omar said...

அருமையான டிப்ஸ்.நீங்க டிப்ஸ் போட்டு நாளாகுதேன்னு நினைத்தேன்.

asiya omar said...

அருமையான டிப்ஸ்.நீங்க டிப்ஸ் போட்டு நாளாகுதேன்னு நினைத்தேன்.

Viki's Kitchen said...

டிப்ஸ் சூப்பர். இஞ்சி டீ , இஞ்சி பூண்டு பேஸ்ட் நானும் செய்வேன். முருங்கக்காய் குறிப்பு மிகவும் புதுமை. பாதாம் குருமாவிலா ? ரொம்ப நல்ல ஐடியா. சப்பாத்தி மாவு டெக்னிக் எனக்கு தெரியாது:) நன்றி .

angelin said...

fantastic tips.
coconut/ and ginger garlic paste /lovely idea
thhanks for sharing

changdini said...

குறிப்புகள் அருமை. ஆனால் ஒரு சந்தேகம்.. இஞ்சி பூண்டு பேஸ்ட் மாதக்கணக்கில் ஃப்ரிஜ்ஜில் வைத்து இருப்பதால் அதன் தன்மை (சத்து ஈரப்பதம் போன்றவை)மாறாதா? இட்லி தோசை மாவு ஒருவாரத்திற்கு ஆவது போல் அரைத்து ஃப்ரிஜ்ஜில் வைத்து தான் பயன்படுத்துவேன் ஆனால் அதிலும் சத்துக்கள் வீணாகுமோ என்று சமீப நாட்களாக சந்தேகம். தெளிவு படுத்துவீர்களா ??

Jaleela Kamal said...

ஆசியா வாங்க ஆமாம் ஒரே குறிப்பு போட்டு போரடித்துவிட்டது, சுவையான குறிப்புகள் பல இருந்தாலும் இப்ப போட நேரம் இல்லை,
அதான் நான் பின்பற்றிவரும் சில பயனுள்ள குறிப்புகள், போடலாம் என்று
போட்டுள்ளேன்.

மிக்க ந்னறி நேரமின்மையால் யாருடைய பிலாக் பக்கமும் வர முடியவில்லை.

முடிந்த போது வரேன்
உங்கள் அன்புக்கும், தொடர் வருகைக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

விக்கி வாங்க
குருமாவில் பாதம் மட்டும் இல்லை ரொம்ப ரிச்ச்சாகவும், ஒல்லியாக் இருப்பவர்கள் குண்டாகவும்.
(பாதம், பிஸ்தா, முந்திரி, அக்ரூட் ) சேர்த்து குருமா செய்யலாம்.

விஷேஷ நாட்களில் இது போல் எல்லாம்

சேர்த்து செய்வோம்

ரொட்டி, சப்பாத்திக்கு இன்னும் நிறைய டிப்ஸ்கள் இருக்கின்றன,அதை தனியாக டிப்ஸாக பிறகு போடுவேன்.

Jaleela Kamal said...

விக்கி முருங்கக்காய் இங்கு முன்பு அவ்வளவா கிடைக்காது, வாங்கினாலும் முன்று நாட்கள் தான் பிரிட்ஜில் வைக்க முடியும் ,
ஆகையால் வாங்கி, தலையும் வாலையும் அரிந்துவிட்டு நார் எடுத்து இரண்டு இஞ்ச் அளவு கட் செய்து பிரீஜரில் வைத்து விடுவேன், தேவைக்கு, எத்தனை மாதம் ஆனாலும் ஒன்றும் ஆகாது

Jaleela Kamal said...

தேங்காய் இது வரைநான் அப்படி தான் வைத்துள்ளேன், இரண்டு முடி வாங்கி பீசாக்கியும், துருவியும் போட்டுவைத்துவிட்வேன்.
அவச்ரத்துக்கு கை கொடுக்கும்

இஞ்சி பூண்டு பேஸ்ட் மாதம் ஒரு முறை அரைத்து வைத்துவிடுவேன்,
அது அரைத்தாலா பாதி சமையல் ஈசியா முடிந்த மாதிரி.

Jaleela Kamal said...

ஏஞ்சலின்,

Jaleela Kamal said...
தேங்காய் இது வரைநான் அப்படி தான் வைத்துள்ளேன், இரண்டு முடி வாங்கி பீசாக்கியும், துருவியும் போட்டுவைத்துவிட்வேன்.
அவச்ரத்துக்கு கை கொடுக்கும்

இஞ்சி பூண்டு பேஸ்ட் மாதம் ஒரு முறை அரைத்து வைத்துவிடுவேன்,
அது அரைத்தாலா பாதி சமையல் ஈசியா முடிந்த மாதிரி.

January 5, 2011 1:53 PM

Jaleela Kamal said...

வாங்க சாந்தினி உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி

இஞ்சி பூண்டு என் மாமியார் அந்த காலத்தில் பிரிட்ஜ் கிடையாது, வெளியில் தான் வாரம் ஒரு முறை அரைத்து வைத்தும்,அதில் உப்பு கலந்து வைப்பார்கள்.

இப்ப பிரிட்ஜ் வந்ததும், அசைவ சமையலுக்கு இஞ்சி பூண்டு தான் மெயின். மற்ற சமையலுக்கும்

நான் சமைக்க ஆரம்பித்ததிலிருந்து இதுவரை, மாதம் ஒரு முறை அரைத்து 3/4 ஃபிர்ட்ஜ் கீழேயும், 1/4 ஃபீர்ஜரிலும் வைத்துவிடுவேன்.

இதுவரை கலர் மாரியதே கிடையாது நிரைய தண்ணீர் ஊற்றி அரைக்க கூடாது. 1: 1/2 தான் போடனும்

இஞ்சி 1 கிலோ என்றால் பூண்டு 1/2 கிலோ.


அடுத்து ,மாவும் அப்படி தான்கட்டியாக ஆட்டிவைத்து கொண்டால். முதலில் .
இட்லி, அடுத்து தோசை, அடுத்து ஊத்தாப்பாம், குழிபனியாரம் , கொத்துமல்லி தோசை என்று செய்து கொள்ளலாம்.


( இப்ப இருக்கிற அவசர உலகில், வெளிநாடுகளில் பொருட்கள் கிடைக்காத இடங்களில், சட்னி கூட அரைத்து பாக்கெட்டுகலாக போட்டு கொள்கிறார்களாம்.)

ஆண் பெண் இருவரும் வேலைக்கு செல்பவர்களுக்கும் அன்றாட இந்த வேலைகளை செய்ய முடியாது

இது வரை எங்க வீடுகளில் இப்படி தான் செய்கிறோம்,

நிறைய நேரம் இருப்பவர்கள். மெதுவாக பழங்காலம் போல் அன்றன்றைக்கு பிரெஷாகா அரைத்து செய்து கொள்ளலாம்.)

ஆனந்தி.. said...

ஜலிலா...குறிப்புகள் அனைத்தும் அருமை...அந்த முருங்கக்காய் டிப்ஸ் எனக்கு ரொம்ப புதுசு சகோதரி....மிக்க நன்றி...

ஆனந்தி.. said...

சகோதரி...எனக்கு ஒரு சந்தேகம்..இது பத்தி ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தாலும் எனக்கு லிங்க் தாங்க..சந்தேகம் இது தான்...தோசைக்கு சரி சமமாய் பச்சரிசி...புழுங்கல் அரிசி ,நாலுக்கு ஒன்னு அளவில் உளுந்து (கொஞ்சம் கம்மியா கூட ) வெந்தயம் எல்லாம் ஊற வச்சு அரைசேன்...ஆனால் கொஞ்சம் லேசா வறண்ட மாதிரியே தோசை வந்த பீலிங்...நான் என்ன தப்பு பண்ணிருக்கேன் தெரியல ஜலி...:((

RAZIN ABDUL RAHMAN said...

சகோ...டிப்ஸ் எல்லாமே சூப்பர் தான்..ஆனா எனக்குதா ஒன்னும் ஒதவாது...எனக்கு சாப்பிட மட்டும்தா தெரியும்...
தேங்காய்க்கு பதிலா பாதாம்..கொஞ்சம் காஸ்ட்லியான டிப்ஸ்'ஆ இருக்கே...

அன்புடன்
ரஜின்

JNR said...

Nice tips Jaleela. Have been a silent reader of your blog. Appreciate all the hard work and dedication. Have tried many of your recipes. God bless you and your work.

JNR

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எல்லா டிப்ஸ்ம் பயனுள்ளவை

அந்நியன் 2 said...

டிப்ஸ் சூப்பர்.

R.Gopi said...

அட்டகாசமான சமையல் டிப்ஸ்களை அவ்வப்போது அள்ளி வழங்கும் ஜலீலா அவர்களே...உங்களை மனமார பாராட்டுகிறேன்...

சரி, இன்னிக்கு உங்க வீட்டுல என்ன ஸ்பெஷல் சமையல்?

Jaleela Kamal said...

கோபி அவர்களே உங்கள் மதிப்பான பாராட்டுக்கு மிக்க நன்றி

காலை

அவருக்கு கான்பிளேக்ஸ், டிபன் எடுத்து போக (கோடா) குதிரை இல்லை இது நாங்க செய்யும் ஹோம் மேட் பாஸ்தா
பையனுக்கு
கான்பிளேக்ஸ் பள்ளிக்கு கொண்டு செல்ல பிரெட் சாசேஜ் சாண்ட்விச்

( எனக்கு என்ன மீதியாகுதோ அது)

இன்று மதியம்

பிளெயின் ரைஸ்
பாலக் பாசிபருப்பு மசியல்
வாழைதண்டு பருப்பு கூட்டு
கள்ளு கடை முட்டை ( பயப்பட வேண்டாம்) அது அந்த காலத்தில் கள்ளு க்டை வாசலில் அந்த ,முட்டைய பார்த்ததில் இருந்து அதுக்கு அந்த பெயர்.


(அப்படின்னா பாயில்ட் எக் 65 போல் பிரை)

Jaleela Kamal said...

கோபி அவர்களே

இரவு சமையல் இன்னும் யோசிக்கல,
பருப்படை மாவு வைத்துள்ளேன்.
அது இன்று இரவுக்கா அல்லது நாளை காலைக்கான்னு இரவு 7 மணிக்கு தான் முடிவு பண்ணனும்.

Jaleela Kamal said...

ஆனந்தி முருங்ககாய்.
இது நானாக கிடைத்ததை ஸ்டோர் பண்ண ஐடியா பண்னது, ரொமப் யுஸ் ஃபுல், எப்ப நினைத்தாலும்

சாம்பார், பருப்பு முருஙக்காய், முருங்கக்காய் சார், மெச்சகொட்ட சால்னாவுக்கு. இது போல் எது செய்யவும்.
முருங்கக்காய பீரிஜரில் வைப்பதால் தேடி போக வேண்டிய அவசியம் இல்லை.

நினைத்தபோது செய்து சாப்பிடலாம்

(அந்த ஐஸ்பொட்டிய கண்டு பிடிச்சவருக்கு கோடி நன்றிகள்)

Jaleela Kamal said...

தோழி ஆனந்தி

இட்லி தோசைக்கு


முன்பு
நான்

புழுங்கல் அரிசி (அ) இட்லி அரிசி - 2 1/2
பச்சரிசி - 1 1/2

உளுந்து - 1 முழுவதும்
வெந்தயம் சிரிது
இப்படி தான் போடுவேன்.

இதில் இட்லி, ஆப்பம், தோசை எல்லாமே நல்ல வ்ரும், மீதி ஆகும் மாவு ஊத்தப்பமும் வரும்

அந்த வரம் முழுவதும்,
(காலையும், இரவும் டிபன் என்பதால் வாரம் ஒரு முறை மாவு அரைத்தால் தான்.
சரியாவரும்.

மேலே உள்ள அளவு சில நேரம் இட்லி சரியாக வருவதில்லை

இப்ப

2: 2 அரிசிகள்

உளுந்து 1 முழுவதும்

வெந்தயம் - சிறிது

மிதியான சாதம் - சிறிது

( இது அரைக்கும் விதத்தில் இருக்கு
அரிசி தனியா உளுந்து தனியாக, உளுந்தை நன்கு அரைக்கனும்
பிறகு மிக்ஸிங்கும் நல்ல கலக்கி வைக்கனும்.
அப்ப சரியாக வரும்

இட்லி, தோசை, ஆப்பத்துக்கு அதற்கு தகுந்தாற் போல மாவு கட்டியாக, மீடியமாக, சிறிது தளர்வாக இருக்கனும்.

அவ்வளவு தான்\

Jaleela Kamal said...

ரஜின் இப்ப எல்லாருமே மாத சாமானுடன் (முன்பு என்னி என்னி ) வாங்கிய பாதமை , மாத சாமான் களுடன் வாங்க ஆரம்பிச்சுட்டாங்க.

ரொம்ப தேவையில்லை 4 (அ) 5 போதும் , ஒரு ரிச் நெஸ்,மற்றும் குருமாவின் சுவைக்கும்

வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க ந்ன்றி

Jaleela Kamal said...

உஙக்ள் முதல் வருகைக்கு மிக்க நன்றி
உங்களை போல் , இதில் கருத்திடாதவர்கள் நிறைய பேர் என் குறிப்பை பார்த்து பயனடைந்து கொண்டு தான் இருக்கிறார்க்ள்.
கருத்து தெரிவித்தால் சந்தோஷம் அவ்வளவு தான்.
இன்னும் என்ன நல்ல குறிப்புகள் போடலாம் என்று தான் நினைக்க தோன்றும்.
வாழ்த்துக்கு மிக்க நன்றி + எப்படியோ வந்து கருத்துதெரிவித்தீங்களே சந்தோஷம்/

Jaleela Kamal said...

ஆர்.கே சதீஷ் குமார் வாஙக் உஙக்ள் முதல் வருகைகு மிக்க நன்றி, முடிந்த போது கண்டிப்பாக வந்து கருத்திடுங்கள்

Jaleela Kamal said...

நாட்டம வந்தமைக்கு மிக்க சந்தோஷம்.

அமுதா கிருஷ்ணா said...

அருமையான டிப்ஸ்.

ஸாதிகா said...

அருமையான குறிப்புகள்.மிகவும் உபயோகமாக இருக்கும்

changdini said...

உங்களின் விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி ;)

அறுசுவைல நான் இணந்து சில மாதங்கள் தான் ஆகுது உங்க கிட்ட அறுசுவைல நான் பேசினது இல்லை.. நேற்றுதான் முதல் முறையா உங்க பிளாக்கில் பதிவிட்டேன்..

இப்போ ஆமி பிளாக்கில் உங்க கார்ட்(விருது) டிசைன் பார்த்தேன்..ரொம்ப நல்லா இருக்கு ;) அதிலும் அறுசுவை தளத்தை இணைத்து இருக்கீங்க பாருங்க...
” ஐ! அறுசுவை”னு பார்க்கும் போதே சந்தோஷமா இருக்கு!! :)

ஆனந்தி.. said...

thank you thank you jalella..

Jaleela Kamal said...

கருத்திட்டமைக்கு மிக்க நன்றி அமுதா


மிக்க நன்றி ஸாதிகா அக்கா

சாந்தினி ஆமாம் அறுசுவையில் தான் நான் முதல் முதல் குறிப்பு அனுப்பியது அதான் அதை இனைத்தேன்.
உங்கள் வருகைக்குமிக்க ந்னறி


ஒக்கே ஆனந்தி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா