Tuesday, December 18, 2012

Saffron with Sulaimani - Haneef Preparation




அரபு நாடுகளில் காவா விற்கு பிறகு இந்த சுலைமானிக்கு தான் முதலிடம் அரபிகள் சர்க்கரை போடாமல் ஒரு ப்லாஸ்க் முழுவதும் சுலைமானியை போட்டு கொண்டு பேரிச்சை பழத்துடன் இதை குடிப்பார்கள்.
குளிர்காலங்களில் பார்க் போன்ற இடங்களில் பார்பிகியு உணவுடன் கண்டிப்பாக சுலைமானியும் இருக்கும்

.





I Always Prepare Saffron Sulaimani Tea ( Black Tea ),For My Dad And Mom at night , It Helps to digest Food Faster :P  . 1st I Fill ¾ of a glass with water, then I Dip in a Lipton Tea Bag , then I kept it in the oven for about 30 seconds. Then I Removed the tea Bag and Added some sugar to it :D , (I Use a Glass that can hold around 200mL so I used 2½ Tea Spoon , After that I add 4 small strips of Saffron to the tea  , Then Finally heat the tea again for 30 seconds , This Tea is also Like a cough syrup. J
Your Saffron Tea is Ready ^_^ .

-Haneef.





தினம் டீ குடிக்கலன்னா எனக்கும் என் கணவருக்கும் வேலையே ஓடாது.

காலையில் திக்கான பாலில் இஞ்சி டீ 5.30 மணிக்கு குடிச்சாதான் கிர்ரூன்னு பம்பரம் மாதிரி 8 மணி வரை எவ்வளவு வேலை செய்தாலும் அலுப்பு தெரியாது.
இரவு கண்டிப்பாக டிபன் தான் டிபனுக்கு பிறகு டீ குடிச்சே ஆகனும்.
எனக்கு உடம்பு முடியாமபோனதில் இருந்து இரவு டீ மட்டும் ஹனீப் போட்டு தருவார்.
சாப்ரான் சுலைமானி. ஒரு நாள் போட்டு தந்தார். குறையே  சொல்ல கூடாது

ஸ்ஸ் அப்பா ரொம்ப சரியாக இருக்கே டிகாஷன், சர்க்கரை எல்லாம் என்பேன்.

 அப்படியே ஒரு சிரிப்பு சிரிப்பார் / பாருங்கள்.


நல்ல செரிமானம் ஆகும். தினம், ஏசி யில் படுப்பதால் ஏறபடும் சளிதொல்லை இருக்காது.காது கிட்ட சளி அடைத்து கொண்டு இருந்தாலும் உடனே சரியாகும். அதுக்குன்னு நிறைய போட்டு குடிக்க வேண்டாம், ஒரு டம்ளருக்கு 4 இதழ் போதுமானாது.குழந்தைகளுக்கு பாலில் கரைத்து வடிகட்ட்டி கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு 2 இதழ் போதும்.

கர்பிணி பெண்களுக்கு ஏற்ற சூப்பரான பானம் , கர்பிணி பெண்கள் பால் கொதிக்க வைத்து அதில் இரண்டு முன்று சாப்ரான் இதழ்களை சேர்த்து காய்ச்சி குடித்தால் , குழந்தை பிறந்ததும் குழந்தைக்கு ஏற்படும் சளி அதிகரிக்காமல் கட்டுபடும்.



என்னுடைய பேச்சுலர் ஈவண்டுக்கு ஹனீபுடைய குறிப்பு, பூஸாரே உங்களுக்கு போட்டியா நிறைய பேர் வந்தாச்சு..


14 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் said...

டீ பற்றி சொல்லியிருக்கீங்க....

கிரீன் டீ உடம்புக்கு நல்லது என்பதால் அதுதான் எனது பேவரிட்.... ஆனால் அதில் சர்க்கரை சேர்க்காமல் சாப்பிட வேண்டுமாம். அது நம்மால் இன்னும் முடியவில்லை...

பாரணை முடிச்ச:) அதிரா said...

சூப்பர் ரீ... ஹனீஃபுக்கு வழ்த்துக்கள்.. முகத்தில புன்னகையோடு வெக்கமும் தெரியுதே:))

Asiya Omar said...

சாஃப்ரான் சுலைமானி இப்ப தான் கேள்விப்படுறேன்,வாழ்த்துக்கள் ஹனீஃப்.

cookbookjaleela said...

சேகுமார் கிரீன் டீ உடம்புக்கு நல்லது சர்க்கரை சேர்க்காமல் குடிக்க முடியவில்லை என்றால் , இரண்டு பேரித்தம் பழம் சாப்பிட்டு விட்டு குடித்து பாருங்கள்

ஈசியாக குடிக்கலாம்

இங்குள்ள அரபிகள் காவா ம்ற்றும் இந்த சாப்ரான் டீயை இப்படி தான் சர்கக்ரை சேர்க்காமல் பேரித்தம் பழம் கடித்து கொண்டே குடிப்பார்களாம்.
இதை அப்படி குடித்தால் கசப்பு தெரியாது.

Jaleela Kamal said...

சேகுமார் கிரீன் டீ உடம்புக்கு நல்லது சர்க்கரை சேர்க்காமல் குடிக்க முடியவில்லை என்றால் , இரண்டு பேரித்தம் பழம் சாப்பிட்டு விட்டு குடித்து பாருங்கள்

ஈசியாக குடிக்கலாம்

இங்குள்ள அரபிகள் காவா ம்ற்றும் இந்த சாப்ரான் டீயை இப்படி தான் சர்கக்ரை சேர்க்காமல் பேரித்தம் பழம் கடித்து கொண்டே குடிப்பார்களாம்.
இதை அப்படி குடித்தால் கசப்பு தெரியாது.

Jaleela Kamal said...

நன்றி அதிரா

Jaleela Kamal said...

ஆசியா இது இங்குள்ள அரபிகள் குடிப்பது.

வருகைக்கு மிக்கநன்றி

Unknown said...

Wow.. Sinna payan tea poothu asathi vithaan.. Super.. naanum ippa green tea thaan kodikuren.. Sugar illamal..

Divya A said...

Aha what a nice tea recipe and he has made it very well..Congrats Haneef :)My husband loves green tea a lot, will make this for him :)
Thanks Haneef :)
Snow Pudding | Egg White Pudding | Christmas Dessert | Christmas Recipes

அஸ்மா said...

ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகள் ரேஞ்சுக்கு நமக்கு ஹெல்ப் பண்ணும்போது எவ்வளவு சந்தோஷமா இருக்கும்!! மாஷா அல்லாஹ் :) அவருக்கும் உங்கள் அனைவருக்கும் இறைவன் நீடித்த ஆயுளையும் நோயற்ற‌ வாழ்வையும் தந்து மென்மேலும் உங்களுக்கு உதவியாக இருக்கட்டும்!

மாதேவி said...

மகிழ்ச்சியாக இருக்கின்றது.

வாழ்த்துகள் ஹனீப்.

ஸாதிகா said...

ஹனீஃப் டீ போட்டு தருவாரா?வாவ்..எனக்கொரு கப் சுலைமானி...!

ஸாதிகா said...

சுலைமானி ஒகே.காவா டீ ரெசிப்பி பிளீஸ்.

Umm Omar said...

ஹனீஃப்... உங்களையும் அம்மா விடறதில்லையா???? :))) முதல்ல ஒரு தடவை உருளைக்கிழங்கு சிப்ஸ் பற்றி எழுதியிருந்தீங்களே அதோட இந்த டீயைக் குடிக்கலாமா?? :))

எனக்கும் இந்த டீ ரொம்ப பிடிக்கும். இங்கே ஒரு ஆப்பிரிக்கன் ரெஸ்டாரண்ட்டில் குடிப்போம். நானும் போட முயற்சிக்கறேன் :)

இன்ஷா அல்லாஹ் ஒமருக்கும் டிரெயினிங் ஆரம்பிக்கனும் :)

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா