Monday, August 1, 2011

நோன்பு கால சமையல் டிப்ஸ் = 2நோன்புகால சமையல் டிப்ஸ் - 1


1. தினம் ஜூஸ் குடிப்பதால், பழங்கள் சாப்பிடுவதால் தொண்டை கட்டும், சிலருக்கு தொண்டை கர கரப்பு ஏற்படும், தராவீஹ் தொழும் போது கனைத்து கொண்டே இருப்பார்கள், அதற்கு சுக்கு, ஏலம், கிராம்பு, மிளகு தட்டி போட்டு டீ குடிக்கலாம். இல்லை இதை பொடித்தும் டீ தூளுடன் கலந்து கொள்ளலாம்

2.கடல் பாசி செய்து ஆறவைக்கும் போது காய்ச்சியதும் சின்ன தட்டில் ஊற்றி மேல கீழ கொட்டுவதை விட இப்படி ஒரு பெரிய சட்டியில் காய்ச்சி ஆறவத்து குளிர வைக்கலாம். ஆறி கட்டி ஆகி குளிர்ந்ததும் துண்டுகள் உடையாமல் தனித்தனியாக எடுக்க வரும்.

3. தினம் செய்யும் கஞ்சிக்கு அரிசியை பொடித்து வைத்து கொள்ள வேண்டும் அதன் அளவு ஒரு கிலோ அரிசியை மிக்சியில் நன்கு பொடித்து கால் கிலோ அளவிற்கு பச்ச பருப்பை கருகாமல் வருத்து , ஒரு மேசை கரண்டி அளவிற்கு வெந்தயம் சேர்த்து கலந்து வைக்கவும்.தினம் தேவைக்கு அரை டம்ளர் ஒரு டம்ளர் என்று எடுத்து செய்து கொள்ளலாம்.

4. சமோசா, ஸோமாஸி கட்லெட் போன்றவற்றை அதிகமாக செய்து பிரிட்ஜில் ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும், ஒரு மணி நேரம் கழித்து அது நல்ல பிரீஜ் ஆகி இருக்கும் எல்லாவற்றையும் எடுத்து ஒரு கவரில் அல்லது கண்டெயினரில் போட்டு வைத்து கொள்ளலாம். நோன்பிற்கு பொரிக்கும் சமையத்தில் அரை மணி நேரம் முன் எடுத்து ஒரு தட்டில் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் அடுக்கி வைத்து ஐஸ் விட்டதும் பொரித்து கொள்ளலாம்.
5. இஞ்சி பூண்டு பேஸ்ட் எல்லாவகையான அசைவ சமையலுக்கும் தேவைபடும், அது ஒரு கிலோ இஞ்சிக்கு, 600 கிராம் பூண்டு சேர்த்து அரைத்து லேசாக உப்பு தூவி ஒரு பெரிய பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளலாம். சில பேருக்கு இஞ்சி பூண்டு அரைத்து வைத்தால் பச்சையாகிவிடும் அது பூண்டு அதிகம் சேர்த்து இருந்தால் அப்படி ஆகும்.


6. தினம் ரொட்டி , சப்பாத்தி பரோட்டா சாப்பிடுபவர்கள், மாவு குழைத்து உருண்டைகள் போட்டு இப்படி மாவு தூவி டைட்டான கன்டெயினரில் போட்டு இப்படி வைத்து கொண்டால் சுடும் போது எடுத்து சுட்டு சாப்பிட்டு கொள்ளலாம். ரொம்ப ஈசியாக இருக்கும் தண்ணீர் விடாமல் இருக்கும்.
7.சிலர் சகருக்கு சாப்பிட சாதம் பிடிக்காது அவர்கள் இது போல் மொத்தமாக ரொட்டியை அடுக்கு போட்டு லேசாக எண்ணையில்லாமல் இரண்டு பக்கம் திருப்பி போட்டு ஆறவைத்து மொத்தமாக அடுக்கிவைத்து கொள்ளலாம். தேவைக்கு எடுத்து எண்ணை விட்டு சுட்டு சாப்பிடவும்.இது என் அண்ணி எனக்கு சொன்ன டிப்ஸ்

8. நோன்பில் சகரில் ஈசியாக சாப்பிட்டு முடிக்க கட்டு சாதம் (லெமென் ரைஸ், புளி சாதம், லைட் மசாலா கொடுத்து பிரியாணி, தக்காளிசாதம், தயிர் சாதம், மோர்குழம்பு, ரசம் வகைகள்
சேமியா ) இதுபோலும் செய்து சாப்பிடலாம்.9. சிலர் மீதியான சாதத்தில் கஞ்சி செய்வார்கள் அது அந்த அளவிற்கு டேஸ்ட் வராது , அரிசி பொடித்து நொய்யில் போடுவது தான் நல்ல இருக்கும்.


10. தினம் ரசம் செய்ய, புளி குழம்பு செய்ய புளி பேஸ்ட் செய்து பிரீஜ் செய்து வைத்து கொள்ளுங்கள், தேவைக்கு உடனே இரண்டு முன்று கியுப்ஸ் எடுத்து போட்டு கொள்ளலாம்.புளி பேஸ்ட் செய்வது (கால் கிலோ அளவிற்கு புளி எடுத்து குக்கரில் முன்று நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு இற‌க்குங்கள் ஆறியதும் கரைத்து வடிகட்டி ஐஸ்கியுப்கள் அல்லது சின்ன கவர்களில் ஒரு நாளைக்கு தேவையான அளவை கட்டி வைத்து கொள்ளலாம்.11. குருமா, கஞ்சிக்கு தினம் தேங்காய் பால் தேவைபடும் அதற்கு தேங்காய், முந்திரி பாதம் சேர்த்து அரைத்து ஐஸ் கியுபுகளாக்கி பிரீஜரில் வைத்து கொண்டால் வேலை சுலபம். வெளி நாடு களில் தேங்காய் பொடி கிடைக்கிறது.
ஏற்கனவே முன்பு போட்ட பதிவுதான், இருந்தாலும் இப்ப எல்லோருக்கும் உதவும்.

டிஸ்கி 1.8.2011
இந்த தடவை நோன்பு நேரம் அதிகமாக உள்ளதாலும் சரியான வெயிலாக இருப்பதாலும் வாய் புண்கள் வயிற்று புண்கள் அதிகம் வரலாம், அதற்கு பானவகைகள், பழ சாறுகள், ஜவ்வரிசி கஞ்சி ,கீர், பாயாசம் என்று செய்து தினமும் சேர்த்து கொண்டால் நல்லது.

42 கருத்துகள்:

Jaleela said...

மேனகா, அதிரை அபூபக்கர், சீமான் கனி முன்று பேர் கருத்துக்களும் டெலிட் ஆகிவிட்டது..
வருத்தம் , முடிந்தால் மறுபடி போடுங்கள்

Mrs.Faizakader said...

மிகவும் அருமையான டிப்ஸ் அக்கா

அதிரை அபூபக்கர் said...

அல்ஹம்துலில்லாஹ்.. உங்கள் தகவல்கள்..எல்லோருக்கும் மிகவும் பயன்படக்கூடியது. நன்றி...

Anonymous said...

Assalamualikum Sister, All articles that you have postd here are superb, useful and informative,. Mashaallah. Thank You.
P.S.:Sister.. Try to avoid such articles like "Odukattu Puthan".

:::fardeen,Malaysia:::

S.A. நவாஸுதீன் said...

அதற்கு சுக்கு, ஏலம், கிராம்பு, மிளகு தட்டி போட்டு டீ குடிக்கலாம். இல்லை இதை பொடித்தும் டீ தூளுடன் கலந்து கொள்ளலாம்.
****************************
இது எனக்கு தேவையான டிப்ஸ். நன்றி சகோதரி

ஷ‌ஃபிக்ஸ் said...

டிப்ஸ்கள் அருமை, சகருக்கு பின் இஞ்சி போட்டு ஒரு ப்ளேக் டீ குடிச்சால் தான் எனக்கு சகர் செஞ்சு முடிச்ச மாதிரி இருக்கும்.

SUMAZLA/சுமஜ்லா said...

//சில பேருக்கு இஞ்சி பூண்டு அரைத்து வைத்தால் பச்சையாகிவிடும்//

அக்கா, நான் பார்த்தவரையில், உரித்த பூண்டை, பிரிஜ்ஜில் வைத்து பின் அரைத்தால், பச்சையாகி விடுகிறது! பிரிஜ்ஜில் வைக்காமல், உடனே அரைத்தால், அப்படி ஆவதில்லை!

mix said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

Jaleela said...

7.சிலர் சகருக்கு சாப்பிட சாதம் பிடிக்காது அவர்கள் இது போல் மொத்தமாக ரொட்டியை அடுக்கு போட்டு லேசாக எண்ணையில்லாமல் இரண்டு பக்கம் திருப்பி போட்டு ஆறவைத்து மொத்தமாக அடுக்கிவைத்து கொள்ளலாம். தேவைக்கு எடுத்து எண்ணை விட்டு சுட்டு சாப்பிடவும்.இது என் அண்ணி எனக்கு சொன்ன டிப்ஸ்.
இது 7 வது டிப்ஸ் அங்கு போஸ்ட் பண்ண மறந்துட்டேன்

Jaleela said...

சீமான் கனி, அதிரை அபூபக்கர்,பாயிஜா மேனகா, நவாஸ், சுஹைனா, ஃபர்தீன், ஷபிக்ஸ் அனைவரின் பின்னுட்டத்திற்கும் நன்றி.


//ஷபிக்ஸ் தினம் இஞ்சி, ஏலம் (அ) துளசி புதினா, (அ) கிராம்பு , மிலகு, (அ) அக்கரா பொடி (அ) கரம் மசாலா இல்லாமல் டீ குடிப்பது கிடையாது.

Jaleela said...

சுஹைனா, பூண்டு தனியாக அரைத்து வைத்து பாருங்கல் அது பச்சையாகிடும்.

இஞ்சிக்கு பாதி பங்கு (அ) சிரிது அதிகமாக பூண்டு சேர்த்தால் ஒரு மாததிற்கு மேல் வைத்து இருந்தாலும் அரைக்கும் போது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கும்.

sarusriraj said...

ஜலீலா அக்கா உங்கள் டிப்ஸ் ரொம்ப நல்லா இருக்கு

Ram said...

"யாழ்தேவி" இலங்கை பதிவர்களின் புதிய திரட்டி தற்போது Add- தமிழ் விட்ஜெட்டில் !

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

seemangani said...

ரொம்ப சூப்பர்....
அக்கா,

Geetha Achal said...

உங்கள் ப்ளாக் நன்றாக இருக்கின்றது...டிப்ஸ் எல்லாம் மிகவும் சூப்பர்...அனைவருக்கும் இந்த டிப்ஸ் கண்டிப்பாக உதவும்...சப்பாத்தி டிப்ஸ் தெரியாத ஒன்று...அருமை.

நன்றி...

Jaleela said...

//ஜலீலா அக்கா உங்கள் டிப்ஸ் ரொம்ப நல்லா இருக்கு//

நன்றி சாருஸ்ரீ

Jaleela said...

வ‌ருகைக்கு மிக்க‌ ந‌ன்றி ராம்

Jaleela said...

//ரொம்ப சூப்பர்....
அக்கா,//

சீமான் கனி நன்றி

Jaleela said...

//உங்கள் ப்ளாக் நன்றாக இருக்கின்றது...டிப்ஸ் எல்லாம் மிகவும் சூப்பர்...அனைவருக்கும் இந்த டிப்ஸ் கண்டிப்பாக உதவும்...சப்பாத்தி டிப்ஸ் தெரியாத ஒன்று...அருமை//

வாங்க கீதா ஆச்சல், அக்க்ஷயா குட்டி நலமா?

வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும், உங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

இது ரொட்டி டிப்ஸ் என் பையனுக்கு முன்று வேளைக்கும்.ரொட்டி மட்டும் கொடுத்தால் போதும்.

இது செய்து ஒரு வார‌த்திற்கு கூட‌ வைத்து கொள்ள‌லாம்.
ஆனால் நான் நான்கு நாட்க‌ளோடு முடித்து கொள்வ‌து 1 கிலோ அள‌விற்கு செய்து வைத்து கொள்ள‌லாம்.
தின‌ம் எடுத்து இர‌ண்டு நிமிட‌த்தில் சுட்டு சாப்பிட‌லாம்.

பாத்திமா ஜொஹ்ரா said...

தேத்தனி குடிச்ச மாதிரி இருக்கு?(தேத்தனி-தேநீர்) அக்கா

Jaleela said...

//தேத்தனி குடிச்ச மாதிரி இருக்கு?(தேத்தனி-தேநீர்) அக்கா//


வாங்க அன்பு தங்கை பாத்திமா ஜொஹ்ரா, நீங்கள் கொடுத்த பின்னூட்டமும் எனக்கு தேத்தனி குடித்த மாதிரிதான் இருக்கு.

வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

basipam said...

இஞ்சி பூண்டு அரைக்கும்போது கொஞ்சம் சமையல் என்னை சேர்த்து அரைதால் பச்சை வராது
basila

Anonymous said...

ஆரோக்கியமான சமையல் குறிப்புகள்,நாம் இப்போது துருக்கியில் குடும்பத்துடன் இருக்கிறோம் பிரயோசனமாக இருக்கிறது ,நாம் skype இல் " palkumbure1 " என்ற ID இல் இருப்போம்

Anonymous said...

எங்களது ஆக்கங்களும் இடம் பெற இயலுமா?

Anonymous said...

இப்படிக்கு
Mrs.Deen

GEETHA ACHAL said...

டிப்ஸ் அனைத்துமே அருமை...

சப்பாத்தி டிப்ஸ் சூப்பர்ப்...

Chitra said...

super...super...super.....

Laxmi said...

super tips akka.. useful to everyone..

ஆமினா said...

சலாம் அக்கா

நல்ல டிப்ஸ்

ஜஸக்கல்லாஹூ க்ஹைர்

சே.குமார் said...

டிப்ஸ்கள் அருமை.

mohan said...

வணக்கம் நண்பா. உங்கள் பதுவு அருமை ..

என்னுடைய பக்கமும் வாருங்கள்..
http://desiyamdivyam.blogspot.com/

அமைதிச்சாரல் said...

அருமையான டிப்சுகள்.. பலருக்கும் பயனுள்ளதா இருக்கும் :-)

Feroz said...

மிக அருமை சகோ ஜலீலா. இஞ்சி பூண்டு விழுது அரைக்கும்போது அத்துடன் கொஞ்சம் எண்ணை (ஏதாவது) ஒரு ஸ்பூன் விட்டு அரைத்தால் பச்சை நிறம் வராது. புதியது போல் இருக்கும்.

அந்நியன் 2 said...

அருமையான கலக்கல் அக்காள் வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

எல்லாமே நல்ல டிப்ஸ்கள் அக்கா. இஞ்சி-பூண்டுக்கு, ஸாதிக்காக்கா அறுசுவையில் சொன்னபடி, ஆலிவ் ஆயில்+உப்பு சேர்த்து அரைத்தால் வெள்ளை வெளேர்னு இருக்கும். சுஹைனா சொன்னதுபோல, உரித்து ஃபிர்ட்ஜில் வைத்து பின் அரைத்தாலும் பச்சை ஆகிவிடும் எனக்கு.

புளி கரைத்து ஃபிரீஸரில் போட்டு வைப்பதுமுண்டு. ரொம்பவே வசதி. நேரம் மிச்சம்; ஆனால் தேங்காப்பால் அப்படிச் செய்தால் எடுத்து பயன்படுத்தும்போது, திரைந்த மாதிரி இருக்குதேக்கா?

ஹுஸைனம்மா said...

பின் தொடர..

அதிரை fact said...

அதிராம் பட்டினத்தில் மீண்டும் ஒரு புதிய இணையதளம் புத்தூனுர்ச்சியுடன் உதயமாகிவிட்டது அனைத்து இணைய தளங்களில் வெளிவரும் சிறந்த கட்டுரைகள் புதிய ஜொலிப்புடன் "ADIRAIFACT" ல் உடனுக்குடன் காணலாம்.

Jaleela Kamal said...

ஹுஸைனாம்மா பூண்டு மட்டும் அரைத்து வைத்தால் பச்சையாக தான் ஆகும்

நான் இது வரை எண்ட எண்ணையும் சேர்த்ததில்லை, அப்படியே தான் இருகும்
எங்க மாமியார் கொஞ்சம் மஞ்சள் உப்பு சேர்த்து கலண்ட்து வைப்பாங்க
அம்மா எப்போதும் ஃபிரெஷா தான் செய்வாங்க.

Jay said...

very healthy tips...nice presentation jaleela..:)
Tasty Appetite

கோமதி அரசு said...

நோன்பு கஞ்சி குறிப்பு மிக அருமை.

கேரளாவில் பச்சைபயறு சேர்த்து கஞ்சி செய்வார்கள். அம்மா அரிசியுடன் பூண்டு, வெந்தயம் சேர்த்து கஞ்சி செய்து அதற்கு தொட்டுக்கொள்ள வெல்லம், பச்சைபயறு சுண்டல் செய்து தருவார்கள்.

குறிப்புகள் எல்லாம் அருமை, நன்றி.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்

அனைத்துமே அருமை...


ரமலான் வாழ்த்துக்கள்.

Sweetlime said...

Salam, all ur receipes and tips are extremely super amma...I am ur great fan..followed and tried multiple receipes and everything came out well...May allah bless you and your family...Take care ammma...

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா