Tuesday, April 5, 2011

என்னத்த சொல்வது


எல்லாம் எப்படி இருக்கீஙக் நலமா? இந்தமாதம் நான் ஊருக்கு போய்விட்டேன். எல்லாம் திடீர் திடீர் தான், என்னாடா இது பதிவு மட்டும் வருதே பதில் வரலையேன்னு நினைத்து இருப்பீங்க.

அப்பாவுக்கு தீடீருன்னு நடக்க முடியாம போச்சு, அதான் உடனே ஊருக்கு போய் விட்டேன்.

சவுதியில் 2003 யில் பத்து வருடம் வேலை பார்த்தார் அங்கு ஆயில் தடுக்கி ஸ்டோரில் கீழே விழுந்ததால் இடுப்பு எலும்பு முறிந்து விட்டது, ஸ்டீல் வைத்து ஆப்ரேஷன் செய்து சரியாகிவிட்டது. நல்ல நடக்க ஆரம்பித்து விட்டார்.



இப்ப அது லூஸாகி கழண்டு விட்டது போல அதோடு நடந்து இருக்கிறார், முன்று தடவை கீழேயும் விழுந்து விட்டார், யாரிடமும் சொல்லல,

கடைசியில் இடத்த விட்டு நகர முடியாம ஆகிவிட்டது.
எல்லாமே என் அம்மா தான் கவனிக்கிறாங்க.
நானும் போய் முடிந்தவரை என்னால் முடிந்ததை அவருக்கு செய்து விட்டு வந்தேன்.

அப்போலோ ஹாஸ்பிட்டலில் இடுப்பு ஆப்ரேஷன் செய்தாச்சு முன்பு ஆப்ரேஷன் முடிந்ததும் இரண்டாவது நாளே ஓரளவுக்கு எழுந்துட்டார்
ஆனால் இப்ப 23 ந்தேதி ஆப்ரேஷன் முடிந்தது இன்னும் நகர கூட முடியல/
மனதில் தைரியமும் இல்லை.
ஒரு வீட்டில் ஆலமரம் போல் உள்ள ஆண்களுக்கு ஏதாவது உடம்புக்கு  என்றால் அந்த குடும்பமே மிகவும் சிரமத்துக்குள்ளாகுது,

ஆப்ரேஷனில் போது அப்பாவ உள்ளே 23 காலை 8.15 க்கு கூப்பிட்டு சென்றார்கள் கூடவே இரண்டு  டாக்டர்கள், அதில் பெரிய டாக்டர் ஆர்தோ உமா சங்கர், நல்ல பார்த்தார், ரொம்ப வயதானவர்,

உள்ளே போகும் போது நானும் என் தங்கையும் வெளியே நின்றபோது இவருக்கு ரொம்ப ஆடி போய் இருக்கிறாரே புருவம் எல்லாம் வெள்ள முடி இவர் எப்ப்படி செய்வார் ஆப்ரேஷன் என்று தங்கை சொன்னாள்,

நான் சொன்னேன் அந்த அளவுக்கு நிறைய பேஷ்ண்ட் பார்த்து இருக்கிறார் நல்ல எக்ஸ்பீரியன்ஸ் டாக்டர் ஒன்றும் கவலை பட வேண்டாம் நாம் ஓதி கொண்டு இருப்போம், என்றேன்,. என் அம்மாவோ ஆப்ரேஷன் தியேட்டர் வாசலில் உட்கார்ந்து ஓதி கொண்டு இருந்தாங்க , ஒன்றும் சாப்பிடல, ஏதாவது வாங்கி வரவான்னு கேட்டா ஒன்றும் சாப்பிட மாட்டேன் என்று சொல்லி விட்டாஙக் , உள்ளே போன வயதான டாக்டர் அவ்ர் கூட இன்னும் ஒன்றும் சாப்பிடாம தான் ஆப்ரேஷன் செய்து கொண்டு இருக்கிறார், ஒரு நாள் நோன்பு என்று நினைத்து கொள்கிறேன் என்றார்கள்,

12 மணி ஒரு மணிக்கு முடியும் என்று சொன்ன ஆப்ரேஷன் முடியவே இல்ல
உள்ளே போன கேன்சர் ஆப்ரேஷன் செய்ய போன பேஷண்ட், இரண்டு டெலிவரி இன்னும் நிறைய ஆப்ரேஷன் முடிந்த பல பேர் முடிந்து மயக்கம் தெளிந்து வெளியில் வந்து கொண்டு இருக்கீறார்கள்,

அப்பா வரல, சரி செக்குரி கிட்ட சொல்லிட்டு தியேட்டர் உள்ளே போய் மற்ற டாக்டர்ஸ் கிட்ட கேட்டேன், இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கு என்று சொன்னார்கள் மணி 2 ,இடுப்ப சுற்றி உள்ள எலும்புகள் எல்லாம் வீக்காகிவிட்டது ரொம்ப கேர் புல்லா செய்யனும் இன்னும் டைம் எடுக்கும் என்றார்கள்.
அப்படியே காத்து கொண்டு இருந்தோம், கடைசியா 4.30 மணிக்கு முடிச்சாங்க.
டாக்டர் வெளியில் வந்தார், ரொம்ப பெரிய ஆப்ரேஷன் மா முன்று பேர் செய்து செய்தோம் நல்ல இருக்கார், நல்ல இருக்கிறார் ஹி ஈஸ் ஆல் ரைட் என்றார்.
ரொம்ப பிளட் போனதால் 6 பாட்டல் ரத்தம் தேவைபட்டது,

உடனே தம்பி ஆபிஸில்  cognizant til பணிபுரியும் சக தோழர், தோழியர் போட்டி போட்டு கொண்டு நீ நான் என்று வந்து ரத்தம் வழங்கினர்,  நானும் ஓவ்வொருத்தாரா போன் செய்ய செய்ய மெயின் பிளாக்கில் இருந்து பிளட் பேங்கிற்கு அழைத்து சென்று பிறகு ரத்தம் எடுத்து முடித்தம் நன்றி சொல்லி அனுப்பிவைத்தேன். இறைவன் மனுஷாட்கள் ரூபத்தில் நமக்கு உதவி கொண்டு தான் இருக்கிறான், வல்ல நாயனை ஐந்து வேளை தொழுகையில் மட்டும் இல்லாமல் என்னொரமும் நினைக்கனும்.




டாடி , பெரிய டாடி, பெரிமா
அப்பாடா அல்லாவுக்கு நன்றி சொல்லி விட்டு, மறுபடி காத்து கொண்டிருந்தோம் ஆனால் மயக்கம் தெளியல, 2 மணி நேரம் கழித்து தான் ஓரளவுக்கு உஷார் வந்தது ஆனால் மூச்சடைக்குது மூச்சடைக்கு  என்று.ரொம்ப கத்தி கொண்டு இருந்தார்
எல்லாருக்கும் ரொம்ப பயமா போச்சு, அங்கேயே  ஐ சி யு விலேயே உள்ளே ஒவ்வொருத்தாரா போனோம் எங்களுகு கை கால் பரத்துது. என்ன இப்படி இருக்கிறார், என்ன செய்வது, என்று கேட்ட போது அங்குள்ள டாக்டர், எல்லாரும் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம், எங்கள நம்பி விட்டு இருக்கீங்க உங்களை விட அவர் மேல் எங்களுக்கு தான் அக்கறை அதிகம் என்றார்கள்.
ஒரு நாள் முழுவதும் முடியாம இண்டென்ஸிவ் கேரில் வைத்து மறுநாள் 11 மணிக்கு தான் அவரால் சுய நினைவுக்கு வர முடிந்தது,
ஆனால் இன்னும் நடக்க முடியல இடுப்பில் ஸ்டீல் வைத்து இருக்காங்க வலி அதிகமாக இருக்கு அவ்ருக்கு. எல்லோரும் ஸ்டீல் வைத்து இருக்கு என்று சொல்வார்கள் நான் இது வரை பார்த்ததில்லை,
இதான் இடுப்பில் வைத்திருந்த ஸ்டீல்

 டாக்டர் ஏற்கனவே வைத்திருந்த ஸ்டீலை எடுத்து வந்து காண்பித்தார்கள் அப்பதான் பார்த்தேன். நல்ல க்தவு கை பிடி போல் ஒரு பெரிய ஸ்டீல் , பேப்பர் வெயிட் அள்வுக்கு ஒரு ஸ்டீல் நெல்லிக்காய் அளவுக்கு ஒரு ஸ்டீல் இதெல்லாம் உடம்பிற்குள் வைத்து தைத்தால் எப்படி இருக்கும்.
இதில் அங்குள்ள எல்லா நர்ஸ் ஆயாக்கள் எல்லோரும் நல்ல பார்த்து கொண்டார்கள், அதில் நைட் டியுட்டி பார்த்த நர்ஸ் சுகன்யா எனக்கு ரொம்ப பிடித்தி இருந்தது. கொஞ்சம் கூட மூஞ்சி சுளிக்காமல் அருவருப்படையமல் கவனித்தார்கள்,சின்ன பொண்ணு தான் ஆனால் என்ன ஒரு சகிப்புதன்மை.

அம்மாவும் பேஷண்ட் என்பதால் நானும் கூட தங்கினேன், சுகன்யாவுக்கு நான் வரும் போது இரவு ஏதாவது வாங்கி தரனும் என்று தோனியது ஒரு வாட்சும், சாக்லேட், காசும் கொடுத்தேன் ஆனால் ஆச்சரியம் காலை விடிந்தால் அந்த பொண்ணுக்கு பிறந்த நாளாம், கொடுத்த வாங்கி கொண்ட இருவருக்கும் சந்தோஷம்.

இனி பிஸியோ தரபி களின் உதவி கொண்டு நடக்கனும் எத்தனை நாள் ஆகும் என்று தெரியவில்லை.
இங்கு இருந்து கிளம்பும் முன் போன் செய்து பேசிய மலிக்கா, அப்சாரா, கிளம்பும் முன் வெகு நேரம் பேசி இப்படி படுத்த படுக்கையாகி விட்டால் என்ன என்ன தேவையான பொருட்கள் தேவைபடும் என்று சொல்லிய ஆசியாவிற்கும் மிக்க நன்றி. அம்மாவும் ஏற்கன்வே எல்லா தேவைகளையும் சொல்லிட்டாங்க,விட்டு போன பொருட்கள் ஆசியா சொன்னதும் ரொம்ப உதவியா இருந்தது,
என்னை தொடர்பு கொண்டு அடிக்கடி நலம் விசாரித்து ஆறுதல் அளித்த அன்பு சகோதரி மலிக்காவுக்கு மிக்க நன்றி. ஸாதிகா அக்காவும் நாம் எல்லாம் சந்திககலாம் என்றார்கள் அப்ப இருந்த நிலை சந்திப்பதாக இல்லை, முடிந்தால் சொல்கிறேன் என்றேன்.


அதே போல் தங்கை மகளுக்கு கல்யாணம் அதுவும் தீடிருன்னு தான் வைத்தார்கள்,அப்பா ஆப்ரேஷன் முன்னாடியே நல்ல படியாக முடிந்தது, அப்பாவ வீல் சேரில் வைத்து தான் அழைத்து சென்றோம்.
இடையில் என் பையனும் 3 நாள் வந்து சென்றான், அவனை சரியா கூட கவனிக்க முடியல.
இன்னும் பெரிமா, சாச்சா உடல் நிலை சரியில்லாமல் ஹாஸ்பிட்டலில் எல்லோரையும் போய் பார்த்தேன்.
ஊருக்கு வர கடைசி இரண்டு நாள் கொஞ்சம் பிரியானதால் மலிககாவிடம் சொல்லி பிளாக்கில் யாரும் சந்திக்க வருவதா இருந்தால் வரசொல்லி தெரியபடுத்துங்க என்றேன், அப்படியே மலிக்கா வுடைய புத்தகமும் எல்லோருக்கும் கிடைக்கும், என்று , சமீபத்தில் சின்ன அளவில் ஆரம்பித்த

எங்க கடை ஜலீல் எண்டர் பிரைசஸ், இப்போது சென்னை பிளாசாவாக.
அங்கு தான் சந்திக்க கடை அட்ரெஸ் கொடுத்தேன், இன்னும் சரிய்யாக செட்டாகல அதான் யாருக்கும் அட்ரெஸ் தரல ,சந்திககலாமுன்னு சொன்னேனே தவிர யாருக்கும் போன் செய்ய முடியல,. தேனம்மை, மற்றும் ஸாதிகா அக்காவுக்கு போன் செய்தேன்.முடியாத காரணத்தால் யாரும் சந்திக்கல.
இனி பிறகு பார்ப்போம்.

கடை அட்ரெஸ்

Chennai plaza
ideal shop for ladies garments,fancy items, hand bags,
food wear,cosmetics,kids wear etc.

stockists in all types of burkha, abaya,scarf, shaul,dupatta,hijab,etc.

Chennai plaza
No.277/30,Pycrofts Road, ist Floor,[opp:shopa],Thiruvallikkeni ,Chnenni-600 005.

phone: 044 4556 6787 (Ibrahim)
E-mail:Chnenniplazaik@gmail.com

மொய்தீன் பாய் போன் நம்பர் 7845367954
.
. இவர்களையும் தொடர்புகொள்ளலாம்.
மலிக்காவின் பதிவை பார்த்து சகோதரர்கள் இளம் தூயவன் மற்றும் காஞ்சி முரளி அவர்கள் என்னை தொடர்பு கொண்டு த்ந்தையின் உடல் நலம் பற்றி விசாரித்து ஆறுதல் அளித்தார்கள், இருவருக்கும் மிக்க நன்றி,.

கடைய பற்றின விபரம் வருகிற பதிவில் போடுகிறேன்.

டிஸ்கி: இடுப்பு வலியோ , மூட்டு வலியோ இருந்தால் கண்டிப்பாக உங்கள் வெயிட்ட முதல குறைத்து கொள்ளுங்கள், இல்லை என்றால் மிகச்சிரமம்.வெயிட் ஏதும் தூக்காதீர்கள்,

அதுவும் எல்லோரும் வெளி நாட்டில் வேலை பார்ப்பதால் அம்மா மார்களுக்கு உதவ ஆண் பிள்ளைகள் வரமுடியாமல் போவது மிகவும் கவலைக்கிடமாக இருக்கு
.இறைவன் நம் அனைவரையும் நோயில்லாமல் வாழ கிருபை புரிவானாக.என் தந்தைகாக பிராத்தித்த அனைத்து நல்ல உள்ளஙக்ளுக்கும் மிக்க நன்றி.


39 கருத்துகள்:

அன்புடன் மலிக்கா said...

இறைவனின் உதவியால் அனைத்து நல்லவிதமாக முடிந்தமைக்கு அல்ஹம்துல்லில்லாஹ். இன்னும் நன்றாக குணமடைய இறைவன் துணைச்செய்வான் கவலைபடாதீர்கள் அக்கா..

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஆ..... ஜலீலாக்கா வந்திட்டீங்க, பதிவு பார்த்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை.... கவலைப்படாதீங்க விரைவில அப்பா நல்ல நிலைமைக்குத் திரும்பிவிடுவார். இது அவசரப் பதிவு பின்பு வாறேன்.

எம் அப்துல் காதர் said...

அல்ஹம்துல்லில்லாஹ். தங்களின் தந்தை பூரண குணமாக இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.
கவலைப்படாதீங்க ஜலீலாக்கா எல்லாம் கூடிய விரைவில் சரியாகும்.

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலாக்கா! உங்க வாப்பாவை விசாரித்து மெயில் பண்ணியிருந்தேன். உங்களுக்கு பார்க்க நேரம் இருந்திருக்காது. இன்ஷா அல்லாஹ் உங்க வாப்பா விரைவில் நலம்பெற துஆ செய்கிறோம். அந்த ஸ்டீலைப் பார்த்தாலே பயமா இருக்கு. இதுபோன்ற கஷ்டங்களை விட்டும் இறைவன் அனைவரையும் காப்பாற்றட்டும்!

இந்த பதிவு சம்பந்தமாக ஒரு முக்கியமான ஒரு கருத்தை சொல்ல விரும்புகிறேன் ஜலீலாக்கா. உங்களுக்கு மெயில் பண்ணியுள்ளேன், தயவுசெய்து உடனே பாருங்கள்.

அஸ்மா said...
This comment has been removed by the author.
இமா க்றிஸ் said...

விரைவில் உங்கள் தந்தையார் பூரண குணம் பெற்று நடக்க ஆரம்பிப்பார், எனது பிரார்த்தனைகள்.

அன்புடன் இமா

Menaga Sathia said...

தங்கள் தந்தை விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்...தங்கை மகளுக்கும்,மலிக்காவிற்க்கும் வாழ்த்துக்கள்!!

Asiya Omar said...

ஜலீலா போனில் கேட்டு எல்லாம் தெரிந்து கொண்டாலும் உங்களின் இந்த பதிவு மீண்டும் மனதை கனக்கச் செய்கிறது,வாப்பா விரைவில் குண்மடைந்து அவர்கள் வேலையை அவரகள் பார்க்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்..

ஹுஸைனம்மா said...

அக்கா, ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சதுக்கு இறைவனுக்கு நன்றி. இன்ஷா அல்லாஹ், சீக்கிரம் நடக்க ஆரம்பிக்க துஆக்கள்.

Angel said...

அப்பா சீக்கிரம் சுகமடைய பிரார்த்திக்கிறேன் .கடவுள் கிருபையில்
எல்லாம் சரியாயிடும் ஜலீலா .

Kanchana Radhakrishnan said...

விரைவில் உங்கள் தந்தையார் பூரண குணம் பெற்று நடக்க எனது பிரார்த்தனைகள்.

Chitra said...

விரைவில், உங்கள் தந்தை பூரண நலன் பெற்று வர பிரார்த்தனைகள். உங்கள் குடும்பாதாருக்கும் எங்களது பிரார்த்தனைகள்.

Vijiskitchencreations said...

ஜலீ கடவுளை ப்ராத்திப்பவர்கள் கண்டிப்பா ஏதாவது ரூபத்தில் வந்து உதவுவார் என்பது 100% உண்மை.
விரைவில் நல்லாபடியா குணமடந்து நடப்பார். உஙக் மெயில் கிடைத்தது.
இப்ப மருந்தும் டயட்டும் தான் பாலோ பன்னுகிறேன். மீதி மெயிலில்.

Unknown said...

ஜலீலா தங்களது தந்தை பூரண குணமாக நாங்களும் வேண்டுகின்றோம்

Mahi said...

ஜலீலாக்கா,தஙக்ள் தந்தை சீக்கிரம் குணமடைய என் ப்ரார்த்தனைகள்!

கோமதி அரசு said...

ஜலீலா, அப்பாவின் ஆப்ரேஷன் நல்லபடியாக நடந்தது அறிந்து இறைவனுக்கு நன்றி.

கூடிய விரைவில் அப்பா எழுந்து நல்லபடியாக நடக்க இறைவன் அருள் புரிவார்.

வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்.

அப்பாவிறகு தைரியம் சொல்லிக் கொண்டு இருங்கள்.

Anisha Yunus said...

ஜலீலாக்கா,

நான் மட்டும்தான் ஃபோன் செய்யலை என்று நினைக்கிறேன். இங்கே day time savingக்கு மாறியதில் இருந்து காலை வேளைகளில் இன்னும் கொஞ்சம் பிஸியாகிவிடுகிறேன். மாலையிலும் அவர் இருக்கும்போதுதான் சீக்கிரம் சமையல் வேலை கவனிக்க முடிகிறது. இன்னும் சில பிரச்சினைகள் இருந்ததால் என்னால் தொடர்பு கொள்ள முடியாமலே போனது. மன்னிக்கவும். ஆனால் உங்கள் வாப்பாவும், மாமனாரும் என் துவாவி இருந்தார்கள், இனியும் உண்டு இன்ஷா அல்லாஹ்.

கண்டிப்பாக் சாட் செய்யலாம் இன்ஷா அல்லாஹ், தங்களுக்கு ஃப்ரீயாய் இருக்கும்போது.

vanathy said...

ஜலீலா அக்கா, உங்கள் அப்பா விரைவில் பூரண குணம் அடைய என் பிரார்த்தனைகள்.

R.Gopi said...

ஜலீலா....

தங்கள் தந்தையின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்று அறிந்ததில் மெத்த மகிழ்ச்சி...

அவர் விரைவில் பூரண குணமாகி பழையபடி நடமாடுகிறார் என்று நீங்கள் எங்களுக்கு செய்தி சொல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை...

R.Gopi said...

ஜலீலா....

தங்கள் தந்தையின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்று அறிந்ததில் மெத்த மகிழ்ச்சி...

அவர் விரைவில் பூரண குணமாகி பழையபடி நடமாடுகிறார் என்று நீங்கள் எங்களுக்கு செய்தி சொல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை...

அதிரை அபூபக்கர் said...

இன்சா அல்லாஹ், உங்களது வாப்பா பூரணமாக குணமடைய எல்லாம் வல்ல அல்லாஹ் வைப்பிரார்த்திக்கிறேன்.

puduvaisiva said...

ஜலீலா
தங்களது தந்தை பூரண குணமாக நாங்களும் வேண்டுகின்றோம்.

வாழ்க வளமுடன்.

சிநேகிதன் அக்பர் said...

தங்கள் தந்தை விரைவில் நலம் பெற பிரர்த்திக்கிறோம்.

இறைவன் கிருபையால் எல்லாம் சரியாகும். கவலை வேண்டாம் சகோ.

ராமலக்ஷ்மி said...

தங்கள் தந்தை விரைவில் பூரண நலம் பெற என் பிரார்த்தனைகள்.

சாந்தி மாரியப்பன் said...

உங்கள் தந்தை விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனைகள்.

Jaleela Kamal said...

மலிக்கா உஙக்ள் அனைவரின் தூஆவும் கபூலாகனும் அப்ப அப்ப போன் செய்து ஆறுதல் அளித்தமைக்கு மிக்க நன்றி அருமை தோழி

அதிரா வந்துட்டேன் அதான் எப்படி எழுதவது 5 நாளா ஒன்றுமே புரியாமல் உட்கார்ந்து இருந்தேன், வலைப்பக்கம் வந்தால் கூட பிடிக்காமல் இருந்தேன்,
இப்ப தான் கொஞ்சம் தெளிச்சாலாச்சு வருகைக்கு மிக்க நன்றி அன்பு பூஸார்

சகோ , எம் அப்துல் காதர் வாஙக் உங்கள் சவுதியில் மக்காவில் தூஆ கேட்பீர்கள் கண்டிப்பாக சரியாகிடும் என்ற நம்பிக்கை இருக்கு,
என் தந்தை சவுதியில் இருந்தவரை யாருக்கு என்ன வென்றாலும் தூஆ கேட்பார்கள், அது போல் அவருக்க்கா நீங்கள் கேட்கும் தூஆ வும் அல்லா கபூல் செய்யட்டும்.\

வா அலைக்கும் ஸலாம் அஸ்மா ஆமாம் நான் கேள்விபட்டு இருக்கேனே தவிர இப்ப தான் அந்த ஸ்டீலை பார்த்தேன்., ரொம்ப கவலை பட்டேன் இது போல் எவ்வளவு பேர் விபத்தில் சிக்கி ஸ்டீல் வைத்து இருப்பார்கள், உங்கள் தூஆவுக்கு மிக்க நன்றி அஸ்மா

Jaleela Kamal said...

இமா வாஙக் உங்கள் வார்த்தை ஆறுதல் தருகிற்து , மிக்க நன்றி

உங்கள் பிராத்தனைக்கு மிக்க நன்றி மேனகா.

ஆசியா நீங்களும் பல விபரங்கள் சொன்னீர்கள் உஙக்ள் மாமாவை நினைத்தும் மனசி மிக கழ்டபட்டது எவ்வளவு கழ்ட பட்டு இருப்பார் என்பது என் வாப்பாவின் மூலம் அறிய முடிகிறது
ஹுஸைனாம்மா உஙக்ள் தூஆக்கள் கபூலாகட்டும்.
உங்கள் பிராத்தனைக்கு மிக்க நன்றீ ஏஞ்சலின்

மிக்க நன்றி காஞ்சனா.

Jaleela Kamal said...

சித்ரா என் தந்தைக்காக நீங்கள் பிராத்தனை செய்ததற்கு மிக்க நன்றி, இப்படி ஒரு அன்புள்ளஙக்ள் எனக்கு கிடைத்து இருக்கு.

தோழி விஜி உஙக்ள் ஆறுதலான வார்த்தைக்கு மிக்க நன்றி , உடம்பை பார்த்துக்கோங்க.

நன்றி தமிழ் குடும்பம்

மகி , கோமதி அக்கா உங்களின் பிரத்தனை மற்றும் ஆறுதலுக்கு மிக்க நன்றி

அன்னு எவ்வள்வு பிஸியிலும் பயணத்தில் என்க்காக பேசி ரெகார்ட் செய்து தூஆ செய்து ஆவன செய்தீர்கள் ம்,உஙக்ளுக்கு பதில் உங்க அம்மா போன் செய்து விசாரித்தாஙக் பா அதெல்லாம் நான் ஒன்றும் நினைக்க மாட்டேன்,
உங்கள் தூஆவே போதுமானது

Jaleela Kamal said...

வானதி உங்கள் பிராத்தனைக்கு மிக்க நன்றி

கோபி உங்கள் வாக்கு பலிக்கட்டும்

புதுவை சிவா பிராத்தனைக்கு மிக்க நன்றி

வாங்க அதிரை அபூ உஙக்ள் தூஆ கபூலாகட்டும்

சினேகிதன் அக்பர் உங்கள் ஆறுதலான வார்த்தைக்கும் பிராத்த்னைக்கும் மிக்க ந்ன்றி

ராமலக்‌ஷ்மி,அமைதிச்சாரல் உங்கள் பிராத்தனைக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

பதிவுலக தோழமைகளே என் தந்தைக்காக செய்த உஙக்ள் அனைவரின் பிராத்தனையை ஆண்டவனி அர்ஷில் விழுந்து சிக்கிரம் குணமடைய வைப்பானாகவும். ஆமின்

Vikis Kitchen said...

பதிவை பார்த்தேன். என்ன சொல்லன்னே தெரியல்லை. மிகவும் மனதுக்கு வருத்தமாய் இருக்கு. அப்பா நல்லபடியா மறுபடியும் நடமாட கடவுளை வேண்டிக்கிறேன் . அம்மாவை தைரியமாய் இருக்க சொல்லுங்கள். அப்பாவை போன்ற உழைப்பாளிகள், மன உறுதியும் , உடல் திடமும் உள்ளவர்கள். பிசியோதெரப்பி நல்ல மருத்துவம் , நிச்சயம் பலன் உண்டுன்னு சொல்லுறாங்க . அப்பா பூரணமா குணமாகி நல்ல இருப்பாங்க. எதோ நேரம் இப்படி படுத்துது .

அந்நியன் 2 said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

உங்களின் பதிவைப் பார்த்து மிகவும் கவலைக் கொண்டேன்,அல்லாஹ் சுபுஹானவுத்தாலா உங்கள் தந்தைக்கு நற் சுகத்தை தந்தருள வேண்டுகிறேன்.

வருகிற மே மாதம் இன்ஷா அல்லாஹ் உங்கள் கடைக்குப் போகிறேன்.

நாம் பணம் சம்பாதிப்பதே நிம்மதியாக வாழ்வதர்க்கும்,நோயின்றி இருப்பதர்க்குமே,இருந்த போதிலும் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலோர்,தம் பெற்றோருக்கு பனிவிடை செய்யவோ,அல்லது பேனி பார்க்கவோ,பணத்தை செலவழித்துப் பார்க்கவோ, மனது இல்லை என்பதே தெலிவு.

இவ்விசயத்தில் உங்களின் கடமையை பாராட்டுகிறேன்.

kavisiva said...

ஜலீலாக்கா கவலைப் படாதீங்க. அப்பா விரைவில் பூரண குணமடைந்து தேறி வருவார். எங்களது பிரார்த்தனைகளும் எப்போதும் உண்டு.

Anonymous said...

அப்பா சீக்கிரமா குணமடைய நானும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

தெய்வசுகந்தி said...

அப்பா குணமடைய நானும் வேண்டிக்கறேன்!!

Unknown said...

நானும் வேண்டுகிறேன்....

மாதேவி said...

விரைவில் நலன் பெற இறைவனிடம் வேண்டுகின்றேன்.

காஞ்சி முரளி said...

இன்பத்தில் பங்கு கொள்வதைவிட
துன்பத்தில் பங்கு கொள்வதும்...! ஆறுதல் சொல்வதும்தான்...
"மனிதம்" என்பது இந்த
மனிதனின் அபிப்ராயம்...!

இதுக்கெல்லாமா நன்றி சொல்வாங்க...!

zumaras said...

ஸலாம்
உங்கள் வாப்பாவின் நல்ல சுகத்திற்கு துஆ செய்கிறோம்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா