பல் முளைக்க ஆரம்பித்ததிலிருந்து, தவழு போது எழுந்து நின்று நடக்க ஆரம்பிக்கும் வரை
குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது எதை பார்த்தாலும் நர நர என்று கடிப்பார்கள்.
பெட்டின் ஓரம்,சுவர்,எல்ல பொருட்கள் கையில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் கடித்து கொண்டே இருப்பார்கள்.
அப்போது எதையாவது எடுத்து வாயில் போட்டு உடனே தொடர்ந்து வயிற்று போக்கு ஆரம்பித்து விடும்.
வெறும் தாய் பால் கொடுப்பவர்கள் அவர்கள் முன்று வேளைக்கு வெரும் பிரெட் ஹார்லிக்ஸ் பால் சேர்க்காமல் சாப்பிட்டால் போதும்.
இன்னும் ஒரு மூன்று நாளைக்கு உணவு லைட்டானா உணவு சாப்பிட்டால் போதும்.
அப்படி செரிலாக்,முட்டை வெள்ளை கரு, நெஸ்டம், இன்னும் வீட்டு உணவுகளை சில பேர் 4, 5 மாதத்திலிருந்தே கொடுக்க பழக்க படுத்துவார்கள். அவர்கள்
1. ஆறிய வெண்ணீர் நிறைய கொடுக்கனும்.
2. வெண்ணீரில் குலுக்கோஸ் சேர்த்து சிறிது உப்பு போட்டு கரைத்து கொடுக்கலாம்.
3.அர்ரோட் மாவு கஞ்சி இது தான் உடனே கேட்கும், அந்த காலத்து பாட்டி மார்கள் சொல்வது.
அர்ரோட் மாவு கஞ்சி காய்ச்சி கொடுக்கலாம்.
அர்ரோட் மாவு பிஸ்கேட் வெண்ணீரில் அல்லது லேசாக லைட்டாக போட பப்பட்ட பிளாக் டீயில் ஊறவைத்து கொடுக்கலாம்.
4.இல்லை வெரும் நெஸ்டம் கொடுக்கலாம்.
5.கோதுமை களி காய்ச்சி கொடுக்கலாம்.
6.கேரட் ஆப்பில் வேகவைத்து நன்கு மிக்சியில் அரைத்தும் ஊட்டி விடாலாம்.
ஜலீலா
(தொடரும்)
Tweet | ||||||
2 கருத்துகள்:
ரொம்ப நல்ல நல்ல குறிப்புகளாக கொடுக்குறிங்க நன்றியக்கா.
பாயிஜா நீங்கள் படித்து இதில் போட்டது ரொம்ப சந்தோஷம்.
ஜலீலா
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா