Tuesday, March 31, 2009

முத்தான துஆக்கள்

எனது இறைவனே! ஈமானை எனக்கு விருப்பமானதாக ஆக்கிவை. எனது இதயத்தில் அதை அழகியதாக ஆக்கிவை.



குப்ரையும் (நிராகரிப்பு) தீய செயல்களையும் மாறு செய்வதையும் எனக்கு வெருப்பானவைகளாக ஆக்கிவை.

என்னை நேர்வழி அடைந்தவர்களில் ஒருவராக ஆக்கிவை.





எனது இறைவனே! எனக்கு பயன் தரக்கூடைய கல்வியை கற்றுக் கொடு. எனக்கு நீ கற்று கொடுத்த கல்வியை கொண்டு எனக்கு பலன்களை கொடு. எனக்கு மேன் மேலும் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக!





இறைவனே! ஹிதாய்த் என்ற நேர்வழியையும் தக்வா என்ற பயபக்தியையும்,பாவமற்ற பத்தினித் தனத்தையும், பிறரிடம் தேவையாகத செல்வத்தையும், உன்னிடம் நான் வேண்டுகிறேன்.





என் இறைவனே! எங்களின் ஆத்மாக்களுக்கு அதற்குரிய பய பக்தியை கொடு. அவற்றை பரிசுத்தமானவைகளாக ஆக்கிவைப்பாக.





நீயே ஆவற்றை பரிசுத்த படுதுபவர்களில் மேலானவன், நீயே அவற்றைப் பாதுகாப்பவன். நீயே அவற்றி எஜமானன்.

he Simple Biography of Prophet Muhammad (PBUH)

he Simple Biography of Prophet Muhammad (PBUH)







1. When was the Prophet Muhammad (peace.be.upon.him.) born?
He was born on Monday, 12th Rabi Al Awwal, , 571 AC .

2. Where was the Prophet Muhammad (p.b.u.h.) born?
In Makkah


3. What is the name of the Prophet's father?
Abdullah Ibn Abdul Muttalib.

4. What is the name of the Prophet's mother?
Aminah Bint Wahhab Ibn Abd Manaf Ibn Zahrah.


5. When and where did his (prophet's) father die?

He died in Makkah before Muhammad (p.b.u.h.) was born.


6. What is the name of the Prophet's grandfather?

Abdul Muttalib.


7. What was his granfather's position?

He was the chief of his clan Bani Hashim.


8. What is the Prophet's (p.b.u.h.) lineage up to his fifth ancestor?

He is Muhammad Ibn Abdullah Ibn Abdul Muttalib Ibn Hashim Ibn Abd Manaf Ibn Qusai Ibn Kilab.

9. Who suckled the Prophet Muhammad (p.b.u.h.)?

First Thuyeba, the freed slave girl of his uncle Abdul Uzza known as Abu Lahab, then Haleema Bint Abu Dhuaib, best known as Haleema Al Sadiyah...


10. Who named the Prophet Muhammad (p.b.u.h.)?

Abdul Muttalib.

11. What did Muhammad's (p.b.u.h.) mother name him?

Ahmad.


12. Why did she (the Prophet's mother) choose this name?

Because she saw an angel in a dream calling the new-born baby Ahmad.


13. How old was Muhammad (p.b.u.h.) when his mother died?

Six years old.


14. Where did his mother take him?
She took him to Yathrib (Madinah) to visit her relatives.

15.< /B> Where did his mother die?

On her way back to Makkah, she died at Abwa and was buried there.

16. Who brought Muhammad (p.b.u.h.) back to Makkah?

His father's slave girl, Umm Aiman (May Allah be pleased with her).

17. Who took the charge of his care?

His grandfather Abdul Muttalib.

18. How long did The Prophet's grandfather take care of the Prophet Muhammad?

For two years.

19. How was his (Abdul Muttalib's) behavior with Muhammad (p.b.u.h.)?

He loved him very much and preferred him to his own sons.

20. What did Abdul Muttalib foretell about his grandson?

That he would hold a prestigious position.

21. Who took care of the Prophet (p.b.u.h.) after the death of Abdul Muttalib?
His uncle Abu Talib.

22. How old was Muhammad (p.b.u.h.) when his grand father Abdul Muttalib died?

About eight years old.

23. When did Muhammad (p.b.u.h.) travel to Syria and with whom?
He went to Syria with his uncle Abu Talib when he was twelve years old.

24. Who was Khadijah (May Allah be pleased with her)?
She was a wealthy merchant of Makkah.

25. Why did she (Khadijah) want to marry Muhammad (p..b.u.h.)?

Because of his truthfulness and good conduct.

26. When did she (Khadijah) marry Muhammad (p.b.u.h.)?
When she was 40 years old.

27. How old was Muhammad (p.b.u.h.) at the time of the marriage?

He was 25.

28. What did he (the Prophet) give her (Khadijah) as Mahr (dowry)?

Twenty camels.

29. Was Khadijah (May Allah be pleased with her) a widow?

Yes. The Prophet (p.b.u.h.) was her third husband.

30. How was Muhammad (p.b.u.h.) known in the society?

He was known as Al Ameen (trustworthy) and Al Sadiq (truthful).


31. Did he get any sort of education?
No, he didnt get any formal education from the society, rather he was taught by Almighty Allah.

32. What should one say when the Prophet's (p.b.u.h.) name is mentioned?

One should say صلى الله عليه و سلم (May the peace and blessings of Allah be upon him).



33. How many times is the name of Muhammad mentioned in the Holy Quran?





Four times.





34. What are the names of the Prophet's (p.b.u.h.) uncles?





They are: Harith, Zubair, Abu Talib, Hamzah (May Allah be pleased with him), Abu Lahab, Ghidaq, Maqwam, Safar and Abbas (May Allah be pleased with him).





35. Did his uncle Abu Talib accept Islam?





No, he died a polytheist.





36. In the New Testament by what name was the Prophet (p.b.u.h.) mentioned?



By the name of Paraclete.



















37. What is Kabah?



It is the oldest house of worship on the earth.









38. Who built it?



The Prophet Ibrahim and his son Ismael (May Allah be pleased with them).









39. How did Quraish arrange rebuilding of Kabah?



They divided the work among various tribes. Each tribe was responsible for rebuilding a part of it.









40. Who laid the stones?



A Byzantine mason called Baqum.









41. Where did the Prophet (p.b.u.h.) go into seclusion?



To the Cave of Hira ..









42. What was the fist stage of the revelation?



True dreams.









43. When did the first revelation come down to him?



On Monday, 21st of Ramadan, at night (August 10th, 610 AC ). He was forty years then.









44. Who brought it?



Jibrael.









45. Who were the first to embrace Islam?



Four persons: Khadijah his wife, Zaid Ibn Haritha his freed slave, Ali Ibn Abi Talib his cousin and Abu Bakr his friend (May Allah be pleased with them).









46. Who accepted Islam at the instance of Abu Bakr (May Allah be pleased with him)?



Uthman Ibn Affan, Zubair Ibn Awwam, Abdur Rahman Ibn Awf, Sad Ibn Abi Waqqaas, Talha Ibn Ubaidullah and Saeed Ibn Zaid (Umar's son-in-law) (May Allah be pleased with them).









47. Who were the ladies to accept Islam at first?



Abbas's wife Ummaul Fadl, Abu Bakr's wife Asma Bint Umais, his daughter Asma Bint Abi Bakr and Fatimah Bint Al Khattab Umar's sister (May Allah be pleased with them).









48. How was the Dawah done in the beginning?



It was done in secret.









49. How many people embraced Islam in the early stage?



About forty.









50. How many years did the call in secret continue?



For three years.









51. During this period, where woul d the Muslims gather secretly?



They would gather secretly in the house of a Muslim called Arqam to learn about Islam and the revelations sent down to the Prophet (p.b.u.h.).









52. When did the Prophet (p.b.u.h.) start to preach Islam openly?



After three years when he received the revelation to that effect.









53. What was the impact of his public preaching?



The people accepted Islam increasingly.









54. What was the main miracle of the Prophet (p.b.u.h.)?



The Holy Quran.









55. Did the Prophet (p.b.u.h.) perform other miracles?



Yes, the splitting of the moon was one of them.









56. Who was Abu Jahl?



One of the Prophet's (p.b.u.h.) uncles.









57. Name some of the disbelievers of Makkah who supported the Prophet (p.b.u.h.), but did not embrace Islam until the end.



Abu Talib, Mutim Ibn Adi and Abul Bukhtari.







58. How long did Abu Talib protect the Prophet (p.b.u.h)?



For 42 years â€" from the Prophet's childhood until he himself died.









59. Who was Mutim Ibn Adi?



A chief of Makkah.









60. When did he (Mutim Ibn Adi) give protection to the Prophet (p.b.u.h...)?



When the Prophet (p.b.u.h.) returned from Taif and wanted to enter Makkah.









61. When did he (Mutim Ibn Adi) die?



He was killed in the Battle of Badr.









62. Who was Abul Bukhtari?



He was a poet.









63. How did he (Abul Bukhtari) support the Prophet Muhammad (p.b.u.h.)?



He spoke out against the social boycott.









64. What lead the Muslims to emigrate to Abyssinia ?



Their growing persecution at the hands of Quraish.









65. Which Surah lead to this emigration?



Surah Az Zumar.









66. When was Abul Bukhtari killed?



In the battle of Badr.









67. Who was then the King of Abyssinia ?



The King of Abyssinia, known as Najjashi (the Negus), during the time of the Prophet (p.b.u.h.) was As'hama.









68. When did the first group of Mus lims leave for Abyssinia ?



In Rajab, in the fifth year of Prophethood.









69. How many persons were there in the group?



12 men and 4 women.









70. How were the emigrants received in Abyssinia ?



They were received warmly and hospitably.









71. When did the second group of emigrants leave for Abyssinia ?



In the fifth year of Prophethood.









72. How many people formed the group?



83 men and 18 women.









73. Name a prominent companion included in this group.



Ja'far Ibn Abi Talib (May Allah be pleased with him).









74. What did Quraish do?



They despatched two envoys to Abyssinia to demand the extradition of the emigrants.









75. How did the King respond?



He refused to extradite the Muslims and assured them of his full protection.









76. When did Umar (May Allah be pleased with him) accept Islam?



At the age of 27.









77. Who was Bilal Ibn Rabah (May Allah be pleased with him)?



He was a slave of Umayyah Ibn Khalaf.









78. What was his (Bilal Ibn Rabah's) origin?



He was of Abyssinian decent.









79. What was the name of Bilal's mother?



Hamama.









80. Who was Yaser (May Allah be pleased with him)?



He was a slave of Abu Jahl.









81. Who was Sumayyah (May Allah be pleased with her)?



She was Yaser's (a slave of Abu Jahl) wife.









82. Who was Ammar (May Allah be pleased with him)?



He was Yaser and Sumayyah's only son.









83. How did Summaya (May Allah be pleased) die?



Abu Jahl murderded her with a bayonet.









84. Who was Zaid Ibn Haritha (May Allah be pleased with him)?



He was a slave.









85. Who purchased him (Zaid Ibn Haritha)?



Khadijah's nephew Hakim Ibn Hizam purchased him and presented him to her.









86. What did Khadijah do with Zaid Bin Haritha?



She presented him to the Prophet who set him free.









87. Did Zaid Bin Haritha want to go to his parents?



No, he preferred to live with the Prophet (p.b.u.h.).









88. To whom was Zaid Bin Haritha married?



To Umma Aiman (May Allah be pleased with her).









89. Who was Ja'far?



He was the elder brother of Ali Ibn Talib (May Allah be pleased with him).









90. Where did he (Ja'far) emigrate?



To Abyssinia .









91. Who was Ali (May Allah be pleased with him)?



He was the son of Abu Talib and cousin of the Prophet (p.b.u.h.).









92. When did Ali (May Allah be pleased with him) accept Islam?



When he was 19.









93. What was he (Ali) called for his bravery?



The "Lion of Allah".









94. Whom did Ali first marry?



He first married the Prophet's (p.b.u.h.) daughter Fatimah (may Allah be pleased with her).









95. How many sons did Ali have from her?



Two sons: Hasan and Husain (May Allah be pleased with them).









96. When did Sa'd bn Abi Waqqas (May Allah be pleased with him) become a Muslim?



When he was 19.









97. Where did Sa'd (May Allah be pleased with him) die?



He died in Al Madinah.









98. What was Sa'd's advice to Muslims?



To stand united.









99. Who was Abu Bakr's father (May Allah be pleased with him) and did he accept Islam?



He was Uthman (May Allah be pleased with him) (Abu Quhafah). Yes, he accepted Islam during the Conquest of Makkah

பிலிப்பைனி குழந்தை உணவு





1. பிலிப்பைனி குழ‌ந்தை உணவு ‍

உருளை கிழங்கு ஒன்று
பால் கால் டம்ளர்

உருளை கிழங்கை நல்ல குழைய வேக வைத்து அதில் பால் ஊற்றி கலக்கி ஸ்பூனால் செரிலாக் போல் ஊட்டனும்.
===================================================


2. பிலிப்பைனி குழ‌ந்தை உண‌வு ‍

வாழைப‌ழ‌ம்

வாழை ப‌ழ‌த்தை ந‌ல்ல‌ ம‌சித்து ஊட்டி விட‌னும்.
==================================================





3. பிலிப்பைனி குழ‌ந்தை உண‌வு

முட்டை ஒன்று
அரை வேக்காடாக‌ வேக‌ வைத்து அதை ஸ்பூனால் வ‌ழித்து ஊட்டி விட‌னும்
=================================================
நீங்க‌ளே பார்த்து இருப்பீர்க‌ள் பிலைப்ப‌னை குழ‌ந்தைக‌ள் ந‌ல்ல‌ கொழு கொழுன்னு இருப்பார்க‌ள்
நீங்களும் உங்கள் குழ‌தைக‌ளுக்கு இது போல் முய‌ற்சி செய்து பாருங்க‌ள்.

மக்கா

மக்கா கஃபத்துல்லாஹ்அல்லாஹ் படைத்துள்ள பல்வேறு அத்தாட்சிகளில் மிகவும் உன்னதமானதும், மகிமையானதுமான ஒரு அத்தாட்சி மக்கா முகர்ரமாவிலுள்ள கஃபத்துல்லாஹ் (இறையில்லம்) ஆகும். "(கஃபத்துல்லாஹ்) நிச்சயமாக மனிதர்களுக்கு (இறைவணக்கத்திற்காக) முதன் முதலில் கட்டப்பட்டது மக்காவிலுள்ள வீடுதான்." - திருக்குர்ஆன் (3:96)இதன் உயரம் 53 அடியாகும். கிழக்கில் 49 அடி நீளமும், வடக்கில் 31 அடி நீளமும், மேற்கில் 45 அடி நீளமும், தெற்கில் 31 அடி நீளமும் உள்ளது. தென்கிழக்கு மூலை "ருக்னுல் ஹிந்த்" என்றும்வடகிழக்கு மூலை "ருக்னுல் இராக்கி" என்றும்,வடமேற்கு மூலை "ருக்னுல் ஷாமி" என்றும்தென்மேற்கு மூலை "ருக்னுல் யமானி" என்றும் அழைக்கப்படுகிறது.கஃபாவின் தென்கிழக்கு மூலையில் (ருக்னுல் ஹிந்த்) வெள்ளி வளையத்திற்குள் "ஹஜ்ருல் அஸ்வத்" உள்ளது. - "இது சொர்க்கத்திலிருந்து உலகுக்கு இறக்கப்பட்டது என்றும், மனிதர்களின் பாவங்கள் அதனை கருப்பாக்கிவிட்டது" என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். ஹஜ்ருல் அஸ்வத்துக்கு அருகில் கஃபாவின் வாசல் உள்ளது. ஹஜ்ருல் அஸ்வத்துக்கும் கஃபாவின் வாசலுக்கும் இடையில் உள்ள பகுதி "முல்தஜிம்" ஆகும். கஃபத்துல்லாஹ "கிஸ்வா" என்னும் கருப்புத்துணியால் போர்த்தப்பட்டுள்ளது. இந்த பட்டுத்துணியில் திருக்குர்ஆன் வசனங்கள் தங்கம் மற்றும் வெள்ளி இழைகளால் எழுதப்பட்டுள்ளன. ஓவ்வொரு ஆண்டும் துல்ஹஜ் பிறை 10 இல் புதிய போர்வை போர்த்தப்படுகிறது. இந்தக் கருப்புத் திரையை உருவாக்கு வதற்கென்றே - தனியாக ஒரு தொழிற்கூடம் நிறுவப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இந்தக் கருப்புத் திரை மாற்றப் பட்டு, புதிய திரை போர்த்தப் படுகின்றது. "மக்கா முகர்ரமாவின் மஸ்ஜிதுல் ஹராமில் (கஃபா அமைந்திருக்கும் பள்ளி) தொழுதால் 1 லட்சம் தொழுகையின் நன்மை கிடைக்கும்""அல்லாஹ்வின் 120 ரஹ்மத்துகள் தினமும் இவ்வீட்டின் மீது இறங்குகின்றன. 60 ரஹ்மத்துகள் ஃதவாபு செய்பவர்கள் மீதும், 40 ரஹ்மத்துகள் அங்கு தொழுபவர்கள் மீதும் இன்னும் 20 ரஹ்மத்துகள் கஃபாவை பார்ப்பவர்கள் மீதும் இறங்குகின்றன" என்று நபிகளார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் அறிவிக்கிறார்கள் - நூல்: பைஹகீ.அதி நவீன வசதிகளுடன், அழகான முறையில், வடிவமைக்கப்பட்டுள்ள இப்பள்ளியில், ஏக காலத்தில் இருபது இலட்சம் பேர், எந்தச் சிரமமுமின்றித் தொழ முடியும். கட்டிடக் கலையின் சகல விதமானத் தொழில் நுட்பங்களும் இங்கே கையாளப் பட்டுள்ளன.
பல்லாயிரக் கணக்கான ஊழியர்கள் சீருடை அணிந்து சுழற்சி முறையில் பகலும் இரவும் பணிபுரிகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் -

ஜம் ஜம்


ஜம் ஜம் கிணறு. இப்போது மக்கா நகரமாக இருக்கும் இந்த இடம் ஊராக உருவாவதற்கு முன், முதன் முதலில் இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவியையும், கைக் குழந்தையான மகன் இஸ்மாயீலையும் இறைக் கட்டளைப்படி இங்கே குடியமர்த்தினார்கள்.குழந்தை தாகத்தால் தவித்த போது இஸ்மாயீலின் தாயார், ஸஃபா மர்வா என்னும் இரு மலைக் குன்றுகள் மீதும் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்குமாக ஓடி ஏறி, ஏதாவது வணிகக் கூட்டம் செல்கின்றதா? என்று பார்த்தார்கள். அவர்களிடம் தண்ணீர் வாங்கி குழந்தையின் தாகத்தை தணிக்க எண்ணினார்கள். அதற்கிடையே அல்லாஹ், குழந்தை கிடந்த இடத்தில் அற்புத நீரூற்றை ஏற்படுத்தினான்.எத்தனை ஆண்டுகளானாலும் கெட்டுப் போகாத தன்மை இந்த ஜம்ஜம் நீருக்கு உண்டு. இங்கே கால் கோடிக்கும் அதிகமான மக்கள் அன்றாடம் பயன்படுத்தியும், கேன்களில் அடைத்து தமது ஊர்களுக்கு எடுத்துச் சென்றும் இந்தக் கிணறு ஊறிக் கொண்டே இருக்கிறது. இஸ்லாம் மெய்யான மார்க்கம் என்பதற்குச் சான்று பகர்ந்துக் கொண்டிருக்கிறது.தோண்டுகின்ற இடமெல்லாம் எண்ணெய்க் கிணறுகள் தோன்றுகின்ற இந்தப் பாலைவன மணலில், இது ஒரு வரலாற்று அற்புதம். நாள் தோறும் வருகின்ற பல்லாயிரக் கணக்கான மக்களுக்கும், ஆண்டு தோறும் கூடுகின்ற அத்தனை இலட்சம் பேருக்கும் தாகம் தணிக்கிறது இக்கிணறு. அதிக சக்தியுள்ள இயந்திரங்கள் மூலம் அனுதினமும் நீர் வெளியேற்றப் படுகிறது. அள்ள அள்ளக் குறையாத இப்பேரற்புதத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இறைவன் பேராற்றலுடையவன்.சுற்றிலும் கண்ணாடித் தடுப்புகளால் அரண் அமைத்து பாதுகாக்கப் பட்டுள்ள இக்கிணற்றின் மிக அருகில் சென்று பார்க்கும் ஹாஜிகள் இறைவனின் மாபெரும் அற்புதத்தை எண்ணி வியக்கின்றனர். இந்த ஜம்ஜம் கிணறு இருக்கும் பகுதியும், பிரார்த்தனை அங்கீகரிக்கப் படும் இடங்களில் ஒன்றாகும்.தரைப் பகுதியில் படிகள் அமைத்து உள்ளே சென்று பார்க்கவும், தண்ணீர் அருந்தவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஆண்களுக்கும், பெண்களுக்கும், தனித் தனியாக பாதைகள் அமைக்கப் பட்டுள்ளன. தவாபை முடித்து - தொழுகையையும் நிறை வேற்றிய ஹாஜிகள், கூட்டம் கூட்டமாகச் சென்று தண்ணீர் அருந்துகின்றனர். பிரார்த்தனை அங்கீகரிக்கப் படும் இந்த கிணற்றடியில் நின்று பிரார்த்திக்கின்றனர். வயிறும் மனதும் நிறைந்தவர்களாக! ஆமீன்

மதினா ரவ்லா ஷரிப்

மஸ்ஜிதுன்னபவியின் வானளாவிய மினாராக்களை வெகு தொலைவிலிருந்தே காண கண் கோடி வேண்டும். நள்ளிரவு நேரத்திலும், கண்ணைப் பறிக்கும் ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது இப்புனிதப் பள்ளி. சமீப காலம் வரை மஸ்ஜிதுன்னபவியைச் சுற்றி ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பெரும் பெரும் அடுக்கு மாடிக் கட்டிடங்கள் கூட, உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை கொடுத்து அப்புறப்படுத்தப்பட்டு இப்போது மிகப் பெரிய அளவில் பள்ளி வளாகம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பள்ளி வெளிப்புற வளாகத்தின் பெரும் பகுதியில் தரை மட்டத்திற்குக் கீழ் கார் நிறுத்துமிடமும், கழிவறைகளும், அமைக்கப்பட்டுள்ளன. எல்லா நுழைவாயில்களுக்கு அருகிலும்- அடித்தளப் பகுதியில் உலூச் செய்யும் குழாய் வசதிகளும், கழிவறைகளும் அமைக்கப்பட்டு - உள்ளே சென்று வர தானியங்கிப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இயலாதவர்களும். முதியவர்களும் கூட எளிதில் சென்று வர முடியும்.பள்ளியின் வெளிப்புற வளாகத்திலேயே, பல இலட்சம் பேர் நின்று தொழ முடியும். பளீரென்ற வெள்ளைப் பளிங்குக் கற்களால் தரை முழுவதும் இழைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டுப் பெருகி வரும் கூட்டத்திற்கு ஏற்றபடி - பள்ளி மிகவும் விசாலமாக இப்போது வடிவமைக்கப் பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் எந்நேரமும் - பள்ளியின் உள்ளேயும், வெளியேயும் தூய்மைப் படுத்திக் கொண்டே இருக்கின்றனர். தரையை சுத்தம் செய்வதற்காகவே சிறப்பான முறையில் வடிவமைக்கப் பட்ட இயந்திரங்கள் சுத்தம் செய்துக் கொண்டே இருக்கின்றன. பரந்து விரிந்த பள்ளியின் உட்பகுதி முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப் பட்டு, கடும் கோடையிலும் கூட இதமான குளுமையை அனுபவிக்க முடிகிறது. உட்பகுதியின் ஒரு பக்கம் மாபெரும் தானியங்கிக் குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெயில் மற்றும் மழை நேரங்களில் இந்த ராட்சதக் குடைகள் விரிந்துக் கொள்ளும். மற்ற நேரங்களில் குடைகள் சுருங்கி காற்றோட்டத்தை ஏற்படுத்தும். மற்றொரு பக்கம்- காங்கிரீட் மேற் கூரை- தனித்தனிப் பகுதிகளாக அப்படியே நகர்ந்து- திறந்துக் கொள்ளும். வெயில் மற்றும் மழை நேரங்களில் மூடிக் கொள்ளும். கற்பனைக் கெட்டாத கட்டடக் கலையின் அற்புத வடிவமைப்புகள் காண்போரை பிரமிக்கச் செய்கின்றன. பள்ளியின் உட்பகுதி முழுவதும்- பல்லாயிரக் கணக்கில் குடி நீர் பிளாஸ்குகள் வைக்கப்பட்டு, மக்காவிலிருந்து ஜம்ஜம் நீர் கொண்டு வந்து தினந்தோறும் நிரப்பப்படுகிறது.மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராமில், இரவும் பகலும் மக்கள் கஃபாவைத் தவாபு செய்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த மஸ்ஜிதுன்னபவியில், இரவு இஷாத் தொழுகை முடிந்ததும், அனைவரும் வெளியேற்றப் படுகின்றனர். பள்ளியின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் இரவில் யாரையும் உறங்க அனுமதிப்பதில்லை. இஷாத் தொழுகை முடிந்து அடைக்கப்பட்ட பள்ளியின் கதவுகள், தஹஜ்ஜுத் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டவுடன் திறக்கப்படுகின்றன. எல்லா நாட்களிலும் தஹஜ்ஜுத் தொழுகையை நிறைவேற்ற ஹாஜிகள் ஆர்வத்துடன் வந்து விடுகின்றனர். பஜ்ருத் தொழுகை வரை இறை வணக்கத்தில் ஈடுபடுகின்றனர்.—————————————————அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனையப் பள்ளிகளில் தொழுவதை விட எனது பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்தது. அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: புகாரி (1190)இந்த ஹதீஸின் கருத்தை உணர்ந்த ஹாஜிகள், தஹஜ்ஜுத் தொழுகையைக் கூடத் தவற விடுவார்களா? மதீனாவில் தங்கியிருக்கும் நாட்களில் மஸ்ஜிதுன்னபவியில் அதிகமதிகம் தொழுகையில் ஈடுபட்டு நன்மைகளை சேர்ப்பதில் கவனமாக இருக்கின்றனர்.இன்றைய தினம் பஜ்ருத் தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றி விட்டு மக்கள் கூட்டம், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புனித அடக்கத்தலத்தை ஜியாரத் செய்ய அலைமோதுகிறது. பள்ளியின் உட்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னோக்கி நகருகின்றனர். இதோ! முதலில் தெரிவது ‘சுவர்க்கப் பூங்கா”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:‘எனது வீட்டிற்கும் எனது மிம்பருக்கும் இடைப்பட்டப் பகுதி சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்.” அறிவிப்பவர்: அபு ஹூரைரா (ரலி) ஆதாரம்: புகாரி (1195)இந்த இடத்திற்கு அடையாளமாக, அழகான பச்சைக் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நபி மொழி அரபியில் ‘மா பைன பைத்தீ வ மிம்பரீ ரவ்லதன் மின் ரியாலில் ஜன்னா” என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் நின்று தொழவைத்த இடமும் (மிஹ்ராபுன்னபி) பிரசங்கம் செய்வதற்காக நின்ற மேடையும், அருகருகே அமைந்துள்ளன. பாக்கியம் பெற்ற இந்த இடங்களுக்கருகில் நிற்கவும், நின்று தொழவும் ஹாஜிகள் அலைமோதுகின்றனர்.அடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுகின்றனர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் துயில் கொண்டுள்ள புனித அடக்கத்தலத்தை நோக்கி! இதோ! தூய நபியவர்கள் துயில் கொண்டுள்ள தூய்மைத் தலம். உண்மை நபியவர்கள் உறங்கும் உன்னத அடக்கத் தலம். மனங்கவரும் இஸ்லாத்தை மனங்குளிர போதித்த மனித குல மாணிக்கத்தின் மறைவிடம்.புவியெங்கும் மக்கள் புகழ் பாடிக் கொண்டாடும், புனிதரின் பூத உடல் இங்கே தான். யுகம் யுகமாய் திருந்தாதக் காட்டுமிராண்டிகளாக இருந்தவர்களை, இருபத்து மூன்றே ஆண்டுகளில் இகமே போற்றும் இனிய தோழர்களாய் மாற்றியமைத்த இனியவரின் புனித உடல் இங்கே தான்.அவர்களின் அடக்க ஸ்தலத்திற்கு எதிரே நின்று அவர்களுக்கு சலாம் கூறி பின் திரும்பி நின்று இறைவனிடம் கையேந்தி துவா கேட்பார்கள்.ஒரு சிலர் அண்ணலார் அடக்க ஸ்தலத்தை நோக்கி கையேந்தி துவா கேட்க முனையும் போது அருகில் உள்ள காவலர்கள் அவர்களை தடுத்து இறைவனிடம் கேளுங்கள் என அவர்களை திருப்பி விடுவர்.ஹரம் ஷரிஃபின் அருகிலேயே 'ஜன்னத்துல் ஃபக்கி' எனும் மையவாடி உள்ளது. இங்கு தான் பத்திமா நாயகம் முதல் நிறைய நபி மார்கள், ரசூலுல்லாஹ் அவர்களின் குடும்பத்தினர்,அன்சாரித் தோழர்கள் பலரும் அடக்கம் செய்யப் பட்டிருக்கிறார்கள்

Sunday, March 29, 2009

ரமாலான் மாதம் ஓதும் முக்கிய தூஆக்கள்

1.ரமலான் மாதத்தில் முந்திய பத்தில் ஓதும் தூஆ

"அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹமர் ராஹிமீன்".

அல்லாவே! கிருபையாளர் களுக்கெல்லாம் மாபொரும் கிருபையாளனே!உன்னுடைய கிருபையில் நின்றும் எங்கள் மீது கிருபை செய்வாயாக.


2. இரண்டாம் பத்தில் ஓதும் தூஆ

"அல்லாஹு ம் மக்பிர்லி துனூபனா வக‌ஹ்(த்)தாயானா குல்ல ஹா யாரப்பல் ஆலமீன்".

அல்லாவே!ஆலத்தார்களின் இரட்சகனே!எங்கலுடைய பாவங்களையும் எங்களுடைய தவறுகளையும் மன்னிப்பாயாக.

3. முன்றாம் பத்தில் ஓதும் தூஆ


அல்லாஹு ம்மாதிக்னி மினன்னாரி வ அத்கில்னில் ஜன்னத யாரப்பல் ஆலமீன்.


அல்லாவே!ஆலத்தார்க்ளின் இரடகனே! எங்களை நரத்திலிருந்து விடுதலை செய்து இன்னும் எங்களை சொர்க்கத்தில் நுழையச் செய்வாயாக!

குறிப்பு

மேற்கண்ட முன்று தூஆக்களையும் எவ்வளவு அதிகமாக ஓத முடியுமோ அவ்வளவு அதிகமாக ஓதுவது சிறந்தது. மற்ற தூஆக்களுடனும் சேர்த்தும் ஓதலாம்.

Saturday, March 28, 2009

நாயகம் (ஸல்) கூறிய நல்லுரைகள்.

நாயகம் (ஸல்) கூறிய நல்லுரைகள்.

1. ஓ.. அலியே! நீர் காலையிலும், மாலையிலும் மஃரிப், இஷா இரண்டிற்கும் இடப்பட்ட நேரத்திலும் இருள் சூழ்ந்த இடத்திலும் உறங்காதீர்.

2. உட்கார்ந்திருப்போருக்கு மத்தியிலும் உறங்காதீர்.

3. கன்னத்தில் கை வைத்து உட்காராதீர்.

4. இடது கரத்தால் உண்ணல். குடித்தல், போன்றவற்றை செய்யாதீர்.

5. உலோபிக‌ளின் ம‌த்தியில் உட்காராதீர்.

6.விர‌கல்க‌ளை நெட்டி முறிக்காதீர்.

7.தொழுகையில் இருக்கும் போது வான‌த்தை நோக்காதீர்.

8. ப‌ற்களுக்கிடையில் சிக்கிக் கொண்ட‌தைக் குத்தி தின்னாதீர்.

10. ம‌ல‌ஜ‌ல‌த்தில் எச்சில் உமிழாதீர்.

11. உண‌வுப் பொருள்க‌ள் எலும்பு,அடுப்பு க‌ரி க‌ண்ணாடித்துண்டு முத‌லிய‌வைக‌ளால் ம‌ல‌ஜ‌ல்ம் க‌ழித்துத் துப்புர‌வு செய்யாதீர்.

12.உண‌வு உண்டு விட்டு கை அல‌ம்பாம‌ல் உற‌ங்காதீர்.

13 உட்கார்ந்து கொண்டு த‌லைப்பாகை அணியாதீர்.


14. நின்ற‌வ‌ண்ண‌ம் கால் ச‌ட்டை அணியாதீர்.

15. க‌டினமான‌ பொருள்க‌ளைப் ப‌ல்லால் க‌டிக்காதீர்.

16. தொழுகையிலும் ஸீஜீது செய்யுமிட‌த்திலும் சூடான‌ ஆகார‌த்திலும் வாயினால் ஊதாதீர்.

17. பூம்,இ அதிரும் ப‌டி ந‌ட‌க்காதீர்.

18. ந‌ட‌க்கும் போது திரும்பி பார்க்காதீர்.

19. எவரையும் இழிவாகவோ தாழ்வாகவோ பரிசிக்காதீர்.


20. அண்டை வீட்டாரைத் துன்புறுத்த‌தீர்.

21. உம‌து நேய‌ர்க‌ளை வெறுத்துக் கோள் சொல்லாதீர்.

22. ம‌ல‌ஜ‌ல‌ம் க‌ழிக்கும் போது பேசாதீர்.

23. பாங்கு இகாம‌த்திற்கிடையில் பேசாதீர்.

24. பிற‌ரின் குற்ற‌ங்க் குறைக‌ளை தேடித்திரியாதீர்.

25. ந‌ண்ப‌ர்க‌ள் மீது விண் ச‌ந்தேக‌ம் கொள்ளாதீர்.

கேஸ் பிராப்ளத்திற்கு வயிற்று வலிக்கு

1. வயிற்று வலிக்கு

வயிற்று வலிக்கு வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை குடிக்கவும். இல்லைவெந்த‌ய‌த்தை வ‌றுத்து பொடிசெய்து ஒரு ட‌ம்ள‌ர் மோரில் அரை தேக்க‌ர‌ண்டி வீத‌ம் க‌ல‌ந்து குடிக்க‌வும்.


2. கேஸ் பிராப்ள‌த்திற்கு

சுக்கு, சோம்பு, வெல்ல‌ம் முன்றையும் க‌ல‌ந்து சாப்பிட‌வும்.
இல்லை சுக்கு, சோம்பு காப்பி, அல்ல‌து சுக்கு சோம்பு டீ குடிக்க‌வும்.

ஆத்ஸ் சோர்பா

இது எஜிப்ஷியன் பிஸியோதரபி டாக்டர் அவங்க குழந்தைக்கு செய்வதை சொல்லி கொடுத்தார்கள். நானும் நம் இந்தியன் உண்வை (பூரி கிழங்கும், கேசரி கேக்கும் )அவங்களுக்கு சொல்லி கொடுத்தேன். இது எகிப்து நாட்டில் குழந்தைகளுக்கு கொடுக்கும் சத்தான உணவாகும். ஆறு மாததிலிருந்து இதை கொடுக்கலாம்.

ஆத்ஸ் சோர்பா

தேவையான பொருட்கள்
***********************

துவரம் பருப்பு - அரை கப்
கேரட் - ஒன்று சிறியது
உருளை கிழங்கு - ஒன்று
உப்பு - கால் தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு - ஒரு பல்
தக்காளி - அரை பழம் சிறியது

செய்முறை
***********


1. கேரட், தக்காளி,உருளையை தோல் நீக்கி பொடியாக அரிந்து வைக்கவும்.

2. பருப்பை நன்கு களைந்து அதில் பொடியாக அரிந்த தக்காளி கேரட்,உருளை,மிளகு தூள்,உப்பு தூல், பூண்டையையும் பொடியாக நருக்கி போட்டு நன்கு குழைய வேக விடவும்.

3.வெந்ததும் அதை பிளெண்டரில் மையாக அரைத்து குழந்தைகளுக்கு செரிலாக் போல் ஊட்டி விடவும்


குறிப்பு:

சில குழந்தைகளுக்கு என்ன புட் கொடுபப்து என்றே தெரியாது, கொடுத்ததே திரும்ப திரும்ப கொடுத்தால் குழந்தைகளுக்கு வெருந்த்து விடும் ஏதாவது டிபெரெண்டா கொடுத்தால் அந்த டேஸ்டுக்கே கூட கொஞ்சம் சாபிடுவார்கள்.

Wednesday, March 25, 2009

இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்பதற்கு உகந்த தூஆ

//அல்லாஹும்ம அன் த ரப்பி லா இலாஹா இல்லா அன் த ஹலக்தனி வ அனா அலா அஹ்திக வ வாதிக மா அஸ்த‌தாத்து அவூது பிக மின் ஷர்ரி மா ஸனாது அயூவு லக பிநிய்மதிக அலய்ய வ அயூவு பிஜன்பி ஃபக்பிர்லி ஃப் இன்னஹூ லா யக்ஃபிரு ஜுனூப இல்ல அன் த‌//



//ஸய்யிதுல் இஸ்திஃபார்

இறையவனே! நீ என் இரட்சகன்.

உன்னைத்தவிர வேறு நாயன் இல்லை.

நீயே என்னைப் படைத்தாய்.

நான் உன் அடிமை.

இயன்ற அளவு உன் வாக்குப்படியும் உன்னிடம் செய்த ஒப்பந்தப்படியும் நடந்து வருகிறேன்.

நான் செய்தவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

எனக்கு நீ வழங்கிய உபகாரஙக்ளை மனமாரச் சொல்லிக் காட்டுகிறென்.

என் பாவஙக்ளை ஒப்புக்கொள்கிறேன்.

என்னை மன்னித்துவிடு! நிச்சயமாக உன்னைத்தவிர பாவங்களை மன்னிப்பவன் வேறு யாருமில்லை.//

//இது மன்னிப்பு தேடுவதற்குரிய மிகச்சிறந்த தூஆ. இது ஸய்யிதுல் இஸ்திஃபார் எனப்படுகிறது. அதை நம்பிக்கையுடன் பகலில் ஓதி மாலையில் இறந்துவிட்டவர், அவ்வாறே ஓதி காலையில் இறந்துவிட்டவர் சுவனம் செல்வார் என்று பெருமானார் (ஸல்) அவர்களருளியுள்ளார்கள்.//

கடன் தொல்லை தீர துஆ




அல்லாவே கவலையின் கொடுமையிலிருந்தும், துயரத்தின் கொடுமையிலிருந்தும் உறுதியாக உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

பலஹீனத்தில் இருந்தும் சோம்பேறி தனத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

கோழைதனத்திலிருந்தும் கருமிதனத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

மனிதர்களின் ஆக்ரமிப்பில் இருந்தும் கடன் பளுவிலிருந்தும் உன்னிடமே புகலிடம் தேடுகிறேன்.

Sunday, March 22, 2009

குழந்தைகளை தூங்க வைக்கும் போது

1. குழந்தைகளை கையிலேயே வைத்து பழக்கப் படுத்ததீர்கள்.

2. எவ்வளவுக்கு எவ்வளவு கீழே போட்டு பழக்க படுத்து கிறீர்களோ அவ்வளவு நல்லது.

3. கை சுகம் கண்டு விட்டால் பிறகு எந்த வேலையும் செய்ய முடியாது.எங்கும் நகர விட மாட்டார்கள்.

4. கீழே அவர்களை போட்டு கையை காலை நல்லா ஆட்ட விடனும், அது நல்ல உடற்பயிற்சியும் கூட.

5. குழந்தைகள் நல்ல தூங்கினால் நல்லது.

6. சரியாக தூங்காமல் ஒரே அழுது கொண்டு இருந்தால் வயிறு சரியாக நிறைந்திருகாது.
அப்போது தாய் பாலுடன் ஏதாவது பக்க உணவும் ஆரம்பியுங்கள்.

பிரயாண துஆ

சுப்ஹானல்லதீ சக்கரலனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன்.

வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன்.


அல்ஹம்துலில்லாஹ் (3 தடவை)

அல்லாஹு அக்பர் (3 தடவை)

ஸுப்ஹான(க்)க் இன்னீ ளலம்த்து ந(f)ப்ஸீ (f) பங்(f)பிர்லீ (f)ப இன்னஹூ லாயங்(f) பிருத் துனூப இல்லா அன் த்த.

எங்களின் சக்தியால் வசப்படுத்திக் கொள்ள முடியாத வாகனத்தை எங்களுக்கு வசப்படுத்தி தந்த அல்லாஹ்வை துதி செய்கிறோம். அல்லாஹ்வே!எனக்கு நானே தீங்கிழைத்து கொண்டேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! பாவங்களை மன்னிப்பவன் உன்னை தவிர (வேறு) யாருமில்லை.

Monday, March 16, 2009

குழந்தைகளுக்கு பால் மற்றும் தயிர் சாதம்

1. குழந்தைகளுக்கு பால் சாதம் கொஞ்சம வாழைபழம் சேர்த்து ஆறு மாதத்திலிருந்து வாரம் ஒரு முறையாவது கொடுத்து பழகவும்.

2. அதே போல் தயிர் மற்றும் மோர் சாதமும் எட்டு மாதத்திலிருந்து கொடுத்து பழகவும்.

3. தயிர் மோர் புளிப்பில்லாததாக இருக்கனும். தயிர் சதம் செய்யும் போது பால் முக்கால் பாகமும், தயிர் கால் பாகமும் சேர்த்து செய்து கொடுக்கவும்.
இது சாப்பிட ஈசியாக இருக்கும்.

4. குழந்தைகள் ஓடி ஆடி அங்க இங்க இடித்து கீழே விழுந்தால் வாயில் அடி பட்டு சாப்பிட முடியாது இது போல் காரம் இல்லாததாக இருந்தால் சாப்பிட இலகுவாக இருக்கும்.

5. வயிற்று போக்கு சமையத்திலும் இந்த சாப்பாடு கொடுக்கலாம். சில பேருக்கு அந்த நேரத்தில் என்ன கொடுப்பது என்றே தெரியாது.


6. இப்படி கொடுப்பதால் உடல் சூடும் தனியும், தயிர் மற்றும் மோர் சாதம் மதியமும், பால் சாதம் இரவும் கொடுக்கலாம்.

ஜலீலா

Sunday, March 15, 2009

உடல் உறுப்புகளுக்காக கேட்கும் தூஆ

யா அல்லா என் உடம்பில் உள்ள உள் உறுப்புகளுக்கும், வெளி உறுப்புகளுக்கும் சங்கையான ஒளியும் சாலிகான ஒளியும் தந்தருள்வாயாக.
என்று தூஆ கேட்கவும்.

பல வியாதிகள் வந்து சில உறுப்புகளை அகற்றும் நிலை நிறைய பேருக்கு வருகிறது.
அதற்காக இந்த தூஆ.

Friday, March 13, 2009

கர்பிணி பெண்களுக்கு

1.பீட்ரூட் பொரியல்,கூட்டு, ஸ்வீட் செய்து சாப்பிடலாம்.

2.மதுளை பழம், ஆப்பில்,

3.நெல்லிக்காய், மாங்க்காய்

4.எல்லாவகையான கீரைகள்

5.பச்சை காய் கறிகள்

6.சூப் வகைகள்

ஜலீலா

தொடரும்

கர்பிணி பெண்கள் சாப்பிட கூடாதவை

1.சூடான அயிட்டம் எதுவும் சாப்பிட கூடாது.

2.பைனாப்பிள்,கொய்யா,பப்பாளி இது ரொம்ப சூடு இதை தவிர்க்கவும். 7 மாதத்திற்கு மேல் சிறிது சாப்பிடலாம்.

3.,இறால், பீஃப் ,கருவாடு ரொம்ப சூடு, கொஞ்சமா சாப்பிட்டு கொள்ளலாம்,

4.இரவு சாப்பாட்டை 7 மணிக்குள் முடிக்கவும்.

5.காய் வகைகளில் கேஸ் அயிட்டம் உருளை, சேனை,சீனி வள்ளி,மரவள்ளி இதெல்லாம் அளவாக சாப்பிடவும்.


ஜலீலா

தொடரும்

கர்பிணி பெண்கள் சாப்பிட கூடாதவை



1.சூடான அயிட்டம் எதுவும் சாப்பிட கூடாது.



2.பைனாப்பிள்,கொய்யா,பப்பாளி இது ரொம்ப சூடு இதை தவிர்க்கவும். 7 மாதத்திற்கு மேல் சிறிது சாப்பிடலாம்.



3.,இறால், பீஃப் ,கருவாடு ரொம்ப சூடு, கொஞ்சமா சாப்பிட்டு கொள்ளலாம்,



4.இரவு சாப்பாட்டை 7 மணிக்குள் முடிக்கவும்.



5.காய் வகைகளில் கேஸ் அயிட்டம் உருளை, சேனை,சீனி வள்ளி,மரவள்ளி இதெல்லாம் அளவாக சாப்பிடவும்.



6. கருப்பு திராட்சை சாப்பிட கூடாது



ஜலீலா



தொடரும்



Thursday, March 12, 2009

குழந்தைகளுக்கு அதிகமாக தூஆ செய்யுங்கள்





குழந்தைகளுக்கு அதிகமாக தூஆ செய்து கொண்டே இருங்கள்.



கருவில் இருந்தே தூஆ கேட்கனும்.



அவர்களை பார்க்கும் போதேல்லாம் தூஆ கேட்கனும்.



தினம் காலையில் அவர்களுக்காக இரண்டு ரக்காயத் நபீல் தொழுது தூஆ கேட்பது மிகவும் நல்லது.



அவர்கள் படிப்பி, தீனில், ஒழுக்கம் உடையவர்களாக ஆகவும், நல்ல சகவாசம் கிடைக்கவும், வாழ்வில் சிறந்து விளங்கவும். நல்ல வாழ்க்கை துணை அமையவும் தூ ஆ செய்து கொண்டே இருங்கள்.





ஜலீலா



பாஸ்போட் சைஸ் போட்டோ எடுக்கும் போது

பஸ் கார்ட், பிள்ளைகளுக்கு ஸ்கூலுக்கு,பாஸ்போர்ட்டுக்கு, மெடிகலுக்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ(stamp size) எடுக்கும் போது பின்பக்கம் (Background)) வொயிட்டில் இருப்பது போல் எடுக்கவும்.

அதே போல் டிரெஸும் லைட் கலராக போடவும்.

இல்லை என்றால் பேக்ஸில் (fax), மெயிலில் இருந்து பிரிண்ட் எடுக்கும் போது முகம், பின்னடி, டிரெஸ் எல்லாம் சேர்த்து கருப்பாக தெரியும்.

இப்படி லைட் கலர் டிரெஸ், பின்னாடி வெள்ளையாகவும் இருந்தால் பிரிண்ட் எடுக்கும் போது நல்ல தெளிவாக இருக்கும்.


ஜலீலா

Monday, March 9, 2009

குழந்தைகளுக்கு வயிற்று போக்கு

ஆறு மாதத்திலிருந்து ஒன்பது மாதம்வரை அடிக்கடி வயிற்று போக்கு வரும்.

பல் முளைக்க ஆரம்பித்ததிலிருந்து, தவழு போது எழுந்து நின்று நடக்க ஆரம்பிக்கும் வரை

குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது எதை பார்த்தாலும் நர நர என்று கடிப்பார்கள்.

பெட்டின் ஓரம்,சுவர்,எல்ல பொருட்கள் கையில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் கடித்து கொண்டே இருப்பார்கள்.

அப்போது எதையாவது எடுத்து வாயில் போட்டு உடனே தொடர்ந்து வயிற்று போக்கு ஆரம்பித்து விடும்.

வெறும் தாய் பால் கொடுப்பவர்கள் அவர்கள் முன்று வேளைக்கு வெரும் பிரெட் ஹார்லிக்ஸ் பால் சேர்க்காமல் சாப்பிட்டால் போதும்.

இன்னும் ஒரு மூன்று நாளைக்கு உணவு லைட்டானா உணவு சாப்பிட்டால் போதும்.

அப்படி செரிலாக்,முட்டை வெள்ளை கரு, நெஸ்டம், இன்னும் வீட்டு உணவுகளை சில பேர் 4, 5 மாதத்திலிருந்தே கொடுக்க பழக்க படுத்துவார்கள். அவர்கள்

1. ஆறிய வெண்ணீர் நிறைய கொடுக்கனும்.

2. வெண்ணீரில் குலுக்கோஸ் சேர்த்து சிறிது உப்பு போட்டு கரைத்து கொடுக்கலாம்.

3.அர்ரோட் மாவு கஞ்சி இது தான் உடனே கேட்கும், அந்த காலத்து பாட்டி மார்கள் சொல்வது.

அர்ரோட் மாவு கஞ்சி காய்ச்சி கொடுக்கலாம்.
அர்ரோட் மாவு பிஸ்கேட் வெண்ணீரில் அல்லது லேசாக லைட்டாக போட பப்பட்ட பிளாக் டீயில் ஊறவைத்து கொடுக்கலாம்.

4.இல்லை வெரும் நெஸ்டம் கொடுக்கலாம்.

5.கோதுமை களி காய்ச்சி கொடுக்கலாம்.

6.கேரட் ஆப்பில் வேகவைத்து நன்கு மிக்சியில் அரைத்தும் ஊட்டி விடாலாம்.


ஜலீலா

(தொடரும்)

Thursday, March 5, 2009

பிரயாண துஆ

சுப்ஹானல்லதீ சக்கரலனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன்.

வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன்.


அல்ஹம்துலில்லாஹ் (3 தடவை)

அல்லாஹு அக்பர் (3 தடவை)

ஸுப்ஹான(க்)க் இன்னீ ளலம்த்து ந(f)ப்ஸீ (f) பங்(f)பிர்லீ (f)ப இன்னஹூ லாயங்(f) பிருத் துனூப இல்லா அன் த்த.

எங்களின் சக்தியால் வசப்படுத்திக் கொள்ள முடியாத வாகனத்தை எங்களுக்கு வசப்படுத்தி தந்த அல்லாஹ்வை துதி செய்கிறோம். அல்லாஹ்வே!எனக்கு நானே தீங்கிழைத்து கொண்டேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! பாவங்களை மன்னிப்பவன் உன்னை தவிர (வேறு) யாருமில்லை.

Wednesday, March 4, 2009

நபிகள் (ஸல்) அவர்கள் ஓதி வந்த துஆ

அல்லாஹும்ம அயின்னி அலா ஜிக்ரிக்க வஸுக்க்ரிக்க வ ஹுஸ்னி இபாததிக்க.


யா அல்லாஹ்! உன்னை தியானிப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும்,அழகிய முறையில் உன்னை வணங்குவதற்கும் எனக்கு நீ உதவி செய்வாயாக.

நபி (ஸல்) ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் இந்த துஆவை ஓதி வந்தார்கள். முஆத் (ரலி) அவர்களுக்கு இந்த துஆவைக் கற்று கொடுத்தார்கள்.


ஜலீலா

எல்லா நேரங்களிலும் ஓத தகுந்த துஆ

அல்லாஹும்ம இன்னி அஸ் அலுக்க இல்மன் நாஃபிஹன் வ ரிஜ்கன் வாஸிஹன் வ ஸிபாஅன் மின் குல்லி தாஇன்.

யா அல்லாஹ்! பயனுள்ள அறிவு, தாராளமான உணவு, எல்லா நோய்களிலிருந்தும் நிவாரணம் இவற்றையே நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.

முஸ்லிமாக மரணமடைய துஆ

அல்லாஹும்ம தவஃபனா முஸ்லிமீன வல் ஹிக்னி பிஸ்ஸாலிஹீன ஹைர ஹஸாயா வலா மஃதுனீன்.

யா அல்லாஹ்! உனக்கு அடிபணிந்த முஸ்லிம்களாக எங்களை மரணமடையச் செய். எந்த கேவலத்தையும் சந்திக்காமல், எந்த சோதனையிலும் சிக்காமல் நல்லோர்களுடன் எங்களைச் சேர்த்து வைப்பாயாக.


ஜலீலா

Tuesday, March 3, 2009

வெயிட்டை குறைக்க கொள்ளு

1 . வெயிட்டை குறைக்க கொள்ளு சப்பிடுவதாக இருந்தால் (கொள்ளு ரொம்ப சூடு) ஆகையால் அதை ரசம், சூப்பில் சேர்த்து கொள்ளுங்கள், சுண்டல் செய்யும் போது முன்று வகை சுண்டலாக செய்து கொள்ளுங்கள்

2. பாசி பயறும் இனிப்பு சுன்டலுடனும், வேர்கடலை சுண்டலுடனும், காராமணியுடனும் சேர்த்து செய்து சாப்பிடுங்கள்.

3. கொள்ளு சாலட் கூட கொண்டை கடலையுடன் கேரட் வெள்ளரி கட் செய்து சேர்த்து எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடலாம்.

4. பார்லி சேர்த்து பருப்படை செய்தும் சாப்பிடலாம்.

ஜலீலா

இஞ்சி ரசம்








புளி - ஒரு லெமென் சைஸ்
தக்காளி - ஒன்று

அரைத்து கொள்ள
------------ -----------

இஞ்சி இரண்டு அங்குல துண்டு
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
முழு தனியா - ஒரு மேசை கரண்டி
காஞ்ச மிளகாய் - இரண்டு
கொத்து மல்லி தழை - கால் கை பிடி அளவு
கருவேப்பிலை - கால் கை பிடி அளவு
தாளிக்க
********

நெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிக்கை அளவு


செய் முறை
********* *****

1. புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அதில் தக்காளியை போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
2.அரைக்க கொடுத்துள்ளவைகளை (வதக்க வேண்டாம்) அரைத்து கொள்ளவும்.
3. தக்காளி, புளி தண்ணீருடன் உப்பு, அரைத்தது சேர்த்து மேலும் இரண்டு
கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
4. கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.
5. சுவையான கம கம இஞ்சி ரசம் ரெடி.





குறிப்பு

பூண்டு தேவை படுபவர்கள் இரண்டு பற்கள் சேர்த்து கொள்ளலாம்.
சளி தொந்தரவிற்கு மிகவும் நல்லது குளி காலங்களில் அடிக்கடி செய்து சாப்பிடலம்.
வீசிங் பிராப்ளம் உள்லவர்கலுக்கும் நல்லது.
சில குழந்தைகளுக்கு சளி இருமல் இருக்கும் போது இஞ்சி சாறு கொடுக்க முடியாது அதற்கு இப்படி ரசம் செய்து சாத்த்தில் பிசைந்து கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு கொடுக்கும் போது காரம் சிறிது குறைத்து கொள்ளலாம். காரம் அதிகம் சாப்பிடுபவர்கள். கூட்டி கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்கவும் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.
இது பிள்ளை பெற்றவர்களுக்கும் ரொம்ப நல்லது.

ஜலீலா

தேங்காய் பால் ரசம்

ஒன்றாக கலக்கி கொள்ள

******************

தேங்காய் பால் - இரண்டு கப்

புளி - சிறிதளவு

தக்காளி - ஒன்று



ஒன்றும் பாதியுமாய் தட்டி கொள்ள

***************************

மிளகு - அரை தேக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

சோம்பு - அரை தேக்கரண்டி

பச்சமிளகாய் - ஒன்று

பூண்டு - முன்று பற்கள்

கருவேப்பிலை - கால் கை பிடி

கொத்து மல்லி தழை - கால் கைபிடி



1. தக்காளியை நன்கு பிசைந்து அதில் புளி தண்ணீர் மற்றும் தேங்காய் பாலை சேர்த்து கொள்ளவும்.



2. கொர கொரப்பாக தட வேண்டிய பொருட்களை தட்டி கொள்ள வேன்டும்.



3. சட்டியை காயவைத்து அதில் எண்ணை ஒரு தேக்கரண்டி ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, காஞ்சமிளகாய் தாளித்து பொருங்காய பொடியும் சேர்த்து லேசாக தட்டி வைத்துள்ளதை சேர்த்து வதக்கி, கரைத்து வைத்துள்ல முன்று கலவையையும் சேர்த்து உப்பு சேர்த்து தீயை மிதமாக வைக்கவும்.



4. லேசாக நுரைத்து வரும் போது இரக்கிவிடவும்.



குறிப்பு

********



இதில் முதலே கூட தட்டிய மசாலாக்களை (புளி, தேங்காய், தக்காளி ) கலவையில் சேர்த்து கொள்ளலாம்.

இது வாய் புண் மற்றும் வயிற்று புண் உள்ளவர்களுக்கு ரொம்ப நல்லது.



ஜலீலா

Sunday, March 1, 2009

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு

1. தினமும் ஒரு பத்தை தேங்காயும், நான்கு பாதம் இரவே ஊறவைத்துகாலையில் தோலை நீக்கி விட்டு கொடுங்கள்.

2. அடுத்து அக்ரூட் என்கிற வால் நட்டையும் கொடுக்கவும், அதன் தோற்றம் மூளையை போன்று இருக்கும் இதுவும் மூளை வளர்ச்சிக்கு மிக்க நல்லது.

3. வால்நட் சிறிது கசக்கும் அதனுடன் கருப்பு கிஸ்மிஸ் பழம் சேர்த்து கொடுக்கவும்.

4. பல் முளைத்ததும்,நன்கு கடித்து சாப்பிட ஆரம்பித்ததும் கொடுக்கவும்.

5. கடித்து சாப்பிடாத பிள்ளை களுக்கு நன்கு மையாக அரைத்து பாலில் சேர்த்து காய்ச்சி கொடுக்கலாம்.

(தொடரும்)