இந்த மட்டன் தக்குடி இஸ்லாமிய இல்ல பல வகை சமையல் வகைகளில் இதுவும் ஒன்று
மிகவும் சத்தான டிபன் வகை.
எங்க வீட்டு கல்யாணங்களில் கல்யாணம் முடிந்து அன்று மாலை அல்லது மறுநாள் பெண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு பூஜோடிச்சி அனுப்பும் போது அன்று அனைவருக்கும் செய்யும் ஸ்பெஷல் டிபன் வகை. ரொம்ப அருமையாக இருக்கும்.
இது நிறைய செய்வது ரொம்ப சிரமம், இப்போது யாரும் செய்வதில்லை வேலை பாடு ஜாஸ்தி என்று , மட்டன் சேமியா, மட்டன் மக்ரூனி அதுவும் வெளியில் ஆர்டர் கொடுத்து விடுகின்றனர்.
முன்பு கல்யாண வீட்டில் நாங்கள் அனைவரும் ஒன்று கூடி மொத்தமாக உட்கார்ந்து அரட்டை அடித்து கொண்டே இந்த தக்குடியை நன்கு குழைத்து பிடித்து பெரிய பெரிய தாலா க்களில் வைத்து சமையனாவிடம் கொடுது அனுப்புவோம்.
அடுத்து இப்ப இரண்டு வருடம் முன் ஒரு கல்யாணத்தில் தக்குடி தான் போடனும் என்று முடிவு செய்து ஒரு வாரம் ஆள் வைத்து சமைத்தார்கள்.
அன்று தக்குடி போட்டார்கள், பூ ஜோடிப்பு எல்லாம் முடிந்தது, சமையல்காரரும் தக்குடி தம் போட்டு விட்டு வேறு வேலையாக வெளியில் போய் விட்டார். சட்டிய திறந்து தக்குடி எடுக்கிறார்கள் அது கொழுக்கட்டை பிடித்து போட்ட மாதிரி அப்படியே இருக்கு வேகவில்லை.
பிறகுதான் வந்த சமையனாவுக்கு தக்குடி போட தெரியாது, அதை பிரியாணி போல் தாளித்து தம் போட்டு விட்டு போய்விட்டார்,
தக்குடி செய்வதாக இருந்தால் கறி தாளிச்சி தண்ணீர் அளந்து ஊற்றி தர தரன்னு கொதிக்கும் போது ஓவ்வொரு குழக்கடைகளாக பிடிச்சி போடனும் சிறிது நேரம் கழித்து உடையாமல் அதறகென நீட்டு கண் அகப்பை கொண்டு லேசாக கிழிருந்து மேலாக பிரட்டி விடனும், இதே போல் 10 நிமிடத்துக்கு ஒரு முறை அடி பிடிக்காமல் கிளறி விடனும்
நல்ல பழக்க பட்டவர்களுக்கு ஈசி , பதம் பார்த்து இதை செய்ய்யாவிட்டால் எல்லாம் வீணாகிடும்.
இன்னும் தெளிவாக ஸ்டெப் பை ஸ்டெப்பாக இந்த குறிப்பை பார்க்க இங்கு சென்று பார்க்கலாம்
கறி கொழுக்கட்டை (தக்குடி)
தேவையான பொருட்கள்
*************************************
வருத்த மாவு - 400 கிராம்( இரண்டு டம்ளர்)
மட்டன் - 400 கிராம்
மாவில் விறவி கொள்ள
**********************************
வெங்காயம் - இரண்டு
பச்ச மிளகாய் - ஒன்று
கொத்து மல்லி தழை - கால் கப்
புதினா - கால் காப்
தேங்காய் துருவியது - அரை முறி
உப்பு - அரை தேக்கரண்டி
கறி தாளிக்க
*****************
எண்ணை - கால் கப்
பட்டை - ஒரு அங்குலம் அளவு ஒன்று
கிராம்பு - இரண்டு
ஏலக்காய் - இரண்டு
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பச்ச மிளகாய் - ஒன்று
கொத்து மல்லி - சிறிது
புதினா - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசை கரண்டி
மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒன்ன்ரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - முன்று தேக்கரண்டி (தேவைக்கு)
கடைசியில் கரைத்து ஊற்ற
****************************************
வருத்த மாவு - இரண்டு மேசை கரண்டி
செய்முறை
***************
1. முதலில் கறியை கழுவி வைக்கவும். வெங்காயம்,தக்காளியை அரிந்து வைக்கவேண்டும். மசாலா தூள் வகைகளையும் ரெடியாக வைக்கவும், புதினா, கொத்துமல்லி யை மண் போக கழுவி தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.
2. இஞ்சி பூண்டு பேஸ்ட்,உப்பு,மாவு, மாவில் கலக்க வேண்டிய வெங்காயம்,பச்சமிளகாய்,கொத்துமல்லி,புதினாவை பைனாக சாப் பன்ணி ரெடியாக வைக்க வேண்டும்.
3.ஒரு பெரிய வயகன்ற சட்டியில் எண்ணையை காய வைத்து அதில் பட்டை,கிராம்பு,ஏலத்தை போட்டு பொரிய விட வேண்டும். பொரிந்ததும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
4.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் பொட்டு நன்கு பச்ச வாடை போகும் வரை வதக்க வேண்டும்.
5.தக்காளி, கொத்துமல்லி, புதினா, பச்சமிளாயை போட்டு நன்கு வதக்கவும்.
6.எல்லா தூள்வகைகளையும்(உப்பு,தனியா,மஞ்சள்,மிளகாய்)போட்டு நன்கு பிரட்ட வேண்டும்.
7.ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து மூடி போட்டு வேக விட வேண்டும்.
8.பிறகு ஒன்றுக்கு முன்று மடங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
9. மாவில் தேங்காய்,சிறிது உப்பு,கொத்துமல்லி,புதினா,வெங்காயம் நல்ல பைனா எல்லாவற்றையும் சாப் செய்து போட்டு கிளறி வைக்க வேண்டும்.கொதித்த கறி தண்ணீரிலிருந்து இரண்டு டம்ளர் மசாலா தண்ணீரும் எடுத்து கொள்ளவேண்டும். (இது மாவு கொழுக்கட்டை பிடிக்க விறவுவதற்கு)
10. மசாலா தண்ணீரை மாவில் போட்டு பிசறி நன்கு அழுத்தி குழைத்து கொள்ள வேண்டும்.(மசாலா தண்ணீர் ஊற்றி பிடித்தால் தான் இது நல்ல டேஸ்டாக இருக்கும்)
11.குழைத்த மாவை கொழுக்கட்டைகளாக பிடித்து தட்டில் அடுக்கி வைக்க வேண்டும்.
12.பிடித்த கொழுக்கட்டைகளை ஒவ்வொன்றாக கொதித்து கொண்டிருக்கும் கறி மசாலாவில் போட வேண்டும்.
13. போட்ட தும் கரண்டியை போட்டு கிண்ட கூடாது கொழுகட்டை கரைந்து விடும்.
ஒரு தோசை கரண்டி அல்லது கட்டை கராண்டியால் லேசாக ஒன்றோடு ஒன்று ஒட்டமல் பிறட்டி விட வேண்டும்.
14.கறியும், கொழுக்கட்டையும் ஒரே நேரத்தில் வெந்துவிடும். முதலே கறி வெந்துவிட்டால் கறிகரைந்து விடும்.
15.இப்போது கரைத்து ஊற்ற வேண்டிய மவை தண்ணீரில் கரைத்து ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
16.. லேசகாக கிளறி விட வேண்டும்.
17. கடைசியில் தம் போடும் கருவி (அ) தோசை தவாவை வைத்து பத்து நிமிடம் சிம்மில் வைத்து இரக்கவேண்டும்.
18 . சுவையான கறி தக்குடி (கொழுக்கட்டை ரெடி).
குறிப்பு
************
வறுத்த மாவு தயாரிக்கும் முறை
***********************************
மொத்தமாக 3 கிலோ பச்சரிசி (அ) சிகப்பரிசியை நன்கு களைந்து வடிகட்டி ஒரு மெல்லிய துணியில் காயவைத்து மிஷினில் கொடுத்து திரித்து கொள்ளவேண்டும்.
இதை ( கொழுக்கட்டை, வெல்லம் உருண்டை ,வணக்கம், சுத்திரியான், தட்டு ரொட்டி ( அரிசிமாவு ரொட்டி, பத்திரி) , புட்டு, இனிப்பு கொழுக்கடை) போன்றவை செய்ய பயன்படுத்தலாம்,
திரித்த மாவை ஒரு பெரிய இரும்பு வானலியில் போட்டு நன்கு அடி பிடிக்காமல் வறுக்கனும்.
வறுத்ததை ரவை சலிக்கும் சல்லடையில் சலித்து கொள்ளவேண்டும் .
அப்படி இல்லை என்றால் ஆட்டு தக்குடி என்பார்கள் , அதாவது அரிசியை ஊறவைத்து மிக்சியில் கெட்டியாக ஆட்டி அதனுடன் சிறிது ரெடி மேட் அரிசி மாவு கலந்து தக்குடியாகவும் செய்யலாம்.
இதைராகி மற்றும் ரவையிலும் செய்யலாம். ரவையை நன்கு வறுத்து கொள்ள வேண்டும்.
எலும்புடன் உள்ள மட்டன் போட்டால் போட்டால் தான் சுவை அதிகமாக இருக்கும்.
கறிக்கு பதில் சிக்கன், இறால், வெஜிடேபுள்ஸ் சேர்த்தும் செய்யலாம்.
கல்யாணவீட்டு மெனு, ஈத் ஸ்பெஷல் ( ஹஜ் பெருநாள்)