Friday, November 10, 2017

சிக்கன் லாலிப்பாப் எலக்ட்ரிக் கிரில் ( பார்பிகியு) - Chicken Lolipop Electric Grill



சிக்கன் லாலிப்பாப் எலக்ட்ரிக் கிரில் ( பார்பிகியு)

Chicken Barbecue same charcoal taste


நம்ம பார்க் போய் தான் சார்கோல் பார்பிகியு செய்யனும் என்றில்லை வீட்டிலேயே அதே சுவையில் எலக்ட்ரிக் அடுப்புகள் வந்து விட்டன. 
சிக்கன் இறால் எல்லாம் 20 நிமிடத்தில் செய்துடலாம்.
இந்த அடுப்பு அந்த கம்பியின் கீழ் தண்ணீர் ஊற்றனும்.

அதிலேயே அட்ஜெஸ்ட்மென்ட்ம் இருக்கும் ஸ்லோவாவும் வைத்து கொள்ளலாம் அதிகமாகவும் வைத்து கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
இஞ்சி  பூண்டு பேஸ்ட் – 3 தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் – 1 மேசைகரண்டி
தயிர் -2 மேசைகரண்டி
காய்ந்த வெந்தய கீரை – 1 மேசைகரண்டி
சிக்கன் லாலிபாப் – 1 கிலோ
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

 செய்முறை

சிக்கனை கழுவி சுத்தம் செய்து அங்காங்கே 4, 5 கீரல் போடவும்.
ஒரு பவுளில் சிக்க்கனை சேர்த்து மேலே கொடுக்க பட்டுள்ள அனைத்து  மசாலாவகைகளையும் சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
எலக்ட்ரிக் பார்பிகியு அடுப்பை ஆன் செய்து அதில் கிழே தண்ணீர் சேர்த்து மேலே பார்பிகியு கம்பியை போட்டு ஆன் செய்து சிக்கனை வைத்து இரண்டு பகக்மும்  10 நிமிடம் , 10 நிமிடம் வைத்து கிரில் செய்யவும்.
சார்கோல் கிரில்லில் செய்த சுவை இதில்கிடைக்கும்.





https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, November 9, 2017

மாதுளை டீ - Pome skin tea for stomach ulcer




Please subscribe my You tube Channel and share to your friends 

இன்னும் பல பயனுள்ள குறிப்புகளை போட இருக்கிறேன்.


பொதுவாக மாதுளை பழத்தை கட் செய்து எடுத்து விட்டு அந்த தோலை எறிந்து விடுவர், அபப்டி போடாதீர்கள் அதில் உள்ள மருத்துவ பயன்கள் ஏறாளம். நம் அருசுவை உணவில் துவர்ப்ப்ய் உணவும் நாம் அடிக்கடி எடுத்து கொள்ளவேண்டும். மாதுளை மற்றும் இளநீர் தேங்காயை எடுத்ததும் உள்ளே உள்ள ப்ரவுன் சில் போல உள்ளது இரண்டும் துவர்ப்பு சுவை கொண்டது, இது  வயிற்றில் ஏற்படும் புண்களுக்கும், வாயில் ஏற்படும் புண்களுக்கும் மிகவும் நல்லது.



இந்த வீடியோவில் மாதுளை டீ போஸ்ட் பண்ணி இருக்கேன், வெண்ணீர் கொதிக்க விட்டு அதில் மாதுளை தோல் ஒன்றிரண்டு சேர்த்து கொதிக்க விட்டு தண்ணீரை வடிகட்டி குடிக்கவும்.

அது சிறிது கசக்கும் மருந்து போல குடிச்சிக்க வேண்டியது. அப்படிசுவை தேவை என்றால் ஒரு டீ பேக் ஒரு டிப் செய்து சிறிது ப்ர்வுன் சுகர் சேர்த்து கலக்க்கி குடிக்கலாம்.





https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975https://www.facebook.com/Samaiyalattakaasamhttp://www.chennaiplazaki.com/

Sunday, November 5, 2017

சுறா மீன் டிக்கா (இண்டக்‌ஷன் பார்பிகியு)


சுறா மீன் டிக்கா
(இண்டக்ஷன் பார்பிகியு)

சுறா மீன் - கால் கிலோ
ஷான் டிக்கா மசாலா - ஒரு மேசைகரண்டி
எலுமிச்சை சாறு - அரை பழம்
பட்டர் - இரண்டு மேசை கரண்டி



சுறா மீனை மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து கழுவி மேற்கண்ட மசாலாவை சேர்த்துபிறட்டி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
இண்டஷன் அடுப்பில் பார்பிகியு ஆப்ஷன் செலக்ட் செய்து பட்டரில் இரண்டு 

புறமும்பொரித்து எடுக்கவும்



சுறா மிளகு சால்னா 
புளி சால்னா
புட்டு
கட்லெட் 
இப்ப டிக்கா போல செய்தேன் யம்மி
ரொம்ப ஈசியா வேலை முடிந்தது

இன்டக்‌ஷன் பார்பிகியு
induction barbeque


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, October 23, 2017

காலிப்ளவர் புதினா சாதம் - Cauliflower Mint Rice


புத்துணர்வு தரும் புதினா, துவையல் சாப்பிட்டாலே அருமையாக இருக்கும் அதுவே சாதமாக என்றால் ஒரே மணம் தான்.சும்மா கும்முன்னு இருக்கும்.

இது ஏற்கனவே அரிசியில் செய்த புதினா சாதம்  அதே பேலியோடயட்டில் அரிசிக்கு பதில் காலிப்ளவர் பயன் படுத்ததனும், காலிப்ளவரில், தயிர் சாதம், தக்காளி சாதம் , ப்ரைட் ரைஸ்ம் கொத்துமல்லி சாதம் , புதினா சாதம் கருவேப்பிலை சாதம் என பல வகைகளாக தயாரிக்கலாம்.




காலிப்ளவர் துருவல் ( ரைஸ்) – 200 கிராம்
1.       வறுத்து பொடிக்க

மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
பட்டை – ஒரு சின்ன துண்டு
பிரியாணி இலை – இரண்டு
2.வதக்கி அரைக்க


பட்டர் (அ) நெய் – ஒரு ஸ்பூன்
புதினா ஒரு கட்டு
வெங்காயம் – 1
பூண்டு – 4 பல்

3. தாளிக்க
எண்ணை + பட்டர் – ஒரு ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
வெங்காயம் – பொடியாக அரிந்த்து ஒரு மேசை கரண்டி


செய்முறை
1. காலிப்ளவரை துருவி சோறு வடிப்பது போல் வடித்து கொள்ளவும் அல்லது  இட்லி பானையில் அவித்து கொள்ளவும் அல்லது மைக்ரோ வேவில் 10 நிமிடம் வைத்து உப்பு சேர்த்து வேகவைத்துகொள்ளவும்.
2. வதக்கி அரைக்க வேண்டியவைகளை வதக்கி அதனுடன் பொடித்த பொடியையும் கலக்கவும்.
3. குக்கரில் எண்ணை + பட்டர் சேர்த்து கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
4. வேகவைத்துள்ள காலிப்ளவர் சாதத்தை குக்கரில் சேர்த்து  குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இரக்கவும்.
சுவையான மனமான காலிப்ளவர் மின்ட் புலாவ் ரெடி



பேலியோவில் அரிசிக்கு பதில் காலிப்ளவர் அரிசி உணவு போல செய்து சாப்பிட வேண்டும்.
அதை நம் சுவைக்கு ஏற்ப பொங்கல்,தக்காளி சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம்,ப்ரைட் ரைஸ், புதினா புலாவ், வெஜ் பிரியாணி, சிக்கன் , மட்டன், மீன் , இறால் பிரியாணி போல செய்து சாப்பிடலாம்.


weight loss Recipes, Paleo diet recipes, puthinaa saatham
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, September 6, 2017

கருவேப்பிலை புதினா இட்லி


Curry Leaves Mint Idly Paleo diet recipes 
சைவ பேலியோ ரெசிபிகள் - டிபன் வகைகள்

கருவேப்பிலை புதினா இட்லி


CC
தேவையான பொருட்கள்
கருவேப்பிலை புதினா ஒரு கப்
பச்சமிளகாய் ஒன்று பெரியது
முட்டை 4
உப்பு தேவைக்கு
தேங்காய் ஒரு கப்
வறுத்த முந்திரி சிறிது
பாதாம் சாப்ரான் பால் கால் கப்



🌿செய்முறை🌿
கருவேப்பிலை புதினா பச்சமிளகாய் தேங்காயை முக்கால் பதத்திற்கு அரைக்கவும்
அத்துடன் முட்டை பாதாம் பால் உப்பு சேர்த்து அரைக்கவும்.
இட்லி சட்டியில்ம்நெய் தடவி 7 நிமிடம் அவித்து எடுக்கவும்.
சுவையான கருவேப்பிலை புதினா இட்லி ரெடி



எனக்கு பச்சை பசேலுன்னு கீரை பார்த்தா நிறைய வெரைட்டி சமைக்கனும் என்று தோனும்
நேத்து கொத்து மல்லி இட்லி செய்யலானு கிராசாரி ஷாப் ல ஆர்டர் பண்ணால் ப்ரஷா கருவேப்பிலை புதினா சோ அதை வைத்து இட்லியும் அதே காம்பினேஷன் ல சட்னியும்
செம்ம
பக்கத்தில் இருப்பது பூண்டு பாலக் தில் கீரை பார்சிலி சூப்
ஆக்கம்
டயட் இட்லி, புதினா இட்லி , கருவேப்பிலை இடிலி
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, September 4, 2017

பாலக் ஜாலர் ஆப்பம் /மலேஷியன் கிரீன் நெட் பேன்கேக்


பாலக் ஜாலர் ஆப்பம் /மலேஷியன் கிரீன் நெட் பேன்கேக்
Malaysian Green net Pancake




Iron : Palak
Preparation Time : 30min
Cooking time : 30 min

இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையல் முத்துபேட் , காரைகால், நாகூர் போன்ற பல ஊர்களில் இது பிரத்திபெற்ற சமையல், மலேஷியாவிலும் இது ரோட்டர கடைகளில் மிகவும் பிரத்தி பெற்ற சமையல். திருமணம் பெருநாள் போன்ற நாட்களில் செய்வார்கள். இது சிறிது என் ஸ்டைலில் மாற்றி கீரை சேர்த்து செய்துள்ளேன்
Eid Special Malaysian Net Pancake 

மைதா – 200 கிராம்
முட்டை – 3
தேங்காய பால் – 200 மில்லி
சின்ன வெங்காயம் - 3
சோம்பு – அரைதேக்கரண்டி
உப்பு – சிறிது
பச்ச மிளகாய் ஒன்று
பாலக் கீரை – 100 கிராம்



செய்முறை
பாலக், சின்ன வெங்காயம் , பச்சமிளகாய்,சோம்பு சேர்த்து நன்கு அரைத்து ஜூஸை வடிக்கவும்.
மைதா , தேங்காய் பால் , முட்டை சேர்த்து நன்கு கலக்கவும், அரைத்து வைத்த ஜூஸையும் கலக்கவும்.மாவு ரொம்ப் தண்ணீயாகவும் இருக்க கூடாது கட்டியாக வும் இருக்க கூடாது. பதம் மீடியமாக இருக்கனும்.

//இந்தஜாலர் செய்வதற்கு தனியாக் ஐந்து அல்லது முன்று துளையுள்ள கப் விற்குது அதில் தால் இதை செய்ய முடியும். இந்த கப் இல்லாதவர்கள் பேப்பர் கப் அல்லது பாட்டல் முடியில் முன்று துளை போட்டு அதில் ஊற்றி சுட்டு எடுக்கலாம்.//

தவ்வாவை சூடு படுத்தி ஜாலர் கப்பில் கலக்கி வைத்த மாவை ஊற்றி பூ போல வேண்டிய டிசைனில் சுட்டு எடுக்கவும்.

 சுவையான ஜாலர் ஆப்பம் ரெடி வெஜ் அ சிக்கன் கொஃப்தாவுடன் அல்லது அசைவ அல்ல்து சைவ சால்னாவுடன் சாப்பிட அருமையாக இருக்கும்
 This is my entry for  #livogenironchef the Iron Chef contest on IndiBlogger. 

Palak jalar appam, Malaysian green net pancake
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

ஹஜ் பெருநாள் சிம்பிள் மெனு


உலகில் உள்ள அனைவருக்கும் இனிய தியாக திருநாள் வாழ்த்துக்கள்

நேரமின்மை டைம் க்கு பதிவு போடமுடியவில்லை
இந்த வருடம் உலகில் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் நல்லபடியாக ஹஜ் செய்து முடித்து இருப்பார்கள்..

இனி அடுத்த வருடம் ஹஜ் செய்ய நாடி உள்ளவர்களுக்கு ஹஜ் செய்யும் பாக்கியம் கிடைக்க து ஆசெய்யுங்கள் , உங்கள் துஆவில் என்னையும் சேர்த்து கொள்ளுஙக்ள்


மதியம் மட்டன் பிரியாணி , தயிர்பச்சடி, பொரிச்ச கறி
மட்டன் பிரியாணி லிங்க் கிழே கொடுத்துள்ளேன்

http://samaiyalattakaasam.blogspot.ae/2010/11/blog-post_15.html

http://cookbookjaleela.blogspot.com/2015/09/blog-post.html




காலை டிபன் இனிப்பு சேமியா & கார சேமியா
பூரி கறி சால்னா, போட்டோ எடுக்க நேரமில்லை..
இது எங்கள் இல்லங்களில் செய்யும் பாரம்பரிய காலை உணவு ( இதே அரேபியர்கள் பலீலீத் என்ற பெயரில் கொஞ்சம் வித்தியாசமாக கேசரி போல செய்து அதற்கு பக்க உணவாக முட்டை ஆம்பேட் வைத்து சாப்பிடுவார்கள்.
BALELETH ARABIC TIFFIN




ஆடு குர்பானி கொடுப்பார்கள் 
அதை இப்படி பதப்படுத்தி வைப்பார்கள் 
கீழே உள்ள லின்கை கிளிக் செய்து பார்க்கவும்.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/