Thursday, July 10, 2014

சைவ நோன்பு கஞ்சி /Veg Nonbu Kanji/Soup



 இஸ்லாமிய இல்லங்களில் நோன்பு காலங்களில் செய்யபடும் கஞ்சியின் ருசியே தனி தான், அதை விதவிதமாக செய்யலாம். சிக்கன் , மட்டன் , பீஃப், காய்கறி கஞ்சி என்று. எல்லாருக்குமே இதை சுவைத்து பார்க்கனும் என்று ஆசை தான். இனி அசைவம் சாப்பிடாதவர்களும் சுவைத்து மகிழலாம். இதற்கு சூப்பர் காம்பினேஷன் பருப்பு வடை தான் , இங்கு உள்ள பருப்பு வடை கடலை பருப்பை மிஷினில் கொடுத்து ஒன்றும் பாதியுமாய் உடைத்து வாங்கி செய்தது,

ரமலான் ஸ்பெஷல் சைவ நோன்பு கஞ்சி


ஏற்கனவே இங்கு டயட் நோன்பு கஞ்சி போஸ்ட்செய்துள்ள்ளேன். அங்கு வல்லியம்மா சைவ நோன்பு கஞ்சி எனக்கு ரொம்ப ஆசை என்றார்கள் இது அவர்களுக்காக இங்கு சைவ நோன்பு கஞ்சி
 ஏற்கனவே போட்டுள்ள டயட் நோன்பு கஞ்சியில் கூட சிக்கன் மட்டனுக்கு பதில் வேண்டிய காய்கறிகள் சேர்த்து சைவ பிரியர்கள் இப்படி தயாரித்து கொள்ளலாம்.



 கஞ்சி செய்ய தேவையான  அரிசி வகைகள்

நொய் - அரை டம்ளர் ( 100 கிராம்)
இரண்டு மேசை கரண்டி - பாசி பருப்பு
ஒரு மேசை கரண்டி - கடலை பருப்பு
ஒரு மேசை கரண்டி - பர்கல் (தேவைப்பட்டால்)
ஒரு மேசை கரண்டி - ஜவ்வரிசி
அரை தேக்கரண்டி - வெந்தயம்

 மேலே குறிப்பிட்டவைகளை கஞ்சி செய்ய ஆரம்பிக்கும்முன் களைந்து ஊறவைத்து விடுங்கள்.


தாளித்து வேக வைக்க
எண்ணை - முன்று தேக்கரண்டி
கேரட்
பட்டாணி
முட்டை கோஸ்
பீன்ஸ்
சின்ன வெங்காயம் - 10 எண்ணிக்கை
பெரிய வெங்காய்ம் - 1
பூண்டு - 10 எண்ணிக்கை
தக்காளி - 1
பச்ச மிளகாய் - 2
பட்டை லவங்கம் ஏலம் - தலா 1
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு



கடைசியாக தாளிக்க
 எண்ணை + நெய் - இரண்டு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - ஆறு எண்ணிக்கை
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை - ஒரு சின்ன கொத்து
கொத்து மல்லி தழை -  கைக்கு ஒரு கொத்து

 கேரட்டையும் முட்டை கோசையும் நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.
தக்காளி வெங்காயத்தையும் அரிந்து வைத்து கொள்ளவும்




ஒரு பெரிய சட்டியை அடிப்பில் வைத்து எண்ணை ஊற்றி காயவைத்து பட்டை கிராம்பு ஏலம் போட்டு பொடிய விடவும், கருவேப்பிலை பூண்டு சேர்த்து தாளிக்கவும்
பிறகு சின்ன வெங்காயம் , பெரிய வெங்காய்ம், சேர்த்து நன்கு வதக்கவும்,

அடுத்து தக்காளி, பச்ச மிளகாய் சேர்த்து வதக்கவும்
சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள் , உப்பு தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.  10 நிமிடம் மூடி போட்டு காய்கறிகளை வேக விடவும்.


அரிசி பருப்புவகைகள் எல்லாம் சேர்த்து ஒன்னறை கப்இருக்கும்

அதுக்குமுன்று மடங்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்

 நன்கு கொதி வந்ததும் ஊறவைத்த அரிசி பருப்புகளை சேர்த்து நன்குகிளறவும்

அடிபிடிக்காமல் அடிக்கடி கிளறி விட்டு கொள்ளவும், சிறிது கொத்து மல்லி தழை சேர்த்து கொதிக்க விட்டு அரிசி பருப்பு வகைகளை வேக விடவும்.


 கடைசியாக எண்ணை + நெய் விட்டு சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது கொத்துமல்லி கருவேப்பிலை போட்டு தாளித்து கஞ்சி யில் கொட்டி மீண்டும்கொதிக்க விட்டு இரக்கவும்.



சுவையான சைவ நோன்புகஞ்சி ரெடி
இதில் காய் கறிகள் உங்கள் விருப்பப்படி புரோக்கோலி, உருளை,காலிபிளவர் இது போல் சேர்த்து கொள்ளலாம்.

மஷ்ரூம் சேர்த்தும் செய்யலாம்.




How to make Veg nonbu kanjsi
How to make Rice with veg Soup
Step By Step Veg Soup

ரமலான் ஸ்பெஷல் சைவ நோன்பு கஞ்சி

நான் நோன்பு காலங்களில் இடை இடையில் இப்படி சைவ நோன்பு கஞ்சியும் தயாரிப்பேன்.
கீழே பல வகை நோன்பு கஞ்சி யின் லிங்க் இருக்கிறது சுட்டிகளை சொடுகிபார்க்கவும்


http://samaiyalattakaasam.blogspot.com/2009/08/blog-post_22.html

வெள்ளை வாயு கஞ்சி 


பிரியாணி கஞ்சி

மட்டன் கொத்துக்கறி ( மட்டன் கீமா) கஞ்சி

தேங்காய் பால் சீரக கஞ்சி


சிக்கன் ஹரீஸ்


மட்டன் கொத்து கறி கீமா கஞ்சி

-- http://samaiyalattakaasam.blogspot.com/2013/08/blog-post_3.html

டயட் நோன்பு கஞ்சி

http://samaiyalattakaasam.blogspot.com/2011/08/blog-post_11.html
ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப்
Tag: How to make Nonbu kanjsi, Ramadan Soup, Kanji, Porridge, Step By Step.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, July 7, 2014

மட்டன் ஷம்மி கபாப்/மட்டன் கபாப் - Shammi Kabab



Shammi Kabab/Shami Kabab Sandwich/Mutton vadai/Mutton kheema Patties/Mutton Kheema Tikki


ஹோட்டலில் ஸ்டாட்டராக பரிமாறும்  ஷம்மி கபாப் இஸ்லாமிய இல்லங்களில் பிரசத்தி பெற்ற ஒரு ஸ்நாக்ஸ் வகை. எனக்கு ரொம்ப பிடித்த ஸ்டாட்டர் இது.



 Mutton kheema Patties /Mutton Tikki/Shammi Kabab

Ramalan Recipe/ நோன்பு கால சமையல்

தேவையான பொருட்கள்

  • கீமா(கொத்திய கறி ) - நூறு கிராம்
  • பூண்டு - நான்கு பல்லு
  • காஞ்சமிளகாய் - இரண்டு
  • பச்ச மிளகாய் - ஒன்று
  • கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி (பட்டைம்கிராம்பு,ஏலம்)
  • தேங்காய் - இரண்டு பத்தை
  • வெங்காயம் - ஒன்று
  • கொத்து மல்லி கீரை - கால் கட்டு
  • கடலை பருப்பு - கால் கப் 
  • மைதா,கார்ன்பிளர் பவுடர் - தலா ஒரு தேக்கரண்டி
  • ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி
  • எண்ணை - பொரிக்க தேவயான அளவு


செய்முறை

கடலை பருப்பை அரைமணி நேரம் ஊறவைக்கவும்.அதற்குள் கொத்திய கறியை கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி அதில் காஞ்சமிளகய்,பூண்டு, பச்ச மிளகாய், உப்பு போட்டு சுருட்டி வேக வைத்து தண்ணிரை வற்ற விடவும்.



வற்றியதும் அதில் ஆலிவ் ஆயில்,வெங்காயம் போட்டு மேலும் ஒரு முறை பிறட்டி, கொத்து மல்லியும், தேங்காயை பொடியாக அரிந்து அல்லது துருவி சேர்த்து ஊறவைத்த கடலை பருப்பையும் சேர்த்து  சுருட்டி கரம் மசாலா பொடி சேர்த்து ஆறவக்கவும்.

.

ஆறியதும் மிக்சியில்  முதலில் மைதா, கார்ன்பிளார் மாவை போட்டு பிறகு ஆறிய கலவையை போட்டு நன்கு அரைக்கவும்




சில நேரம் கறி வடை செய்யும் போது உதிர்ந்து  போகும் அதற்கு முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து பிசறி சுடலாம்.



ஒரு தோசை கல்லை சூடு படுத்தி கொஞ்சமாக எண்ணை ஊற்றி காயவைத்து  வேண்டிய வடிவில் தட்டி போடவும்.



ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு நன்கு அழுத்தி விட்டு மறுபக்கம் வெந்ததும் கருகாமல் பொன்னிறமாக இருக்கும் போதே எடுத்து விடவேண்டும்.



மதியம் பிளைன் சாதத்துடன் , பருப்பு , கத்திரிக்காய் ரசத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


காலை அல்லது இரவு உணவிற்கு பிரட்டுடன் சாண்ட்விச் போலவும் செய்யலாம்.



குழந்தைகளுக்கு பள்ளிக்கு எடுத்து செல்ல ரிச்சான சாண்ட்விச்.



Mutton Kheema vadai
How to make Mutton Shammi kabab - Step by Step

இது ரொம்ப ஷாப்டான பக்க உணவு மற்றும் ஸ்ட்டாடர், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது.


நோன்பு காலங்களில் செய்யும் ஸ்பெஷல் வகை இந்த ஷாமி கபாப் .

 ப்ளைன் சாப்பாட்டுக்கு , கத்திரிக்கா ரசம் வைத்து இதை பக்க உணவாக வைத்து சாப்பிட மிக அருமையாக இருக்கும். இந்த காம்பினேஷன் எனக்கு ரொம்ப பிடிக்கும்.


 https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, July 3, 2014

அலிகார் பிரியாணி - Aligar Biriyani









என் இனிய தமிழ் மக்களே. என்னும் வலை பூவை எழுதி கொண்டு இருந்த அன்னு செய்த பிரியாணி ,
அன்னு வின் வலைப்பூக்கள்

தாய் தரும் கல்வி

ஆங்கிலம் பேசலாம்

இனிய ரமதான்

அன்னு அறுசுவை , வலைப்பூ, முகநூல் தோழி. இப்ப பிள்ளைகளுடன் பிஸியாக இருப்பதால் இப்போதைக்கு பிளாக்கில் எழுவதுவதை நிறுத்தி வைத்துள்ளார்கள்.
எங்க டாடி இறந்த போதும், எனக்கு உடல் நிலை சரியில்லாத போதும் எனக்கு  ஆறுதலாக  குர் ஆன் ஹதீஸ்களை  மெயில் மூலம் மிகவும் அனுப்பி வைத்து என் மனக்கவலையை போக்கினார். அனைவருக்கும் மிகவும் உதவினாவர். .
அலிகார் பிரியாணியை லைட் மசாலா  வெள்ளை பிரியாணின்னு சொல்லலாம், இல்லை சூப் பிரியாணி
காரமில்லாத அதிக மசாலாக்கள் இல்லாத பிரியாணி.

 இது அன்னுவின் அலிகார் /Aligar பிரியாணி சஹருக்கு செய்து சாப்பிட்டோம். மிக அருமை. அன்னு சிக்கனில் செய்து இருந்தாங்க நான் இதை மட்டனில் செய்துள்ளேன்.

நோன்பில் சஹருக்கு பிளைன் சாதம், பருப்பு இல்லை சால்னா, பக்க உணவு அப்பளம், பொரிச்ச கறின்னு செய்து அத்தனையும் சூடு படுத்தி பிறகு கழுவி வைக்கனும். ஆகையால் நான் பெரும் பாலும் மட்டன் சேமியா, கட்டு சாதங்கள், புலாவ் , பிரியாணி இது போல் கொஞ்சம் லைட்மசாலாவாக உள்ள சமையலை தான் செய்வேன்.








  • தேவையான பொருட்கள்
  • எலும்புடன் மட்டன் - 400 கிராம்
  • முதலில் சிக்கன் ஸ்டாக் செய்ய: 
  1. பூண்டு 9 பற்கள்
  2. துருவிய இஞ்சி - 1/2  மேஜைக்கரண்டி
  3. சோம்பு, தனியா - 3/4 மேஜைக்கரண்டி தனித்தனியாக எடுத்து ஒரு சிறிய துணியில் பொட்டலம் கட்டிக்கொள்ளவும்.
  4. பெரிய / கறுப்பு ஏலக்காய் -1
  5. பிரியாணி இலை - 1 (கட்டாயம் இல்லை)
  6. குறுமிளகு - 3/4  தேக்கரண்டி
  7. இலவங்கம் - 4
  8. சிறிய பச்சை மிளகாய் 6 
  9. நறுக்கிய பெரிய வெங்காயம் 1 கப் (
  • உப்பு - தேவையான அளவு
  • தண்ணீர் 2 கப்
  • எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
 அரைக்க :-


  • பூண்டு பற்கள் - 10
  • இஞ்சி 4 துண்டுகள் (1” சைஸில்)
  • பட்டை -1 துண்டுகள் (1” சைஸில்)
  • ஜாதிக்காய் 1 துண்டுகள் (ஒரு ஜாதிக்காயை உடைத்து சிறிய இரண்டு துண்டுகள் போட்டால் போதுமானது 1/4 அளவு
  • ஜாவித்ரி - 1 சிறிய பூக்கள் (நம்ம ஊரு தாழம்பூவை காய வைத்தது போலிருக்கும், ஜாதிக்காய் மேலுள்ள பூ. சிறிய பூக்களாக போடவும்)
  • மேற்கண்ட அனைத்தையும் சிறிதே சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்து விழுதாக வைத்துக் கொள்ளவும்.
 தாளிக்க:
  • குறுமிளகு - 1/2 தேக்கரண்டி
  • கருப்பு / பெரிய  ஏலக்காய் - 1
  • எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  • தயிர் 3/4 கப்
  • பாஸ்மதி அரிசி - 2  கப் (400 கிராம்) 2 டம்ளர்
  • சுடு நீர் (தயார் செய்த ஸ்டாக்குடன் சேர்த்து 3 கப்/ 600 மில்லி/ ( முன்று டம்ளர்

 செய்முறை: 1
குக்கரில் எண்ணை விட்டு எண் 1 முதல் 9 வரையுள்ள பொருட்கள் எல்லாம் போட்டு தாளித்து விடவும். பின்  எலும்புகளை போட்டு வதக்கி தண்ணீர் 2 கப் சேர்த்து உப்பு சரி பார்த்து 7 - 8 விசில் விடவும்.


ஸ்டாக் தயாராகி விட்டது.  பொட்டணத்தையும் எடுத்து விட்டு நீரை வடித்து அளவு பார்த்து வையுங்கள்.மட்டன் தனியாக , சூப் தனியாக பிரித்து கொள்ளவும்.

செய்முறை: 2
அடி கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் குறுமிளகு, ஏலக்காய் போட்டு வெடிக்க விடவும். தீ மிதமாக இருக்கட்டும். அரைத்த விழுதை போட்டு எண்ணெய் விடும் வரை (1-2 நிமிடங்கள்) வதக்கவும்
கறித்துண்டுகளைப்போட்டு சிறிது வதக்கி உப்பு சேர்க்கவும்.
பின் தயிர் சேர்த்து மீண்டும் எண்ணெய் பிரியும் வரை வனக்கவும். 



எண்ணெய் பிரியும் நிலைக்கு வந்ததும் சுடுநீரை ஊற்றி கொதிக்க விடவும். ஆய்ந்து, கழுவி வைத்துள்ள அரிசியை சேர்க்கவும். .


 பின் நல்ல கனமான மூடியைப்போட்டு மூடிவிட்டு 20 நிமிடம் வரை குறைந்த அளவு தீயில் ‘தம்’மில் விடவும்

  • இந்த பிரியாணியின் சிறப்பம்சமே அதன் வெள்ளை வெளேர் நிறம்தான். அரைத்த விழுதை கரியும் வரை வதக்க வேண்டாம். 
  • முழு ஜாதிக்காயில் கால்வாசி போதும். அதிகம் சேர்த்தால் ஒரு மாதிரி தொண்டை எரியும், தலை சுத்துவது போன்றுமிருக்கும்.
  • அதிக அளவில் செய்யும்போது தண்ணீர் குறைத்துக் கொள்ளவும்.
  • இதே போல் மட்டனிலும் செய்யலாம். மட்டனில் செய்பவர்கள் ஸ்டாக் செய்யும்போது முழுக்கவே மட்டன் துண்டுகளை வேக விட்டு (அல்லது இன்னும் ஒரு விசிலில் வெந்து விடும் போன்ற நிலை வரை) எடுக்கவும்.
  • ஸ்டாக் தயாரித்த பின் கறி இல்லாமல் பிளெயின் சாதமாக கூட இப்படி கிளறி எடுத்துக் கொள்ளலாம். எந்த கறி சால்னாவுடனும் அருமையாக இருக்கும்.
  • தேவையானால் ஆரஞ்சு கலரை 1 தேக்கரண்டி பாலில் கலக்கி கடைசியில் தெளித்துக்கொள்ளவும்.


இதில் என் அளவுக்கு சில மாற்றத்துடன் செய்து கொண்டேன், மற்றபடி அன்னு செய்முறைவிளக்கம் அப்படியே எடுத்து போட்டுள்ளேன்.

நன்றி அன்னு ( என் இனிய தமிழ் மக்களே)


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, July 1, 2014

மாழ்பழ கடல்பாசி - Mango Agar Agar




நோன்பு காலங்களில் இஸ்லாமிய இல்லங்களில் செய்யப்படும் இந்த கடல்பாசி உடல் சூட்டை தணிக்கும்வாய் புண் மற்றும் வயிற்று புண்ணையும் ஆற்றும்.

இந்த வருடம் நோன்பு நேரம் கடும் வெயில் நேரத்தில் வந்துள்ளது.
 அல்லாஹ் நம் அனைவருக்கும் நோன்பு பிடிக்க சக்தியை கொடுத்து அதை நிறைவேற்றியும் கொடுப்பானாக. 

Plain Mango Agar Agar 


இப்போது துபாயில் வெயில் மண்டைய பிளக்கிறது.. இன்னும் போக இரண்டுமாதத்துக்கு அனல் காற்று தான்.அதற்கு தண்ணீர் ஆகாரங்கள் அதிகமாக குடிப்பது நல்லது. ஆறிய வெண்ணீர், ஜூஸ், மோர், பழங்கள் என்று சாப்பிட்டால் சூட்டினால்  ஏற்படும் பல உபாதைகளில் இருந்து நம்மை பாதுக்காத்து கொள்ளலாம்.

இது வரை இங்கு நிறைய கடல்பாசி(அகர் அகர்) பதிவுகள் போட்டுள்ளேன். அதை இங்கு சென்று பார்க்கலாம்.


இப்போது மாம்பழ சீசன் என்பதால் சூப்பரான மாம்பழ ஜெல்லி போல் இந்த அகர் அகரை செய்யலாம்.



தேவையான பொருட்கள்

ற்பாசி - இரன்டு கைபிடி அளவு
ர்க்கரை - அரை கப்
தண்ணீர் -  இரண்டு  ம்ளர்
மாம்பழம் - ஒன்று ( அல்போன்சா)
பிஸ்தா ப்ளேக்ஸ் தேவைக்கு



செய்முறை


 ண்ணீரில் ற்பாசியை பொடியாகஅரிந்து போட்டு சிறிது நேரம் ஊறவைத்து காய்ச்சவும்.

ரைந்து ரும் மயத்தில் அதில் ர்க்கரை சேர்த்து கொதிக்க விட்டு டிகட்டவும் ல்லரைந்து விட்டால் டிகட்டதேவையில்லை.



சிறிது ஆறியதும் மாம்பழ கூழை கலந்து குளிரூட்டியில் குளிர விட்டு வேண்டிய வடிவில்  துண்டுகள் போட்டு சாப்பிடவும்.


Nuts Mango Agar Agar



கவனிக்க: தேவைப்ப்பட்டால் மாம்பழ எசன்ஸ் மற்றும் நட்ஸ் வகைகள் சேர்த்து கொள்ளலாம்.


இது வரை இங்கு நிறைய கடல்பாசி(அகர் அகர்) பதிவுகள் போட்டுள்ளேன். அதை இங்கு சென்று பார்க்கலாம்.

இனிப்பு மாங்காய் கடல்பாசி

How to make Agar Agar 

Indian Flag Agar Agar  - Step by Step



அனைவருக்கும் ரமலான் நல் வாழ்த்துக்கள்.

Ist Day Ramadan Menu
1. இஃப்தார் மெனு

Night Sahar

Plain Rice
Aloo Gosh Kurma
Rasam
appalam



Evening Ittar

Mutton Kheem kanji



Ripe Mango Agar Agar
Orange
Grapes
Dates
Pears
Watermelen


ரமலான் மாதம் கேட்கவேண்டிய துஆ சுட்டியை கிளிக் செய்து ஓதி கொள்ளுங்கள்.