Wednesday, March 30, 2011

தோசை மொருகலாக வரனுமா?


எல்லோருக்கும் தோசை என்றாலே மொரு மொருன்னு ஹோட்டல் மாதிரி சாப்பிடதான் பிடிக்கும்.

சிலருக்கு தேசை மொருகலாக வராது அப்படியே போய் கல்லில் ஒட்டி கொள்ளும். அதோடு கிடந்து சண்டை போடனும்.

தவ்வா ரொம்ப காய்ந்து இருந்தாலும், அந்த தவ்வாவில் ரொட்டி சுட்டு இருந்தாலும் தோசை சரியா வராது.

தவ்வாவை லேசாக சூடு படுத்தி சிறிது எண்ணை விட்டு அரை வெங்காயத்தை கட் செய்து அப்படியே வட்ட வடிவமாக தேய்க்க வேண்டும்.

பிறகு தோசை வார்த்தால் சூப்பரான மொருகலான தோசை சொய்யின்னு ஊற்றியதும் எடுக்கும் பக்குவத்தில் எழும்பி நிற்கும்.

மொருகலான தோசைக்கு ஒரு கரண்டி நடுவில் ஊற்றி அப்படியே சுழற்றி விடனும்.
பிற‌கு எண்ணையை சுற்றிலும் தெளித்தார் போல‌ ஊற்ற‌னும்.

ப‌ஞ்சு தோசைக்கு த‌டிம‌னாக‌ ஒரு க‌ர‌ண்டி விட்டு உள்ள‌ங்கை அள‌வு சுற்றினால் போதும். இதற்கு லேசாக எண்ணை ஊற்றினால் போதும்.

அப்பாடா இட்லி தோசைக்கு மாவு அரைத்து வைத்து விட்டால் என்னேரமும் டிபன் ரெடி.

இந்த குளிர் காலத்தில் மாவு புளிக்காது அதற்கு அரைத்ததும் கைகளால் நல்ல பிசைந்து விட்டு புளிக்க விடவும்.


Friday, March 25, 2011

மாங்காய் மீன் குழம்பு - mango fish curry


மாங்காய் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்மீன் குழம்பு



தேவையானவை
இதில் நான் கிளங்க மீன் போட்டு இருக்கேன் லேடி பிஷ்
லேடி பிஷ் - கால் கிலோ
மாங்காய் - அரை 
தக்காளி  - 3 பெரியது
வெங்காயம் - 1 பெரியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை
கடுகு -ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - இரண்டுதேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் பவுடர் - இரண்டு தேகக்ரண்டி

செய்முறை:
மீனை சுத்தம் செய்து கழுவி ரெடியாக வைக்கவும்,
தக்காளியை அரைத்து வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக அரிந்து வைக்கவும். 
வாயகன்ற பாத்திரத்தில் எண்ணை ஊற்றி கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து
இஞ்சி பூண்டுபேஸ்ட் , வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதக்கியதும் மசாலா வகைகளை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி அரைத்த தக்காளியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு தேங்காய், மீன் , மாங்காயை நீளவாக்கில் சிலைஸாக அரிந்து சேர்த்து மீண்டும் 5 நிமிடம் வேக விட்டு இரக்கவும்.
சும்மா சுல்லுன்னு இருக்கும் மாங்காய் மீன் குழம்பு கர்பிணி பெண்களுக்கும் வாய்க்கு ருசிபடும். சுவைத்து மகிழுங்கள்.


போன மாதம் முன் சிம்ரன் ஆப்பக்கடை, அங்கு ஆப்பம் சூப்பராக இருக்கும், சிம்ரன் ஆப்ப கடை ஹோட்டல், கடை ஓப்பன் ஆன புதிதில் போனது, ரொம்ப வருடம் ஆச்சு இப்ப தான் போனோம், பயங்க கெடுபடி கியுவும் அதிகம் டோக்கன் கொடுத்து தான் உள்ளே விடுகிறார்கள் இது வெள்ளி மட்டுமா இல்லை எல்லாநாளுமான்னு தெரியல, அங்கு மாங்காய் மீன் குழம்பு இன்னும் சுவை நாக்கிலேயே நிற்குது, ஆச்சரியம் உடனே மாங்காய வாங்கி இரண்டு முன்று முறை செய்து பார்த்தேன் 90 % வந்து விட்டது, சூப்பர், செய்ததும் உடனே காலி.

ஏற்கனவே மாங்காய் மீன் குழம்பு புளியும் சிறிது சேர்த்து நிறைய தாளிக்கும் பொருள் சேர்த்து செய்வது தான் , இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தந்து 

Sunday, March 20, 2011

வாங்க கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாம்
























































மெயிலில் வந்த படங்கள்



Tuesday, March 15, 2011

சுடிதாரில் லேஸ் மற்றும் மணி வொர்க்,



பிளைன் துணி சாட்டின், வெல்வெர், இன்னும் ஜரி வொர்க் உள்ள பிளைன் சுடிதார் தைக்கும் போது அதை ரிச்சாக மாற்ற உள்ளே சின்ன சிம்பிள்  வொர்க்குகள் கொண்டு கிராண்டாக பார்டிக்கு போடுவது போல் தைக்கலாம்.  
அதில் சிம்பிள் அண்ட் ஈசியாக இது போல் பிளெயின் சுடிதாரில் டாப்பில் கழுத்து, கைக்கும் , சல்வார் பேண்டில் கால் கிட்டயேயும்,


 துப்பட்டாவின் ஓரங்களிலும் மணி அல்லது வித விதமான கலர்களில் லேஸ்களும் வைத்து தைத்தால் ரிச் லுக்காக இருக்கும்

மணி தைக்கும் முறை கழுத்து கை சைட் ஓப்பனில் கலருக்கு தகுந்த வாறு மணிகளை வைத்து ஒரு செண்டி மீட்டர் இடைவெளியில் மணிகளை வைத்து தைக்கவும்.
பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கும்.
லேஸும் வித விதமாக (அ) கலரில் கை , கழுத்து, சுடிதார் டாப்பின் சைடுகளில்,கால் பாட்டத்தில் வைத்து தைத்தால் மிகவும் நல்ல இருக்கும்.

அதே போல் ஷாட் டாப் தான் இப்போது பேமஸ், சில பேர் லாங்க் டாப்ஸ் தான் விரும்புவார்கள், எடுக்கும் துணி உயரம் பத்தாமல் போனால்  கீழே ஒரு ஜான் அளவில் வெட்டி விட்டு இடையில் தேவையான அளவில் ஒரு  இன்ச் முதல் முன்று இன்ச் வரையிலான லேஸ் களை இனைத்து தைக்கலாம். இப்படி தைப்பதால் உயரத்தை கூட்டலாம். அதே போல் கழுத்து பெரியதாகி விட்டாலும் லேஸ்களை வைத்து அட்ஜஸ்ட் செய்யலாம் புது பேஷானாகவும் இருக்கும்.

பட்த்தில் உள்ள இரண்டு சுடிதாரும் 12 வருடம் முன் நான் தைத்தது.








Thursday, March 10, 2011

பேச்சுலர்ஸ் பிரியாணி டோஸ்ட் - bachelor's biriyani toast





இது என் வலை உலக முதல் தோழி தளிகா ரெசிபி கேரளா ரெசிபிகளை சுவையாக செய்வாஙக், நிறைய பேச்சு வழக்கு என்னோடு ஒத்து போகும். 
அவங்க ரெசிபியில் இத அவஙக் செய்றாஙக்ளோ இல்லையோ நான் முன்று மாதத்துக்கு ஒரு முறை செய்வேன்.சிறிது மாறுதல் இருக்கும்.

பாம்பே டோஸ்ட் தான் அடிக்கடி செய்வது, ஸ்கூலுக்கும் சரி ,இவருக்கு ஆபிஸுக்கும் சரி , எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சது, வாரம் ஒரு முறை இந்த டிபன் கண்டிப்பா உண்டு,

எப்பாவாவது இது போல் கார டோஸ்ட் செய்து கொடுத்து அனுப்புவேன்.


தேவையானவை
முட்டை - 1 
பிரட் சிலைஸ் - 3
கருவேப்பிலை - 3 இதழ்
புதினா - 3 இதழ்
பச்ச மிளகாய் - ஒன்று சிறியது
கரம் மசாலா - ஒரு சிட்டிக்கை
சின்ன வெங்காயம் - 3
உப்பு - சிறிது
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிக்கை
இஞ்சி பூண்டு பேஸ்ட் - சிறிது

செய்முறை

தேவையான பொருட்களில் பிரெட் தவிர அனைத்து பொருட்களையும் மிக்சியில் அரைத்து சிறிது தண்ணீர் அல்லது பால் சேர்த்து கொள்ளலாம் இதை தளிகா சொல்ல நான் சேர்த்து கொள்வது.அரைத்து  பிரட் ஸலைஸ் களை இரண்டு பக்கமும் தோய்த்து பேனில் பட்டர் (அ) எண்ணை (அ) நெய் கொஞ்சமா ஊற்றி இரண்டு பக்கமும் பொரித்து எடுக்கவும்.

மணம் சூப்பராக இருக்கும், இது காலை அவசரடியில் செய்தது, நல்ல சத்தான காலை உணவு பால் அவலும், பிரியாணி டோஸ்டும்.
பிரட் ஷாப்ட் டாக இருந்ததால் கலவையில் தோய்க்கும் போது பிஞ்சி போச்சு ஆனால் சுடும் போது செட்டாகிடும்

மற்ற படி நான் செய்யும் இன்னொரு முட்டையில் வெங்காயம் பச்சமிளகாய் அரிந்து போட்டு மசாலாக்கள் சேர்த்து கலக்கி பிரெட்டில் ஊற்றியும் பொரிக்கலாம். இல்லை தனித்தனியாகவும் செய்யலாம்
.

Tuesday, March 8, 2011

100 வது மகளிர் தினம்

இன்று 100 வது சர்வ தேச மகளிர் தினம்

அம்மா அம்மா அம்மா, பெண்களை பற்றி எழுதனுமுன்னா என் அம்மாவை பற்றி தான் எழுதனும். அவர்கள் தைரியமான பெண் எவ்வளவு முடியவில்லை என்றாலும் உடம்புக்கு முடியவில்லை என்றாலும்  தொழுகை , குர் ஆன் ஓதுவதை விட்டதில்லை.
என்ன பதிவு போடுவது இப்போதைக்கு பதிவு போடும் மூடும் இல்லை
என் அம்மாவுக்கு தூஆ செய்யுங்கள். என் தாயின் தியாகங்களை சொல்ல ஒரு பதிவு போதாது.கழ்ட படுகிறவர்கள் என்னாளும் கழ்டபட்டு கொண்டே தான் இருக்கனும் என்பது போல் இருக்கு அவர்கள் வாழ்க்கை.

********************************************
பெண்களே சந்தோஷம் உங்கள் கையில்
*********************************************************************************
இது முன் போட்ட டிப்ஸ், இதை பகிர்ந்து கொள்கிறேன்.
இன்றைய மருமகள் நாளைய மாமியார்
அம்மாவையும் ,மாமியாரையும் கவனியுங்கள்.
அம்மா நமக்காகவே வாழ்கிறாள்,
மாமியார் நம் கணவன் மார்களைக்குகாகவே அவர்கள் நலனுக்காக பிராத்தித்து கொண்டு சதா பிள்ளைகளின்  நினைவாகவே இருக்கிறாள்.

இவர்கள் இருவருமே தனக்கென எதுவும் வாங்கிக் கொள்வதில்லை நம்மிடம் கேட்பதும் கிடையாது. இது வேண்டும் அது வேண்டும் என்று.அவர்களுக்கு என்ன தேவை படுகிறது என்று நாம் தெரிந்து கொண்டு ஆவன செய்யனும்

கிழவி தானே வயதாகி விட்டது என்று நினைக்க வேண்டாம்.

அவர்களுக்கு தேவையான வெளியில் செல்லும் போது கைக்கு அடக்கமான, தோலை அறுக்காத கை பை,செருப்பு, கண்ணாடி உடைந்து இருந்தால் கண்ணாடி, மழை என்றால் சிறிய குடை.இது போல சின்ன சின்ன அயிட்டங்கள் இருக்கா இல்லையா என்று பார்த்து வாங்கி கொடுங்கள்.

உள்ளாடைகள் அவர்கள் யாரிடமும் வாங்கி கேட்பதில்லை, கோடை என்றால் நல்ல தகுந்த காட்டன் உடைகள், குளிர் காலம் என்றா அதற்கு தேவையான உடைகள் எல்லாம் பார்த்து பார்த்து வாங்கி கொடுங்கள்.என்ன தான் வீட்டு செலவுக்கு என்று அவர்கள் கையில் பணம் கொடுத்தாலும் அவர்களுக்கென்று தேவைக்கு எதுவும் வாங்கிகொள்ளமாட்டார்கள்..

சேலை வாங்கி கொடுக்கும் போது ரொட்டி மாதிரி அடர்த்தியான சேலை வாங்கி கொடுக்காமல் லேசானா அதே நேரம் மெல்லியதாக இல்லாமல் பார்த்து வாங்கி கொடுக்கவும்.

என்ன தான் அப்பாவிற்கு கை நிறைய வீட்டு செலவிற்கு பணம் அனுப்பினாலும் , அம்மாவிற்கு என்று தனியாக பணம் கொடுங்கள். அவர்கள் அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள்.
நாம் நல்ல இருந்தால் சந்தோஷ படுவதும், நாம் கழ்ட பட்டால் நமக்க்கவே வருந்துவதும், அம்மாக்கள் தான், நம் முன்னேற்றத்தை கண்டு மற்றவர்கள் பொறாமை பட்டாலும் , அம்மா மட்டும் தான் நமமை பார்த்து பொறாமைபடாதாவர்கள். என்றும் துஆ செய்பவர்கள்.
*********************************************************************************
உலகில் உள்ள அனைத்து பாட்டி மார்கள், ஆண்டி மார்கள்,அக்கா மார்கள் தங்கை மார்கள்,தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்த்துக்கள்.

 பெண்களே மனதை ரிலாக்ஸ் ஆக வைத்து கொள்ளுஙக்ள் இல்லையென்றால் குடும்பத்தை சரி வர கவனிக்க முடியாது.
கணவரின் வருவாய்க்கு ஏற்றபடி சிக்கனமாய் செலவு செய்யுங்கள்.
எதையும் வீண் விரையம் செய்யாதீர்கள். ஆரோக்கிய மான உணவை செய்யுங்கள். எதையும் அளவுக்கு அதிகமாக வாங்காதீர்கள்.
பிள்ளைகளை நல் வழி படுத்துங்கள்,
இது என் பழைய பதிவு பெண்களே சந்தோஷம் உங்கள் கையில் இதையும் பார்க்கவும்.
எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தொழுகை , இறைவனக்கங்களை அந்த அந்த வேளையில் முடியுங்கள். 
இப்போது உள்ள வலை உலகம், இண்டர்நெட், முகநூல், பிலாக் எல்லாம் நேரத்தை வீனாக முழுங்கி கொண்டு இருக்கு.. 


டிஸ்கி: யாருக்கும் பதில் போட முடியல கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன், நிறைய பேர் புதுசா பாலோவரா சேர்ந்து இருக்கீங்க ஆனால் யாரும் கமெண்டும் போடுவதில்லை தமிழ் மனத்தில் ஓட்டும் போடுவதில்லை. பதிவு பயனுள்ளதா இருந்தால், எவ்வளவோ பேருக்கு என் டிப்ஸும் , சமையலும் உதவுது, ஒரு நிமிடம் ஒதுக்கி கருத்து தெரிவிக்கலாமே, ஓட்டும் போடலாமே.

Saturday, March 5, 2011

எள் புளிசாதம்


எள்ளோதரை

வறுத்து திரிக்க

வெள்ளை எள் – ஒரு மேசை கரண்டி
மிளகாய் – முன்று
கடலை பருப்பு – ஒரு இரண்டு தேக்கரண்டி
உளுந்து பருப்பு – ஒரு தேக்கரண்டி
தனியா – அரை தேக்கரண்டி
உதிரியாக வடித்த சாதம் – இரண்டு ஆழாக்கு
புளி – ஒரு எலுமிச்சை சைஸ்
உப்பு தேவைக்கு
ம்ஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி

தாளிக்க

நல்லெண்ணை – முன்று மேசை கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை – 5 ஆர்க்
கடலை பருப்பு- ஒரு மேசை கரண்டி
வேர்கடலை – இரண்டு மேசை கரண்டி
பெருங்காய தூள் - கால் தேக்கரண்டி
வெல்லம் – ஒரு தேக்கரண்டி (அ) ஒரு பிட்டு

செய்முறை

வறுத்து திரிக்க வேண்டியவைகளை ஒரு தேக்கரண்டி எண்ணை விட்டு வறுத்து ஆரவைக்கவும்.
புளியை ஒன்ன்றை டம்ளர் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
ஆறிய கலவையை பொடித்துகொள்ளவும்.
தாளிக்க தேவையான பொருட்கள்,. பொடித்த பொடி, புளி கரைத்த கலவை ரெடியாக வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.

புளியுடன் பொடித்த பொடி சேர்த்து கரைத்து கொள்ளவும்.ஒரு ஸ்பூன் அளவு பொடியை தனியாக வைக்கவும்.
தாளித்த தாளிப்பில் புளிகலவை, மஞ்சள் பொடி, உப்பு, பெருங்காய பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து வற்றவிடவும்.
கூட்டு பதம் வந்த்தும் அடுப்பை விட்டு இரக்கி ஆரவிடவும்.
இப்போது ஆறிய சாதமும், எள் கூட்டும் ரெடி.
இரண்டையும் ஒன்றாக கலந்து எடுத்து வைத்த பொடியையும் தூவி கிளறி இரக்கவும்.
சுவையான எள் புளிசாதம் (எள்ளோதரை ரெடி).

குறிப்பு:
இதற்கு தொட்டுகொள்ள முட்டை, அப்பளம், மசால் வடை, மட்டன் சுக்கா வ்றுவலுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
கட்டு சாத்த்துக்கும் சூப்பராக இருக்கும். இதை செய்து இரண்டு மணி நேரமாவது ஊறினால் தான் நல்ல இருக்கும்.காலையில் செய்து மதியம் சாப்பிடலாம்.
எப்போதும் கூட்டு தயாரித்த்தும் சிறிது எடுத்து வைத்து விட்டு தான் சாத்த்தில் கிளறனும்.கலக்கியது தேவைப்பட்டால் மீதியை சேர்க்கலாம்.
கர்பிணி பெண்கள் , குழ்ந்தையை எதிர் பார்த்து இருக்கும் பெண்கள் எள் சாதம் சாப்பிட வேண்டாம்.சாப்பிடலாம் எள் பெருங்காயப்பொடி சேர்க்காமல் செய்து சாப்பிடவும். புளிசாத்த்தை ஐந்து வகையாக் தயாரிக்கலாம் அதில் இது ஒரு வகை.


Tuesday, March 1, 2011

கல்யாண பெண்ணிற்கு மருதானி இடும் போது

மருதாணி என்றாலே எல்லா பெண்களுக்கும் பிடிக்கும்.
மருதணியை விரும்பாத பெண்களே கிடையாது.
சில பெண்களுக்கு ஒத்து கொள்வதில்லை அதற்காகவே சில பேர் பயந்து வைப்பதில்லை.
சில பேருக்கு மருதாணி வைத்தால் கை கால் இழுக்கிற மாதிரி இருக்கும், ஹச் ஹச் தும்மல் வரும், தொண்டை கட்டி கொள்ளும்.சளி பிடிக்கும். தலைவலி வந்துவிடும்.


க‌ல்யாண‌ பெண்ணிற்கு அல்ல‌து ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் ம‌ருதாணி இடும் போது
மருதாணி ரெடி மேட் கோன் என்றால் கையில் கடுகு எண்ணையை தேய்த்து விட்டு. உள்ளங்கையில் கொஞ்சம் தைலம் கழுத்து நரம்பு கிட்ட கொஞ்சம் தைலம், ஒவ்வொரு ஜாயிண்ட், கை மணீ கட்டு, முழஙகை ஜாயிண்ட்டில் எல்லாம் தடவி கொண்டு வையுங்கள். இப்ப‌டி த‌ட‌வி கொள்வ‌தால் ஜ‌ல‌தோஷ‌ம் பிடிப்ப‌து குறையும்.
மருதாணியை போடுங்கள், ஒரு மணி நேரம் போதும்.நைட் தூங்கும் போது வைத்து விட்டு கை வலிக்காம‌ இருக்க‌ ஒரு டார்க் கலர் தலையணை மீது கலர் டவல் அல்லது கலர் துணி விரித்து கையை வசதியாக வைத்துகொள்ளுங்கள்.

காய்ந்ததை எடுக்கும் போது உடனே தண்ணீர் போட்டு கழுவ கூடாது ஒரு பட்டர் நைஃபால் அப்படியே வழித்தெடுங்கள் கையை கழுவ வேண்டாம்.
அப்படியே கேஸ் அடுப்பை பற்ற வைத்து குளிர் காயவது போல் கையை காட்டவும்.
இப்ப மறுபடி கொஞ்சம் தைலம் + தேங்காய் எண்ணை தடவி கொள்ளுங்கள்.



மருதாணி வைப்பது பெண்களுக்கு மிகவும் ரொம்ப நல்ல நல்ல சுறு சுறுப்பு, நல்ல ஆக்டிவ், அதை பார்க்கும் போது சோகம் கூட மறைந்துவிடும்.நல்ல ஞாபக சக்தி கூட வரும்.

மாத‌ம் ஒரு முறை வைத்து கொள்வ‌து மிக‌வும் ந‌ல்ல‌து. ம‌ருதாணி அரைத்து வ‌டை த‌ட்டி காய‌ வைத்து கூட‌ தேங்காயய் எண்ணையில் போட்டு ஊற‌வைத்து த‌லைக்கு தின‌ம் தேய்க்க‌லாம். க‌ரு க‌ரு வென‌ முடி வ‌ள‌ரும்.

எல்லா டிப்ஸும் என் சொந்த கருத்து காப்பி அடிச்சி எங்கயாவது அனுப்பினீங்க
அம்புடுதேன் சொல்லிபுட்டேன்

படங்கள் எனக்கு முதலில் மெயிலில் வந்தது,
.
கைநகம் அழுகிவிட்டதா? நகசுத்தியா?