Tuesday, September 24, 2013

வேர்கடலை வெண்டைக்காய் பொரியல் - Ladies Finger Peanut Stir Fry
 வேர்கடலை என்றதும் எங்க டாடி ஞாபகம் தான் வருகிறது.ஞாயிற்று கிழமைகளில் மாலை கண்டிப்பாக எங்க அம்மா சுண்டல் அல்லது வேர்கடலை செய்வார்கள். அப்ப டாடி சொல்வாங்க எம்மா மல்லாட்டை வெவிக்க போடுமா என்று , ம்ம் ஊரிலிருந்து மூட்டை மூட்டையாக அப்ப எங்க வீட்டுக்கு வரும். சொந்தங்களுக்கு கொடுத்த்து போக மீதி வீட்டில் விடுமுறை நாட்களில் வேகவைத்து நாங்க எல்லோரும் டாடியோடு ஒன்றாக உட்கார்ந்து  சாப்பிடுவோம். பெரிய பானையில் உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து அதன் தோலை உரிப்பதற்குள் போதும் போதும் என்றாகிடும்.

இப்போதெல்ல்லாம் தோல் எடுத்த வேர்கட்லையே இங்கு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. என் கணவருக்கும் ரொம்ப பிடிக்கும் காலை டிபனுக்கு வேர்கடலை சாலட், வேர்கடலை அல்லது சுண்டல் வகைகள் மாதம் இருமுறை செய்வேன். புளி சாதம் , பிஸிபேளாபாத் செய்யும் போது கண்டிப்பாக வேக வைத்த வேர்கடலை யுடன் தான் செய்வது, சில நேரம் புளி சாதத்தில் வேக வைத்த கருப்பு கொண்டை கடலை சேர்த்தும் செய்வேன்.


வேர்கடலை வெண்டைக்காய் பொரியல்/Ladies Finger Peanut Stir Fry/Peanut & Okra & Boiled Peanut Stir Fry

தேவையானவை
வெண்டைக்காய் – கால் கிலோ
வேக வைத்த வேர்கடலை – முன்று மேசைகரண்டி
தாளிக்க
எண்ணை – இரண்டு தேக்கரண்டி
கடுகு உளுத்தம் பருப்பு கடலை பருப்பு – 1 மேசைகரண்டி
பொடியாக அரிந்த வெங்காய்ம் – 1
பொடியாக அரிந்த தக்காளி – அரை பழம்
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு தூள் – அரை தேக்கரண்டி
செய்முறை :

வெண்டைக்காயை கழுவி அரிந்து கொள்ளவும்.ஒரு வாயகன்ற வானலியை சூடு படுத்தி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெண்டைக்காய், மற்றும் வேக வைத்த வேர்கடலை சேர்த்து நன்கு கிளறி மிளகாய் தூள், உப்பு தூள் சேர்த்து கிளறி இரண்டு தேக்கரண்டி தண்ணீர் தெளித்து முடி போட்டு (வெண்டைகாய் சீக்கிறம் வெந்து விடும்) 5 நிமிடம் வேகவைக்க்கவும்.சுவையான சத்தான வெண்டைக்காய் வேர்கடலை பொரியல்ரெடி.. பீட்ரூட் ,கேரட் போன்ற பொரியல்கள் செய்யும் போதும் சேர்த்து கொள்ளலாம். 
பொரியல் வகைகளில் சீக்கிறமாக செய்யக்கூடிய பொரியல் வெண்டைக்காய் தான். வெண்டைக்காயை அரிந்து விட்டு கழுவக்கூடாது கொழ கொழன்னு ஆகிவிடும். முதலில் கழுவி விட்டு கொண்டையை வாலையும் அரிந்து விட்டு பிறகு அரியனும்.
வெண்டைக்காய் வதக்கும் போது சிறிது தயிர் சேர்த்து வதக்கினால் கொழ கொழப்பாகாது.
சோம்பு தயிர் வெண்டைக்காய் பொரியல்

வெண்டைக்காய் குர் குரே

வெண்டைக்காய் தால் பொரியல்

Linking to Tamizar samaiyal Tuesday Event FB Group & Gayatri's walk through memory lane hosted by Priya Anadhakumar
தமிழர் சமையல் நளினி சுரேஷின் ஈவண்ட் ,ஓவ்வொரு மாதமும் மாதத்தில் இரண்டாவது நான்காவது மாதம் போஸ்ட் செய்யனும் என்பது விதிமுறை. இங்கு நான் பகிர்வது ஏராளமாக நம்மூர் சமையல் தான் , போஸ்ட் போட்டு அதை லிங்க் பண்ணுவது பெரும் பாடாக இருக்கிறது . எப்ப்போது முடிகிறதோ அப்போது மட்டும் பகிர்ந்து கொள்ளலாம் என்று இந்த வேர்கடலை வெண்டைக்காய் பொரியலை தமிழர் சமையலில் பகிர்கின்றேன்.https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

8 கருத்துகள்:

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு ஜலீலா. செய்து பார்க்கிறேன்.

Priya Anandakumar said...

super vendakkai fry Jaleela, awesome will try this soon. Thank you for linking it to the wtml event waiting for more yummy recipes from you.

Asiya Omar said...

மலரும் நினைவும் வெண்டைக்காய் பொரியலும் சூப்பர்.

Manjula Bharath said...

such an delicious and healthy stir fry :) tempts me !!

கோமதி அரசு said...

அப்பாவின் நினைவுகள் அருமை ஜலீலா.
வேர்கடலை வெண்டைக்காய் பொரியல் மிக நன்றாக இருக்கிறது.
செய்து பார்க்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல குறிப்பு.... செய்து பார்த்துடலாம்... :)

athira said...

ஆஹா புது விதமாக இருக்கே ஜலீலாக்கா. எனக்கும் வேர்க்கடலையை எப்படிச் செய்து தந்தாலும் பிடிக்கும். ஆனா அதில் கொழுப்புச் சத்ததிகம் கூடாது என்றார்கள், அதனால் குறைத்திருந்தேன், பின்பு சமீபத்தில் ஒரு ஆர்டிகல் படித்தேன் வேர்க்கடலை உடலுக்கு நல்லது என இருந்துதே.. அதன் கொழுப்பும் உடலுக்கு நல்லதென கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

அதுவும் வெண்டிக்காயுடன் சேரும்போது இரட்டிப்பு சத்து கிடைக்கும்.

மாதேவி said...

நன்றாக இருக்கின்றது.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா