ஜிங்காபிரியாணி எண்டதும் கெதியா பாட்ட போட்டு ஜிங்கு ஜிங்கு ந்னு ஆடப்படாதாக்கும்.
தக்காளி இல்லாம எங்க வீட்டில் பிரியாணியே கிடையாது.
ஆனால் இது 18 வருடகாலம் முன் உள்ள துண்டு பேப்பரில் படித்தது..
// ஹைத்ராபாத் பிரியாணியில் கூட தக்காளி சேர்க்க மாட்டார்கள்.
நான்கைந்து முறை தான் தக்காளி இல்லாம பிரியாணி செய்து இருக்கேன்.என் பையனுக்கு தக்காளி நிறைய போட்டா பிடிக்காது. என் பையனுக்காக முயற்சி செய்தது/, கிட்னி ஸ்டோன் இருப்பவர்கள் தக்க்காளி பயன் படுத்த மாட்டார்கள். அவர்களும் இது போல் தயாரித்து சாப்பிடலாம்.
//
தேவையானவை
இறால்(ஜிங்கா) - 200 கிராம்
இறால் தலை - 100 கிராம்
தயிர் - 3 மேசைகரண்டி
வெங்காயம் - முன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 தேக்கரண்டி
பட்டை,லவங்க தூள் - கால் தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - இரண்டு சிட்டிக்கை
சீரக தூள் - ஒரு ஸ்பூன்
ஓமம்(Ajwan) தூள் - கால் தேக்கரண்டி்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
நெய்+எண்ணை - அரை கப்
கொத்து மல்லி புதினா - சிறிது
பழுத்த சிவப்பு மிளகாய் - இரண்டு
அரிசி வேகவைக்க
தரமான பாசுமதி அரிசி - 400 கிராம்
பிரியாணி இலை - இரண்டு
ஷாஜீரா( caraway seed)- அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
சூடான பால் - ஒரு மேசை கரண்டி
சாஃப்ரான் - 6 இதழ்
செய்முறை
இறால் தயிரில் செய்வதால் வேக ரொம்ப நேரம் எடுக்காது. ரொம்ப சீக்கிரமாக தயாரித்துவிடலாம்.
இறாலை தோலெடுத்து இறாலையும், தலையையும் ஆய்ந்து கழுவிவை வைக்கவும்.(இது தான் கொஞ்சம் கழ்டமான வேலை) தலை சேர்த்து செய்வதால் இன்னும் கூடுதல் ருசி கிடைக்கும்.
வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைக்கவும்.
தயிரில் பட்டை கிராம்பு பொடி,மிளகாய் தூள் ,சீரகத்தூள், ஓமம் தூள், உப்பு, ஏலக்காய் தூள், தனியாத்தூள், போட்டு நன்கு கலக்கி வைக்கவும்.
வாயகன்ற வானலியை காயவைத்து எண்ணை + நெய்யை ஊற்றி வெங்காயத்தை போட்டு நன்கு பொன் முறுவலாக வதக்கவும்.அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட், பாதி கொத்துமல்லி புதினா போட்டு நன்கு வதக்கவும்.
மற்றொரு அடுப்பில் சாதம் வடிக்க உலையை கொதிக்கபோடவும்.
தண்ணீருடன் பிரியாணி இலை , ஷாஜீரா, மீதி உள்ள கொத்துமல்லி புதினா, கரம்மசாலாதூள் சேர்த்து கொதிக்க விடவும்.
இஞ்சி பூண்டு வாடை போனதும் மசால கலக்கிய தயிர் கலவை + இறால் சேர்த்து நன்கு வதக்கி சிறிது நேரம் மசாலாக்களை ஒரு சேர கொதிக்க விடவும், தீயின் தனலை சிம்மில் வைக்கவும்.
உலை கொதித்ததும் அரிசி தட்டி முக்கால் பதத்தில் வடிக்கவும்.
கிரிப்பான இறால் கிரேவியில் அரிசியை தட்டி சமப்படுத்தவும்.
சாஃப்ரானை மேலே ஊற்றி 20 நிமிடம் தம்மில் விடவும்.
சுவையான ஜிங்கா தயிர் பிரியாணி ரெடி
மியாவ் க்கு ரொம்ப பிடிச்சிருக்குமுன்னு நினைக்க்றேன்.பூஸார் சாப்பிட்டு பார்த்து ஒகே சொல்லிட்டார்... இனி பேபி அதிராவும் இமாக்காவும் தாரளமாக சாப்பிடலாம்.
இதில் பிரியாணி மசாலா (அ) இலங்கை கறி மசாலாத்தூள் ஏதும் சேர்ப்பதா இருந்தால் தாராளமாக 1 தேக்கரண்டி சேர்த்து கொள்ளலாம்.
இறால் தலை வறுத்து சாப்பிட்டால் நல்ல இருக்கும், சிலர் வறுத்து சம்பல் வைப்பார்கள். நான் இறால் தலை பெரிய தா இருந்தால் சில நேரம் பஜ்ஜியும் போடுவதுண்டு, அதே போல் சேமியா, கார உப்புமா, பிரியாணி வகைகளிலும் சிறிது சேர்ப்பேன் சுவை கூடுதலாக இருக்கும், குச்சிபோல் நீட்டி கொண்டு இருக்கும் மீசைகளை வெட்டிட்டு போடனும். பிடித்தவர்கள் அதனுடன் சாப்பிடலாம் பிடிக்காதவரக்ள் அதை எடுத்து விட்டு சாப்பிடாலாம்.
( ஜிங்கா என்பது இறால்.) சாரி முதலே சொல்ல மறந்துட்டேன்.
Tweet | ||||||
46 கருத்துகள்:
படிக்கும்போது நா ஊருகிறது..
சூப்பர்...
ஆ.... எனக்குத்தான் எல்லாமே எனக்குத்தான்ன்ன்ன்ன்ன்ன்ன்:)).
ஜலீலாக்கா சூப்பர் றால் போட்டு ”ஜிங்க்கா தயிர் பிரியாண”... சூப்பராக இருக்கு... அடுத்த கிழமை செய்து பார்க்கிறேன்.
// இப்ப அதீஸும் இமா அக்காவும் சாப்பிடலாம்////
நோஓஓஓஓஓஓப்ப்ப்ப் எல்லாம் எனக்குத்தான், வேணுமெண்டால் கொஞ்சூண்டு, குட்டி டிஷ்ல அவவுக்குக் குடுக்கிறேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
ஏன் ஜலீலாக்கா இது ஒரு அவித்த கோழி முட்டையை மேல வச்சிருக்கலாமே?... இல்லையில்லை ஒருவேளை நீங்க உள்ளே ஒளிச்சு வச்சிருப்பீங்க, நான் எடுக்கிறேன்... உஸ் சத்தம் போட்டிட வாணாம் காஆஆஆஆது கேட்டிடப்போகுது:).
////பேபி அதிரா தக்காளி அவ்வளவா பயன் படுத்த மாட்ட்டாங்க, அன்பு இமா அக்கா ஏதோ ஒரு பதிவில் இங்கு தக்காளிக்கு தடா என்று சொன்னார்கள்//
என்னா ஒரு ஒற்றுமை இருவருக்குள்ளும்:)). எனக்கு சாப்பிட ஆசை ஜலீலாக்கா.. இடையிடை மாதம் ஒருக்கால், சாப்பிட்டால் ஓக்கே... அடுத்துச் சாப்பிட்டால் மூச்செடுக்க முடியாமல் வரும் அல்லது கடிக்கும்...
எனக்கு நேரமில்லை ஜலீலாக்கா... சும்மா எட்டிப் பார்த்த இடத்தில இவ்வளவும் கதைச்சிட்டேன்.... உறவினர் வருகை.
கடைசிப்படம் சூப்பராக எடிட் பண்ணியிருக்கிறீங்க.
