Saturday, March 28, 2009

ஆத்ஸ் சோர்பா

இது எஜிப்ஷியன் பிஸியோதரபி டாக்டர் அவங்க குழந்தைக்கு செய்வதை சொல்லி கொடுத்தார்கள். நானும் நம் இந்தியன் உண்வை (பூரி கிழங்கும், கேசரி கேக்கும் )அவங்களுக்கு சொல்லி கொடுத்தேன். இது எகிப்து நாட்டில் குழந்தைகளுக்கு கொடுக்கும் சத்தான உணவாகும். ஆறு மாததிலிருந்து இதை கொடுக்கலாம்.

ஆத்ஸ் சோர்பா

தேவையான பொருட்கள்
***********************

துவரம் பருப்பு - அரை கப்
கேரட் - ஒன்று சிறியது
உருளை கிழங்கு - ஒன்று
உப்பு - கால் தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு - ஒரு பல்
தக்காளி - அரை பழம் சிறியது

செய்முறை
***********


1. கேரட், தக்காளி,உருளையை தோல் நீக்கி பொடியாக அரிந்து வைக்கவும்.

2. பருப்பை நன்கு களைந்து அதில் பொடியாக அரிந்த தக்காளி கேரட்,உருளை,மிளகு தூள்,உப்பு தூல், பூண்டையையும் பொடியாக நருக்கி போட்டு நன்கு குழைய வேக விடவும்.

3.வெந்ததும் அதை பிளெண்டரில் மையாக அரைத்து குழந்தைகளுக்கு செரிலாக் போல் ஊட்டி விடவும்


குறிப்பு:

சில குழந்தைகளுக்கு என்ன புட் கொடுபப்து என்றே தெரியாது, கொடுத்ததே திரும்ப திரும்ப கொடுத்தால் குழந்தைகளுக்கு வெருந்த்து விடும் ஏதாவது டிபெரெண்டா கொடுத்தால் அந்த டேஸ்டுக்கே கூட கொஞ்சம் சாபிடுவார்கள்.

2 கருத்துகள்:

தாஜ் said...

என் அக்காவின் 9மாத குழந்தைக்கு இது கொடுக்க சொல்கிறேன் நன்றி

Jaleela said...

தாஜ் அஸ்ஸலாமு அலைக்கும்,

தாஜ் ந‌ல்ல‌ இருக்கீங்க‌ளா இது ரொம்ப‌ ச‌த்தான‌ ஆகார‌ம் க‌ண்டிப்பா சொல்லுங்கள உங்கள் அக்கா பொண்ணுக்கு.
ஜ‌லீலா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா