ஆளிவிதை பீட்ரூட் மீன் கட்லெட்
பொதுவாக கட்லட் உருளை மட்டன் சேர்த்து அல்லது சிக்கன், மீன் , வெஜ் என்று வகையாக செய்வோம்.
நான் கட்லெட் எப்ப செய்தாலும் கொஞ்சம் கேரட்டும் சேர்ப்பேன். காய் கறிகளில் மிகவும் பிடித்த காய் பிட்ரூட். எனக்கு மட்டுமில்லை என் அம்மா , பாட்டி எல்லாருக்குமே விருப்பமான காய். இதை என் அப்பாவின் அம்மா சும்மாவே சாப்பிட வைப்பார்கள். இதை சாப்பிட்டா அவ்வளவும் ரத்தம் உடம்ம்பில் ரத்தம் சுத்தமாகும் என்பார்கள். என் பையன் களுக்கும் மோர் குழம்பு வைத்தால் பீட்ரூட் பொரியால் இல்ல்லாமல் சாப்பிட மாட்டார்கள்.
ஸ்வீட் செய்வதாக இருந்தாலும் எங்க வாப்பா முதலில் சொல்லுவது பீட்ரூட் ஹல்வா தான், பள்ளி செல்லும் காலங்களிலும் பீட்ரூட் கடலைபருப்புடன் பரோட்டா ஒரு நாள் கண்டிப்பாக டிபன் பாக்ஸ்க்கு இருக்கும்.
நான் கட்லடில் பீட்ரூட், மற்றும் பிளஸ்சீட் சேர்த்து இதை கொஞ்சம் வித்தியாசமாக செய்துள்ளேன்.இந்த கலர் பார்க்கவே உடனே எடுத்து சாப்பிடனும் போல் இருக்கும்.இதில் முள்ளில்லாமல் எந்த மீன் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.
ஆளி விதை பற்றி ஏற்கனவே முன்பு பதிவில் சொல்லி உள்ளேன்
ஆளிவிதை சேர்த்து இது வரை இட்லி பொடி, துவையல் , ரொட்டி , அடை எல்லாம் செய்துள்ளேன்.
பிரட் கரம்ஸ் சேர்க்கும் போது ஆளிவிதை பவுடர் செய்து இதில் சேர்க்கலாம் என்று.ஞாபகம் வந்தது கட்லட் என்றாலே சுவை அபாரமாக இருக்கும் அதுவும் இத்தன வகை சேர்ந்தால் சுவையை சொல்ல கேட்கவா வேண்டும்.
கர்பிணி பெண்களுக்கும் வாய்க்கு சுவைபடும்.சத்தான மாலை நேர சிற்றுண்டி, மதியம் பக்க உணவாக வும் சாப்பிடலாம், காலை பிரட்டுடன் சாண்ட்விச்சாகவும் சாப்பிடலாம்.
Linking to faiza's Passion in Plate and piriya's valentine's day recipe contest
Tweet | ||||||
7 கருத்துகள்:
ரொம்பவும் வித்தியாசமான சமையல்...
நன்றி...
புதுசாக இருக்கு..ரிச் கலர்.
வித்தியாசமாக இருக்கு ஜலி த.ம. 3
திண்டுக்கல் தனபாலன்
ஆசியா
ஸாதிகா
அக்கா உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
இது என் முயற்சியில் செய்து பார்த்தது..
ஆஹா அழகான கலராக வந்திருக்கு. புதுமுறையாக இருக்கே ஜலீலாக்கா... செய்து பார்க்கோணும்.
ஆளிவிதை என்பது ஃபிளாக்ஸ் சீட்டோ? இங்கு வெள்ளைகளின் சூப்பமார்கட்டிலும் கிடைக்குது.
ஆமாம் அதிரா ஆளி விதை ப்ளாஸ்சிட்.
இதில் ஒமேகா சத்து அதிகம் உள்ளது.
உங்களுக்கு தக்காளீ இல்லாத மீன் உண்வு ரொம்ப பிடிக்குமே செய்து பாருங்கள்.
romba different ta iruku.. parkavey super ra iruku..
Thanks for linking this recipe to my event
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா