Tuesday, February 28, 2012

முதல் பரிசு வென்ற குறிப்பு - Tutti Fruity Pancakes - ட்யுட்டி ஃப்ரூட்டி பான் கேக்ஸ்



இது இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் மாப்பிள்ளை நாஸ்டா (டிபன்).நான் என் வசதி படி ஓவ்வொரு முறை செய்யும் போதும் ஏதாவது மாற்றம் செய்வேன். அபப்டி செய்து நானே வைத்த பெயர் தான் டியுட்டி ஃப்ரூட்டி பான்கேக்ஸ்


தேவையானவை
மைதா = 200 கிராம்,
முட்டை = இரண்டு,
உப்பு = ஒரு சிட்டிக்கை,
சர்க்கரை = 100 கிராம்,
வென்னிலா எஸன்ஸ் = ஒரு டிராப்,
பேக்கிங் பவுடர் = அரை தேக்கரண்டி,
டுட்டிஃபுரூட்டி = தேவைக்கு.
எண்ணை (அ) ப‌ட்ட‌ர் = தேவைக்கு
நெய் = சிறிது



செய்முறை
மைதாவுடன் மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் டுட்டிஃபுரூட்டி தவிர ஒன்றாக சேர்த்து கட்டியில்லாமல் மிக்ஸியில் சிறிது பால் + தண்ணீர் சேர்த்து அடிக்கவும்.


பிறகு தவ்வாவில் சிறிது தடிமனாக ஒரு கரண்டி அளவிற்கு ஊற்றி டூட்டி ஃப்ரூட்டி கலவையை தூவி, திருப்பி போட்டு சுற்றிலும் எண்ணை அல்லது பட்டரில் சுட்டெடுக்கவும்



சுட்டதும் மேலே லேசாக நெய் தடவும்.
குழந்தைகளுக்கு பிடித்த சத்தானா கலர்ஃபுல் பிரேக் பாஸ்ட்.

(ட்ரூட்டி புரூட்டி கிடைக்காதவர்கள் , கருப்பு ரெயிஸின்ஸ் (அ) மாதுளை முத்துக்களை பயன்படுத்தலாம்.)



Tutti Fruity Pancake

You can make Pancakes for breakfast or for parties.  Kids love to eat these colorful pancakes.

Ingredients:

All purpose flour  (Maida) - 200 grams
eggs - 2
salt - 1 pinch
sugar - 100 grams
vanilla   essence - 1 drop
Tutti  frutti - required qty
Oil + Butter - required qty
ghee - required qty


Method

Mix the ingredients (except oil+ butter, ghee and tutti frutti) .   Add water and milk and blend well  in a mixer (blender)  to a  thick batter.  You can also mix well with a fork or a whisk to make a thick batter.  Make sure that there are no lumps.
Heat a non stick pan.   Pour a ladle full of batter and  spread to have  a thick pancake.  Sprinkle the tutti frutti over it.   Cook on low heat.   Add little oil or butter.   Carefully, flip or turn over the pancake and cook the other side on low heat to golden brown.  Make sure that it does not get burned.
Enjoy.





டிஸ்கி: இதை பல வகையாக செய்யலாம், தேங்காய் பத்தை அரிந்து போட்டு ஏலம் சேர்த்து , கோதுமை மாவிலும் செய்யலாம்.
ரொம்ப ஈசியான சத்தான டிபன், பிள்ளை பெற்றவர்களுக்கு காலை உணவாக ஒரு கை பிடி மாவில் இரண்டு முட்டை கொஞ்சம் சர்க்கரை சேர்த்து ஏலம் தட்டி போட்டு சுட்டுகொடுக்கலாம்.குழந்தைகளுக்கும் சாப்பிட ரொம்ப இலகுவாக இருக்கும்.இது இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் மாப்பிள்ளை நாஸ்டா (டிபன்).ரொம்ப ஸ்பெஷல் tiffin. நான் என் வசதி படி ஓவ்வொரு முறை செய்யும் போதும் ஏதாவது மாற்றம் செய்வேன். அபப்டி செய்து நானே வைத்த பெயர் தான் டியுட்டி ஃப்ரூட்டி பான்கேக்ஸ்.




இதை டயட் டில் உள்ளவர்கள் செய்வதாக இருந்தால் முட்டை வெள்ளை கரு, கோதுமை மாவு சேர்த்து ஆலிவ் ஆயிலில் சுட்டு சாப்பிடலாம்.

Monday, February 27, 2012

பால் கோவா - Milk Peda


பால் கோவா

தேவையானவை 
தண்ணீர் – 500 மில்லி
மில்க் பவுடர் – 10 தேக்கரண்டி
சர்க்கரை – 3 தேக்கரண்டி
நெய் – ஒரு தேக்கரண்டி
பாலாடை – 2 மேசை கரண்டி
அலங்கரிக்க
பிஸ்தா
காய்ந்த கருப்பு திராட்சை(ரெயிசின்ஸ்)
செய்முறை

500 மில்லி தண்ணீரில் பால் பவுடரை கரைத்து நன்கு கொதிக்க அடிபிடிக்காமல் அப்ப அப்ப கிளறி விட்டு தீயின் தனலை குறைத்து வைத்து வற்றவிடவும்.
பால் 50 மில்லியாக வற்றி கலர் மாறிவரும் போது சர்க்கரை, நெய், பாலாடை சேர்த்து நன்கு கிளறி இரக்கவும்.
பால் கோவாவை விரும்பிய வடிவில் அலங்கரிக்கவும்.





குறிப்பு: பாலாடை ஒவ்வொரு முறை பால் காய்ச்சும் போது அதை எடுத்து ப்ரிஜரில் சேமித்து வைப்பேன்.ஏதாவது கிரேவிகளுக்கு, ஸ்வீட் ரெசிபிக்கு பயன்படும். இல்லை பேசியல் செய்யவும் பயன் படும். இது தீடீர் ஐடியா தான்.தினம் காய்ச்சும் பால் வற்றி விட்ட்து. மற்ற எந்த ஸ்வீட்டா இருந்தாலும் செய்ய ரொம்ப டைம் எடுக்கும்.ஸாதிகா அக்கா கிட்ட வற்றிய பாலில் செய்ய உடனடி ஸ்வீட் ரெசிபி ஒன்று சொல்லுங்க என்றேன். பால்கோவா செய்துடுங்கன்னு சொன்னாங்க.. செய்தாச்சு.

பரிமாறும் அள்வு : 3 நபர்களுக்கு
முகம் பளபளக்க டிப்ஸ் டிப்ஸ்
பாலடையுடன் , சிறிது தேங்காய் எண்ணை ,நிவ்யா கிரீம் சேர்த்து நன்கு குழைத்து முகத்தில் தேய்த்து வெண்ணீரில் முகம் அலம்பினால் முகம் ஷாஃப்டாக பளபளப்பாகவும் இருக்கும்.
மாஸ்டர் செஃப் வின் பன்னதற்காக ஒரு ஸ்வீட் ரெசிபி.




Friday, February 24, 2012

மகிழ்சிக்குரிய அவார்டு - Winner & Runner up - Master chef India 2Contest




Tuiti Fruity Pancake indiblogger link  - Master chef India 2 Contest


வாங்க பதிவுலக தோழ தோழிகளே எவ்வளவோ வலைப்பூவ்வுக்கு எழுத்துதவி மூலம் இது வரை 1000 த்துக்கும் மேற்பட்ட குறிப்புகள் அனுப்பி விட்டேன்.

அருசுவைடாட்காம், தமிழ்குடும்பம்டாட்காம்,சமையலறைடாட்காம், வல்லமை, இன்னும் பல பத்திரிக்கைகளில் எல்லாம் என் சமையல் குறிப்புகள் ஏராளமாக உண்டு...

உலகில் உள்ள அனைத்து சமையலறையிலும் நான் உப்பா சர்க்கரையாக வாழ்ந்து வருகிறேன்.

பரிசு கிடைக்குதோ கிடைக்கலையோ, யாரும் கமெண்ட் போடுறாங்களோ இல்லையோ , ஓட்டு போடுறாங்களோ இல்லையோ இதெல்லாம் நான் எதிர் பார்ப்பதில்லை.

சரி சரி என்ன விஷியம் விஷயத்த சொல்லுங்கன்னு கேட்பது காதில் விழுது ஹிஹி

போன வருடம் இண்டி பிலாக்கர் நடத்தும் மாஸ்டர் செஃப் இந்தியா 2 காண்டெஸ்ட்க்கு குறிப்பு அனுப்பும் படி மெயில் வந்தது.

இது போல் நிறைய மெயில் முன்புன் வந்துள்ளது, இண்டி பிலாக்கர் ஒரு திரட்டி ஆனால் இருக்கிற திரட்டிகளிலேயே குறிப்ப சேர்க்க எனக்கு நேரம் இல்லை.ஆகையால் அதில் எப்பவாவது நேரம் கிடைக்கும் போது மட்டும் குறிப்புகளை சேர்ப்பேன்.

மேலும் அங்கு போய் பார்த்தால் அதில் என்ன எப்படின்னு எனக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் மெயில் வந்ததுக்கு சமையல் குறிப்புக்கு தான் நம்ம கிட்ட ஏராளமாக இருக்கே சரி அனுப்புவோம் என்று  இந்த பிலாக்கில் இருந்து சில குறிப்புகள் அனுப்பினேன்.


Winner - First Prize

Runner - up
Eggplant Bhajji sandwich - இந்த ரெசிபி அடுத்த குறிப்பில் போடுகிறேன்.


அதில் என்  ட்யுட்டி ஃப்ரூட்டி பேன் கேக்.   பெரிய பெரிய செஃப் எல்லாம் சேர்ந்து செலக்ட் செய்து முதல் பரிசு கொடுத்து இருக்காங்க.
இண்டி பிலாக்கர் - சுட்டியை சொடுகவும்.

முந்தாநாள் மெயில் வந்ததும் ஒன்றும் ஓடல உடனே மெயில் செய்து கேட்டேன். அங்கு முதல் பரிசு யாருக்கு என மொத்தமா ரன்னர் அப் அவார்டிலும் என் பெயர் இருந்தது.

உடனே பதில் வந்தது உங்களுக்கு தான் முதல் பரிசு.  
( எல்லா புகழும் இறைவனுக்கே)
ரொம்ப சந்தோஷம்.

 தோழ, தோழிகள்அனைவரும் இந்த வலை உலகில் ஒருவருக்கொருவர் சந்தோஷத்திற்காக நிறைய  அவார்டுகளை பரிமாறி கொண்டு இருக்கிறோம்.


ஆனால் இப்ப கிடைத்த பரிசு  என் உழைப்புக்கு கிடைத்த பரிசு. 
பெரிய பெரிய செஃப் கள் செலக்ட் செய்து கொடுத்து இருப்பது மிக்க மகிழ்சி.




இது வரை இங்கு நீங்க எல்லாரும் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி.






அடுத்த அவார்டு என் ஆங்கில பிலாக்குக்கு.  இங்கு உள்ள குறிப்புகள் தான் அங்கும் போட போகிறேன்இது வரை நான் யாருக்கும் லிங்க் கொடுக்க வில்லை..சில புது குறிப்புகள்.


அதில் மிக்சட் தந்தூரி பிஷ் ஃபிரைக்கும் ,எக் ப்லாண்ட் பஜ்ஜி சாண்ட்விச்சுக்கும் கிடைத்துள்ளது.பிஷ் ரெசிபி ஏற்கனவே இங்கு இருக்கு, மற்றயது கூடிய விரைவில் இங்கு பகிர்கிறேன்.

அனைவருக்கும் நன்றி.நன்றி நன்றி.....



Wednesday, February 22, 2012

கொட மொளகா உருளை வறுவல் - Aloo Capsicum





ஆலு கேப்சிகம்

தேவையானவை
உருளை – 3
கேசிகம் -1 பெரியது
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு தூள் – தேவைக்கு
வெங்காயம் – 1
கெட்சப் – ஒரு தேக்கரண்டி
எண்ணை – 3 தேக்கரண்டி


செய்முறை
உருளையை நன்கு கழுவி தோலெடுத்து சின்னதாக வெட்டி வைக்கவும்.
கேப்சிகமையும் அரிந்து வைக்கவும்.
எண்ணையை காயவைத்து உருளையை சேர்த்து நன்கு வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
அதே எண்ணையில் வெங்காயம் சேர்த்து வதக்கி , கேப்சிகம், மிளகாய் தூள் உப்பு தூள் சேர்த்து வதக்கி வறுத்த உருளையை யும் சேர்த்து கிளறி கெட்சப் சேர்த்து நன்கு கிளறி இரக்கவும்.

Saturday, February 18, 2012

கல்கண்டு வடை

கல்கண்டு வடை
தேவையானவை
உளுந்து - அரை டம்ளர்
வாழைப்பழம் - அரை பழம் ( பெரிய வாழைபழத்தில் பாதி)
முழு கல்கண்டு - கால் டம்ளர்
ஏலக்காய் - 1
உப்பு - ஒரு சிட்டிக்கை
எண்ணை - பொரிக்க தேவையான அளவு



செய்முறை
1. தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
2. உளுந்தை அரை மணி நேரம் ஊறவைத்து மிக்சியில் முதலில் உப்பு, ஏலக்காய், கல்கண்டு சேர்த்து பொடித்து பிறகு உளுந்தை சேர்த்து மையாக அரைத்து எடுக்கவும்.
பிறகு வாழைப்பழத்தை மசித்து சேர்க்கவும்.
3.எண்ணையை காயவைத்து வடைகளாக உருட்டி தீயின் தனலை மீடியமாக வைத்து கருகாமல் பொரித்து எடுக்கவும்.
4. சுவையான கல்கண்டு வடை ரெடி.
அருசுவை தோழி செல்வி அக்காவின் கல்கண்டு வடையை சில மாறுதல்களுடன் செய்துள்ளேன்.லின்க் பிறகு இனைக்கிறேன்.


டிப்ஸ்.
சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு ஒரு வயது முதல் உள்ள குழந்தைகளுக்கு இது போல் சுட்டு கொடுக்கலாம். நோகம கையில் வைத்து சமத்தா சாப்பிட்டுவாங்க.
சாப்பாடு தான் சாப்பிடனும் என்றில்லை எந்த சத்தான ஆகாரமும் கொடுக்கலாமே.
 ஈசியாக எடுத்து சாப்பிடுவார்கள் பார்க்க டோனட் போல் இருக்கும் .
பூப்பெய்திய பெண்களுக்கு இடுப்பெலும்பு பலம் பெற இதை செய்து கொடுக்கலாம்.




Friday, February 17, 2012

விருது நேரம்


கொஞ்ச நாட்களாக வலை உலகில் விருது பற்றியே மறந்து இருந்தானர் , இப்ப மறுபடி எங்கு பார்த்தாலும் விருது தான்,

ஆக்கங்களை ஊக்குவிக்கும் வண்ணம் பதிவுலக தோழ தோழிகள் இப்படிவிருது வழங்கி சந்தோஷ வெல்லத்தில் ஆழ்த்துகின்றனர்.

கோவை2தில்லி இந்த விருதை எனக்கு கொடுத்து இருக்கிறார்கள். மிக்க நன்றி கோவை2தில்லி.

எனக்கு தெரிந்த நிறைய பேருக்கு இது கிடைத்து இருக்கும் என நினைக்கிறேன்.
கீழே உள்ளவர்களுக்கு இந்த விருதை கொடுக்கிறேன்.


கையளவு உலகம் ஆயிஷா பேகம்

ஹுஸைனாம்மா

நிஜாமுதீன்

அமைதிச்சாரல்

முத்துச்சரம் ராமலஷ்மி

அப்துல் பாஸித்



Wednesday, February 15, 2012

மழலை உலகம் மகத்தானது 3







மழலை உலகம் மகத்தானது 3


குட்டன் ஜாம் பாட்டிலை பொத்துன்னு போட்டு உடைத்த்தும் , எனக்கு ஒன்றும் ஓடல, அதை அள்ளி போடுவது ஒரு பக்கம் இருக்கட்டும். அவன் பயந்து பாட்டில காலவைக்காம இருக்கனுமே. உடனே நூனி , ஜானி என்னவா இருக்கும் இந்த சீரக மிட்டாய் தான்.
இந்த மிட்டாய் குழந்தைகள் உடம்பிற்கு ஒன்றும் செய்யாது செமிக்க வைக்கும், என் பெரிய பையன் சின்னதா இருக்கும் போது என் மாமனார் வாங்கி கொடுப்பார், அது அவன் வைத்த பெயர் தான் நூனி. 
ஜானி என்பது இப்ப எங்க வீடுகளில் உள்ள சின்ன வாண்டுகள் வைத்த பெயர். 
 குட்டி குட்டி சோம்பு, சீரக‌ மிட்டாய், ஜெம்ஸ் பாக்கட், கல்கண்டு பலூன், பெரிய கலர்ஃபுல் பந்து  எல்லாம் எப்போது ரெடியாக இருக்கும். ஆளுக்கு கொஞ்சமாக நூனிய போட்டு வெளியில் வைத்து உடகார வைத்து விட்டு அதஒன்னு ஒன்னா எடுத்து அவர்கள் சாப்பிட்டு முடிப்பதற்குள் ஜாம் பாட்டிலை துணியில் அள்ளி போட்டு விட்டு மாப் பண்ணிட்டு அப்பாடான்னு பிள்ளைங்க கூடவே கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொண்டேன்.

இந்த நான்கு பேர் பார்த்து கொண்டு இருக்கும் போதே ஷெரின் ஒரு வயது பொண்ணு வந்த்து மளையாளி ஆனால் வந்த்தில் இருந்து ஒரே அழுகை தான் சாப்பாடு ஊட்ட அப்ப மளையாளத்தில் என்ன்ன்னு தெரியல அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு , களிக்க , ஊன் களிக்க, வேக களிக்க ஏதோ ஒன்று இரண்டு வார்த்தைகள். வைத்து கொஞ்ச நாள் ஓடியது. சாப்பாடு சாப்பிடு விட்டு குப்பர படுத்து கொள்ளும் யாரிடமும் பேச மாட்டாள் சிரிக்க மாட்டாள். ஏதாவது பேசினாள் அழ துடங்கிடுவாள், ஆனால் மற்ற குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை மட்டும் பார்ப்பாள்.பத்துநாள் வரை இருந்த்து பிறகு அவங்க வீட்டில் வேலைக்காரி கிடைத்து விட்ட்தால் பிறகு வரல..
அடுத்து நாங்க பார்த்து கொள்வதை கேள்வி பட்டு 11 மாத விஜி என்ற பெண் குழந்தையை ஒரு நர்ஸ் கொண்டு வந்து விட்டாங்க, அவளும் விட்டுட்டு போனதில் இருந்து மூச்சு விடாம அழுகை , வந்து குளிர் காலம் வேறு இங்கு இருக்கும் கிளைமேட்டுக்கு அந்த பொண்ணுக்கு முகமெல்லாம் ரேஷ் அப்படியே சிகப்பாக ரேஷ்ஷ் அதிகமாகிடும் அது தனியாக மருந்து தேய்த்து விடனும். எல்லா துணிமணிகளையும் ஒருத்தருடன் ஒருத்தர் சேராமல் தனியாக வைக்கவும். சாப்பாடு ஊட்டும் போதும் அப்படி தான் நல்ல சுத்தமாக வைத்து கொள்ளனும். ரேஷ் அதிகமாக இருப்பதால் அழுகை நிறுத்திய பாடில்லை எவ்வளவு தான் விளையாட்டு காட்டினாலும் அழுகை நின்றபாடில்லை. கொஞ்சம் பயமாக இருந்த்து. திடீருன்னு மூச்சு பிடிச்சி கொண்டால் என்ன செய்வது, பார்த்துக்க மாட்டேன் சொல்ல மனமில்லாமல் வேண்டாம் என்று சொல்லிவிட்வோம்.
இங்கு பனிகாலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக முகத்தில் ரேஷ் இருக்கும். சில நேரம் டிக்‌ஷாவுக்கும் ஆகும் உடனே அதற்கேற்ற கிரீம் அவங்க அம்மாவே தேய்த்து கொண்டு வந்து விடுவார்கள். சரியாகிடும்.

அடுத்து கொஞ்சநாளில் சின்சி என்ற 2 வயது குழந்தை எங்க வீட்டு எதிரிலேயே தான் வீடு. அரை நாள் தான் அந்த பொண்ணை பொருத்தவரை எந்த தொந்தரவும் கொடுக்கல. சாப்பாடு வேளையில் எல்லாரையும் ஒன்னா சுற்றி உட்காரவைத்து  நடுவில் பெரிய பேப்பர் விரித்து அவங்க அவஙக் டிபன் பாக்ஸை  வைத்து தனித்தனியாக ஸ்பூன் போட்டு ஊட்டி விடுவோம்,
முதலில் இருந்தேன் பெரிய நாப்கின் எல்லார் கழுத்திலும் கட்டி விட்டு பழக்க படுத்திட்டோம் ஆகையால் போட்டு இருக்கும் டிரெஸ் அழுக்காகாது.
குளிர்காலத்தில் சளி பிடித்தாலும் அதையே கட்டி விட்டு அவர்களா துடைத்து கொள்ளவும் சொல்லி கொடுத்துடுவோம் .
ஒரு ஆச்சரியம் இத்தனை குழந்தைகளை வைத்து வளர்த்தோம் ஆனால் சுவரில் ஒரு கிறுக்கல் கூட கிடையாது, குழந்தைகள் என்றாலே பெண் பென்சில், ஸ்கெச்,மார்க்கரை வைத்து வீடு முழுவது கோலமாக தான் இருக்கும்.
எப்படின்னு கேட்கிறீங்களா நிறைய டைரி , நோட்டுகள் அதில் தான் எல்லாரையும் எழுத சொல்வது. சின்சியும் ஆறு மாதம் கழித்து வீட்டு மாறுதலாகி போவதால் போய் விட்டாள்.
பிறகு ஒரு கென்யா நாட்டு அரபி லேடி அவங்க  பையன்த்தீன் நல்ல கொழு கொழுன்னு அழகாக இருந்தான் கொண்டு விட்டாங்க, விட்டுட்டு யாரும் பேரம் பேசல அவங்க தான் பேரம் பேசினாங்க, சரி என்ன செய்வது குழந்தைங்க விஷியத்தில் பேரம் பேசுவது பிடிக்கல ஆகையால் கொடுப்பதை வாங்கிக்கொண்டேன்.
அதுவும் மா மா என்று ஒட்டி கொண்ட்து, வந்து நோன்பில், மதியம் வந்து கூப்பிட்டு போகும் போது கஞ்சி செய்து வைத்திருப்ப்போம்.வாசனை மூக்கை தொலைத்து இரண்டு கப் கேட்டு வாங்கி போவங்க. மதினூக்கு அவங்க சாப்பாடை விட எங்க சாப்பாடு ரொம்ப பிடித்து இருந்த்து. எல்லா பசங்களுக்கும்மே ரொம்ப பிடிக்கும். மதீனுக்கு அவங்க அம்மா வந்து மதியம் கூப்பிட்டு செல்ல வந்தால் போகவே பிடிக்காது, உள்ளே போய் ஒளிந்து கொள்வான். அவர்களும் 3 மாத்த்தில் வீடு மாறி கொண்டு போய் விட்டார்கள்.
ஓவ்வொரு குழந்தை வரும் போது ஆரம்பத்தில் ரொம்ப அழுது நல்ல பழகி வரும் போது எங்களை விட்டு போய் விடுவார்கள். கொஞ்ச நாளைக்கு கஷ்டமா இருக்கும்... ஹகீம் ரஷீதும் அவஙக்  எல்லா ஏன் வரலன்னு கேட்டு கொண்டே இருப்பார்கள்.

ஒரு நாள் திடீருன்னு ஒரு கோவன் லேடி நல்ல ,  கதவ தட்டுன்னாங்க. திறந்தும் பெயரை கேட்டு கொண்டு இத பிடிங்க குழந்தைய‌ (பெயர் ஓலியன்) நான் இண்டர்வீவ்க்கு போறேன் இதோ ஒரு மணி நேரத்தில் வந்துடுரேன் பார்த்துக்கங்க மீதி எல்லாம் வந்து பேசுறேன்னுட்டு போயிட்டாங்க.
 நாங்களும் அப்படியே  குழந்தைய கையில் வாங்கவும் அடுத்த நிமிஷமே ஆள் எஸ்கேப்.
ஐய்யோ யாரு என்ன்ன்னு தெரியல. எப்ப திரும்பி வருவாங்க , போன் நம்பரும் இல்லையே? என்ன செய்வது தெரியல அந்த குழந்தை ஒரே அழுகை புது ஆள் புது இடம் பின்ன எல்லா குழந்தைகளும் அப்படி தான் ஒரு வாரம் போனால் தான் ஓரளவுக்கு அவர்களுக்கு ஒரு பிடிப்பு ஏற்படும்.
அந்த ஒரு மணி நேரம் முடிந்து காலையில் விட்டுட்டு போய் மதியம் 3 மணி ஆகிவிட்ட்து அவங்க வரவே இல்லை. ............அப்பரம் என்ன ஆச்சு , கொஞ்சம் பொறுங்க‌.


இப்படி ஓவ்வொரு குழந்தைகளுக்காக அவர்கள் கொண்டு வரும் உணவை வைத்து கேரளா, மங்களூர், கோவன் ,கென்யா குழந்தைகள் என்ன என்ன உணவு விரும்பி சாப்பிடுவார்கள் என தெரிந்துகொண்டேன்.


Monday, February 13, 2012

மொளகா பஜ்ஜி



மொளகா (மிளகாய்) பஜ்ஜி என்றாலே சென்னையில் உள்ள காந்தி பீச் தான் நினைவுக்கு வரும். அங்கு கிடைக்கும் பஜ்ஜியின் சுவையே தனி தான்.

சில‌ருக்கு மொள‌கா ப‌ஜ்ஜி சாப்பிட‌ ஆசை ஆனால் கார‌ம் வ‌யிறு உபாதை கார‌ண‌மாக‌ சாப்பிட‌ முடியாது, அத‌ற்கு இந்த‌ முறையில் செய்து சாப்பிட்டால் கார‌ம் அந்த‌ அள‌விற்கு தாக்காது. வினிக‌ரில் ஊறி சுவையும் வித்தியாச‌மாக‌ இருக்கும். முழுசா செய்ய‌ விரும்புவ‌ர்க‌ள் அப்ப‌டியே பாதியா வெட்டாம‌ல் காம்புட‌ன் க‌ல‌வையில் முக்கி பொரித்து சாப்பிட‌லாம்.










நீட்டு மிளகாய் = 3

பஜ்ஜி மாவு கலவை

கடலை மாவு = அரை கப்
அரிசி மாவு = ஒரு மேசை கரண்டி
மிளகாய் தூள் = அரை தேக்கரண்டி
உப்பு = தேவைக்கு
இட்லி சோடா = சிறிது
ரெட் க‌ல‌ர் பொடி = சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் = கால் தேக்கரண்டி
பெருங்காயப்பொடி = ஒரு பின்ச்

மிள‌காயை ஊற‌வைக்க‌

வினிக‌ர் = ஒரு மேசை க‌ர‌ண்டி
த‌ண்ணீர் = கால் க‌ப்
உப்பு = ஒரு சிட்டிக்கை
ச‌ர்க்க‌ரை = ஒரு சிட்டிக்கை











1. மிள‌காயை காம்பு ம‌ற்றும் விதைக‌ளை நீக்கி விட்டு இர‌ண்டாக‌ அரிந்து வினிக‌ர், த‌ண்ணீர், ச‌ர்க்க‌ரை, உப்பு சேர்த்து ஊற‌வைக்க‌வும்.

2. கடலை மாவு+ அரிசிமாவு+மிளகாய் தூள் + உப்பு+பெருங்காயப்பொடி+இஞ்சி பூண்டு பேஸ்ட்+இட்லி சோடா+ரெட் கலர் பொடி, அனைத்தையும் த‌யிர் ப‌த‌த்திற்கு போர்கார் ந‌ன்கு க‌ல‌க்கி ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.

3. எண்ணையை காய‌வைத்து மிளகாயை க‌ல‌வையில் தோய்த்து பொரித்தெடுக்க‌வும்.


குறிப்பு

பச்ச மிளகாய் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நல்லது என்று கேள்வி பட்டுள்ளேன். இப்படி விதை எடுத்து வினிகரில் ஊறி செய்தால் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். கூடுமானவரை பச்சமிளகாயை அதன் உள்ளே இருக்கும் விதையை எடுத்து விட்டு சமையலுக்கு அரைத்து சேர்க்கலாம். பொடியாக நருக்கியும் சேர்த்து கொள்ளலாம்


Wednesday, February 8, 2012

புற்றை வெல்வோம் வருமுன் காப்போம் - பெண்களுக்கு மட்டும்


நேசம் மற்றும் உடான்ஸ் வழங்கும் கேன்சர் விழிப்புணர்வு கட்டுரை பெண்களுக்காக 





புற்றுநோயை வருமுன் காக்க பெண்களுக்கான சில குறிப்புகள்.

நேசம் மற்றும் உடான்ஸ் வழங்கும் விழிப்புணர்வு கட்டுரை.

புற்றை வெல்வோம் - வருமுன் காப்போம் -  பெண்களுக்கு மட்டும்

சமையல் மற்றும் உணவில் பெண்கள் கவனம் கொள்ளவேண்டியது
எந்த நோயிக்குமே உணவே மருந்தாகும். அளவுக்கு அதிகமான உணவும் நல்லதில்லை. அது நஞ்சே ஆகும்.அந்தகாலம் போல் எந்த உணவும் இப்போது சத்தானது கிடையாது. பாஸ்புட் மோகம் அதிகமாக இருக்கு. சில உணவு பொருட்களில் கெமிக்கல் அதிகமாக கலந்து தான் விற்பனையாகிறது.

பெரும்பாலும் 80 % பெண்கள் தான் சமைக்கிறார்கள்இப்ப காலம் மாறி போய் ஆண்களும்  சமையல் உலகில் சிறந்து விளங்குகின்றனர்.

பெரும்பாலும் உணவு பொருட்களில் யாரும் காலவாதி தேதியை பார்ப்பதில்லை.
ஒரு பிரட் வாங்கினால் கூட காலவாதி தேதியை பார்க்காமல் காலவாதி தேதி முடிந்த பிறகும்  அப்படியே சாப்பிடுகின்றனர். .சாப்பிடும் போது நுனுக்கமாக  பிரட்டை பார்த்தால் அதனுள்  பூஞ்சை இருப்பதை நாம் அறியலாம்.

அதே போல் மீன் வறுவல்மட்டன் வறுவல்சிக்கன் வறுவல்,கட்லெட்அப்பளம்வத்தல்சுட்ட கிரில் அயிட்டங்கள் இதேல்லாம் சமைக்கும் போது கண்டிப்பாக சற்று அதிகம் கவனம் கொள்ள வேண்டும். கொஞ்சம் ஏமாந்தாலும்கவனக்குறைவாக இருந்தாலும் உடனே கரிந்து போய்விடும்.
எண்ணையை அதிக சூட்டில்  அப்பளத்தை போடும் போது கூட உடனே கரிந்து விடும் அதை தூக்கி எறிய மனமின்றி வீட்டில் இருக்கும் பெண்கள் அதை சாப்பிடுவதை தவிர்க்கவும்.மற்றும் சிக்கன், மீன், மட்டன் வறுவல்கள் செய்யும் போது கருகாமல் செய்வது நல்லது.அதிக தீயை வைத்து பொரிக்காதீர்கள்.

அதே போல் ரசம் தாளிக்கும் போது எண்ணையை சூடாக்கியதும் அதிக சூடாக இருந்தால் கடுகை போட்டதுமே ஒரு நிமிடத்துக்குள் கரிந்து விடும்ஆனால் அதையும் வேஸ்ட் பண்ண மனமில்லாமல் அப்படியே தாளித்து கொட்டுகின்றனர்.(இது சமையலில் சிலர் செய்து வரும் மிகப்பெரிய தவறு)
இதெல்லாம் சாப்பிடுவதால் சாப்பிடும் போது நல்ல தான் இருக்கும். ஆனால் நிறைய பேருக்கு நெஞ்சு கரிக்கும். கருகிய உணவை சாப்பிட்டால் என்ன ஆகும்.அடுத்து வாயு தொல்லை ஆரம்பிக்கும்.

கரிஞ்ச தீஞ்ச உணவும் கேன்ஸர் வருவதற்கு ஒரு காரணமாம்அதிக வெப்பத்தில் (க்ரில்பார்பெக்யூஎண்ணெயை கொதிக்கவைத்து பொரிப்பதுஅடுப்பு எப்பவும் பெரிய தீயில் வைத்துச் சமைப்பது...போன்றதும் கேன்ஸருக்குக் காரணமாம்...

கவனமாக தீயின் தனலை சமையலுக்கு ஏற்றவாறு வைத்து சமைக்கவும்.சமைக்கும் போது அதிக புகை போக அதை நுகர்ந்துகொண்டு சமைக்காதீர்கள் காற்றோட்டமாக ஜன்னலை திறந்து வைத்துகொள்ளுங்கள் அல்லது எக்ஜாஸ்ட் பேன் போட்டு கொள்ளுங்கள். 

ஜாம் ,தயிர்ஊறுகாய் பாட்டில்களில் எல்லாம் சரியாக காய்ந்த கரண்டி பயன் படுத்த வேண்டும்.அப்படி பயன் படுத்தாமல் விட்டால் மேலே பூஞ்சை படிந்த்து விடும். அதை சரியாக கவனிக்காமல் மேலோடு வழித்து போட்டு விட்டு பயன்படுத்துவோரும் இருக்கினறனர். அப்படி பயன்படுத்தாதீர்கள்.பெண்கள் குடும்பத்தில் உடல் நலம் கருதி சமையலில் கொஞ்சம் கூடுதல் கவனம் கொள்ளுங்கள்.

காய்கறிகளில் கொத்துமல்லி கீரை, காலிப்ளவர், புரோக்கோலி,கீரை வகைகள் அதில் நிறைய மணல் மற்றும் பூச்சி புழுக்கள் இருக்கும், முறையாக வென்னீரில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கழுவி பயன் படுத்தவும்.

ஆரோக்கியமான சமையலே நோய்க்கு நல்ல மருந்தாகும்.

 கர்பவாய்மார்பகபுற்றுநோயில் இருந்து பாதுகாப்பு பெற

 பெண்கள் ஆடைகள் விஷியத்தில் விலையுயர்ந்த  பட்டு புடவைகள் , சுடிதார் எனறு துணிகளை விலை அதிகமாக கொடுத்து வாங்குகின்றனர். ஆனால் யாரும்  உள்ளாடையில் அதிக கவனம் செலுத்துவதில்லை. நல்ல தரமான பருத்தி  (காட்டன்) உள்ளாடைகள் பார்த்து வாங்க வேண்டும். உள்ளாடையை ஆறு மாதம் ஒரு  முறை மாற்றுவது நல்லது. புதிய உள்ளாடைகள் வாங்கினாலும் ஒரு முறை  அலசி பயன்படுத்துவது நல்லது. (இதை யாரும் செய்வதில்லை).துவைக்கும் போது கொஞ்சம தண்ணீரில் சோப்பு போடு அதில் கொதிக்கிற வெண்ணீரை ஊற்றி அதில் ஊறவைத்து அலசவும். இப்படி செய்வதால்  அதில் உள்ள தொற்று  கிருமிகள் அழிந்துவிடும். கருப்பு நிற உள்ளாடைகள் அணிவதை தவிர்க்கவும்.இறுக்கமான உள்ளாடைகள் வாங்குவதையும் தவிர்க்கவும். இதனால் கூட தோல்பாதிப்பு நாள்பட ஆறாத புண் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 பெண்கள் மாதவிலக்கின் போதும் உள்ளடைகளை துப்பரவாக வெண்ணீரில் அலசி பயன் படுத்தவும். வாஙகும் சானிடரி பேட் களும் எக்ஸ்பேரி டேட் பார்த்து வாங்கி பயன்படுத்தவும். இல்லை என்றால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும் அப்படி அலர்ஜிக்கு  தேங்காய் எண்ணை பயன்படுத்துவது சிறந்ததாகும்.

 கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் போது அதையும் மருத்துவரிடம் சரியாக பரிசோதித்து கொள்ளுங்கள்ஒரு முறை எழுதி கொடுத்தால் மறுபடி போய் செக் பண்ணி கொள்ளவோ அதை பற்றி மருத்துவரிடம் விவாதிக்கவோ வெட்கப்பட்டு கொண்டு அதையே 10 வருடத்துக்கும் மேல் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்

 ஒரு வருடம் ஒரு முறை மருத்துவரிடம் சென்று சாப்பிடும் மாத்திரைகளை கலந்தாலோசித்து கொள்ளுங்கள்.

காப்பர்டி கருத்தடை சாதனம்  பயன் படுத்தினால் கூட கேரண்டி 3 முன்று வருடம் அல்லது 5 வருடம் என்று டாக்டர் சொன்னதும் அதை பற்றி கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஆனால் அதையும் சரியாக ஆறுமாதம் ஒரு முறை அல்லது வருடம் ஒருமுறை செக்அப்  செய்து கொள்ளுங்கள். முன்று வருடம் ஒரு முறை கண்டிப்பாக காப்பர்டியை மாற்றி விடுங்கள். இல்லை என்றால் (அ) அதிக உதிர போக்கு ஏற்பட வாய்ப்பிருக்கு. கர்ப்ப பை புண்ணாகிடும்  தற்போது புடவை கட்டினாலும் கேன்சர் வருகின்றது என்று தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. ரொம்ப இருக்கமாக அழுத்தி டைட்டாக பெட்டிகோட் அணிவதை தவிர்த்து கொள்ளுங்கள். புண்ணாகி அதுவே கேன்சர் கட்டிகளாக மாற வாய்ப்பிருக்கு. சிலவிடயங்கள் முறையாக பின்பற்றினாலே தொற்று கிருமிகள் அண்டாமல் கர்பவாய் புற்றுநோயில் இருந்துபாதுகாப்பு பெறலாம்.


பல் வலி வந்தால் இரண்டு நாட்கள் அதிக வலி இருக்கும் பிறகு வலி நின்று விடும்திரும்பவும் வந்து வந்து சரியாகும்அதான் சரியாகி விட்டதே என்று விட்டு விடாமல் உடனே  உரிய மருத்துவரை அனுகுங்கள். அதே போல் வாயில் பிளந்து பிளந்து கொப்புளங்கள். இருந்தாலும் கவனம் கொள்ளவேண்டும். வயிற்றில் புண் இருந்தால் தான் வாயில் கொப்புளம் வரும். அதுவும் நாளடைவில் கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பிருக்கு.

தலை வலியோவயிற்று புண்வயிற்று வலி நெஞ்ரிச்சல்வாயு பிரச்சனை இதுபோல் இரண்டு முன்று மாதத்துக்கு மேல் சரியாகாமல் தொடர்ந்தால் உடனடியாக  மருத்துவரை சந்திக்கவும். ஏதும் தீராத வயிற்று வலி , வாய் புண் கொப்புளங்கள், நீண்ட நாள் வலியில்லாமல் ஆறாத கட்டி மற்றும் புண்கள் இருந்தால் அடிக்கடி மயக்கமாக இருந்தாலும்  என்ஸ்கோபி மற்றும் மெமோகிராம்  டெஸ்ட்போன்ற மருத்துவர் சொல்லும் சிகிச்சைகளை முறையாக எடுத்து கொள்ளுங்கள்.

நான் சரியான டயட்டில் தான் இருக்கிறேன் எனக்கு ஏன் கேன்சர் வருது என்று கூட நினைக்கலாம்அனைவருக்கும் கேன்சர் நோயை உண்டாக்கும் செல்கள் இருக்கதான் செய்யுமாம். அது சிலரை இல்ல இப்ப பலரை நிறையவே தாக்கி கொண்டு இருக்கிறது. அனைவருமே இதில் விழிப்புணர்வுடன் இருக்கவும்.
40 வயதை கடக்கும் போது புற்றுநோய்க்கான முழு பரிசோதனை எடுத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் ஒருவரை புற்றுதாக்கிவிட்டால் பரம்பரை பரம்பரையாக வரவும் வாய்ப்பிருக்கு. ஆகையால் கூடுதல் கனவம் கொள்ளுங்கள்

புற்றுநோய் பாதிக்கபட்டவர்கள் கவலை படாதீர்கள் அப்படியே இப்ப கீமோ, ரேடியேஷன், ஆப்ரேஷன் என செய்து இருந்தால் பொலியுஷன் நிறைந்த இடத்துக்கு போகாதீர்கள், அது உங்களுக்கு அலர்ஜியை உண்டாக்கும். அதே போல் சமைக்கும் போது அதிக புகையில் நிற்காதீர்கள். நிறைய ஆட்கள் இருக்கும் இடத்திற்கு போகாதீர்கள்.ஊதுபத்தி, சாம்ராணி புகை இருக்கும் இடத்தில் அந்த புகையை நுகர்ந்து கொண்டு இருக்காதீர்கள். தன்னம்பிக்கையோடு தைரியமாக முறையாக சிகிச்சையை எடுத்து கொள்ளுங்கள்.
.

. 

வாழ்வேமாயம் படத்தில் தான் கேன்சர் பற்றியே தெரியும். அதற்கு பிறகு ஆங்காங்கே சினிமா நடிகைகளுக்கு கேன்சர் என்பது ,தெரிய வந்தது.
 ஆனால் இப்போதுஎங்கு யாரை பார்த்தாலும் என்னன்னு கேட்டாலே கேன்சர் தான்.
 கடந்த ஆறு ஏழு வருடங்களாக சந்திக்கும் நிறைய பேர் (எப்படியும் 20 பேருக்கு மேல்) கேன்சர் இதில் பலர் இறந்திருக்கிறார்கள் சிலர் புற்றை வென்றும் இருக்கிறார்கள்.

ஆகையால் சிந்தியுங்கள் பெண்களே உயிர்வாழ உணவு மிகவும் முக்கியம் அதை சரியான முறையில் சமைப்பது உங்கள் கடமை சிறிது கவனக்குறையால் என்றுமே தீராத பெரிய வியாதி, அதிக செலவு,மன உலைச்சல், மற்றவர்களுக்கு  தொந்தரவு, சந்தோஷமின்மை இதெல்லாம் தேவையா???
இதேல்லாம் மேற்கண்ட விளைவுகளால் புற்று நோய் ஏற்பட்டவர்களை  நேரில் கண்ட்தை வைத்து தொகுத்து அளித்துள்ளேன்.


 இந்த புற்றுநோய் விழிப்புணர்வு செய்தியை முடிந்த வரை தெரிந்தவர்கள் அனைவருக்கும் சொல்லுங்கள்.

ஆக்கம்

ஜலீலாகமால்



கேன்சர் நோயாளிகளுக்கான உணவு முறை

பதிவுலக தோழ தோழியர்களை இந்த முன்று பதிவுக்கும் உடான்ஸில் ஓட்டு போடுமாறு(விருப்பம் இருந்தால்) கேட்டு கொள்ளுங்கள்