Tuesday, March 31, 2009

மக்கா

மக்கா கஃபத்துல்லாஹ்அல்லாஹ் படைத்துள்ள பல்வேறு அத்தாட்சிகளில் மிகவும் உன்னதமானதும், மகிமையானதுமான ஒரு அத்தாட்சி மக்கா முகர்ரமாவிலுள்ள கஃபத்துல்லாஹ் (இறையில்லம்) ஆகும். "(கஃபத்துல்லாஹ்) நிச்சயமாக மனிதர்களுக்கு (இறைவணக்கத்திற்காக) முதன் முதலில் கட்டப்பட்டது மக்காவிலுள்ள வீடுதான்." - திருக்குர்ஆன் (3:96)இதன் உயரம் 53 அடியாகும். கிழக்கில் 49 அடி நீளமும், வடக்கில் 31 அடி நீளமும், மேற்கில் 45 அடி நீளமும், தெற்கில் 31 அடி நீளமும் உள்ளது. தென்கிழக்கு மூலை "ருக்னுல் ஹிந்த்" என்றும்வடகிழக்கு மூலை "ருக்னுல் இராக்கி" என்றும்,வடமேற்கு மூலை "ருக்னுல் ஷாமி" என்றும்தென்மேற்கு மூலை "ருக்னுல் யமானி" என்றும் அழைக்கப்படுகிறது.கஃபாவின் தென்கிழக்கு மூலையில் (ருக்னுல் ஹிந்த்) வெள்ளி வளையத்திற்குள் "ஹஜ்ருல் அஸ்வத்" உள்ளது. - "இது சொர்க்கத்திலிருந்து உலகுக்கு இறக்கப்பட்டது என்றும், மனிதர்களின் பாவங்கள் அதனை கருப்பாக்கிவிட்டது" என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். ஹஜ்ருல் அஸ்வத்துக்கு அருகில் கஃபாவின் வாசல் உள்ளது. ஹஜ்ருல் அஸ்வத்துக்கும் கஃபாவின் வாசலுக்கும் இடையில் உள்ள பகுதி "முல்தஜிம்" ஆகும். கஃபத்துல்லாஹ "கிஸ்வா" என்னும் கருப்புத்துணியால் போர்த்தப்பட்டுள்ளது. இந்த பட்டுத்துணியில் திருக்குர்ஆன் வசனங்கள் தங்கம் மற்றும் வெள்ளி இழைகளால் எழுதப்பட்டுள்ளன. ஓவ்வொரு ஆண்டும் துல்ஹஜ் பிறை 10 இல் புதிய போர்வை போர்த்தப்படுகிறது. இந்தக் கருப்புத் திரையை உருவாக்கு வதற்கென்றே - தனியாக ஒரு தொழிற்கூடம் நிறுவப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இந்தக் கருப்புத் திரை மாற்றப் பட்டு, புதிய திரை போர்த்தப் படுகின்றது. "மக்கா முகர்ரமாவின் மஸ்ஜிதுல் ஹராமில் (கஃபா அமைந்திருக்கும் பள்ளி) தொழுதால் 1 லட்சம் தொழுகையின் நன்மை கிடைக்கும்""அல்லாஹ்வின் 120 ரஹ்மத்துகள் தினமும் இவ்வீட்டின் மீது இறங்குகின்றன. 60 ரஹ்மத்துகள் ஃதவாபு செய்பவர்கள் மீதும், 40 ரஹ்மத்துகள் அங்கு தொழுபவர்கள் மீதும் இன்னும் 20 ரஹ்மத்துகள் கஃபாவை பார்ப்பவர்கள் மீதும் இறங்குகின்றன" என்று நபிகளார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் அறிவிக்கிறார்கள் - நூல்: பைஹகீ.அதி நவீன வசதிகளுடன், அழகான முறையில், வடிவமைக்கப்பட்டுள்ள இப்பள்ளியில், ஏக காலத்தில் இருபது இலட்சம் பேர், எந்தச் சிரமமுமின்றித் தொழ முடியும். கட்டிடக் கலையின் சகல விதமானத் தொழில் நுட்பங்களும் இங்கே கையாளப் பட்டுள்ளன.
பல்லாயிரக் கணக்கான ஊழியர்கள் சீருடை அணிந்து சுழற்சி முறையில் பகலும் இரவும் பணிபுரிகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் -

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா