Wednesday, April 28, 2010

பாலக்,பருப்பு தக்காளி பொரியல் - spinach tomato poriyal

//டயட் செய்பவர்களுக்கும் நல்ல ஒரு சைட் டிஷ்.//

தேவையானவை

பாலக் கீரை (ஸ்பினாச்) = ஒரு கட்டு
துவரம் பருப்பு = கால் டம்ளர்
தாளிக்க‌
எண்ணை + நெய் இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி
கடுகு = கால் தேக்கரண்டி
காஞ்ச மிளகாய் = முன்று
சின்ன வெஙகாயம் = ப‌த்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் = அரை தேக்க‌ர‌ண்டி
கருவேப்பிலை = சிறிது
உப்பு = அரைத்தேக்கர‌ண்டி
தக்காளி = ஒன்று
செய்முறை


1.கீரையை பொடியாக‌ ந‌ருக்கி ம‌ண்ணில்லாம‌ல் க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக்க‌வும்/ப‌ருப்பில் ம‌ஞ்ச‌ள் தூள் சிறிது நெய் ஊற்றி வேக‌வைத்து ம‌சிக்க‌வும்.

2.தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை ஒன்ற‌ன் பின் ஒன்றாக‌ சேர்த்து தாளித்து த‌க்காளியை பொடியாக‌ அரிந்து சேர்த்து வ‌த‌க்கி ம‌சித்த‌ப‌ருப்பை சேர்த்து ந‌ன்கு கிள‌றி சிறிது நேர‌ம் சிம்மில் வைத்து இர‌க்க‌வும்.

3.காரமில்லாத சுவையான பாலக் தக்காளி பொரியல் ரெடி.


குறிப்பு:

இது கால் டம்ளர் பருப்பை போட்டு குக்கரில் வேகவைக்க வேண்டாம், சாம்பார் அல்லது பருப்பு ரசத்துக்கு பருப்பு வேகவைக்கும் போது அதிலிருந்து கால் டம்ளர் எடுத்து பயன் படுத்தி கொள்ளலாம்.
தேவைப்பட்டால் தேங்காய் துருவல் சிறிது சேர்த்து கொள்ளலாம்.

டயட்டில் இருப்பவர்கள், நெய் சேர்க்க வேண்டாம். எண்ணையும் ஒரு தேக்கரண்டி போதுமானது.


அயர்ன் சத்து நிறைந்த பாலக் அப்படியே சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட நல்ல இருக்கும். கர்பினீ பெண்களுக்கு மிகவும் நல்லது அடிக்கடி பொரியல்,சூப் போல வைத்து சாப்பிட்டால் தேவையான அளவு ஹிலோகுளோபின் கிடைத்துவிடும்.


35 கருத்துகள்:

ஜெய்லானி said...

பேரே வித்தியாசமா இருக்கே. அதுவும் நடு ராத்திரியில

athira said...

சூப்பர் ஜலீலாக்கா... நாந்தான் பெஸ்ட்..... எனக்குத்தான் எல்லா வடையும்.... இனி வாறவைக்கு ஆயாவைக்கொடுங்கோஓஓஓஓஓஓஓஒ

Nithu Bala said...

Superb poriyal..very healthy dish..
Akka, I get to see your message that day..My system was not working properly that is why a bit late in responding..will inform you surely if I conduct any event in future..

seemangani said...

பாலக்பருப்பு தக்காளி பொரியல்
super...

சைவகொத்துப்பரோட்டா said...

மிக சுலபமாக இருக்கே!!!

Ananthi said...

hmmm..looking yummy.. will try :)

Chitra said...

One of my favorite veg. dishes. :-)

ஜெய்லானி said...

//பாலக் கீரை (ஸ்பினாச்) = ஒரு கட்டு//

இதுக்கு சரியான தமிழ் பேரு என்னது. நமது ஊரில கீரைதண்டு ன்னு ஒன்னு வரும் அதில நீங்க சொன்ன ஐட்டங்களை போட்டு செய்யும் போது அதன் ருசியே தனி. ( கீரை வகைகளை மண் சட்டியில் செய்யும் போது சத்துக்கள் கெடாது , ருசியும் அபாரமாக இருக்கும் .)

ஜெய்லானி said...

@@@ athira--//சூப்பர் ஜலீலாக்கா... நாந்தான் பெஸ்ட்..... எனக்குத்தான் எல்லா வடையும்...//
ஐ..ஐ..ஹை....
//
இனி வாறவைக்கு ஆயாவைக்கொடுங்கோஓஓஓஓஓஓஓஒ//

ஓஓஓஓஓஓஹோஓஓஓஓஓஒ

Aruna Manikandan said...

Nice healthy poriyal..
Will soon try this!!
Thx. for sharing

Chitra said...

super..never tried this way..will try and let u know :)

SUFFIX said...

:) நல்லா இருக்கும்போல, செஞ்சு சாப்பிடணும்.

asiya omar said...

பாலக்,பருப்பு,தக்காளி அருமையாக இருக்கு.நான் கூட்டு இப்படிதான் செய்வேன்.

sarusriraj said...

ரொம்ப நல்லா இருக்கு சிரு பருப்பு போட்டு செய்தாலும் சுவையாக இருக்கும் .

Kanchana Radhakrishnan said...

சுலபமாக இருக்கே.

Jaleela said...

ஜெய்லானி பாலக் கீரை, அப்படினா பசலை கீரை..

Krishnaveni said...

My fav. recipe. Madam Please collect your awards from my blog

LK said...

arumai. sagothari, unga blog load aga romba late aguthe...athuvum templatethan late pannuthu

athira said...

ஜெய்லானி said...
நமது ஊரில கீரைதண்டு ன்னு ஒன்னு வரும் அதில நீங்க சொன்ன ஐட்டங்களை போட்டு செய்யும் போது அதன் ருசியே தனி. ( கீரை வகைகளை மண் சட்டியில் செய்யும் போது சத்துக்கள் கெடாது , ருசியும் அபாரமாக இருக்கும் .)/// இப்பத்தானே சுடுதண்ணி வைக்கப்பழகினாய் அதுக்குள் கீரக்கு விளக்கம் கொடுக்கிறார்.... எங்காவது ஸ்பெஷல் கிளாஸ்க்குப் போறாரோ?....


ஜெய்லானி said...
பேரே வித்தியாசமா இருக்கே. அதுவும் நடு ராத்திரியில/// எப்பூடி இதுக்கு மட்டும் நடுராத்திரில கண்ணு தெரிஞ்சுது???

நட்புடன் ஜமால் said...

சரி சொல்லிடுவோம்

டயட்டுன்னாலே ரொம்ப பிடிக்கும்.

malar said...

ம்ம்ம்...பார்போம்...

Mrs.Menagasathia said...

நல்ல சத்தான பொரியல்...

Geetha Achal said...

சூப்பர்ப் பொரியல்...இதனை நாங்கள் கூட்டு என்று சொல்லுவோம்....அருமை...எனக்கு மிகவும் பிடித்த கூட்டு...இதனை நெய் கலந்து சாதத்துடன் , உருளைகிழங்கு வறுவல் அல்லது கருவாடு அல்லது அப்பளமுடன் சாப்பிட சூப்பர்ப்...

Jaleela said...

நடு ராத்திரில உங்களுக்கு கண்ணு தெரியாதே எப்படி இது மட்டும் கண்ணில் தென்பட்டது.

Jaleela said...

அதிரா உங்களுக்கு வடை கிடையாது, ஜெய்லானி முந்தி கொண்டார்.

தக்காளி சேர்த்து உங்களுக்கு பிடிகாதே, ஆனால் ரொம்ப சுவை அருமையாக இருக்கும்.

Jaleela said...

நீத்து பாலா தொடர் வருகைக்கு மிகக் நன்றி.
பரவாயில்லை எனக்கும் நேரம் இல்லை ஏன் கலந்து கொள்ள வில்லை என்று நீங்க கேட்டதால் சொன்னென், முடிந்த போது கண்டிபா அனுப்புகிறேன்.

Jaleela said...

தவ்றாமல் கருத்து தெரிவிபப்தற்கு மிக்க நன்றி சீமான் கனி.

சை.கொ.ப , ஆமாம் ரொம்ப சுலபம்.

நன்றீ ஆனந்தி

சித்ரா எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

Jaleela said...

வருகைக்கு நன்றி அருனா.

ஷபிக்ஸ் உங்க தங்கமனிக்கிட்ட சொல்லி செய்ய சொல்லுங்க.

சித்ரா இந்த பாலக்கை நான் பல வகையாக செய்வேன், முயற்சி செய்து பாருங்கள்.


ஆசியா இது கூட்டு போல் இருகாது பருப்பை க்டையாமல் அப்ப்டி சேர்ப்பது.

ஆமாம் சாருஸ்ரீ சிறு பருப்பு போட்டு கடைசல் வைப்பேன்.

வாங்க காஞ்சனா ரொம்ப சுலபமான முறை.

அவார்டு கொடுத்தமைக்கு மிகக் நன்றி + சந்தோஷம் கிருஷ்ன வேனி பெற்று கொள்கிறேன்

Jaleela said...

தவறாமல் வந்து கருத்து தெரிவிப்பத்ற்கு மிக்க நன்றி எல்.கே.

ஆமாம் பதிவுகள் படங்கள் நிறைய இருப்பதால் அப்படி ஆகுது போல

மனோ சாமிநாதன் said...

கீரை பொரியல் அழகாக இருக்கிறது பார்க்க! மிகுந்த சத்தான பொரியலும்கூட!

Jaleela said...

சகோ.ஜமால் , டயடா, ஓ டயட்டா.

தங்கஸ் கிட்ட சொல்லிடுஙக்

நன்றி

மலர் நீஙக் செய்து பார்த்து நல்ல வந்தா தானே சொல்வீங்க


ஆமாம் மேனகா சத்தான பொரியல்.


//சூப்பர்ப் பொரியல்...இதனை நாங்கள் கூட்டு என்று சொல்லுவோம்....அருமை...எனக்கு மிகவும் பிடித்த கூட்டு...இதனை நெய் கலந்து சாதத்துடன் , உருளைகிழங்கு வறுவல் அல்லது கருவாடு அல்லது அப்பளமுடன் சாப்பிட சூப்பர்ப்// கீதா ஆச்சல் நீங்க சொல்லும் போதே சூப்பரா இருக்கு, கருவாட பார்த்து வருஷகாலம் ஆகுது ஊர்க்கு போனா தான் ஒரு பிடி பிடிக்கனும்.

angelin said...

jaleela ungal recipes ellame romba super.thanks for sharing.i tried your sea weed agar agar jelly recipe.it really came very well.keep cooking delicious foods and share it with us.have anice day.

Jaleela said...

//கீரை பொரியல் அழகாக இருக்கிறது பார்க்க! மிகுந்த சத்தான பொரியலும்கூட//

கருத்து தெரிவித்தமைக்கு மிகக் நன்றி மனோ அக்கா

Jaleela said...

ஏஞ்சல்லின் செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

PriyaVaasu said...

Nan payatham parupu seruthu than seivathu vazhakam!!!! Healthy-aana Dish!!!!

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா