Tuesday, May 24, 2011

மைதா மற்றும் கடலைமாவு சுழியன்





இங்கு துபாயில் உள்ள டீ கடைகளில் இந்த சுழியன் , இனிப்பு பனானா பஜ்ஜி, பகோடா போடுவார்கள். இந்த சுழியனை முதல் முதல் பஜார் ஏரியாவில் ஒரு வீட்டுக்கு சென்ற போது கீழே டீகடையில்  ஆர்டர் செய்து கொடுத்தாங்க பாசிப்பயிறில் இனிப்பு சுண்டல் , கார சுண்டல் மற்றும் பல அயிட்டங்கள் செய்தாலும் இந்த சுழியன் ரொம்ப  பிடித்து அதில் இருந்து நானும் என் இழ்டத்துக்கு கலவைகள் போட்டு அடிக்கடி செய்வது .நோன்பு காலங்களிலும் செய்வேன். இது இரண்டுவகையான சுழியன் செய்து இருக்கிறேன் சுவைத்து மகிழுங்கள். 



மைதா சுழியன்
 தேவையானவை
மாவு கரைக்க
மைதா மாவு – முன்று  சூப் ஸ்பூன் முழுவதும்
கார்ன் மாவு – ஒரு சூப் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – அரை தேக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிக்கை
ஃபில்லிங்
முழு பாசி பயிறு – 100 கிராம்
வெல்லம் – 50 கிராம்
தேங்காய் துருவல் – இரண்டு மேசை கரண்டி
ஏலக்காய் தூள் – கால் தேக்கரண்டி

எண்ணை – பொரிக்க தேவையான அளவு






 செய்முறை

முழு பாசிபயறை 8 மணி நேரம் ஊறவைத்து அதை வேகவைத்து தண்ணீரை வடிக்கவும்.
கார்ன் மாவு, மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து கட்டியாக கரைத்து வைக்கவும்.
வெல்லத்தை பொடித்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு வடிகட்டவும்.
வெல்லம் தேங்காய் துருவல் ஏலத்தூளை பயறுடன் கலந்து உருண்டைகளாக உருட்டி கரத்த மாவில்  முக்கி எடுத்து பொரிக்கவும்.
தீயின் தனலை சிம்மில் வைத்து மெதுவாக திரிப்பி போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான சுழியன் ரெடி.
***************************************************************************

மற்றொரு முறை வகை

கடலைமாவு சுழியன்

ஃபில்லிங்
முழு பாசி பயிறு – 100 கிராம்
சர்க்கரை – 50 கிராம்
தேங்காய் துருவல் – இரண்டு மேசை கரண்டி
ஏலக்காய் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு சிட்டிக்கை


மாவு கலவை:

கடலை மாவு - அரை கப்
மைதா - ஒரு மேசை கரண்டி
அரிசி மாவு - ஒரு மேசை கரண்டி
உப்பு - ஒரு சிட்டிக்கை
இட்லி சோடா - 2 சிட்டிக்கை

எண்ணை பொரிக்க தேவையான அளவு

செய்முறை

முழு பாசிபயறை 8 மணி நேரம் ஊறவைத்து அதை வேகவைத்து தண்ணீரை வடிக்கவும்.
மாவு கலவைக்கு கொடுத்துள்ள பொருட்களை கட்டியாக கரைத்து வைக்கவும்.
வெந்த பாசிப்பயிறில் சர்க்கரை தேங்காய் துருவல் ஏலப்பொடி ஒரு சிட்டிக்கை உப்பு சேர்த்து கலக்கி உருண்டைகளாக பிடித்து மாவு கலவையில் தோய்த்து எண்ணையை காயவைத்து பொரித்து எடுக்கவும்.







இனிப்பு எள் சோமாஸ்

I am sending these recipes to akila's celebrate sweets - stuffed sweets event. 






18 கருத்துகள்:

Menaga Sathia said...

2 குறிப்புகளுமே ரொம்ப நல்லாயிருக்கு...

Angel said...

அருமையான குறிப்புகள் .வார கடைசியில் செய்ய போறேன் .பகிர்வுக்கு நன்றி .

மாதேவி said...

மைதாவில் எங்கள் அம்மா செய்வார். இதைஇங்கு பாசிப்பயறு சூசியம் என்பார்கள்.

கடலைமா தோய்ப்பது நன்றாக இருக்கிறது ஜலீலா.

Jaleela Kamal said...

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி மேனகா/

Jaleela Kamal said...

ஏஞ்சலின் செய்து பாருங்கள்
இதை அழகா வட்ட வடிவமாக பிடித்து பால்ஸ் போல் செய்யனும்
நெத்துன்னு வேகவைத்தால் எனக்கு பிடிக்காது ஆகையால் கொஞ்சம் நல்ல வேக வைத்தால் தோய்க்கும் போது நல்ல ஷேப் கிடைக்கல.
ஒரு நான் முன் வேகவைத்து உருண்டை பிடித்து பிரிட்ஜில் வைத்து மறுநாள் செய்தால் இன்னும் நல்ல வரும்.

Jaleela Kamal said...

மாதேவி ஆமாம் கடலை மா தோய்ப்பது சுவை கூடுதலா இருக்கும்.

இது சூசியமா? சுய்யமா? சுழியனா?
யாருக்காவது தெரியுமா?

Unknown said...

Indha sweet romba pidikum - vara sunday poojaikku idhudhan pannalaamne irruken... Enoda blog visit panathikku romba nanri :) Naan unlga follow pannaren :)Neegalum enoda blog follow panna romba nallairrukum - thanks :) Priya

vanathy said...

super recipe, Akka.

Chitra said...

நெல்லை பக்கம், மைதா மாவில் சுசியம் என்ற பெயரில் செய்வார்கள். அருமையான சுவை கொண்டது. :-)

ஸாதிகா said...

இரண்டும் அருமையான குறிப்புகள்.

athira said...

சுழியன்.... பெயரே சிரிப்பை வரவைக்குது:)... மைதாமாவில் நாமும் செய்வோம் எப்பவாவது.

இரண்டு குறிப்பும் சூப்பர்.

Lifewithspices said...

both r so perfect i love this dish but have never made n the filling is awesome..

Unknown said...

2 குறிப்புகளுமே ரொம்ப நல்லாயிருக்கு...

Nandinis food said...

Came out really good! Nice filling!

எம் அப்துல் காதர் said...

மாலையில் சாப்பிட ஒரு வடிவான டிஃபன் இவைகள் ரொம்பவும் அருமையா இருக்கும் ஜலீலாக்கா!!

Vardhini said...

Lovely snack .. bookmarked.

Vardhini
VardhinisKitchen

இப்னு அப்துல் ரஜாக் said...

அக்கா,தங்களின் தந்தையார் மறைவான செய்தி கேட்டு துயரமடைந்தேன்.பொறுமையை கை கொள்ளுங்கள.அல்லாஹ் நம்மை பொருந்திக்கொள்வானாக.இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.எல்லாம் வல்ல அல்லாஹ்,அவர்களின் எல்லாப் பாவங்களையும் பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்குவானாக.

Kanchana Radhakrishnan said...

அருமையான குறிப்புகள்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா