குழந்தைகளின் டானிக்
தேவையான பொருட்கள்
***********************
பொட்டு கடலை - ஐம்பது கிராம்
நாட்டு சர்க்கரை - இருபதைந்து கிராம்
பூவன் வாழைபழம் - இரன்டு
செய்முறை
*************
1. பொட்டு கடலையை கரியாமல் இளஞ்சிவப்பாக வறுக்கவும்.
2. பொட்டுகடலை ஆறியதும் மிக்ஸியில் பொடித்துபொடித்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து அதைலிருந்து இரண்டு மேசை கரண்டி அளவு எடுத்து கொள்ள வேண்டியது.
3. அதில் நாட்டு சர்க்கரையை மன்னில்லால் எடுத்து கலக்கி பூவன் வாழைபழத்தை பிசைந்து கொடுக்கவும்.
4. நாட்டு சர்க்கரை கிடைக்காவிட்டால் சாதா சர்க்கரை போதும்.
5. இதை கொடுத்து கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர் கொடுங்கள்.
குறிப்பு:
ஆறு மாதத்திலிருந்து எத்தனை வயது வரை வேண்டுமானாலும் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு இருமல் வந்தால் பொட்டு கடலை ,சர்க்கரை, கொஞ்சம் மிளகு திரித்து வைத்து சாப்பிட கொடுத்தால் சளி இருமலும் கேட்கும்.
கொஞ்சம் சோம்பு சேர்த்து கொண்டாலும் வயிற்றுவலிக்கு கூட கேட்கும்.
இதை வழமையாக கொடுத்து வந்தால் உங்கள் குழந்தை அமுல் பேபி போல் கொழு கொழு என இருப்பார்கள்.
ஜலீலா
Tweet | ||||||
1 கருத்துகள்:
ஜலீலா அக்கா பூவன் பழம் தான் கலந்து கொடுக்கனுமா? இது அடிக்கடி கொடுக்கலாமா?
பொதுவாவே என் பொண்ணு சாப்பிடுவதற்கு ரொம்ப படுத்தல். என்ன மாதிரியான சாப்பாடு கொடுத்து சாப்பிட வைப்பது? ஹெல்த்தியாகவும், வித்தியாசமாகவும் இருப்பது போன்றவை ஏதாவது சொல்லுங்க அக்கா.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா