Thursday, December 31, 2009

ஷீர் குருமா பாயத்துடன் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.





இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்




இது இஸ்லாமிய இல்லங்களில் ஈத் பெருநாளின் போது செய்வார்கள்.
சாதாரன விஷேஷங்களுக்கும் செய்யலாம். இது பாக்கிஸ்தானியர்களின் ரிச் பாயாசம் .பெரும்பாலும் இதை பாக்கிஸ்தானியர்கள் அதிகமாக விசேஷ நாட்களில் செய்வார்கள். நம் நாடுகளில் உருது முஸ்லீம்கள் செய்வார்கள்

டயட் செய்கிறவர்கள். லோ பேட் மில்கில் வெரும் பாதம், அக்ரூட் மட்டும் அரைத்து ஊற்றி, சுகர் பிரியை சேர்த்து சேமியாவை நெயில் வருக்காமல் அப்படியே சேர்த்து காய்ச்சி குடிக்கலாம்

தேவையான பொருட்கள்

பால் ‍ ஒரு லிட்டர்
முந்திரி, பாதம், பிஸ்தா = 150 கிராம் (அரைக்க)
பொடி சேமியா கைக்கு இரண்டு கை பிடி 150 கிராம்
சர்க்கரை ‍ முக்கால் டம்ளர் (தேவைக்கு
கன்டென்ஸ்ட் டின் ‍ 200 கிராம்
ஏலக்காய் ‍ 5
நெய் = இரண்டு மேசை கரண்டி
முந்திரி, பிஸ்தா,கிஸ்மிஸ் பழம் ‍ 50 கிராம்
சாஃப்ரான் (குங்கும பூ) = இரண்டு சிட்டிக்கை அளவு






செய்முறை


பாலை ஏலக்காய் சேர்த்து நன்கு காய்ச்சவும். (பால் நல்ல கொதித்து முக்கால் பாகமாக வற்ற வேண்டும்).

பாதம், பிஸ்தா, முந்திரியை அரைத்து ஊற்றி மீண்டும் காய்ச்சவும். (அரைத்த முந்திரி பாதம் கலவை ஒரு டம்ளர் அளவிற்கு வரும்).

ஒரு மேசைகரண்டி நெய்யில் சேமியாவை பொடித்து வருத்து கொதித்து கொண்டிருக்கும் பாலில் சேர்க்க‌வும்.

அடுத்து சர்க்கரை சேர்த்து, முன்று நிமிடம் கொதித்ததும் அடுப்பை அனைத்து விடவும் பால் சூட்டில் வேறு நல்ல வேகும்



முந்திரி,பிஸ்தா பொடியாக அரிந்து, கிஸ்மிஸ் பழம் அனைத்தையும் ஒரு தேக்கரண்டி நெயில் கரியாமல் வருத்து சேர்க்கவும்.

கடைசியாக சாஃப்ரானை தூவி இரக்கவும்

சுவையானா ஷீர் குருமா பாயாசம் ரெடி.

ஷீர் குருமா பாயத்துடன் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

குறிப்பு:

அக்ரூட் இருந்தால் அதையும் சேர்த்து கொள்ளலாம். இது இங்கு ரோஸ்டடே கிடைக்கிறது, லேசாக வருத்தால் போதும், வெள்ளி பொடிசேமியாவாக இருந்தால் நன்கு பொன் முறுவலாக வருத்து போடவும்.

மேலும் அடிக்கடி வீட்டில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். ஹெல்தியும் கூட. தினம் வீட்டில் செய்வதாக இருந்தால் கொஞ்சமாக முந்திரி மட்டும் அரைத்து ஊற்றி கொதிக்கவைத்து பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்.

இந்த பாயசத்தை செய்து குடித்து டேஸ்ட் பார்த்து விட்டால் வேறு எந்த பாயாசமும் செய்ய தோணாது, செய்வது சுலபம், ஈசியும் கூட ஹெல்தியான பாயசமும் ஆச்சு, சுவைத்து மகிழுங்கள்.


இது எங்க அண்ணி சொல்லி கொடுத்தது,அதோடு பாக்கிஸ்தானி பிரெண்ட் ஒருவரும் சொல்லி கொடுத்தார்கள்,இரண்டு முறையிலும் கலந்து இது என் ஸடைலில் என் இஷ்டத்துக்கு அளவுகள் போட்டு செய்வேன். 15 வருடமா பாயாசம் என்றால் அது ஷீர் குருமாதான். ரொம்ப ரிச்சாக இருக்கும்.

ஜெர்மனியில் உள்ள தமிழ் தோழி இதை என்னிடமிருந்து கற்று கொண்டு போய் பார்டியில் செய்து அசத்தி எல்லாருடைய பாராட்டையும் பெற்று காலி சட்டியை வீட்டுக்கு எடுத்து வந்தார்களாம். அவர்கள் அன்று அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.




அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


பிறக்க போகும் வருடத்தில் நடந்து முடிந்த தீமைகளையும், மனக்கசப்புகளையும் மறப்போம். கொஞ்சம் நேரமாவது ஒதுக்கி கடந்த வருடத்தில் என்ன தப்பு செய்தோம், அது இந்த வருடத்தில் நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.


பிறக்க போகும் இந்த புது வருடத்தில் ஆண்டவன் அனைவரின் நாட்டங்களையும் நிறைவேற்றி வைக்க ஏக வல்ல ஆண்டவனிடம் பிராத்திப்போம்.




ஓட்டு போட மறக்கக்கூடாது

Tuesday, December 29, 2009

என் பதிவுலகமும், விருதுகளும்



எனதருமை அன்பர்களே, நன்பர்களே, சக பதிவர்களே, வாசகர்களே, கருத்துக்களை தயக்கமில்லாமல் வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்துபவர்களே மற்றும் என்னை பின் தொடர்பவர்களே, இனி தொடரப்போகிறவர்களே (அய்யய்யே... என்ன இது ஒரு எதுகை மோனைக்காக கூப்பிட்டா லேகியம் விக்கற எஃபக்ட் வந்துடுச்சி?)



மைக்க பிடிச்சா இப்படி தான் பேசனுமுன்னு அண்ணாமலையான் அவர்கள் தான் சொன்னாருங்க...



நானும் பதிவுலகமும். போன வருடம் இதே டிசம்பர் கடைசியில் பாயிஜா (தமிழ் குடும்பம்,அருசுவை மூலம் அறிமுகமான தோழி நான் ஒரு பிலாக் ஆரம்பித்து இருக்கேன், அதில் கலந்து கொண்டு ஆதரவு கொடுங்கள், என்று சொன்னாங்க.



அருசுவை தோழி இலாவின் உதவியால் உடனே பிலாக் என்றால் என்ன போன வருடமே இந்த பிலாக் பற்றி தெரிந்தும் இரண்டொரு பதிவு போட்டும், மறந்து போய் பிலாக் என்றால் என்ன எப்படி ஆரம்பிப்பது, மண்டைய போட்டு குடைந்து நானே ஒரு வழியா பிலாக் ஆரம்பித்தேன்,



ஹே ஹே எனக்கும் பிலாக் போட வந்து விட்டது, ஒரே சந்தோஷம்...தாங்க முடியல

எதுவும் பப்லிஷ் பண்ணல கட கடன்னு, மனதில் தோன்றிய எல்லா டிப்ஸ் சமையலும் போட்டாச்சு. பிப்ரவரியில் தான் ஒவ்வொன்றா பப்ளிஷ் செய்தேன்.


முதலில் எப்படி பாலோவர்ஸா ஜாயின்ட் பண்ணுவது என்று கூட தெரியாமல் இருந்தேன், பின்ன்னூட்டம் போடுபவர்கள் பதிவுக்கு பதில் எபடி போய் போடனும் என்று தெரியாது. அப்படி விழுந்து எழுந்திரிச்சாச்சு.


நெட்டில் பல சைட் களில் என் சமையல் குறிப்புகளும், டிப்ஸ்களும் கொடுத்து இருக்கிறேன்சமையல் குறிப்பு மூலம் நெட்டில் பல நாடுகளில் உள்ள பல தோழிகள் மூலம் நிறைய வாழ்த்து பெற்றுள்ளேன்.


அருசுவையில் தான் முதல் முதலில் குறிப்பு கொடுக்க ஆரம்பித்தேன். அதில் என் குறிப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
அருசுவையில் நான் கூட்டாஞ்சோறில் இரண்டாவது இடத்தில் உள்ளேன். யாரும் ச‌மைக்க‌லாமில் ப‌ட‌த்துட‌ன் முடிந்த‌ போது குறிப்புக‌ள் கொடுத்து வ‌ருகிறேன்.

அருசுவை எழுத்துதவி மூலம் தான் தமிழ் டைப்பிங் கற்று கொண்டேன். அதை செம்மையாக நடத்தி வரும் பாபுவும் மிகவும் தன்மையானவர். நன்றி பாபு.

இதன் மூலம் நிறைய எல்லா நாடுகளிலுள்ள‌ உள்ள தமிழ் தோழிகள் நிறைய கிடைத்துள்ளார்கள்.இதில் மன்றத்தில் எல்லா தோழிகளும் ஓவ்வொரு 100 குறிப்புகள் முடிந்தவுடனும் எல்லோரும் பாராட்டு தெரிவித்து என்னை ஊக்குவித்தார்கள்.




அருசுவை மூலமாக தான் தமிழ் டைப்பிங்கே கற்று கொண்டேன். நன்றி அருசுவைடாட்காம் சிலர் ரொம்ப நெருக்கமானவர்களாகவும் ஆகிவிட்டார்கள். பிலாக்கிலும் (பாயிஜா, மேனகா, மலிக்கா,ஹர்ஷினிஅம்மா,கீதா ஆச்சல் ,ஸாதிகா அக்கா, சுஹைனா, ஹுஸைன்னாம்மா,விஜி,சுஸ்ரீ)

அடுத்து ஹுஸைனாம்மா தான் சொன்னார்கள் தமிழ் டைப்பிங்க்கு www.tamileditor.org அதில் போய் டைப் செய்தால் ஈசியாக இருக்கும் என்றார்கள்,அருசுவை எழுத்துதவி கற்று கொண்டவர்களுக்கு இந்த தமிழ் எடிட்டர் ரொம்ப ஈசியாக இருக்கும்.

நன்றி ஹுஸைன்னாம்மா/

நெருக்கமான தோழிகள் என்று சொல்லபோனால் இன்னும் பல தோழிகள் இருக்கிறார்கள். ஆனால் இங்கு குறிப்பிட்டுள்ளது பிலாக்கில் தொடர்நத தோழிகள்.




அடுத்து தமிழ் குடும்பத்தில் நிறைய டிப்ஸ்கள் அங்கும் நல்ல வரவேற்பு என் டிப்ஸ் மற்றும் படத்துடன் குறிப்பு குறைந்த நாட்களில் 300 முடித்ததால் எனக்கு அவர்கள் சின்ன பரிசும் அங்கிருந்து அனுப்பிவைத்தார்கள்.சின்ன பரிசாக இருந்தாலும். அது நான் முதல் முதல் வாங்கியது அது எனக்கு பெரிய பரிசே ஆகும். இங்கும் பாயிஜா, மலிக்கா,மேனகா, சுஹைனா,சாருஸ்ரீ, கீதா ஆச்சல்

தமிழ் குடும்பத்தில் எனக்கு மிகவும் மதிப்பும் மரியாதையும் உண்டு.எதிர் பார்க்கவே இல்லை எனக்கு தீடிர் பரிசு அறிவித்து உங்கள் குறிப்புகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது என்று சொன்னார்கள். என்னால் தமிழ் குடும்பம் சரியாக கிடைக்கவில்லை என்றதும், பதிவுகளுக்காக‌ இரண்டு முன்று பாஸ்வேட் கொடுத்து போட சொன்னார்கள், இல்லை அவர்களே கூட போட்டு விடுவார்கள்.


இது தமிழ் குடும்பத்தில் எனக்கு கிடைத்த பரிசு,
நன்றி தமிழ்குடும்பம்டாட்காம் ,இதை நடத்தும் தமிழ் நேசன் அவர்களுக்கு மிக்க நன்றி,







ஜீமெயில் ஓப்பன் பண்ணும் போதெல்லாம் சைடில் கண்ணில் படுவது சமையலறைடாட்காம், உடனே அதையும் போய் பார்த்தேன். அதில் நான் வெஜ் குறிப்புகளே இல்லாமல் இருந்தது ஆகையால் அதிலும் பங்கு கொண்டு குறிப்புகளை அனுப்பினேன்.பிற‌கு நேர‌மின்மையால் நிருத்தி விட்டேன்.



கீழ‌க்க‌ரை அஞ்சல் மாத இதழிலும், என் குறிப்புக‌ள் வெளிவ‌ந்துள்ள‌து.


எல்லோரிடமும் சமையல் ராணி,டிப்ஸ் ராணி என்ற பட்டமும் கிடைத்துள்ளது.

என் சமையல் மூலம் சமையலே தெரியாதவர்களும் என் சமைய‌லை பார்த்து செய்து அவ‌ர‌வ‌ர் வீட்டில் பார‌ட்டை பெற்றுள்ளார்க‌ள்.

ச‌மைய‌லே ச‌ரியாக‌ செய்ய‌ தெரியா‌த‌ ஒரு பெண் என் சமையல் மூலம்‌ ஒரு கிரேட் குக். இன்னும் பல‌ர் ப‌ய‌ன‌டைந்து உள்ள‌ன‌ர்.


ஒரு காலத்தில் மற்றவர்கள் பேப்பரில் கொடுத்த சமையல் குறிப்பை பார்த்து என்னால் முடியுமா இது போலெல்லாம் என்பது போல் பெரு மூச்சு விட்டு கொண்டு இருந்தேன்.



இப்போது நானும் நெட்டில் என் குறிப்பும் வருகிறது என்கிறது போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.


விக்கிஸ் கிச்சன் இவங்க கடந்த இரண்டு வருடமா சமையல் குறிப்பு ரொம்ப செம்மையாக போட்டு வருகிறார்கள், கேக் ரெசிபிகள் ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த Smart Chef அவார்டை விக்கி எனக்கு கொடுத்து இருக்காங்க.


மிக்க
VEGGIE PARADISE
நன்றி அருனா, இவர்கள் குறிப்புகள் அனைத்தும் வெஜ் தான்.... இதை என் பாலோவர்சுக்கும்,பின்னூட்டமிடுபவர்களுக்கும் கொடுக்கிறேன், வாங்கிக்கொள்ளுங்கள்.


சிங்கக்குட்டி கொடுத்தது ஒரு வித்தியாசமான அவார்டு cool blog MJ Award





ந‌ன்றி மேனகா, மலிக்கா, சுஸ்ரீ, சுதாகர் சார்,ஸாதிகா அக்கா






ந‌ன்றி மேனகா




ந‌ன்றி மேனகா







ந‌ன்றி மேனகா

இதை மலிக்காவிற்கு கொடுக்கிறேன்.






நன்றி சுவையான சுவை சுஸ்ரீ










ந‌ன்றி ஹர்ஷினி சுவையான‌ சுவை சுஸ்ரீ








ந‌ன்றி சுதாகர் சார்

இதை ஸாதிகா அக்கா, விஜி, நாஸியா மற்றும் ஆசியாவிற்கு கொடுக்கிறேன்.



ந‌ன்றி பாயிஜா ,ஷஃபிக்ஸ் . இதான் முதல் முதல் வாங்கிய விருது சந்தோஷம் தாங்கல.





இந்த விருதை பற்றி ஒன்று சொல்லனும், எப்ப பார்த்தாலும் என் பெரிய பையனும், என் கண‌வரும் அடிக்கடி இது போல் அவார்டுகள், மெடல்கள் வாங்குவார்கள். வருடா வருடம் வந்து காண்பிப்பார்கள்.


அப்ப நானும் என் சின்ன பையனும் நம்மால் தானே இது போல் எதுவும் வாங்க முடியல என்று ஒரு ஏக்கம். சின்னவன் எப்படியோ ஒரு முறை பேன்சி டிரஸில் கலந்து கொண்டு அதிலும் பரிசு, ரன்னிங்கில் வின் செய்து ஒரு மெடல் வாங்கியாச்சு.


நான் தான் நினைத்து கொண்டே இனி எங்க போய் படிச்சி மெடலும், அவார்டும் வாங்குவது. என்று நினைத்து கொண்டேன்.


கொஞ்சம் கூட நினைக்கல பிலாக் ஆரம்பிப்பேன், இது போல் அவார்டு உங்களை போல் உள்ள பதிவுலக அன்புள்ளங்கள் மூலம் அவார்டு வாங்குவேன் என்றும் நினைக்கவில்லை.


என் பிலாக்குகள் மொத்தம் நான்கு (சமையல் குறிப்பு, ஜலீலாவின் பயனுள்ள டிப்ஸ்கள்,முத்தான தூஆக்கள், குழந்தைவளர்பு) எல்லாவற்றையும் ஒன்றாக இனைத்து டிசைன் செய்து கொடுத்தது சுஹைனா, மிக்க நன்றி.


பிலாக் ஆர‌ம்பித்த‌தும் குறிப்புக‌ள் கொடுக்க‌ ஆர‌ம்பித்த‌து ச‌வுதியில் இருக்கும் தாஜ் க்காக‌வும், சிங்க‌ப்பூரில் இருக்கும் க‌திஜ‌த்துக்காவும். தான் இப்போது ஒரே வ‌ருட‌த்தில் ப‌திவுக‌ள் 300 ஐ தாண்டி விட்ட‌து.


தொடர்ந்து என் பதிவுகளை ஆரம்பத்திலிருந்து படித்து கருத்து தெரிவித்து கொண்டு இருக்கும் பாயிஜா, மேனகா, ஹர்ஷினி அம்மா, ஷபிக்ஸ்,நவாஸ்,அதிரை அபூபக்கர், தாஜ்,கதிஜத்து மிக்க நன்றி.


இப்போது ஆறு மாத காலமாக பாலோவர்ஸாக இனைந்து கருத்து தெரிவித்து கொண்டிருக்கும், அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.


(வடிவேலு ஜெயிலுக்கு போறேன் நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் என்பது போல்..


ஹே ஹே நான் அவார்டு வாங்கிட்டேன், நான் அவார்டு வாங்கிட்டேன். நானும் ஒரு பிலாக் வச்சிருக்கேன், நானும் ஒரு பதிவர், நானும் சமையல் ராணி ஹி ஹி)

ஆண்டவன எல்லோருடைய ஏக்கங்களையும நாட்டத்தையும் நிறைவேற்றதான் செய்கிறான்.

எல்லோரும் மாறி மாறி அவார்டு கொடுத்து சந்தோஷத்தை பிலாக் மூலம் பரிமாறிக்கொள்கிறோம்



ஹலோ 1 , 2 , 3 மைக் டெஸ்டிங்க


இது வ‌ரை என் ப‌திவுக‌ளை ப‌டிக்கும், பின்னூட்ட‌ம் கொடுக்கும், ஓட்டு போட்டு என்னை சந்தோஷ கடலில் ஆழ்த்திக்கொண்டிக்கும் ப‌திவுல‌க‌ தோழ‌ தோழிய‌ர்க‌ளுக்கு மிக்க‌ ந‌ன்றி.







பதிவுலக தோழிகள். பாயிஜா,மேனகா,தாஜ், ஹர்ஷினி அம்மா, கீதா ஆச்சல், ஸாதிகா அக்கா,சுஹைனா, நாஸியா,சாருஸ்ரீ, சுஸ்ரீ, ஹுஸைன்னாம்மா,அம்மு மது, விஜி, விக்கி,பாத்திமா ஜொஹ்ரா, பிரியா ,கமலா, மாதேவி, சாரா நவின், சித்ரா,சித்ரா ‍ = 2, சரஸ்வதி, மலர்,மலர் காந்தி,அருனா,எல்லோருக்கும் நன்றி.










இந்த பதிவு சுதாகர் சார் அழைத்ததால் போட்டேன். வ‌டை போட‌ல‌ சுதாக‌ர் சார், இதோ நொய் உருண்டை வெல்ல‌ம் சோறும், ம‌லேஷிய‌ன் முர்தபாவும்.















Saturday, December 26, 2009

உப்பு நெல்லிக்காய் மற்றும் இனிப்பு நெல்லிக்காய்



// ஜுரம் வந்து வாய் கசப்பிற்கும் இது நல்ல இருக்கும், சளி அதிமாகி ஆன்டிபயாட்டிக் எடுத்து கொள்ளும் போது அந்த மருந்து நாக்கு மறத்து போய், என்ன சாப்பிட்டாலும் ருசி தெரியாது. அப்படி உள்ளவ்ர்களும் இது சாப்பிட்டால் பலன் உண்டு இது என் அனுபவம்... //



கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதரபிக்கு பிற்கு ஏற்படும் சுவையின்மைக்கும் இந்த நெல்லிக்காய இப்படி செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் = ப‌த்து
ச‌ர்க்க‌ரை = கால் கப்
தேன் = ஒரு மேசைக‌ர‌ண்டி
உப்பு = ஒரு சிட்டிக்கை

செய்முறை

நெல்லிக்காயை சைடில் கீறி விட்டு (அ) ஒரு ஃபோர்கை கொண்டு எல்லா பக்கமும் குத்தி விடவேண்டும்.
ஒரு பெரிய‌ வாய‌ன்ற‌ ச‌ட்டியில் த‌ண்ணீரை கொதிக்க‌ விட்டு நெல்லிக்காயை போட்டு உட‌னே அடுப்பை அனைக்க‌வும்.

சர்க்கரையை கால் கப் தண்ணீரில் ஒரு சிட்டிக்கை உப்பு போட்டு காய்ச்சி அதில் நெல்லிக்காயை சேர்த்து தேனையும் ஊற்றி ஊறவிட்டு சாப்பிடவும்.

கவனிக்க:

நெல்லிக்காய் உட்கொள்வது முடி உதிர்வதை தவிர்க்கும், இதை வேக வைத்து இனிப்பு ஊறுகாய்,கார ஊறுகாய் போட்டும் சாப்பிடலாம்.பொடியாக அரிந்து நெல்லிக்காய் சாதம் செய்தும் சாப்பிடலாம்.





உப்பு நெல்லிக்காய்

முழு நெல்ல்லிக்க்காய் பத்து
பச்சமிளகாய் - நான்கு
உப்பு
சிட்டிக்கை சர்க்கரை
வினிகர் - ஒரு டிராப்

நெல்லிக்காயை நாலாபக்கமும் கீரி விட்டுகொஞ்ச்மா தண்ணீரில் மைக்ரோ வேவில்
இரண்டு நிமிடம் வைத்து எடுத்து அதில் உப்பு சர்க்கரை, பச்ச மிககாயை கிறி சேர்த்து வினிகர் ஊற்றி வைக்கவும்.
ஸ்ஸ்ஸ் ரொமப் யம்மியாக இருக்கும்.




//க‌ர்பிணி பெண்க‌ளுக்கு ம‌ச‌க்கையின் போது வாய்க்கு ருசி ப‌டும், கேன்ச‌ர் நோயாளிக‌ளுக்கு கீமோ த‌ர‌பி செய்த‌தும், வாயிக்கு எந்த‌ ருசியுமே தெரியாது, கொம‌ட்டலாக‌வே இருக்கும் அந்த‌ ச‌மய‌த்தில் இதை போட்டு அவ‌ர்க‌ளுக்கு கொடுக்க‌லாம். இதில் விட்டமின் சி சத்து அதிகம் இருக்கிறது. //

Thursday, December 24, 2009

ஸ்பைசி வெஜிடேபுள் கொத்து பரோட்டா/spicy vegetable koththu parota


//மீதம் ஆன பரோட்டாவில் தால் கொத்து பரோட்டா செய்வார்கள்//
தேவையானவை
கோதுமை பரோட்டா = 4
எண்ணை = முன்று தேக்க‌ர‌ண்டி
ப‌ட்ட‌ர் (அ) நெய் = ஒரு தேக்க‌ர‌ண்டி
தக்காளி = ஒன்று
வெங்காயம் = ஒன்று
பச்ச மிளகாய் = ஒன்று
கொத்துமல்லி கருவேப்பிலை = சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் = அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் = சிறிது
உப்பு = ருசிக்கு தேவையான அளவு


கேபேஜ் = பொடியாக அரிந்தது 4 மேசை கரண்டி
கேரட் = கால் துண்டு பொடியாக அரிந்தது
கேப்சிகம் = பொடியாக அரிந்தது முன்று மேசை கரண்டி
பீன்ஸ் = பொடியாக அரிந்தது நான்கு
ஸ்பிரிங் ஆனியன் = இரண்டு ஸ்டிக்
ப்ரோஜன் பீஸ் மற்றும் கார்ன் = இரண்டு மேசைகரண்டி





செய்முறை

பரோட்டாவை அடுக்கி வைத்து கத்திரி கோலால் குறுக்கும் நெடுக்குமாய் பொடியாக கட் பண்ணி கொள்ள‌வும்.



காய்கறிகளை சுத்தம் செய்து பொடியாக அரிந்து வைக்கவும்.



எண்ணையை காயவைத்து ஒரு சிறு பட்டை சேர்த்து வெங்காயம், இஞ்சி பூண்டு கருவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து தாளிக்கவும்.



வெங்காய தாள், கேப்சிகம் தவிர மற்ற காய்களை சேர்த்து நன்கு வதக்கவும்.
மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கி பிறகு இப்போது வெஙகாய தாள், கேப்சிகம் சேர்த்து வதக்கி ஒரு நிமிடம் வேக விட்டு பொடியாக வெட்டிய பரோட்டாக்களை சேர்த்து ந‌ன்கு கிள‌றி ம‌சாலாக்கள் ப‌ரோட்டாவுட‌ன் சேர்ந்த‌தும் இர‌க்கிவிட‌வும்.



க‌டைசியாக‌ எலுமிச்சை சாறு, மிள‌கு தூள் தூவி கெட்சப்புடன் சாப்பிட‌வும்.





கவனிக்க:



கொத்து ப‌ரோட்டா என்றாலே பிடிக்காதே ஆளே கிடையாது, மீந்து போன‌ ப‌ரோட்டாவில் செய்வ‌து தான் கொத்து ப‌ரோட்டா. இதை மைதா மாவில் செய்தால் இன்னும் சுவை கூடும். இதில் கோதுமை மாவு ப‌ய‌ன் ப‌டுத்தி செய்துள்ளேன். கத்திரிகோலால் கட் பண்ணுவதால் ஒரே சீராக ஹோட்டலில் இருப்பது போல் இருக்கும். இதில் முட்டை சேர்த்தும் செய்ய‌லாம். வெளியில் க‌ட்டி எடுத்து போக‌ ரொம்ப சூப்ப‌ரான‌ டிப‌ன். வ‌யிறும் நிறையும்.

Tuesday, December 22, 2009

வெல்லம் பிடி (அத்தரி பச்சா) கொழுக்கட்டை


//இது முஹரம் மாதம் செய்வது.
இஸ்லாமிய‌ வ‌ருட‌ பிற‌ப்பில் செய்வார்க‌ள்.

இதன் பெயர் சகோதரி ஆசியா பின்னூட்டத்தில் சொன்னது போல் அத்தரி பச்சா கொழுக்கட்டை என்று சொல்வார்கள்.//

சிக‌ப்ப‌ரிசி மாவு = ஒரு க‌ப்
ம‌ண்டை வெல்ல‌ம் = முக்கால் க‌ப்
உப்பு = கால் தேக்க‌ர‌ண்டி
நெய் = ஒரு தேக்க‌ர‌ண்டி
தேங்காய் = அரை க‌ப் துருவிய‌து
பாசி ப‌ருப்பு = ஒரு மேசை க‌ர‌ண்டி ( வ‌ருத்து ஊற‌வைத்த‌து)



வெல்ல‌த்தை தூளாக்கி கொஞ்ச‌மா கால் க‌ப் த‌ண்ணீர் ஊற்றி க‌ரைத்து சூடு ப‌டுத்தி ம‌ண்ணை வ‌டிக‌ட்ட‌வும்.


மாவில் ஊற‌வைத்த‌ பாசி ப‌ருப்பு,நெய்,உப்பு, தேங்காய் துருவ‌ல் எல்லாம் சேர்த்து விற‌வி வெல்ல‌க்க‌ரைச‌லை ஊற்றி ந‌ன்கு க‌ல‌க்கி 5 நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.

கொழுக‌ட்டை பிடிக்கும் போது தேவைக்கு த‌ண்ணீர் தெளித்து பிடித்து கொள்ள‌வும்.


பிற‌கு சின்ன‌ கொழுக்க‌ட்டைக‌ளாக‌ பிடித்து இட்லி பானையில் ஈர‌ துணியை விரித்து அவித்து எடுக்க‌வும்.


இது இத‌ற்கு முன் கொடுத்த‌ வெல்ல‌ உருண்டை சிகப்பரிசி மாவு வெல்லம் உருண்டைபோல‌வும் செய்ய‌லாம்.


குறிப்பு: த‌ண்ணீர் அதிக‌ம் ஊற்றி விட‌ கூடாது. ரொம்ப கொழ‌ கொழ‌ என்று ஆகிவிடும், பிற‌கு கொழுக‌ட்டை பிடிக்க‌ வ‌ராது. மனத்துக்கு பொடி செய்த ஏலக்காய் சேர்த்து கொள்ளலாம்.

இதே கார‌த்தில் செய்ய‌ சிகப்பரிசி மாவு கொழுக்கட்டைஇதில் பார்க்க‌வும்.
an ayidda

Sunday, December 20, 2009

பேச்சுலர் பாம்பே டோஸ்ட் (இனிப்பு மற்றும் காரம்)




ஈசியான காலை உணவு ,குழந்தைகளுக்கேற்ற ஹெல்தி உணவு. விருந்தாளிகள் வந்தால் உடனே நிமிஷத்தில் தயாரித்து விடலாம்.








பிரெட் ஸ்லைஸ் = 12 (சிறிய பாக்கெட்)
முட்டை = இரண்டு
சர்க்கரை = 100 கிராம்
பால் = அரை டம்ளர்
பேக்கிங் பவுடர் = ஒரு சிட்டிகை
வென்னிலா எஸன்ஸ் = சிறிது
உப்பு = ஒரு சிட்டிக்கை
ப‌ட்ட‌ர் + எண்ணை = பொரிக்க‌ தேவையான‌ அள‌வு






பாலை காய்ச்சி ஆறவைக்கவும்.


முட்டையுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி, அதில் பேக்கிங் பவுடர், உப்பு, வென்னிலா எசன்ஸ் சேர்த்து பாலையும் சேர்த்து கலக்கவும்.


பிரெட் ஸ்லைஸ்களை ஒவ்வொன்றாக முட்டை கலவையில் தோய்த்து தவ்வாவில் கொள்ளும் அளவிற்கு பட்டர் + எண்ணை விட்டு கருகாமல் பொரித்தெடுக்கவும்.


பிள்ளைகளுக்கு வாரம் ஒரு முறை பள்ளிக்கு கொடுத்தனுப்பலாம்.






இதில் பாலுக்கு பதில் தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம்.
பட்டை பொடி சேர்த்து செய்தால் ஃப்ரென்ச்டோஸ்ட் என்று பெயர்.




பிரெட் கார‌ டோஸ்ட்


காரத்தில் செய்ய வெங்காயம், பச்ச மிளகாய், சிறிது மிளகாய் தூள், இஞ்சி பூண்டு கருவேப்பிலை சேர்த்து அரைத்து முட்டையுடன் கலக்கி , உப்பு, சிறிது பால் சேர்த்து பொரித்தெடுக்கவும்.
சுவையான கார டோஸ்டும் நிமிஷத்தில் ரெடி பண்ணிடலாம்.




Saturday, December 19, 2009

சாசேஜ் பிரட் டோஸ்ட்






பிரெட் = எட்டு ஸ்லைஸ்
சாசேஜ் = நான்கு
வெங்காயம் = ஒன்று
பூண்டு = இரண்டு பல்
டெமேட்டோ கெசப் = ஒரு மேசை கரண்டி
சில்லி சாஸ் = ஒரு தேக்கரண்டி
பட்டர் = அரை தேக்கரண்டி





சாசேஜை வேகவைத்து பொடியாக நருக்கவும்.

பட்டரை சூடுபடுத்தி வெங்காயம் பூண்டு போட்டு தாளித்து சாசேஜ் சேர்த்து சில்லி சாஸ், டொமேட்டோ கெட்சப் சேர்த்து , கொஞ்சமா உப்பு போட்டால் போதும் சாஸ் வகைகளில் உப்பு இருக்கும்









ஒரு பிரெட்டில் ப‌ர‌வலாக‌ சாசேஜ் க‌ல‌வையை வைத்து மற்றொரு பிரெட்டால் மூடி ப‌ட்ட‌ர் சேர்த்து டோஸ்ட‌ரில் வைத்து டோஸ்ட் செய்து எடுக்க‌வும்



சுவையான‌ சாசேஜ் டோஸ்ட் ரெடி.

வேட்டைக்காரனை டரியலாக்கி வந்த குறுஞ்செய்திகள் சில......


விஜய் படம் ரிலீஸ் என்றாலே நம்ம பயலுகளுக்கு கொண்டாட்டம் தான்......
அப்படி என்னதான் சந்தோசமோ
வேட்டைக்காரனை பற்றி கலாய்த்து குறுஞ்செய்தி அனுப்பும் பயலுகளுக்கு...
இந்த பயலுக அனுப்புற குறுஞ்செய்தி தமிழில் உள்ள எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும்
என்பதும் அவர்களுக்கு தெரியும்...............
இருந்தாலும் என்ன பண்றது காய்ச்ச மரம்தானே கல்லடி படும்.........

விஜயின் அவ்வ்வ்வ் மன்னிச்சுடுங்க சன் பிக்சர்ஸின் ...... வேட்டைக்காரனை
டரியலாக்கி வந்த குறுஞ்செய்திகள் சில......


1. காதல் என்பது விஜய் படம் மாதிரி.
பார்க்காதவன் பார்க்க துடிப்பான்.
பார்த்தவன் சாக துடிப்பான்


2.டைரக்டர்:நம்மளோட அடுத்த
படம் 100நாள் ஓடனும்
விஜய்: இல்லை 200நாள் ஓடனும்
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்
விஜய்: ங்கொய்யால முதல்ல ஜோக் அடிச்சது யாரு
நீயா? நானா?


3.ரிப்போர்ட்டர் : சார் உங்களோட வேட்டைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி
தள்ளி போய்ட்டே இருக்குதே ஏன்?
விஜய் : சென்சார் போர்டு மெம்பர்ஸ் படத்த பாக்க பயப்படுறாங்க.


4.முதல் பரிசு அடையார்ல பிளாட்,
ரெண்டாவது பரிசு கார்
போட்டி நடக்கும் இடம்: சேப்பாக்கம் கிரவுண்டு.
தகுதி: எதையும் தாங்கும் இதயம்
போட்டி என்னன்னா, விஜய் நடிச்ச ஒரு படம் பாக்கனும்
போட்டியின் விதிகள் : படம் பாக்கும் போது வாந்தி எடுக்கக்கூடாது,
அவர் என்ன பண்ணினாலும் திட்டாம படம் பாக்கனும்...
முக்கியமா உயிரோட இருக்கனும்


5.விஜய் அரசியலில் சேர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சரானால் தன்னுடைய முதல் பட்ஜெட்டை எப்படி தயாரிப்பார்.--
ஆந்திராவின் பட்ஜெட்டை ஒரு ஜெராக்ஸ் காப்பி எடுப்பார் (ரீமேக்)


6.குயில புடிச்சி கூண்டில் அடைச்சு கூவ சொல்லுகிற உலகம்
"விஜய" புடிச்சி காச கொடுத்து நடிக்க சொல்ற உலகம்
அது எப்படி நடிக்கும் ஐயா..
படம் எப்படி ஓடும் ஐயா?


7.விஜயின் அடுத்த 7 படங்கள் வேட்டைக்காரன்,
சமையல்காரன், குடிகாரன், பைத்தியக்காரன், பிச்சைக்காரன், குடுகுடுப்பைக்காரன்


8.டிரைவர் : சாரி சார் பெட்ரோல் டிரை ஆகிடிச்சு..
இனிமேல் வண்டி ஓரு அடி கூட முன்னாடி நகராது
விஜய்: சரி ரிவர்ஸ் எடு வீட்டுக்காவது போகலாம்.


9. 140 பேரைக் கொன்ற சதாமுக்கு தூக்குத்தண்டனை.
6 கோடி பேரை கொல்ல வரும் வேட்டைக்காரன் விஜய்க்கு என்ன தண்டனை?.


10.எமன் : நான் உன் உயிரை எடுக்க போகிறேன்.
உன் கடைசி ஆசை என்ன?.
விஜய்: நான் நடிச்ச வேட்டைக்கரன்படத்தை நீங்க பாக்கனும்.
எமன் : ங்கொய்யால நான் உன்ன கொல்ல பாத்தா
நீ என்ன கொல்ல பாக்குறியே.......


11.ரிப்போர்ட்டர்: விஜய் சார் ஏன் வேட்டைக்காரன் வேளியாகும் தேதிய சொல்லலமட்றீங்க
விஜய்: சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாயிடும்
அதான் சொல்லலை.






இது எனக்கு மெயிலில் வந்தது.




Tuesday, December 15, 2009

சிக்கன் முர்தபா - Stuffed chicken parota


இதன் பெயர் நாங்க சிக்கன் வைத்து செய்தாலும், மட்டன் வைத்து செய்தாலும், காய் கறி வைத்து செய்தாலும். முட்டை ரொட்டி என்று தான் சொல்வோம். ஆனால் வெப் உலகில் வந்த பிறகு தான் இதுக்கு மலேஷியன் முர்தபா என்று எனக்கு தெரியும். இது எங்க இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் விஷேஷ சமையலில் இதுவும் ஒன்றாகும்.


இது சென்னையில் உள்ள பிர்தவுஸ் ஹோட்டலில் ரொம்ப பேமஸ்.

பரோட்டாவிற்கு

மைதா = இரண்டு கப்
உப்பு ‍= சிறிது
டால்டா உருக்கியது = ஒரு மேசை கரண்டி
முட்டை = ஒன்று

பில்லிங்கிற்கு

எண்ணை = இரண்டு தேக்கரண்டி
சிக்கன் கீமா = 200 கிராம் (இதில் மட்டன் கீமா, பீஃப் கீமா எது வேண்டுமானாலும் போடலாம்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் = இரண்டு தேக்கரண்டி
உப்பு = தேவைக்கு
சீரகத்தூள் = அரை தேக்கரண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
மிள‌காய் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
வெங்காயம் = கால் கிலோ
தக்காளி = ஒன்று
கர‌ம் ம‌சாலா தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
ப‌ச்ச‌மிள‌காய் = இர‌ண்டு
கொத்து ம‌ல்லி த‌ழை = ஒரு கைப்பிடி
முட்டை = மாவில் த‌ட‌வ‌ தேவையான‌ அள‌வு
எண்ணை + டால்டா (அ) ப‌ட்ட‌ர் = சுட‌த்தேவையான‌ அள‌வு

செய்முறை

முதலில் மாவு தயாரிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து சிறிது தளர்த்தியாக குழைத்து பெரிய உருண்டகள் போட்டு ஓவ்வொன்றிலும் எண்ணை தடவி ஊறவைக்கவும்.

எண்ணையை காயவைத்து வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், அடுத்து தக்காளி, கொத்துமல்லி தழை சிறிது சிகக்ன் , மசாலா வகைகள் இப்படி எல்லா வற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கி கடைசியாக கரம் மசாலா,கொத்துமல்லி தூவி கிளறி கலவையை ஆறவிடவும்.

இப்போது மாவு நன்கு ஊறி இருக்கு அதை பெரிய வட்டவடிவமாக திரட்டவும்.

மாவில் தடவ தேவையான அளவு முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து கலக்கி கொள்ளவும்.

வட்டமாக திரட்டிய மாவில் முட்டை கலவையை பரவலாக தடவி, ஆறிய சிக்கன் பில்லிங்கை ஒன்னறை மேசை கரண்டி அளவு வைத்து நல்ல பரவாலாக வைத்து சதுர வடிவமாக மடிக்கவும்.

தவ்வா சூடானதும் எண்ணை ஊற்றாமல் முதலில் சதுர வடிவமாக தயாரித்ததை போட்டு லேசாக சூடானதும் திருப்பி போட்டு நன்கு கையால் அழுத்தி விடவும் இப்படி செய்வதால் எல்லா பக்கமும் சமமாக இருக்கும்.

இப்போது எண்ணை கலந்த டால்டாவை சுற்றிலும் ஊற்றி நன்கு வெந்து சிவந்து வரும் போது ஒரு தட்டில் எடுத்து வைத்து ஒரு பக்கம் மட்டும் குறுக்கும் , நெடுக்குமாக முழுவதும் வெட்டாமல் லேசாக நான்கைந்து லைன் போட்டு விடவும். அப்ப தான் சாப்பிடும் போது துண்டு துண்டாக பிச்சி சாப்பிட வசதியாக இருக்கும்.

சாப்பிடும் முன் சிறிது பெப்பர், லெமன் பிழிந்து கெட்சப்புடன் சாப்பிடவும்.

( இது டயட் செய்பவர்கள் சாப்பிட முடியாது என்று என்ன வேண்டாம், டால்டா, முட்டை மஞ்சள் கரு தவிர்த்து செய்து சாப்பிடலாம்)

காய் கறிகள் முட்டை கோஸ், கேரட், உருளை, சேர்த்து இதே போல் முர்தபா தயாரிக்கலாம்.

Saturday, December 12, 2009

விருது வாங்கி கொள்ள வாங்க‌ வாங்க வாங்க







இந்த பட்டாம்பூச்சி விருதை மேனகா சத்யா என‌க்கு கொடுத்து இருக்காங்க, நன்றி மேனகா. ரொம்ப சந்தோஷம்.






இந்த பட்டாம்பூச்சி விருதை சகோதரர்கள்


நவாஸ் http://syednavas.blogspot.com/


ஷபிக்ஸ்http://shafiblogshere.blogspot.com/


ஹைஷ்http://haish126med.blogspot.com/ க்கு கொடுக்கிறேன்.















இந்த அவார்டை மேனகா, மலிக்கா, சுஸ்ரீ, சுதாகர் (பித்தனின் வாக்கு) இவர்கள் அனைவரும் கொடுத்து இருக்கிறார்கள். ரொம்ப சந்தோஷம். ஒரே நேரத்தில் நான்கு பேர் எனக்கு அவார்டு கொடுத்து இன்ப கடலில் ஆழ்த்தி விட்டார்கள்.








இந்த அவார்டினை நான்



1. ஹைஷ் ,விமானி, இதில் நீங்களும் இனைந்து (விமானம், மருத்துவம்) பல சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம்.


http://haish126med.blogspot.com/

2. சுஹைனா (என் எழுத்து இக‌ழேல்)

http://sumazla.blogspot.com/

3. பாயிஜா (இனிய‌ இல்ல‌ம்)

http://eniniyaillam.blogspot.com/

4. ஸாதிகா அக்கா (எல்லா புகழும் இறைவனுக்கே)
http://shadiqah.blogspot.com/


5. சித்ரா (கொஞ்ச‌ம் வெட்டி பேச்சு)
http://konjamvettipechu.blogspot.com/

6. சீமான் கனி (50 பதிவு முடித்து இருக்கிறார்)
http://ganifriends.blogspot.com/

7. உமா (இப்போது அவங்களுடய வட இந்திய சமயலை கலக்க ஆரம்பித்து இருக்காங்க).

http://snehiti.blogspot.com/


8. கோமா (ஹா ஹா ஹாஸ்யம்)
http://haasya-rasam.blogspot.com/

9. போனி பேஸ் (யார்கிட்ட‌ தான் சொல்ல‌)

http://bon-i.blogspot.com/2009/12/blog-post.html




10. viki's kitchen
http://elitefoods.blogspot.com/





//எனக்கு லிங்க் கொடுக்க தெரியல, யாராவது தெரிந்தால் விளக்கவும். இந்த மாதத்தோடு ஒரு வருடம் ஆகிறது. பிலாக் ஆரம்பித்து ஆனால் இன்னும் சந்தேகங்கள் இருக்கு.லிங்க் கொடுக்க‌ தெரியாத‌தால் அவ‌ர‌வ‌ர் பிலாக் ஐடி எடுத்து கொடுத்து இருக்கேன்.//

Tuesday, December 8, 2009

சப்ஜி பிரியாணி (இரண்டு வகை) Two types of vej biriyani



வெஜ் பிரியாணி (குக்கரில் செய்வது), வெஜ் பச்சடி, சாலட்






குக்கர் முறை

தரமான பாசுமதி அரிசி ‍ ஒன்னறை ஆழாக்கு (1 1/2டம்ளர்)
எண்ணெய் ‍ கால் டம்ளர்
நெய் ‍ அரை மேசை கரண்டி
ப‌ட்டை, கிராம்பு, ஏல‌ம் - த‌லா ஒன்று
வெங்காயம் ‍ முன்று
இஞ்சி பூண்டு = ஒன்னறை மேசை கரண்டி
ப‌ச்சை மிள‌காய் - இர‌ண்டு
கொத்தமல்லி தழை ‍ சிறிது
புதினா ‍ சிறிது
ப‌ழுத்த‌ த‌க்காளி = முன்று
உருளை ‍ ஒன்று
கேரட் ‍ ஒன்று
ப‌ட்டாணி, பீன்ஸ், கார்ன் ‍= தலா ஒரு மேசை கரண்டி
மிள‌காய் தூள் - ஒரு தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் - கால் தேக்க‌ர‌ண்டி
உப்பு - ருசிக்கு தேவையான‌ அளவு
தயிர் ‍= கால் கப்
எலுமிச்சை பழம் ‍ அரை பழம்


அரிசியை களைந்து 20 நிமிடம் ஊறவைக்கவும், வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும். உருளை கேரட்டை பொடியாக அரிந்து கொள்ளவும். மற்ற காய் களையும் ரெடியாக வைத்து கொள்ளவும்.



குக்கரில் எண்ணை + நெய் ஊற்றி பட்டை கிராம்பு,ஏலம் போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு கலர் மாறும் வரை வதக்கவும்.



வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும், பிறகு கொத்துமல்லி, புதினா, பச்சமிளகாய்,தக்காளி சேர்த்து நன்கு கிளறவும்.





உருளை, கேரட்டை சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு, பிறகு மற்ற காய்கறிகளை சேர்க்கவும்.



அடுத்து மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு தூள் சேர்த்து தயிரையும் சேர்த்து கிளறி தீயின் அளவை சிம்மில் வைத்து கிரேவி கெட்டியாகி எண்ணை தெளிந்து வரும் போது ஒரு டம்ளருக்கு ஒன்னறை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஊறிய அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து சேர்த்து எலுமிச்சை பழத்தையும் பிழிந்து கொதிக்கவிட்டு குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு உடனே இரக்கவும்.

இது குக்கரில் இருந்து இரக்கியதும் உடனே வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி விடனும், இல்லை என்றால் கெட்டியாகிவிடும்.



தம் போட்டு செய்யும் முறை



வெஜ் பிரியாணி (தம் போட்டு செய்வது),சிக்கன் லாலி பாப், தயிர் பச்சடி,ஊறுகாய்,ஸ்வீட் லஸ்ஸி.










இதே குக்கரில் தண்ணீர் அளந்து விட்டு செய்யாமல் கிரேவி தனியாக தாளித்து சாதத்தை முக்கால் பதமாக வடித்து கிரேவியில் கொட்டி 20 நிமிடம் தம் போட்டு இரக்கவும்.


.







இந்த இரண்டு வகையுமே சுவை வித்தியாசப்படும். இதே பிரியாணியை அரைத்து விட்டும் புலாவ் போல செய்யலாம்.
















வெஜிடேரியன்கள்,காலிபிளவர் 65 வுடன் சாப்பிடலாம்.










Posted by Picasa

Monday, November 30, 2009

சிகப்பரிசி மாவு வெல்லம் உருண்டை




சிகப்பரிசி மாவு வெல்லம் உருண்டை (ஆட்டே பார்ம்)
பெயரை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். இதுக்கு பேர் சும்மா கிண்டலுக்கு ஆட்டே பார்ம் என்பார்கள். இது வெல்லம் தேங்காய் உருண்டை என்று சொல்லலாம். வெல்லம் பூரணம் என்றும் சொல்லலாம்.





ரொட்டி, தக்குடி, புட்டு, கொழுக்கட்டைக்காக நாங்க சிகப்பரிசி மாவு மொத்தமா திரித்து வருத்து வைத்து கொள்வோம்.





சிகப்பரிசி மாவு = ஒன்னறை டம்ளர்
தூளாக்கிய வெல்லம் = ஒரு டம்ளர்
தேங்காய் துருவல் = ஒரு டம்ளர்
நெய் = சிறிது
வெண்ணீர் = மாவு கிளற தேவையான அளவு
உப்பு = சிறிது














ஓன்ன‌றை ட‌ம்ள‌ர் மாவு எடுத்து வெண்ணீரை கொதிக்க‌ விட்டு சிறிது உப்பு ஒரு சிட்டிக்கை அளவு,ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து மாவில் கிள‌ற‌வும்.



அப்ப‌டியே கொஞ்ச‌ம் நேர‌ம் ஊற‌வைக்க‌வும். கை பொருக்கும் ப‌க்குவ‌த்தில் மாவை குழைத்து உருண்டைக‌ளாக‌ பிடிக்க‌வும்.







ஒவ்வொரு உருண்டைகளையும் நடுவில் குழியாக்கி (உருண்டும் போது கையில்சிறிது நெய் தடவி கொள்ளவும்). அதில் முதலில் வெல்லம் அடுத்து தேங்காயை வைத்து மூடி உருண்டைகளை மூடவும்












இட்லி பானையில் தண்ணீர் வைத்து மூடியின் மேல் ஈர துணியை விரித்து எல்லா உருண்டைகளையும் வைத்து அவிக்கவேண்டும்.





சுவையான வெல்லம் உருண்டை (ஆட்டே பார்ம்) ரெடி.










குறிப்பு



உருட்டும் போது கையில் சிறிது நெய் தடவி கொள்ளவும்.


இந்த‌ மாவு வெண்ணீரில் ஊறிய‌வுட‌ன் நிறைய‌ மாவு ஊறி வ‌ரும்.


இது நான்கு ந‌ப‌ர்க‌ள் சாப்பிட‌லாம். கூட‌ கார‌த்திற்கு சுண்ட‌ல் (அ) வ‌டை ஏதாவ‌து த‌யாரித்து கொள்ள‌லாம்.