தந்தூரி
தோஃபு பாலக் மக்ரூனி
சமைக்கும்
நேரம் – 15 நிமிடம்
ஆயத்த
நேரம் 15 நிமிடம்
சமைக்கும்
நேரம் – 25 நிமிடம்
பரிமாறும்
அளவு – 3 , 4 பிள்ளைகளுக்கு
தேவையான
பொருட்கள்
தாளிக்க
பட்டர்
+ எண்ணை – 2 + 2 தேக்கரண்டி
பச்ச
மிளகாய் - 2 ( பொடியாக அரிந்தது)
கொட
மொளகா - - 2 மேசை கரண்டி – பொடியாக அரிந்தது
மிக்சட்
வெஜிடேபுள்ஸ் – 100 கிராம்
ஸ்வீட்
கார்ன் – 50 கிராம்
நார்
பிராண்ட் வெஜிடேபுள் ஸ்டாக் – அரை கியுப்
சர்க்கரை
- - 2 சிட்டிக்கை
சோயா
சாஸ் – 1 மேசை கரன்டி
சில்லி
சாஸ் – 1 தேக்கரண்டி
டொமேட்டோ
கெட்சப் – 1 மேசை கரண்டி
வெள்ளை
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
உப்பு
– கால் தேக்கரண்டி
பாலக்
பெஸ்டோ – 2 மேசைகரண்டி
மக்ரூனி
– 300 கிராம் ( வேகவைத்தது)
தனியாக
வறுத்து கொள்ள
டோஃபு
– 150 கிராம்
உப்பு
– முக்கால் தேக்கரண்டி
காஷ்மீரி
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
லெமன்
ஜூஸ் – அரை தேக்கரண்டி
இஞ்சி
பூண்டு பேஸ்ட் – அரை தேக்கரண்டி
மக்ரூனியை வேகவைத்து தண்ணீரை வடித்து அதில் சிறிது ஆலிவ் ஆயில்
கலந்து வைக்கவும்.
தோஃபு வை வெண்ணீரில் அலசி அதை சின்ன சின்ன சதுர வடிவமாக கட் செய்து
அதில் மிளகாய் தூள் , உப்பு தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், தந்தூரி மசலா, லெமென் ஜூஸ்
கலந்து பத்து நிமிடம் ஊறவைத்து தவ்வாவில் சிறிது எண்ணை விட்டு பொரித்து
எடுக்கவும்.
ஒரு
வாயகன்ற நான்ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி சூடாக்கி , எண்ணை + பட்டர்
சேர்த்து சூடானதும் பச்சமிளகாய் , சர்க்கரை சேர்த்து தாளித்து காய்கறிகளை சேர்த்து
இரன்டு நிமிடம் வதக்கவும்.
நார்
பிராண்ட் வெஜிடேபுள் ஸ்டாக், சோயா சாஸ்,சில்லி சாஸ் கெட்சப் , பாலக் பெஸ்டோ, உப்பு
சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
அடுத்து
வறுத்து வைத்துள்ள தோஃபு, வெந்து வைத்துள்ள மக்ருனி எல்லாவற்றையும் சேர்த்து ஒரு
சேர கிளறிவிடவும்.
பாலக்
பெஸ்டோ தயாரிக்கும் முறை
தேவையானவை
பாலக்
கீரை - ஒரு கட்டு
வால்நட்
– 8
பச்சமிளகாய்
– 2
உப்பு - அரை தேக்கரண்டி
சர்க்கரை
– ஒரு சிட்டிக்கை
செய்முறை
பாலக்கீரை
கழுவி தண்ணீரை வடிக்கவும்.
ஒரு
வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவிட்டு , ஒரு சிட்டிக்கை சர்க்கரை, உப்பு சிறிது
சேர்த்து பாலக்கீரை அரிந்து சேர்க்கவும். இரண்டு கொதி வந்ததும் வடித்தட்டில் வடித்து
குளிர்ந்த தண்ணீரில் அலசவும்,
பிறகு
பச்சமிளகாய் , வால்நட் சேர்த்து அரைக்கவும்.
பாலக்
பெஸ்டோ கொஞ்சம் அதிகமாக தயாரித்து வைத்து கொண்டால் மக்ரூனி, நூடுல்ஸ், பாஸ்தா, ஸ்பெகதி
மற்றும் கீரின் வெஜ் கறிவகைகளுக்கு சேர்த்து கொள்ளலாம்.
சோயா
சாஸ் மற்றும் வெஜிடேபுள் ஸ்டாக்கில் அதிக உப்பு இருக்கும் ஆகையால் உப்பின் அளவை பார்த்து
போடவும்.
தோஃபுவுக்கு
பதில் பனீர் அல்லது சிக்கனும் பயன் படுத்தலாம்.
மக்ரூனி
வேகவைக்கும் முறை
குக்கரில்
தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு அதில் சிறிது உப்பு + எண்ணை சேர்த்து மக்ரூனியை சேர்த்து
நன்கு கொதிக்கும் போது குக்கரை மூடி வெயிட்டை போட்டு 5 விசில் விட்டு இரக்கவும. ( விசிலுன்னு
சொன்னதும் குக்கர மூடிட்டு எழுந்து நின்று வீசில் அடிக்கக்கூடாது)
ஆவி
அடங்கியதும் ( யார் ஆவின்னு கேட்கப்படாது)மெதுவாக
குக்கரை திறந்து மக்ரூனியை பெரிய கண்வடிகட்டியில் வடித்து லேசாக சிங்க் டேப்புக்கு
கீழ் தண்ணீரை ஓடவிட்டு லேசாக அலசி, அதில் எண்ணை சேர்த்து பிசறி வைக்கவும்.
இப்படி
செய்வதால் மக்ரூனி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக இருக்கும்.
பாஸ்தா
, மக்ரூனி எல்லாம் அரபிக், பிலிப்பைனிகள், இத்தாலியர்களில் உணவு.
குழந்தைகளுக்கு
மிகவும் பிடிக்கும், நாம் அதை நம் பக்குவத்துக்கு ஏற்ப சுவையாக தயாரிக்கலாம்.
விட்டமின் டீ சத்து குறைவாக இருப்பவர்கள், தோஃபு வை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்/
இன்டஸ்
லேடிஸில் கிட்ஸ் லன்ச் பாக்ஸ் காக அனுப்பிய ரெசிபி இது.
Tandoori Tofu Palak Macaroni -Step by Step
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/