உங்கள் பக்கம் வந்தாலே நாக்கை கட்டுபடுத்தி கொண்டு வரவேண்டியுள்ளது.
எனக்கும் தக்காளி அவ்வளவா பிடிக்காது :-)
அழகான பிரியாணி சூப்பர் :-))பெரிய இறாலில் செய்தால் ஒரு புல் கட்டு கட்டிருவேன் :-))
//ஆ.... எனக்குத்தான் எல்லாமே எனக்குத்தான்ன்ன்ன்ன்ன்ன்ன்:)).//
பின்னாலேயே நானும் இருக்கேன் , எனக்கும் வேணும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)))
//ஏன் ஜலீலாக்கா இது ஒரு அவித்த கோழி முட்டையை மேல வச்சிருக்கலாமே?... இல்லையில்லை ஒருவேளை நீங்க உள்ளே ஒளிச்சு வச்சிருப்பீங்க, நான் எடுக்கிறேன்... உஸ் சத்தம் போட்டிட வாணாம் காஆஆஆஆது கேட்டிடப்போகுது:).//
அ கோ முவை நான் எடுத்திட்டேன் அதான் உங்களுக்கு தெரியல ஹி..ஹி...
@அதிரா
என்னது இறால் கடிக்குமா ?????.(எனக்கு தராம சாப்பிட்டா அப்படிதான் )
"ஷாஜீரா" அப்படின்னா என்னது ஜலீலா
பிரியாணி அருமை அக்காள்.
தமிழ் மணமும் போட்டாச்சு.
வாழ்த்துக்கள்.
பெயரே வித்த்யாசமாக இருக்கு!ஜலீலா,அப்படியே பெயர் காரணத்தையும் சொல்லிடுங்கோ.
அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலாக்கா! இறால் பிரியாணி அருமையா இருக்கு. 'ஜிங்கா'ன்னா என்ன மீனிங் ஜலீலாக்கா? தக்காளி இல்லாமல் நானும் ஒரு பிரியாணி செய்வேன். சமீபத்தில் ரமலானில் செய்ததால் ஃபோட்டோ எடுக்க முடியவில்லை. இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை ஃபோட்டோஸ் எடுத்து போடுகிறேன். அப்போது உங்களுடைய இந்த லிங்கும் கொடுக்கணும் :)
அதிரா & இமா! உங்களுக்கு மட்டும் ஜலீலாக்கா கொடுத்துட்டாங்கன்னு தன்னாலே உட்கார்ந்து வெட்டாதீங்க, அப்புறம் வயித்த வலிக்கும் :)))
mee the firstu..enakuthan ellamey..
//ஸாதிகா said...
பெயரே வித்த்யாசமாக இருக்கு!ஜலீலா,அப்படியே பெயர் காரணத்தையும் சொல்லிடுங்கோ.//
ஜிங்கான்னா உருதுல இறால்ன்னு அர்த்தம் :-)
அஸ்ஸலாமு அலைக்கும் இறால் பிரியாணி அருமையா இருக்கு.
வாழ்த்துக்கள்.
பெயரே வித்தியசமாக இருக்கின்றது..
அது என்ன அதிராவுக்கு , இமாவிற்கு மட்டும் தானா..எங்களுக்கு எல்லாம் இல்லையா...
ஹை! எனக்கும் அதீஸுக்கும் மட்டும் ஸ்பெஷலா! ;)) தாங்ஸ் ஜலீ.
//என்னா ஒரு ஒற்றுமை இருவருக்குள்ளும்:)). எனக்கு சாப்பிட ஆசை ஜலீலாக்கா.. இடையிடை மாதம் ஒருக்கால், சாப்பிட்டால் ஓக்கே... அடுத்துச் சாப்பிட்டால் மூச்செடுக்க முடியாமல் வரும் அல்லது கடிக்கும்...// வ'ழி'மொ'ழி'கிறேன் பூஸ். இந்த எப்பவாவது லிஸ்ட்ல றாலும் இருக்கு.
//என்னது இறால் கடிக்குமா ?????// ம்.. ;))) என்ர பெரியவர் சின்னனில இப்பிடித்தான் கேட்பார்.
இமா: கீரிமீன் பொரியல் கனக்கச் சாப்பிடாதைங்கோ, கடிக்கும்.
மகன்: முகத்தைப் பிடுங்கி எறிஞ்சிட்டீங்கள். இனி எப்பிடிக் கடிக்கும்?
//அப்புறம் வயித்த வலிக்கும் :)))// ;) வாழ்த்துக்கு நன்றி அஸ்மா. ;) கீதாவும் புகையுறாங்க. ;)
எனக்கு றால் கோது தலை என்று வித்தியாசம் இல்லை. றால் எண்டால் எல்லாம் றால்தான். கால்தான் கூட விருப்பம். ;)
இங்கும் றால்தலை சம்பல் எல்லோருக்கும் பிடிக்கும்.. உலர வைப்பதுதான் கொஞ்சம் சங்கடம். ;) ஆனாலும் விடுவதில்லை; உப்பு மஞ்சல் தடவி உலரவைத்து வறுத்துப் பொடியாக்கி டப்பாவில் போட்டு வைத்துவிடுவேன். வறை / சுண்டல் செய்யும் போது மணப்புக்கும் கொஞ்சம் சேர்ப்பதுண்டு.
rice looks wonderful
தயிர் பிரியாணி சூப்பர் அக்கா. இறால் தலை நல்ல இருக்குமே. பார்க்கவே ஆசையா இருக்கு:) என் ஹப்பி க்கு இறால் ஒத்துக்காது என்பதால், நான் இது வரை இறால் பிரியாணி செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. , யாரவது விருந்தினர் வந்தால் நிச்சயம் செய்து பார்க்கணும்:)
super biriyani akka.....
super jaleela..
அவங்க இரண்டு பேருக்கு மட்டும் தான் ஸ்பெஷலாஆஆஆஆ ஜலீலாக்கா...
கெதியா வந்தாலும் எங்களுக்கெல்லாம் கிடையாதா????????
எனக்கும் இந்த ஜிங்கா ரொம்ப பிடிக்கும்..
எனக்கும் வேணும் :-)))
ஆஆஆஆஆஆஆஆ ... ஜிங்கா இஸ் ஈக்கோல்ட்டு ரால்... அவ்வ்வ்வ்வ்வ்வ்.... புதுச் சொல்லுப் பொறுக்கிட்டேன்...:))).
அப்போ ஜிங்குசா எண்டால் ரால் பிர்ர்ர்ர்ராணி ஆக்கும்:))).
அப்துல் காதருக்கும் ஒரு ஷேர் கொடுத்துரலாம் ஜலீ, பாவமா இருக்கு. ;))
// # கவிதை வீதி # சௌந்தர் said...
படிக்கும்போது நா ஊருகிறது..
சூப்பர்...
September 1, 2011 3:35 PM//
படிக்கும் போதே நா ஊருகிறதா?
உட்னே உங்க தஙக்மணிய செய்ய சொல்லி சாப்பிடுட்டுங்க
கருத்துக்கு மிக்க நன்றி
அதிரா எல்லாத்தையும் எடுக்கப்படாது, வயிறு வலிக்கும்.
முட்டை ஒளித்து வைக்கல அதான் முன்பு அரபி மண் சாப்பாட்டில் ஒளித்து வைத்து கொடுத்தேனே?
ஜெய்லாணி இது பெரிய இறால் தான்
அதிரா இமா,பின்னாடி ஜெய்க்கும் கொஞ்சம் கொடுத்துடுங்கள்
ஏஞ்சலின் வாங்க இது ஷாஜீரா என்றால்
ஹைத்ராபாத் பிரியாணி அயிட்டங்களுக்கு அதிகமா பயன் படுத்துவாஙக்
அதே போல் பிள்ளைகளுக்கு பருப்பு சாத்ததிலும் போட்டு செய்வார்கள்.
ஷாஜீரா - caraway seed.
நாட்டாம வருகைக்கும் ஓட்டுக்கும் மிக்க நன்றி தொடர்ந்து வாங்க,
ஸாதிகா அக்கா பதிவு முன்வே டைப் பண்ணி வைத்ததால் ஜிங்காவுக்கு அர்த்தம் போடல
இப்ப மாத்தியாச்சு
ஜிங்கா என்றால் இறால்
அதிக பிரசங்கி ஜெய்லானி
வா அலைக்கும் சலாம் அஸ்மா
இப்ப ஜிங்கான்னா என்னான்னு புரிந்திருக்கும்
உங்கள் குறிப்பையும் போடுங்கள்
இருங்க இருங்க அதிரா இமாவுக்கு தக்காளி இல்லாம வேணும் அதான்..
உங்களுக்கு எல்லாம் வரும் பின்னாடி வேறு ஒரு பிரியாணி செய்து போட்டுட்டா போச்சு//
நன்றி சிவா எடுத்துக்கங்க உஙக்ளுக்கு இமாக்கா கொடுக்காமலா போயிடுவாஙக்
வா அலைக்கும் ஆயிஷா கருத்துக்கு மிக்க நன்றி
கீதா ஆச்சல் அடுத்து ஒரு செட்டிநாடு இறால் பிரியாணி செய்து உங்களுக்கு தாறேன்.
//என்னது இறால் கடிக்குமா ?????// ம்.. ;))) என்ர பெரியவர் சின்னனில இப்பிடித்தான் கேட்பார்.
இமா: கீரிமீன் பொரியல் கனக்கச் சாப்பிடாதைங்கோ, கடிக்கும்.
மகன்: முகத்தைப் பிடுங்கி எறிஞ்சிட்டீங்கள். இனி எப்பிடிக் கடிக்கும்? //
உங்கள் சின்னவர்.பெரியவர் கதைத்தது ரொம்ப சிரிப்பா வருது
//இங்கும் றால்தலை சம்பல் எல்லோருக்கும் பிடிக்கும்.. உலர வைப்பதுதான் கொஞ்சம் சங்கடம். ;) ஆனாலும் விடுவதில்லை; உப்பு மஞ்சல் தடவி உலரவைத்து வறுத்துப் பொடியாக்கி டப்பாவில் போட்டு வைத்துவிடுவேன். வறை / சுண்டல் செய்யும் போது மணப்புக்கும் கொஞ்சம் சேர்ப்பதுண்டு.//
இந்த அளவுக்கு பொறுமை இல்லை
அன்றே முடித்துடுவோம்
தலையஒ நல்ல சுக்காவா பொரித்து விடுவேன்,
thanks for you comment torveiw
விக்கி விருந்தினர் வந்தால் செய்து பார்த்து எபப்டி இருந்த்து என்று வந்து சொல்லுங்கள்
நன்றி தனலக்ஷ்மி
நன்றி ஆசியா
எம் அப்துல் காதர் பொறுங்க உங்களுக்கு ஹைத்ராபாத் பிரியாணி உண்டு
பிரியாணி ஜூப்பரு ஜலீலாக்கா :-)
எங்க வீட்டுல ஒரு சின்னூண்டு ஜிங்கா இருந்துகிட்டு பயங்கர வாலுத்தனம் செய்யுது ஜலீலாக்கா.... அதை என்ன செய்யலாம்? என் பெரிய பையனுக்கே எல்லா திட்டும் வந்து சேர்ற மாதிரி ப்ளான் பண்ணி செய்யுது.... டேன்ஸும், ’ஜம்ப்’பும், பொக்கை வாயி சிரிப்பும் தாங்க முடியல.... நீங்க ஒரு வழி சொல்லுங்களேன்.... :))))
ஓமம் சேர்த்து செய்த பிரியாணி வித்தியாசமாய் இருக்கிறது ஜலீலா!
நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா