Thursday, January 12, 2012

மழலை உலகம் மகத்தானது - 1

மழலை உலகம் மகத்தானது.







மழலை உலகம் மகத்தானது நம்ம லஷ்மி அக்காவும் ஏஞ்சலினும் போன வருடம் தொடர்பதிவு எழுத அழைத்தார்கள். . ஒவ்வொரு் முறை எழுத ஆரம்பிக்கும் போது ஏதாவது வேலை.. வந்து எழுத முடியாமலே போய் விட்ட்து

எல்லாரும் எழுதி முடிச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன். தொடர் பதிவா இருந்தாலும் , மற்றவர்கள் பதிவுக்கு பின்னூட்டமா இருந்தாலும் நான் தான் கடைசி பெஞ்சு.

மழலை உலகம் பற்றி நிறைய எழுத வேண்டி இருக்கு.என் அனு்பவ பதிவே நிறைய இருக்கிறது.

என்ன தான் சோகமாக இருந்தாலும் குழந்தைகள் செய்யும் சேட்டையில் எல்லாமே பஞ்சாய் பறந்து விடும்.

அம்மா வீட்டிலும் சரி மாமியார் வீட்டிலும் சரி பெண் குழந்தைகள் தான் அதிகம். என் பெரிய பையன் பிறந்த்தும் இரண்டு வீட்டிலும் ஒரே சந்தோஷம். ஆனால் எல்லோரோடும் நல்ல விளையாடுவான், ஆனால் தூக்கி வைத்து கொள்வது நானோ அல்லது என் மாமனாரோ மட்டும் தான் வைத்து கொள்ளனும்.இப்ப உள்ள வசதிகள் அப்ப கிடையாது.குடும்ப்த்தில் எல்லா வேலைகளையும் முடிக்கனும் கொண்டு குழந்தையையும் பார்த்து கொள்ளனும். பெரியவன் ஊரில் எல்லோரோடும் வளர்ந்தான்.அவனுக்கு சாப்பாடு கொடுத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிடும்.

ஒரு சிறிய கூடை சேரில் உட்கார்ந்து டீவி என்றால் காலையில் 7 மணிக்கு மிருதங்கம் , தபேலா வாசிப்பாங்க அதை ரொம்ப ரசித்து பார்ப்பான், அவன் ரசித்து மெய்மறந்து பார்ப்பதை நாம ரசிக்க அழகாக இருக்கும்.
அவனுக்கு பூனை, ஆடு , காகம், மாடு இப்படி எல்லாத்தையும் காண்பித்து தான் சாப்பாடு ஊட்டனும் இல்லை என்றால் சாப்பிட மாட்டான்.
அதற்கு பிறகு துபாய் வந்துவிட்டேன். ஊரில் தூங்கும் நேரம் தவிர என்னேரமும் பிஸியாக வேலை பார்த்து விட்டு இங்கு சும்மா இருக்க முடியல ஒரே ஊர் ஞாபகம் இவரும் காலையில் போனால் இரவு தான் வருவார், அது வரை சமையல் விதவிதமாக செய்து பார்ப்பது. கத்துக்கட்ட ஹிந்திய எழுதி பார்ப்ப்து, சோளி தைப்பது, சேலைக்கு ஓரம் அடிப்பது , சேலைக்கு பால்ஸ் வைப்பது, இப்படி நேரத்த ஓட்டி கொண்டு இருந்தேன்.



பிறகு தான் பேபி கேர் பார்க்கலாம் என்று என் தோழி சொன்னாள் நானும் இன்னொருத்தவஙக்ளும் சேர்ந்து பார்க்க ஆரம்பித்தோம்.
இந்த மழலை உலகத்தில் என் அனுபங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்.
ஓவ்வொரு பிள்ளைகளோடும் ரொம்ப சுவராசியமான அனுபவம்.
முதலில் குட்டன், ஷெரில் இரண்டு குழந்தைகள் குட்டனுக்கு 6 மாதம், ஷெரில் 1 வய்து.
குட்டன் சதா அழுகை தான் ஒரு நிமிஷம் கூட நாம் அவன் கண்ணில் இருந்து மறைய கூடாது. சாப்பிடவும் ரொம்ப அடம். கூடவே உட்கார்ந்து இருக்கனும், கூடவே தூங்கனும், சாப்பாடு ஊட்டினாலும் வாயி்லேயே வைதது இருப்பான்.
ஷெரில் சொன்னா கேட்டுப்பா. ரொம்ப அமைதி , ரொம்ப டீசண்ட் எப்படி அந்த ஒரு வயதில் அப்படி ஒரு பக்குவம் என தெரியல் சாப்பாடு ஊட்டி விட்டா ரொம்ப சமத்தா சாப்பிடுவா

அடுத்து டிக்‌ஷா, என்னேரவும் கீர் கீர் கீ கீன்னு நமக்கு தலை வலி தீராத வரை கத்தி கொண்டே இருப்பாள், முதலில் எதற்கு கத்து கிறாள் என்பது புரியாமல் இருந்த்து, பிறகு போக போக தெரிந்து கொண்டோம். பாதி தூக்கத்தில் குட்டன் போட்ட சவுண்டில் எழுந்தால் கத்துவாள், பசி என்றால் , அடுத்து அவளிடம் இருந்து மற்றவர்கள் விளையாட்டு பொருட்களை பிடிங்கினால் அப்ப்டி ஒரு சத்தம் போட்டு ஜித்து பிடித்து வாங்கிடுவாள். ஆனால் ரொம்ப இன்ரஸ்டிங் கேரக்டர், தீடீர் தீடீர்ன்னு அழகா சிரிச்சி நம்மையும் நல்லாவே சிரிக்க வைப்பாள்.
அடுத்து சாதியா என் தோழி மகள் நாங்க தெரிந்தவர்கள் என்பதால் எங்களுடன் எங்க பிள்ளைகள் போலவே இருந்து கொள்வாள்
இட்து புறம் கடைசியாக இருப்பது என் பெரிய பையன் அப்துல் ஹகீம்.வலது புறம் இருப்பது அப்துல் ரஷீத். இவங்க இரண்டு பேரும் பேசும் மழை பேச்சு, அவர்கள் விளையாடுவது, வெளியில் போகும் போது ஒரே மாதிரி டிரஸ் போட்டு கொள்வது... எல்லாமே ரொம்ப ரசிக்கும் படியாக இருக்கும்
எந்த குழந்தைக்கும் எந்த பாகுபாடும்் கிடையாது என் பையனுக்கு கொடுத்த அதே தான் சலுகை எல்லாருக்கும் .அங்கு இருக்கும் பெண்குழந்தைகள் கூட ஹகீமும், ரஷீ்தும் சேர்ந்து உட்கார மாட்ட்டங்க , போட்டோவுக்காக 5 நிமிடம் உட்காரவைத்தேன்.
மொத்தம் ஏழு வருட பயணம், ரொம்ப இழுக்காம சுருக்கமா முடித்து விடுகிறேன் .........
இதை படிப்பதன் மூலம் புதிதாக குழந்தை வளர்பவர்களுக்கு கண்டிப்பாக நிறைய் விசியங்கள் குழந்தைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

 பல குழந்தைகள்.இன்னும் பல குழந்தைகள் அடுத்து அடுத்து பிற்கு வரும் பதிவுகளில் பார்ப்போம்














25 கருத்துகள்:

ஸாதிகா said...

சுவாரஸ்யமான அனுபவங்களை சுவைபட கூறி இருக்கீங்க ஜலி.தொடருங்கள்.ஆவலுடன் காத்திருக்கிறோம்.

இராஜராஜேஸ்வரி said...

ரொம்ப ரசித்து அழ்கான பகிர்வு.. பாரட்டுக்கள்..

Angel said...

அன்பு மழலைகள் பற்றி பார்க்க படிக்க மிகவும் சுவாரசியம்தான் .தொடருங்கள் நாங்களும் வருகிறோம்

கோமதி அரசு said...

குழந்தைகளின் குறும்புகளை ரசிக்க ஆரமித்தால் பொழுது போவதே தெரியாது.

ஜலீலா அழகாய் சொல்கிறீர்கள்.

தொடருங்கள் தொடருகிறேன்.

Asiya Omar said...

வாசிக்கவே ரொம்ப இண்ட்ரெஸ்டாக இருக்கு.தொடருங்கள்.

பாரணை முடிச்ச:) அதிரா said...

ஆஹா ஜலீலாக்கா... குட்டீஸ் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.....

முதலாவது படம் கண் படப் போகுது, எல்லா குட்டீசும் சூப்பராக இருக்கிறார்கள்.

எப்படிச் சமாளிச்சீங்களோ? சரியான கஸ்டமெல்லோ? ஒரு சின்னப் பிரச்சனை வந்தாலும் பெற்றோரிடமிருந்து தப்ப முடியாது(இங்கு).

திண்டுக்கல் தனபாலன் said...

ஆரம்பமே சுவைபட எழுதி உள்ளீர்கள். தொடருங்கள். பாராட்டுக்கள்! நன்றி! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! அன்புடன் அழைக்கிறேன் :
"பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"

சிநேகிதன் அக்பர் said...

நல்ல தொடர். வாழ்த்துகள்.

enrenrum16 said...

பெரிய பசங்களைக்கூட இப்டி ஒண்ணா உக்காரவக்கறது கஷ்டம்... குட்டீஸ் பொறுமைசாலிகளா இல்ல நீங்களா? ;-) ச்சோ க்யூட்...

ஹுஸைனம்மா said...

நம்ம பிள்ளைகளை சமாளிப்பதே பெரும்பாடு. இதுல நீங்க பேபி சிட்டிங்கும் செஞ்சீங்களா? அதுக்கு எவ்வளவு பொறுமை வேணும்!! எப்பா... நினச்சாலே ஆச்சர்யமா இருக்கு!!

சீக்கிரம் தொடருங்க.. சஸ்பென்ஸ் தாங்கலை..

Jaleela Kamal said...

ஸாதிகா அம்மா மிக்க நன்றி கருத்து தெரிவித்தமைக்கு நேரம் இல்லாதாதால் எழுதமா இருந்தேன், சமையல் குறிப்பு என்றால் உடனே போட்டு விடலாம்

தளிகா said...

ரொம்ப சுவாரசியமான பதிவு ஆனால் சீக்கிரம் முடிச்சுட்டீங்க இன்னும் படிக்க ஆசையா இருந்தது.நிறைய குழந்தைகளை பாத்த அனுபவம் இருப்பதால் உங்களால் நிறைய எழுத முடியும்..சாதியா தானா மெஹந்தி போடும் பெண்

Jaleela Kamal said...

வாங்க ஸாதிகா அக்கா ரொம்ப நாளா எழுதனும் என்றூ எழுத ஆரம்பிச்சாச்சு..உங்களுக்கு எல்லாம் பிடிக்குதான்னு தெரியல

Jaleela Kamal said...

இராஜ ராஅஜேஸ்வரி வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றீ

Jaleela Kamal said...

ஆமாம் குழந்தைகளின் குறும்புகளை சொல்லி கொண்டே போகலாம்/

Jaleela Kamal said...

கோமதி அரசு நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே..

Jaleela Kamal said...

ஆசியா கண்டிப்பாக முடிந்த வரை தொடர்ந்து எல்லாம் எழுது கிறேன்.

Jaleela Kamal said...

//முதலாவது படம் கண் படப் போகுது, எல்லா குட்டீசும் சூப்பராக இருக்கிறார்கள்.//

அதுக்கு தான் அதிரா ரொம்ப நாளா போடாமலே இருந்தேன்

Jaleela Kamal said...

இன்னும் படங்கள் வரும்,

எப்படிச் சமாளிச்சீங்களோ? சரியான கஸ்டமெல்லோ? ஒரு சின்னப் பிரச்சனை வந்தாலும் பெற்றோரிடமிருந்து தப்ப முடியாது(இங்கு).

January 13, 2012 12:43 PM

ஆம் பூஸாரே க்ஜொஞ்சம் நஞ்சம் இல்லை ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கனும்.
கண்டிப்பாக தப்ப முடியாது இப்ப நினைத்தாலும் , எப்படி அப்படி சமாளித்தேன் என்று நினைப்பேன்...

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க ந்ன்றி திண்டுக்கல் தனபாலன்..

Jaleela Kamal said...

வாங்க பாயிஜா வந்த்து ரொம்ப சந்தோஷம்

Jaleela Kamal said...

//பெரிய பசங்களைக்கூட இப்டி ஒண்ணா உக்காரவக்கறது கஷ்டம்... குட்டீஸ் பொறுமைசாலிகளா இல்ல நீங்களா? ;-) ச்சோ க்யூட்...//

அந்த நேரத்தில் நான் தான் பொறுமை சாலி இந்த போட்டோவ எடுக்க எவ்வள்வு கழ்டபட்டேன்னு எனக்குதான் தெரியும் ஹிஹி என்றென்றும் 16

Jaleela Kamal said...

//நம்ம பிள்ளைகளை சமாளிப்பதே பெரும்பாடு. இதுல நீங்க பேபி சிட்டிங்கும் செஞ்சீங்களா? அதுக்கு எவ்வளவு பொறுமை வேணும்!! எப்பா... நினச்சாலே ஆச்சர்யமா இருக்கு!! //

ஆமாம் ஹுஸைனாம்மா இப்ப உள்ளவர்கள் ஒரு குழந்தைய வைத்துகொண்டே வேலை செய்வது சிரமம், என்று சொல்லும் போது எனக்கு அப்படி ஒன்றூம் சிரமம் என்று தெரியாது..

சரியா ப்ளான் செய்தால் பார்க்கலாம்..

Jaleela Kamal said...

//ரொம்ப சுவாரசியமான பதிவு ஆனால் சீக்கிரம் முடிச்சுட்டீங்க இன்னும் படிக்க ஆசையா இருந்தது.நிறைய குழந்தைகளை பாத்த அனுபவம் இருப்பதால் உங்களால் நிறைய எழுத முடியும்..சாதியா தானா மெஹந்தி போடும் பெண்//



தளீ நீங்க ரொம்ப ஷார்ப் யாராவது சொல்வாஙக்ளான்னு பார்த்தேன் நீங்க சொல்லிட்டீங்க/.

ஆமாம் மெகந்தி போட்ட அதே சாதியா தான்.....

ஜெய்லானி said...

ஆஹா... ஒரு மினி ஸ்கூல் வைக்கிற அளவுக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கே :-))).


இருக்கிற 2 அடிக்கிர லூட்டிக்கே தாங்க முடியல... :-)))))

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா