Tuesday, March 26, 2013

தோடம் பழ ஷாப்டி கேக் - Grapefruit Pancake



எல்லா புகழும் இறைவனுக்கே என்ற வலைப்பூ எழுதும் , என் நீண்ட நாள் தோழி ஸாதிகா அக்காவின் குறிப்பு.
 கீழக்கரையை சேர்ந்த சென்னை வாசி என் அன்பு தோழி.
ஸாதிகா அக்கா அவங்க வலைப்பூவில் சமையல் குறிப்பு எழுதுவதில்லை 
பல சிறு கதைகள், பயணங்கள், சுற்றுலா, போன்ற பல ஜனரஞ்சக பதிவுகளை இங்கு பகிர்ந்து வருகிறார்கள்.குறிப்பாக அவர் கற்பனையில் உதிக்கும்கேரக்டர்களை மிகவும் தத்ரூபமாக உயிரோட்டமாக அவருக்கே உரிய நகைச்சுவை பாணியில் எழுதுவது மிகவும் ரசிக்கதக்கது.
இவர் எழுதிய தயிர் பானைக்குள் பிரியாணியையும் சற்று நோக்குங்கள்.

ஸாதிகா அக்கா தயாரித்த சுவையான பட்டர் பிஸ்கேட் இட்லி ஷேப்பில் தயாரித்து வாயில் போட்டால் அப்படியே கரைவது போல் இருக்கும் 


புல் கிரில் சிக்கனை சூப்பராக சமைப்பார்கள்.  பேரன் ஆமிருக்கு செல்லமான யங் பாட்டி.

இது மட்டுமல்ல இரண்டு வருடம் முன் அவங்க வீட்டுக்கு நானும் மர்லியும் சென்ற போது, அசத்தலான கீழக்கரை ஸ்பெஷல் பெட்டிசும், ஹோட்டல் மிக்ஸர் ஆனால் ஹோம் மேட் இவங்க கைவண்ணத்தில் செய்தது, சுவை சொல்ல வார்த்தை இல்லை.



சென்னையில் உள்ள மூலை முடுக்கில் உள்ள எல்லா ரெஸ்டாரண்டையும் நமக்கு சுற்றி காண்பித்துவிட்டார்கள் , வெளிநாட்டிலிருந்து சென்னை செல்லும் பயணிகள் கவனத்துக்கு சென்னைக்கு போகும் முன் ஒரு முறை ஸாதிகா அக்கா பிளாக்கை தரோவாக பார்த்து விட்டு செல்லுங்கள்.

சாப்பாட்டை பற்றின கவலை இருக்காது.


தோடம் பழ ஷாப்டி கேக், தோடம் பழம் என்றால் ஆரஞ்சு பழம் என்னும் ஸ்வீட் லைம், நான் இந்த பழத்திலும் செய்து இருக்கிறேன், இந்த பேன்கேக்கை ஆரஞ்சு பழம், மொஸம்பி, கமலாவிலும் செய்துள்ளேன்

போஸ்ட் பண்ண பிறகு தான் ஸாதிகா அக்கா மொஸம்பி என்றால் ஆரஞ்ச் என்றார்கள், ஆகையால் மாற்றி உள்ளான்.
கிரேப் ஃபுரூட் என்று தான் நினைத்து கிரேப் ஃப்ரூட் அதிலும் செய்து பார்த்தேன்.


கிரேப் ஃபுரூட்  =   இது சுகர் பிராப்ளம் இருப்பவர்களுக்கு சர்க்கரை சேர்க்காமல் ஜூஸாக அடித்து குடித்து வந்தால் சுகர் லெவல் கட்டு படும்.கொலஸ்ராயிலையும் கட்டு படுத்தும்



இந்த குறிப்பை   அறுசுவையில்  கூட்டாஞ்சோறு பகுதியில் பகிர்ந்து இருக்கிறார்கள், இது பல வருடம் முன் மங்கையர்மலரில் முதல் பரிசு வென்ற குறிப்பு.

பொதுவாக பேன் கேக் ( மைதா சேர்த்து செய்யும் முட்டை தோசை/அடை) காலை நேர டிபனுக்கும் , குழந்தைகளுக்கும் செய்து கொடுக்க்கும் இலகுவான ஹெல்தியான உணவு,

இதை நானும் ஏற்கனவே பல பேன்கேக்குகள் (மைதா முட்டை தோசை )இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.சற்றே வித்தியாசமான சத்தான ஸாதிகா அக்காவின் இந்த பேன்கேக்கையும் சுவைத்து மகிழுங்கள்


தேவையானவை

தோடம்பழம் - 3
வெள்ளை புட்டரிசி - 2 டம்ளர்
சர்க்கரை - 1 டம்ளர்
கெட்டி தேங்காய்ப்பால் - 2 டம்ளர்
முட்டை - 1
ஏலம் - 5
சமையல் சோடா - 1 பின்ச்
மைதாமாவு - 1/2 கப்
வனஸ்பதி(அ)நெய் - தேவைக்கு



செய்முறை

முதல் நாளிரவே அரிசியை அலம்பி, ஊற வைக்கவும்.
மறுநாள் தேங்காய்ப்பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.




தோடம் பழத்தை நீர் சேர்க்காமல் பிழிந்து கெட்டியாக சாறு எடுத்துக்கொள்ளவும்.



தோடம்பழச்சாறில் சர்க்கரை, சோடா, ஏலப்பொடி, அடித்த முட்டை கலந்து, அரைத்த மாவையும், மைதாவையும் சேர்த்து தோசைமாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.




தோசைக்கல்லை அடுப்பில் வைத்து டால்டா அல்லது எண்ணெய் விட்டு ஒரு குழிக்கரண்டி அளவு எடுத்து அடை ஊத்தப்பம் போல் ஊற்றவும். 


வார்க்கக்கூடாது. ஒரு புறம் சிவந்ததும், மறுபுறம் திருப்பிப்போடவும்.
சுவையான, வித்தியாசமான, இனிப்பு அடை இது. நான்கு நாள் வைத்து இருந்தாலும் கெடாது.



*************


இதில் நான் கெட்டி தேங்காய் பால் எடுக்கவில்லை, நெய் க்கு பதில் பட்டர் + எண்ணை சேர்த்து கொண்டேன்.
கேக் செய்யலாம் என்று தான் வாங்கி வந்தேன். முட்டை சேர்த்து மைதா தோசை எங்க விட்டு பேவரிட் அதில் பல வித விதமாக செய்தவதுண்டு, வாழைபழ பேன் கேக்ம் , தேஙகாய் பேன்கேக், டுட்டி புரூட்டி பேன்கேக், ஆரஞ்சு பழ பேன்கேக், பம்கின் பேன் கேக் என்று செய்தவதுண்டு, ஆபிஸ் விட்டு வண்டி விட்டு இரங்கும் இடத்தில் உள்ள ஜியான்ட் சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்ததும் முதலில் நான் வாங்குவது பச்சை பசேலுன்னு இருக்கும் பாலக், புதினா, கொத்துமல்லி ஒரு மண் அழுக்கு இல்லாம் சூப்பராக பேக் பண்ணி வைத்திருக்கும், அடுத்து நோட்டம் இடுவது பழங்கள், அப்ப கண்ணில் தென்பட்டது, இந்த கிரேப் புரூட் என்னும் தோடம் பழம் தான் .   இந்த பழத்தை பார்த்ததும் ஸாதிகா அக்கா ஞாபகம் வந்தது. உடனே வாங்கி வந்து செய்தாச்சு.,



ஆரஞ்சு பழம்
தோடம் பழம்
மொஸம்பி
மதுர நாரங்கா
கமலா
இது எல்லாமே ஒரே குடும்பம் தான் அப்ப்டின்னு நினைக்கிறேன். யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிய படுத்தலாம்.





 Hudson Canola Oil Give Away. @ Vimitha's Hearty and Healthy -



7 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

எங்கள் ஊரில் இவைகள் எல்லாம் கிடைக்குமா...? என்று தெரியவில்லை... இருந்தாலும் bookmark செய்து விட்டேன்... நன்றி சகோதரி...

கோமதி அரசு said...

ஸாதிகாவுக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

அன்பின் ஜலி,என்னுடைய பரிசு பெற்ற பழைய குறிப்பை அறுசுவையில் இருந்து தேர்ந்தெடுத்து அழகாக சமைத்து பந்தியிலிட்டதுடன் என்னை பற்றிய அறிமுகத்தினையும் எனது லின்குடன் கொடுத்துள்ளீர்கள்.மிக்க மகிழ்ச்சி நன்றி.குறிப்பிட்ட சில வரிகளை நீக்கி விடுமாறு நான் மெயில் செய்தும் நீங்கள் இன்னும் நீக்கவில்லை.நான் சாதாரண நடுத்தர வர்க்க மனுஷிதான்.பிளாக் எழுதுவதால் உங்களைப்போன்றவர்களின் நட்புக்கள்தான் என் சொத்தும் சேமிப்புமாக உள்ளது.மீண்டும் நன்றி.

ஸாதிகா said...

திண்டுக்கல் தனபாலன் புட்டரிசி ஸ்டிக்கி ரைஸ் என்றால் சென்னையில் ஒருசில கடைகளில் கிடைக்கும்.இதன் தாயாரிப்பு தாய்லாந்தில் அதிகமாக இருப்பதால் தாய்லாந்து அரிசி என்றும் கூறுவார்கள்.மன்னடி பகுதியில் உள்ள கடைகளில்.பிரபல அரிசி மண்டிகள்,சூப்பர் மார்கெட்டுகளில் கிடைக்கும்.இந்த அரிசியை வைத்து பலவித இனிப்புபண்டங்களை தயார் செய்யலாம்.சுமார் 200 ரூபாயவிலையில் ஒரு கிலோ அரிசி கிடைக்கும்.

நான் ஜூஸ் செய்து சாப்பிடும் சாத்துக்குடிப்பழ ரசத்தால் செய்தேன்.ஜலி ஆரஞ்சு வண்ண சாத்துக்குடிப்பழத்தால் செய்து இருகின்றார்.

Mahi said...

அறுசுவையில் குறிப்பு பார்த்திருக்கிறேன், படங்களுடன் செய்து காட்டியமைக்கு நன்றி ஜலீலா அக்கா!

குறிப்பை பகிர்ந்த ஸாதிகா அக்காவுக்கும், செய்து காட்டிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

Asiya Omar said...

மிக அருமையான குறிப்பு,அசத்தலாக செய்து காட்டியிருக்கீங்க ஜலீலா..பகிர்ந்த ஸாதிகாவிற்கும் செய்து அசத்திய உங்களுக்கும் பாராட்டுக்கள்.

ஸாதிகா said...

மிக்க நன்றி ஜலி,இணையம் பக்கம் வரையலவில்லை.அவ்வப்பொழுது கைபேசிமூலம் பேஸ்புக்கில் லைக் போடுவதுடன் சரி.மிக்க நன்றி ஜலி.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா