Monday, February 15, 2010

கரம் மசாலா சாக்லேட் ந‌ட்ஸ் கேக் - garam masala chocolate nuts cakeமைதா = அரை ஆழாக்கு (100 கிராம்)
பொடித்த ச‌ர்க்க‌ரை = அரை ஆழாக்கு
முட்டை = இரண்டு
ப‌ட்ட‌ர் = 100 கிராம்
ந‌ட்ஸ் (முந்திரி,பாத‌ம்,பிஸ்தா) இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி
பேக்கிங் ப‌வுட‌ர் = கால் தேக்க‌ர‌ண்டி
இட்லி சோடா = அரை சிட்டிக்கை
உப்பு = அரை சிட்டிக்கை
சாக்லேட் எஸ‌ன்ஸ் = அரை தேக்க‌ர‌ண்டி
கொக்கோ ப‌வுட‌ர் = ஒரு மேசை க‌ர‌ண்டி
க‌ர‌ம் ம‌சாலா = கால் தேக்க‌ர‌ண்டி ( ப‌ட்டை, ஏல‌ம், கிராம்பு தூள்)
மைதா பேக்கிங் பவுடர்,உப்பு, இட்லி சோடாவை சலித்து கொள்ளவும்.பட்டர், சர்க்கரை சேர்த்து நன்கு பிளெண்டரால் அடிக்கவும்.

கலர் மாறியதும் முட்டையை நுரை பொங்க அடித்து சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.அடுத்து மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.
அடுத்து கரம் மசாலா,கொக்கோ பவுடர், எஸன்ஸையும் சேர்த்து கிளறி மேலே நட்ஸ் வகைகளை தூவி மைக்ரோவேவ் ஓவனின் 7 நிமிடம் வைத்து எடுக்கவும்.
ஆறியதும் துண்டுகள் போட்டு குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

ரொம்ப மணமா இருந்தது உடனே தட்டு காலி.


//நேற்று ஹனீப் பிறந்த நாளுக்கு ஸ்கூல் போய் சாக்லேட் எல்லாம் கொடுத்து விட்டு கொஞ்சம் சோகமா வந்தார்.
என்னன்னு கேட்டா ஒரு பையன் பர்த்டே வா அப்ப கேக் வெட்ட மாட்டியா? இல்ல, பிரண்ஸ் கூட வெளியில் போக மாட்டீயா? இல்ல அப்ப யாரும் கிஃப்ட் கொண்டு வர மாட்டாங்களா? இல்ல.
இப்படின்னு சொல்லி ஒரு பையன் உசுப்போத்தி விட்டுட்டான், சரி கொஞ்சமா கேக்காவது செய்து கொடுப்போம் என்று மதியம் கிடைத்த ஒரு மணி நேர கேப்பில் எல்லாம் மிக்ஸிங் எல்லாம் செய்து விட்டு கேக் ஓவனில் வைக்க போனா, ஓவன் வொர்க் ஆகல ஆஹா இவ்வளவு ரிச்சா கலக்கி வைத்து விட்டோம் வொர்க் ஆகலையே என்று மைக்ரோவேவில் வைத்தேன்.அதுவும் சூப்பரா தான் வந்தது. அதுவும் அவனுக்கு பிடித்த சாக்லேட் வேறு
கேக் சாப்பிட்டதும் பையனுக்கு ரொம்ப சந்தோஷம்.
அடுத்து இரவு வந்து ஷாப்பிங் பெஸ்டிவலுக்கு இதுவரை எங்கும் போகல. அப்ராவில் தினம் நடக்கும் பையர் வொர்ஸ் கூப்பிட்டு போய் காண்பித்து வந்தாச்சு,
அப்பாடா வெளியில் கூப்பிட்டு போய் வந்ததும் ஹனீபுக்கு பிறந்த நாள் முழுமை அடைந்த மாதிரி ஆகிவிட்டது25 கருத்துகள்:

Unknown said...

பிறந்தநாள் கேக் சூப்பராக தான் இருக்கு. மைக்ரோ ஓவனில் நல்ல வந்திருப்பதாக சொல்லியிருக்கிங்க செய்துவிடவேண்டியது தான்.
எவ்வளவு ஹையில் வைக்கனும்?

Chitra said...

Microwave oven cake?

அக்கா, கரம் மசாலா போட்டு அசத்திட்டீங்க. கண்டிப்பா செஞ்சு பாக்கணும். மகனின் பிறந்த நாள் நன்கு கொண்டாடியதை கேட்டு சந்தோஷம்.

Menaga Sathia said...

மசாலா கேக் சூப்பராயிருக்கு அக்கா.மகனின் பிறந்தநாள் நல்லபடியாக முடிந்ததில் சந்தோஷம்.

ஸாதிகா said...

கேக் சூப்பர்!100 கிராம் மைதாவுகு 100 கிராம் பட்டர் தேவையா?அதிகமில்லையா?

Kolipaiyan said...

புதுசா ஒரு டிஷ் சொல்லிடீங்க ... செய்துவிடவேண்டியதுதான்.
நன்றி அக்கா.

athira said...

ஜலீலாக்கா.... ஹனீபுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். சொக்கலேட் கேக் அருமை. அதுவும் மைக்குறோவேவில் நன்றாக வந்திருக்கெனக் கேட்க ஆச்சரியமாக இருக்கு. தகவலுக்கு மிக்க நன்றி.

ஜெய்லானி said...

தலைப்பு தான் கேட்டா பயமா இருக்கு.(கரம் மசாலா கடையில் வாங்கினால் அதில் மிளகு பொடி இருக்குமே.ஐயோ.........)

வேலன். said...

கேக் சூபபர் சகோதரி..ஆனால் கரம் மசாலாதான் ஏன் சேர்க்கின்றீர்கள் என்று தெரியவில்லை.இங்கு ஆரஞ் தோல் மற்றும் இஞ்சி மரப்பா (இஞ்சியை சர்க்கரை பாகில் ஊறவைத்தது)செர்ரி மற்றும் திராட்சை முந்திரி சேர்ப்போம். உங்கள் மெனுவும் வித்தயாசமாகதான் இருக்கு...வாழ்க வளமுடன். வேலன்.

வசந்தமுல்லை said...

arumai ithupol niraiya samaiyal kurippugal thara en vazhthukkal!

Unknown said...

oven இல்லை இங்கே - வாங்கிட்டு செய்து பார்ப்போம் ...

Inside Story said...

There is an easy way to earn money just while you are sitting in your home and browsing the internet. These are not a scam.They really paying you.

Click one of the following link and join as a member to be get paid:

1. http://www.neobux.com/?r=kaviyan
2. http://www.upbux.com/?r=kaviyan
3. http://wordlinx.com/a/?r=240599
4. http://www.trekpay.com/?ref=169994
5. http://www.earneasycash.info/index.php?ref=kaviyan
6. http://www.buxp.info/?r=kaviyan
7. http://www.clixofchange.com/index.php?ref=kaviyan

for More information click
http://earningman.wordpress.com/2010/02/15/hello-world/

சீமான்கனி said...

கேக் சூப்பராதான் இருக்கு...

கரம் மாசலா...காரமா இருக்குமோ???

நாஸியா said...

இப்பவும் பாருங்க, எங்கும்மாக்கு கேக் செய்ய தெரியலயேன்னு தான் தோணுதே தவிர நாம செஞ்சு பார்க்கனும்னு தோணவே மாட்டேங்குது... மாஷா அல்லாஹ் குடுத்து வெச்ச ஹனீஃப் பாய்! :)))

சாருஸ்ரீராஜ் said...

பிறந்தநாள் கேக் சூப்பராக இருக்கு noi oves so i will try it latter

சசிகுமார் said...

பயனுள்ள பகிர்வு, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

டவுசர் பாண்டி said...

இன்னாப்பா இது !! கேக்கு அல்லாம்
கீது !! எப்பிடியாது உருண்டு பெரண்டு , இத்த சென்சி பாத்துடனும் , அக்காங் இதுக்காக , இன்னா மேரி கஷ்டம் வந்தாலும் , அத எதித்து இன்னு ஜெயிக்கணும் , !!

டவுசர் பாண்டி said...

நம்ப நெலம தெரிமா ? அண்ணாத்தைக்கி இன்னா ஆச்சி இன்னு ஒரு வார்த்த கேட்டியா இன்னா தங்கச்சி !! நேத்து பதிவு பக்கமே காணோமே இன்னு
பாத்தா !! இந்த கேக்கு சென்சி ஜெயிச்சிட்டீங்க போல கீது , அதான் நம்ப ஏரியாவுக்கு வரல !!

SUFFIX said...

பேரே அருமையா இருக்கு, மைக்ரோ ஒவனில் செய்யலாம்னு சொல்லிப்புட்டிய, செய்து பார்த்துடுறோம்.

ஹுஸைனம்மா said...

/ ஸாதிகா said...
100 கிராம் மைதாவுகு 100 கிராம் பட்டர் தேவையா?அதிகமில்லையா?//

அக்கா, நானும் இதே அளவுதான் (மைதா, பொடித்த சர்க்கரை, பட்டர், முட்டை எல்லாமே சம அளவு) பயன்படுத்துகிறேன். நீங்கள் என்ன அளவு போடுறீங்க அக்கா?

ஜலீலாக்கா, ஓவன்ல என்ன செட்டிங்க்ஸ்ல வச்சீங்க? அதையும் ஒரு குறிப்பாப் போடுங்களேன் ப்ளீஸ். நான் தேடிக்கிட்டிருக்கிற குறிப்பு இது. (படத்தோட)

Jaleela Kamal said...

எல்லோருக்கும் பிறகு பதில் போடுகீறேன்.
பாயிஜா, ஹுஸைன்னாம்மா , ஸாதிகா அக்கா ,பிறகு விளக்கம் தருகிறேன்

Asiya Omar said...

ஜலீலா உங்க கேக் அருமையாக இருக்கு.looking sweet and soft.ஓவனில் நானும் செய்து பார்த்திருக்கிறேன் ஸ்பாஞ்ச் கேக்,20 நிமிடம் ஆனது.ஆனால் ஜலி நீங்க டைம் குறைவாக சொல்வது தான் ஆச்சரியம்.ஓவனுக்கு ஓவன் மாறுபடுமோ.

Thaai said...

Good to c u back in actionn...:)

Jaleela Kamal said...

பாயிஜா
சித்ரா
மேனகா
ஸாதிகா அக்கா
கோழி பையன்
ஜெய்லானி
வேலன் சார்
வேலன் சார் ஆமாம் இது கேக்கு களிக் பல விதம், புருட் கேக், ஆரஞ்சு தோல் , இஞ்சி மரபா,லெமன், சினாமன் என்று அதில் இது ஒரு வகை.

வசந்த முல்லை
நட்புடன் ஜமால்
அதிரா
சீமான் கனி
நாஸியா
சாருஸ்ரீ
சசிகுமார்
பாண்டி அண்ணாத்தே
ஷபிக்ஃஸ்
ஹுஸைன்னம்மா
தாய்


கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி .

(ஜெலானி, ஸாதிகா அக்கா, பாயிஜா, ஹுஸைனாம்மா உங்களுக்கு பின்னூட்ட பதிவு தனஇயாக போடுகிறேன்.

Umm Mymoonah said...

I too add spices to cake, but never tried garam masala, looks awesome. I'm sure it should have tasted great.

Torviewtoronto said...

thank you for linking this yummy cake

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா