மால்வேர் வைரஸ் ஐய்ய்யோ மால்வேர் வைரஸ் ஜலீலாக்கா பிலாக்குல எல்லாம் ஓடிடுங்கோ. சில பேர் மெயில் செய்தால் கூட வைரஸ் அவங்க கூடவே ஓடி வந்துடும் என மெயில் கூட் பண்ணல.
போன வருடம் இதே போல என் பிளாக்கில் மால்வேர் வைரஸ் அட்டாக் ஆகியது, அப்ப எனக்கு ஒரு நாள் காலை பிலாக் ஓப்பன் செய்த்தும் unreadable font டாக எல்லாம் ஆகிவிட்ட்து, பே பே பே பயந்தே போயிட்டேன், ஆஹா இத்தன குறிப்பு போட்டு இருக்கோமே எல்லாம் ஒரே நாளில் புஸ் ஆகிவிட்ட்தே. ரொம்ப பதறி போயிட்டேன். தூக்கம் வரல வேலை ஓடல. நானும் என்னவோ மால்வேர் அப்படின்னா சிஸ்ட்த்துல டயனோசர் பூந்துடுச்ச்சோன்னு பயந்துட்டேன்.
அப்ப வேலன் சார் உங்கள் பிலாக்கில் Malware Virus உடனே சரி பண்ணுங்க என்றார். அதே கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ராவும் அக்கா சீக்கிரம் உங்க பிளாக் ஏதோ ஆகிவிட்ட்து என்று சொன்னாங்க.அதே போல் மலிக்கா,கீதா ஆச்சல் எல்லொரும் சொன்னாங்க
உடனே டெம்லேட் மட்டும் மாற்றினேன். அதுவும் மாற்ற பயம் சைடில் உள்ள கோட் இனைத்த்து , எத்தன பேர் வந்தாங்க எல்லாம் போயிடுமேன்னு.அபபறம் ஒரு வழியா சரியாகிடுச்சு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அதே போல் இப்ப இந்த வருடமும் ஒரு மாதமாக இதே பிராப்ளம். ரொம்ப நாளா யாருக்கும் சரியா கமெண்ட் போடலையே என்று எல்லோருக்கும் கமெண்ட் போடலாம் என்று போட சென்றால் எல்லாமே சில பேருடைய பிளாக்குகள் சரியாக ஓப்பனே ஆகல அப்படியே ஓப்பன் செய்து கமெண்ட் போட்டால் மறுபடி பிலாக்கர் லாகின் செய்ய சொல்லி வருது. இது எதனால் என எனக்கு தெரியல.
10 நாட்களாக பிராப்ளம் இருக்கும் போதே Back up எடுத்து வைத்துட்டேன். இனி பிலாக் போனா போகட்டும். வேற போட்டு கொள்ளலாம் என விட்டு விட்டேன்.
அதிரா, தமிழரசி, ஆயிஷா, ஏஞ்சலின், சகோ.ஆஷிக், சகோ.பாஸித், ராமலஷ்மி,ஸாதிகா அக்கா எல்லோரும் மெயில் பண்ண போய் தான் எனக்கு தெரிய வந்த்து.
ஏற்கன்வே இது போல் ஆனதால் உடனே டெம்லேட் மாற்றினேன், இருந்தாலும் சரியாகல. ச்சியும் உடனே டெம்லேட் மாற்றுங்கள் என்றார்.
இதிலிருந்து பதிவுலகத்துக்கு சொல்லுவது என்ன வென்றால் நிறைய பதிவுகள் என்றால் முதலில் பேக் அப் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
இது முன்பே அடிக்கடி டவுசர் பாண்டி அன்னாத்தையும் முன்பு அதிகமா பிளாக்கர் டிப்ஸ் எல்லாம் கொடுத்தார் இப்ப கானாம போயிட்டார், சகோ ஜெய்லானியும் சொல்வது இந்த நிலை வரும் முன்னே இத முதல செய்யுங்கள்..
(ஆனால் இன்னுமே புரியல இந்த மால்வேர் வைரஸ் வந்து இருக்கு என எப்படி கண்டு பிடிப்பது, தெரிந்த கம்பியுட்டர் டாக்டர்கள் இத விளக்கினால் நல்ல இருக்கும்.இன்னும் எனக்கு மற்ற பிளாக்குகள் சரியா ஓப்பன் செய்ய முடியல)
டிப்ஸ்:
1. நம்ம கம்பியிட்டரில் ஆண்டி வைரஸ் செக் பண்ணிக்கனும்.உடனே ஆவன செய்யுங்கள்.
2.பிலாக் கை பேக் அப் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
3.நிறைய வெட்ஜெட் கள் சேர்க்காதீர்கள்.
4.இப்படி வைரஸ் மெசேஜ் வந்தால் உடனே டெம்லேட்டை மாற்றிடுங்கள்.
ஓரளவுக்கு என் அனுபவத்த எழுதி இருக்கேன்.
மற்றபடி ஏதும் வேறு யாரும் இங்கு அவர் அவர் அனுபவம் டிப்ஸ் சொல்வதாக இருந்தால் சொல்லலாம்.
இந்த பதிவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனக்கு கமெண்ட் மாட்ரேட் கொடுத்தா மெயிலில் கமெண்ட் வரவில்லை, எல்லா கமெண்டும் spam mail லில் தான் போகுது. இன்னும் சில பேருடைய பிளாக்கில் கமெண்ட் போட்டா எர்ர் மெசேஜ் வருது.
இதே பிராப்ளம் இன்னும் இரண்டு பேருக்கு இருப்பதாக மனோ அக்காவும் சொன்னார்கள்.
வேறுயாருக்கும் இதை சரி செய்ய வழி தெரிந்தால் கீழே சொல்லவும், இனி எனக்கும், இந்த பதிவ படிப்பவர்களுக்கு யாருக்காவது இது போல் இருந்தால் உதவியாக இருக்கும்.
மேலும் நிறைய இந்த பிளாக் அனுபவங்கள் இருக்கு பிறகு பார்க்கலாம்.