உளுந்து வடை தமிழ் நாட்டின் பாரம்பரிய மாலை நேர சிற்றுண்டியும் காலை நேரம்
டிபனும் ஆகும். இதை தயிர் வடை, சாம்பார் வடை, மோர் குழம்பு வடை, ரசம் வடை,கீரை வடை என பல வகைகளாக தயாரிக்கலாம்.
இந்த வருடம் நோன்பில் இங்கு துபாயில் சரியான வெயில், வெளியில் சென்றால் குற்றலத்தில்
குளித்து விட்டு வந்தது போல் வேர்வையில் நனைந்து வரலாம்.
பிரியாணி தாளித்து வெயிலில் வைத்தால் கூட தானே தம் ஆகிடும் அந்த அளவுக்கு
கோடை வெயில்இங்கு கொளுத்துகிறது.
இந்த நோன்பு நேரத்தில் நோன்பு திறக்க கஞ்சியுடன் பல சிற்றுண்டிகள் செய்வோம். அடிக்கிற இந்த வெயில் நேரத்தில் குளு குளுன்னு இந்த
தயிர் வடை செய்து சாப்பிட அருமையாக இருக்கும்.
தயிர் வடை
தேவையான பொருட்கள்
வடைக்கு
உளுந்து பருப்பு = ஒரு டம்ளர்
(200கிராம்)
உப்பு = முக்கால் தேக்கரண்டி
இஞ்சி - ஒரு சிறிய துண்டு பொடியாக அரிந்தது
பச்ச மிளகாய்
= இரண்டு பொடியாக அரிந்தது
ஆலிவ் ஆயில் = அரை தேக்கரண்டி
கருவேப்பிலை பொடியாக அரிந்தது
- சிறிது
வெங்காயம் (பொடியாக அரிந்தது 4 மேசைகரண்டி)
தயிர் தாளிக்க
தயிர் 300 கிராம்
பால் = அரை டம்ளர்
எண்ணை அரை தேக்கரண்டி
கடுகு = அரை தேக்கரண்டி
கருவேப்பிலை = சிறிது
பெருங்காயம் = ஒரு பின்ச்
மோர் = வடை தோய்க்க
அலங்கரிக்க
ஓம பொடி ,காராபூந்தி
செய்முறை
1. உளுந்து பருப்பை ஒரு மணி
நேரம் ஊறவைக்கவும்.
2. ஊறிய உளுந்தை தண்ணீரை வடித்து
அதில் உப்பு, ஆலிவ் ஆயில்,
சேர்த்து அரைத்து கொள்ளவும். ஆலிவ்
ஆயில் சேர்ப்பதால் ஈசியாக அரையும்.
இஞ்சி பச்சமிளகாய் கருவேப்பிலை,வெங்காயம்
சேர்த்து பிசைந்து கொள்ளவும்
3. எண்ணையை காயவைத்து அரைத்த உளுந்து மாவை வடைகளாக
தட்டி பொரிக்கவும்
4. வடைகளை திருப்பி போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.
5.சூடான வடைகளை எடுத்து மோரில் நனைக்கவும்.(வெண்ணீரிலும் நனைத்து எடுக்கலாம்)
6.ஒரு சிறிய கிடாயில் எண்ணை ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து தயிர் நன்கு கலக்கி சிறிது பால் சேர்த்து உடனே அடுப்பில் இருந்து
இரக்கவும்.தேவைக்கு உப்பு சேர்த்து கொள்ளவும்.மோரில் நனைத்த வடைகளை தாளித்த தயிர் கலவையில் சேர்க்கவும்.10
நிமிடம் ஊறவைக்கவும்.
பவுளில் இரண்டு இரண்டு வகைகளாக வைத்து
தேவைக்கு சிறிது தயிர் கலவையும் சேர்த்து ஓமபொடி ,கொத்துமல்லி தழை,காரா பூந்தி தூவி
பரிமாறவும்.
சுவையான தயிர்
வடை ரெடி
கொளுத்தும் வெயிலுக்கு
இதமான உணவு. உடலுக்கு குளிர்ச்சி தர கூடியது.
நீங்களும் சுவைத்து மகிழுங்கள்
சென்னை ப்ளாசா பேஸ் புக் பேஜ் லைக் பண்ணுங்கோ...