Friday, April 30, 2010

இலாச்சி ஜின்ஜர் சாய் - cardamon ginger chai

நான்கு நபர்களுக்கு தயாரிக்கும் அளவு, ஒரு கப் குடிங்க புத்துணர்வை பெறுங்கள்.



தேவையானவை

பால் பவுடர் - எட்டு தேக்கரண்டி

தண்ணீர் - நாலு டம்ளர் + கால் டம்ளர்

சர்க்கரை - ஏழு தேக்கரண்டி

ஏலக்காய் - முன்று

இஞ்சி - 25 கிராம்

டீ தூள் - இரண்டு தேகக்ரண்டி

செய்முறை

1. தண்ணீர், பால் சர்கக்ரை சேர்த்து கொதிக்க விடவும்.



2. கொதிக்கும் போது டீதூள், இஞ்சி துருவி, ஏலக்காயை தட்டி (அ) இஞ்சியுன் ஏலக்காயை கொர கொரப்பாக அரைத்து சேர்த்து தீயின் தனலை குறைத்து வைத்து கொதிக்க விடவும்.



3. கொதித்து ரங்கு இரங்கியதும் வடிகட்டி விடவும்.




4. சுவையான புத்துணர்வு தரும் இலாச்சி, ஜின் ஜர் டீ ரெடி




சுறு சுறுப்பிற்கு இஞ்சி ஏலக்காய் சாயா, இது எல்லோரும் விரும்பி குடிப்பது. இடத்துக்கு தகுந்த மாதிரி இந்த டீயை, இஞ்சி சாயா என்று இஸ்லாமிய இல்லங்களிலும், அரபிகள் சாய் என்று சுலைமானியையும், சைனீஸ் ஷாய் , சாய் .வட நாடுகளில் ஜின் ஜர் சாய், இலாச்சி சாய் என்று சொல்வார்கள்.



இஸ்லாமிய இல்ல விசேஷங்களில் கறி சேமியா, பிரியாணி, தக்குடிக்கு பிறகு கண்டிப்பா இஞ்சி டீ இல்லாமல் இருக்காது சரியான குளிர்காலத்தில் ஏற்படும் சளி தொல்லைக்கு ஏற்றது இந்த இஞ்சி டீ. எங்க வீடுகளில் எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் ஒரு பானை நிறைய காலையிலும் மாலையிலும் முதலில் இந்த் டீய போட்டு விடுவோம். எப்பவுமே காலை 5 மணிக்கு டீ போடுவது என் வேலை அம்மா வீட்டில், அடுத்து மாமியார் வீட்டில், இப்ப இங்கும் முதலில் காலையில் இந்த டீ போட்டு குடித்துட்டு விட்டால், மீதி வேலைய பம்பராம சுற்றி பார்த்து விடலாம்.


I am sending this cardamon ginger chai to priya's cardamon seed event.


குறிப்பு: பால் பவுடரில் டீ போட்டால் திரிந்து போகாதா என்ற சந்தேகம் சிலருக்கு உண்டு, திரிந்து போகும். (பயப்பட வேண்டாம்)
நாங்க டீக்கு பயன் படுத்தும் கெட்டில் மற்றும் கரண்டியை வேறு எதற்கும் பயன் படுத்த மாட்டோம்.
அது டீ போடும் கெட்டிலில், கலக்கும் கரண்டியில் ஏதாவது கார உணவில் பட்டு இருந்தால் திரியும்.அதே போல் இஞ்சியை சரியாக கழுவ வில்லை என்றாலும், கத்தி வேறு ஏதும் வெங்காயம் தக்காளி நறுக்கிய கத்தி பயன் படுத்தினாலும் திரிந்து போகும். பாலை கலக்கியதும் உடனே இஞ்சிய போட்டாலும் திரியும்.
பால் கலக்கி கொதிக்க ஆரம்பித்ததும், டீதூள் போட்டு விட்டு பிறகு இஞ்சி சேர்த்து டீயின் ரங்கு+இஞ்சி காரம் அதில் இறங்க சிறிது நேரம் சிம்மில் வைத்து கொதிக்க விட்டு ஆஃப் செய்து ஒரு நிமிடம் கழித்து வடிக்கவும்.
பிரெஷ் மில்கிலும் போடலாம், அது ஒரு கப்புக்கு ஒன்னே கால் கப் தண்ணீர் அல்லது சம அளவு பயன் படுத்தியும் போடலாம்.
பால் சேர்த்து இஞ்சி சாயா பிடிக்காதவர்கள், பிளாக் டீயில் இஞ்சி ஏலம் தட்டி போட்டும் தயாரித்தும் குடிக்காலாம்.

Thursday, April 29, 2010

வித விதமான கழுத்து டிசைன்கள்



சோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது.





முன்பு காலத்தில் வி நெக், ரவுண்ட் நெக், ப நெக் மட்டும் தான்.




ஆனால் இப்ப சோளியில் கழுத்த் வித விதமான டிசைன் களிலும், பைப்பிங், போ வைத்து தைக்க ஆரம்பித்து விட்டனர்.










படத்தில் காட்டியுள்ளது போல் உங்களுக்கு விருப்பாமான டிசைன் களை வரைந்து வைத்து கொண்டால் சோளி தைக்கும் போது ஈசியாக இருக்கும்.







இது போல ஸ்டார் நெக் தைப்பது கொஞ்சம் கழ்டம், வளைவுகளை ஓட்டு தையல், ரன்னிங் ஸ்டிச் போட்டு தைத்து கொண்டால் ஈசியாக இருக்கும், வளைவுகளையும் அதே போக்கில் தைக்கனும் அந்த கார்னரில் அதே போல் வி ஷேப்பில் தைத்து விட்டு கார்னரை சிறிது வெட்டி விட்டால் தைத்து விட்டு திருப்பும் போது கழுத்தில் டிசைன் நன்கு படியும். ஓட்டு தையல் தைக்கும் போது சிறிது அரை செண்டி மீட்டர் தள்ளி தைக்க வேண்டும், இல்லையென்றால் தைத்து விட்டு திருப்பி தைக்கும் போது இட்டையில் தையல் விட்டு போகும் பிறகு பிரித்து தைப்பது மிகவும் சிரமம்.
















பின் புறம் வட்டவடிவமான கழுத்து ரொம்ப டீப்ப்பாக போடுவர்கள் , இடுப்பு கிட்ட கொஞ்சம் இரக்கம் வைத்து தைத்து கொண்டால்ஷோல்டர் முன் கழுத்து பக்கம் வடியாமல் இருக்கும்.
// ஜெயா டீவியில் நடிகை குஷ்புவின் மாடல்கள் பார்த்தால் வித விதமாக இருக்கும் ஆனால் உயரம் நல்ல இரக்கம் வைத்து தைத்து இருப்பதால் தான் சோளி வடியாமல் நிற்கிறது.//









தைக்கும் முன் அயர்ன் செய்து தைத்தால் டெயிலர் தைப்பது போலவே இருக்கும்.

கழுத்து ஆழமாக போடுபவர்கள், ஷோட்டரிலிருந்து சோளி
வடியும் அதற்கு படத்தில் உள்ள்படி பின்புறம் நாட் வைத்து தைத்து கொண்டால் நல்ல பிட்டிங் கிடைக்கும்.




அகல கழுத்து போடும் போதும், அல்லது மற்ற சோளிகளிலும் உங்கள் அறியாமல் உள்ளாடைகள் வெளியே தெரியும், அது வெளியில் வராமல் இருக்க ஷோல்டர் ஜாயிண்ட் பண்ணியதும் அங்கு ஒரு சிறிய லூப் வைத்து தைத்து பிரஸ் பட்டன் வைத்து உள்ளாடையை அதில் பின் பண்ணி விட்டால் வெளியே வர வாய்ப்பில்ல்லை, இப்ப சுடி தாரிலும் எல்ல்லோரும் டெயிலரிடம் தைக்க கொடுக்கும் போது ஷோல்டர் லூப் வைத்து பட்டன் தைத்து கொடுக்க சொல்லுங்கள்.
பிறகு முடிந்த போது துணியில் கழுத்தை வெட்டும் விதத்தை சொல்கிறேன்.

இதெல்லாம் தையல் டீச்சர் ஆனால் சொல்லி கொடுக்க முன்பு போட்டு வைத்து இருந்த பேட்டன்கள்.













Wednesday, April 28, 2010

பாலக்,பருப்பு தக்காளி பொரியல் - spinach tomato poriyal





//டயட் செய்பவர்களுக்கும் நல்ல ஒரு சைட் டிஷ்.//

தேவையானவை

பாலக் கீரை (ஸ்பினாச்) = ஒரு கட்டு
துவரம் பருப்பு = கால் டம்ளர்
தாளிக்க‌
எண்ணை + நெய் இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி
கடுகு = கால் தேக்கரண்டி
காஞ்ச மிளகாய் = முன்று
சின்ன வெஙகாயம் = ப‌த்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் = அரை தேக்க‌ர‌ண்டி
கருவேப்பிலை = சிறிது
உப்பு = அரைத்தேக்கர‌ண்டி
தக்காளி = ஒன்று




செய்முறை


1.கீரையை பொடியாக‌ ந‌ருக்கி ம‌ண்ணில்லாம‌ல் க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக்க‌வும்/ப‌ருப்பில் ம‌ஞ்ச‌ள் தூள் சிறிது நெய் ஊற்றி வேக‌வைத்து ம‌சிக்க‌வும்.

2.தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை ஒன்ற‌ன் பின் ஒன்றாக‌ சேர்த்து தாளித்து த‌க்காளியை பொடியாக‌ அரிந்து சேர்த்து வ‌த‌க்கி ம‌சித்த‌ப‌ருப்பை சேர்த்து ந‌ன்கு கிள‌றி சிறிது நேர‌ம் சிம்மில் வைத்து இர‌க்க‌வும்.

3.காரமில்லாத சுவையான பாலக் தக்காளி பொரியல் ரெடி.


குறிப்பு:

இது கால் டம்ளர் பருப்பை போட்டு குக்கரில் வேகவைக்க வேண்டாம், சாம்பார் அல்லது பருப்பு ரசத்துக்கு பருப்பு வேகவைக்கும் போது அதிலிருந்து கால் டம்ளர் எடுத்து பயன் படுத்தி கொள்ளலாம்.
தேவைப்பட்டால் தேங்காய் துருவல் சிறிது சேர்த்து கொள்ளலாம்.

டயட்டில் இருப்பவர்கள், நெய் சேர்க்க வேண்டாம். எண்ணையும் ஒரு தேக்கரண்டி போதுமானது.


அயர்ன் சத்து நிறைந்த பாலக் அப்படியே சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட நல்ல இருக்கும். கர்பினீ பெண்களுக்கு மிகவும் நல்லது அடிக்கடி பொரியல்,சூப் போல வைத்து சாப்பிட்டால் தேவையான அளவு ஹிலோகுளோபின் கிடைத்துவிடும்.


Monday, April 26, 2010

பருவமே 16



பதின்ம பருவ கொசுவத்தி (வயிற்றில் நெருப்பு) (அந்த காலத்து அம்மா மார்கள் பிள்ளை வெளியில் சென்று விட்டு விளக்கு வைப்பதற்குள்வீட்டுக்கு வரவில்லை என்றால், வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் என்பார்கள். ஆனால் இந்த காலத்து அம்மாமார்களே வயிற்றில் மட்டும் நெருப்பு இல்லை, கண்ணிலும் விளக்கெண்ணைய ஊற்றி கொண்டு விழித்திருங்கள்.)


தங்கை நாஸியா பதின்ம பருவ கொசுவத்திக்கு தொடர் பதிவுக்கு என்னை அழைத்து அவஙக் போட்ட பிரியாணி ஆறி போன மாதிரி இந்த விஷியமும் ஆறிவிட்டது, இத என்னால் இப்ப தான் எழுத நேரம் கிடைத்தது.
பொதுவாக ஆண், பெண் பதின்ம பருவம் பற்றி பார்க்கலாம்.



இங்க பாருங்க இத்துனூண்டு வாண்டுக்கு கூட கம்பியுட்டர் கேட்குது.


வாழ்க்கையில் ஓவ்வொருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் பிறந்து அவர்களின் குழந்தை பருவம் ஓவ்வொரு வருடமும் அருமையாக போகும். பள்ளியில் சேர்ப்பீர்கள்.பள்ளி பருவமும் நாட்கள் வெகு வேகமாக நகரும். இப்படி வருடம் போக போக 12 வயதை கடக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக கண்காணிக்க வேண்டிய வயது. ஆனால் 13 லிருந்து 18 ற்குள் அவர்களை நல் வழி நடத்துவதான் பெற்றோர்களுக்கு பெரிய சிரமம் இந்த வயதை கடக்கும் போது தான் எல்லா பெற்றோர்களுக்கும் வயிற்றில் நெருப்பை கட்டியது போல் இருக்கும். நிறைய அம்மாமார்கள் கோபம் அதிகமாவதே , பிரஷர் ஆரம்ப்பமாவது எல்லாம் இப்பதான், பிள்ளைகள் செயல் எல்லாமே ஏறுக்கு மாறாக இருக்கும்.இந்த வயதில் ஏற்படும் மாற்றங்களை கண்டிப்பாக எடுத்து சொல்லவேண்டும்




இந்த வயது தான் மனசு தடம் புரளும் வயது. ஆண் பிள்ளைகள் ஆட்டம் ஜாஸ்தியாக வே இருக்கும் எது சொன்னாலும் அதற்கு எதிர் வாதம் செய்வது. சில பிள்ளைகள் சிக்ரெட், திருடுவது , பொண்ணுங்க பிண்ணாடி சுத்துவது, ஊர் சுற்றுவது, படம் பார்ப்பது என்று சொல்லி கொண்டே போகலாம்.

சில பிள்ளைகள், கார்டூன், கேம்ஸ் என்று அதிலேயே கிடப்பார்கள்.
இதை ஒன்பதாவது, பத்தாவது படிக்கும் போது மார்க் கம்மியானாலே கண்டி பிடித்து விடலாம்.


அப்பாமார்களுக்கு இதை கவனிக்க முடியாது, சில அப்பாமார்கள் வெளிநாடுகளில் பிழைப்பைத்தேடி சென்று விடுவதால் அவர்களால் இரண்டு வருட்த்துக்கு ஒரு முறை வந்து போகும் கொஞ்சம் நாளில் ஒன்றும் கண் காணிக்க முடியாது , அம்மாக்கள், கொஞ்சம் உஷாராக கவனம் எடுத்து அவர்களுக்கு தெரியாமல் கண்காணிப்ப்து நல்லது.எந்த வேலை செய்தாலும் அவர்கள் மேலும் ஒரு கண்ணாய் இருப்பது நல்லது.

அப்படியே டியுஷன் அனுப்பினாலும் இப்ப ஆண்,பெண் இருவரும் ஒன்றாக ஒரே டீச்சரிடம் போகிறார்கள். அங்கு சேர்ந்து ஊர் சுற்ற ஆரம்பித்து விடுகிறார்கள்.

பாய் பிரண்ட் , கேர்ள் பிரண்ட் வைத்து கொள்வது, ஒரு பெண்ணுக்கோ , ஆணுக்கோ பாய் பிரண்டோ, கேர்ள் பிரண்டோ இல்லை என்றால் அவர்கள் ஒரு பெரிய தகுதிய இழந்த்து போல் சிலர் கிண்டல் பண்ணுவதும். ஒரு நாளைக்கு ஒரு கேர்ள் பிரண்ட், பாய் பிரண்ட் என்று மாற்றி, சிலரை ஏளனப்படுத்துவதுமாக இருக்க்கிறார்கள்.






உங்கள் வீடு சிட்டியில் இருந்து ஊரை தாண்டி வெளியில் தனியாக வசிப்பவர்கள் அதுவும் பெற்றோர்கள் வேலைக்கு செல்பவர்கள். பெண்களை தனியாக வீட்டில் விட்டு விட்டு சென்று விடுகிறார்கள். அப்படி செல்லும் விட்டிலேயே டியுஷன் வைத்தால் நல்லது என்று வீட்டில், டியுஷனுக்கு வெளியில் வந்து சொல்லி கொடுப்ப்து ஆண்கள் தான், தனியாக பிள்ளைகள் இருக்கும் போது வர சொல்லாதீர்கள். இப்படி செய்வதால் திடுக்கிடும் பல நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.நீங்கள் யாராவது ஒருவர் வீட்டில் இருக்கும் போது பாடம் சொல்லி கொடுக்கும் வாத்திகளை வரவழைத்து கொள்ளுங்கள்.ஆண்பிள்ளைகளுக்கும் பிரச்சனை தான் பெண்பிள்ளைகளுக்கும் பிரச்சனை தான் இது கண்டிப்பாக பெரும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்

இப்ப பேஸ் புக்கில், மற்றும் சாட்டிங்கில் பெரியவர்களை விட சிறியவர்கள் தான் மிகுந்த ஆர்வர் காட்டி வருகிறார்கள். வரம்புக்கு மீறி பேசி கொள்வதும் போட்டோக்களை பகிர்ந்து கொள்வதும், ஆண்பிள்ளைகளுக்கு பிரச்சனை இல்லை என்றாலும் பெண்பிள்ளைகளுக்கு இது கண்டிப்பாக பெரும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

சமீபத்தில் கேள்வி பட்ட ஒரு சம்பவம்.(அட கொடுமையே)

ஒரு ஆண் பெண் ரொம்ப் மாத காலமாக சாட்டிங்கில் ரொம்ப அந்தரஙக்மாய் பேசும் அளவிற்கு போய், ஒரு நாள் பேசி கொண்டு இருக்கும் போது,வெப் கேமிரா மூலம் போட்டுள்ள் துணி கிழிந்து இருப்பதை பற்றி கூட பேசி இருக்கிறார்கள். அப்படியே எழுந்து அந்த ஆண் சாப்பிட போனதும் உள்ளே பக்கத்து ரூமில் இருந்து அவன் தங்கை வந்துள்ளாள் அதே கிழிந்தை துணியுடன் சாட்டிங்கில் இருப்பதை பார்த்து திடுக்கிட்டாளாம், ஏன் என்றால் அந்த கிழிந்த துணி போட்டுருந்த்தும் வெப்பில் இருந்த போட்டோவும் அவள் தான் , கடைசியில் அவமானத்தை வெளியேமுடியாமல் தவித்து போனாளாம், அதே அவ அண்ணனும் இத்தனை நாள் தன் தங்கையுடனா இப்ப்டி எல்லாம் பேசி இருக்கோம் என்று துடித்து போனானாம்,(அட கொடுமையே) ரொம்ப ஆடம்பரம் ஆளுக்கொரு தனி அறை தனி லாப்டாப் இப்படி வாங்கி கொடுத்து கடைசியில் இப்படி சீரழிந்து போகிறார்கள்.

(ஆனால் கல்யாணமானவர்களும் ரொம்ப சீரழிகின்றனர் அதை பிறகு வேறு பதிவில் பார்க்கலாம்)

பெற்றோர்களே இனி உஷாராக இருங்கள்.

ஆண்பிள்ளைகளுக்கும் பிரச்சனை தான் பெண்பிள்ளைகளுக்கும் பிரச்சனை தான்
இது கண்டிப்பாக பெரும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.



பாஸ்ஃபுட் உலகமாக இருக்கு, அதற்கு காசு தேவை, வெளியூரில் இருந்து அப்பா மார்கள் காசு அனுப்புவதும் அதை பிள்ளைகள் கரியாக்குவதுமாகவும் சில இடங்களில் உள்ளது. இதே காசு கிடைக்காத நடுத்தர வர்க்கத்தில் உள்ள பிள்ளைகள் எப்படியும் படம் பார்த்தே தீரனும், எப்படியும் நண்பர்களுடன் பிட்சா கார்னர் போயே ஆகனும் என்று கடைசியில் திருட ஆரம்பித்து விடுகிறார்கள். வீட்டிலும் வெளியில் கை வைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். கடைசியில் உங்களால் நினைத்தே பார்க்க முடியாத பிள்ளை இவனா திருடினான் நல்ல குடும்பத்தில் உள்ள பையனாச்சே என்றும் ஆச்சரிய படும் அளவிற்கு இருக்கும்.
மற்ற பிள்ளைகளை கம்பார் செய்து அவர்கள் முன் பேசாதீர்கள்.
தண்டம் எதுக்குமே லாயக்கில்லன்னு மற்றவர்கள் எதிரில் வைத்து சொல்லாதீர்கள்.
கம்மியான மார்க்குகள் எடுத்தாலும் அவர்களை எல்லார் முன்னாடியும் வைத்து அசிங்கப்படுத்ட்தாதீர்கள்.


இதனால் நீங்கள் அவர்களிட்த்தில் வெறுப்பை தான் சம்பாதிக்க முடியும்
.

சில இடங்களில் பெற்றோர் என்று கூட பாராமல் பிள்ளைகள் அடி தடி சண்டை, கை கலப்பு என்று மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள்.

இதில் வீட்டுக்குள்ளேயே அம்மாவின் காலடியில் அம்மா முந்தனைய பிடித்து கொண்டு இருக்கும் பிள்ளைகளும் உண்டு.

இப்படியே எல்லா பிள்ளைகளையும் இப்படிதான் என்று குறை கூற முடியாது.

பல நல்ல முத்தான தங்கமான பிள்ளைகளும் சுய சிந்தனையுடன் செயல் பட்டு, உள்ள பிள்ளைகளும் உண்டு.

இதற்கு தீர்வு தான் என்ன?இதற்கு தீர்வு தான் என்ன?

எனக்கு தெரிந்து பிள்ளைகளை ஒரு போதும் பிரியா விடக்கூடாது. அவர்களை பிஸி ஷெடுலில் வைப்பது நல்லது.

பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளையும் படிப்பு தவிர நல்ல சரியான தெரிந்த செண்டர்களில் டியுஷனும், இறை வழிபாடுகள்,மார்க்க போதனைகள் (தொழுகை, ஓதல்)பாட்டு , அவர்களுக்கு பிடித்த விளையாட்டு , நீந்துதல், டான்ஸ், தையல், கை வேலைப்பாடு, விளையாட்டுகளில் ஈடுபடவைப்பது நல்லது.

பிள்ளைகளுக்கு நல்ல தட்டி கொடுத்து எதில் ஊக்கமாக இருக்கிறார்களோ அதில் அவர்களுக்கு சப்போட் செய்து வழி நட்த்துவது நல்லது.

வீட்டிலும் சின்ன சின்ன வேலைகளை அவர்கள் பொருப்பில் விடலாம்.

பிள்ளைகளுக்கு 18 வய்து வரை நல்ல முறையில் ஆரோக்கியமான உணவுகள் கொடுக்கவேண்டும். அதற்கு பிறகு காலேஜ், ஹாஸ்டல் , வேலை, கல்யாணம் என்று பிரிவு ஏற்பட்டு விடுகிறது. ரொம்ப செல்லங்கொஞ்சி நொல்லி பாப்பாவாகவும் ஆக்கிடாதீர்கள், அதாவது கேட்கும் பொருட்களை எல்லாம் வாங்கி கொடுத்து, தேவைக்கு அதிகமா அதிக விலையில் டிரெஸ் எடுத்து கொடுத்து கழ்டம் என்றால் என்ன என்றே தெரியாமல் வளர்க்க்க்கூடாது.

கஷ்டம், தேல்விய பற்றி தெரியாம வளந்த பிள்ளைகளுக்கு , பெருசானா ஒரு சின்ன துயரம், சின்ன தோல்விய கூட தாங்கிக்கொள்ள மன பலம் இல்லாதவர்களாக ஆகிவிடுகிறார்கள். இதனால் அவர்கள் எடுக்கும் தீர்வு தற்கொலையாக கூட மாறலாம்.








அவர்களுக்கு முதலே நல்லது கெட்ட்து எடுத்து சொல்லி வழிநட்த்துவது நல்லது.

உதாரணத்துக்கு: மார்க் 80 மார்க் எடுத்து 75 மார்க் வாங்கினால் மேலே மேலே நீங்களும் போட்டு திட்டி தீர்க்க்காதீர்கள், ஏற்கனவே 75 ஆகி விட்ட்தே என்று அவர்கள் நொந்து தான் இருப்பார்கள், அடுத்தமுறை இன்னும் நல்ல கவனமாக படித்து முயற்சி செய் என்று சொல்லி தட்டு கொடுக்கலாம்.

அதே போல் பரிட்சை சமயத்தில் அவர்களுக்கு ஃப்ரி மைண்டுடன் படிக்க தோதுவான நிலையையும் ஏற்படுத்தி கொடுக்கனும். நல்ல ஆரோக்கியமான உணவுகள் கொடுக்கவேண்டும். ஜூஸ் வகைகள், பழங்கள்,லைட்டான உணவுகள் இப்படி கொடுப்பது நல்லது.
ஆகையால் ஓவ்வொரு ஸ்டேஜிலும் மிகவும் கண்ணும் கருத்துமாய், பிள்ளைகளை வளர்ப்பதில் விழிப்புணர்வோடு இருப்பது நல்லது.



டிஸ்கி: இந்த பதிவு யுத்ஃபுல் விகடனில் குட்பிளாக் பகுதியில் வந்துள்ளது , ரொம்ப சந்தோஷம்.


Sunday, April 25, 2010

சோளியின் கை பேப்பர் பேட்டனில் வெட்டும் முறை


இது சோளியின் கை வெட்டும் முறை போன வாரம் தமிழ் குடும்ப தோழி அங்கு இந்த விளக்கம் கேட்டதால் போட்டது, இங்கு பிளாக் தோழிகள் தைப்பவர்களுக்கும் இது உதவும் என நினைக்கிறேன்.


1. சோளியின் உயரம் + மடிப்புடன் அளவெடுத்து கொள்ளவும்.





2. சோளியின் அகலம் + சைடில் உள்ள தையலுக்கு அளவெடுத்து கொள்ளவும்









3.உயரம் மடிப்புள்ள ஒரு பேப்பரில் உயரம் அகலம் குறிக்கவும். மடிப்புக்கு தனியாக வரைந்து காட்டியுள்ளபடி செய்யவும்








4. பிறகு இரண்டாக பிரித்து முன் பக்க கை வளைவை மட்டும் வெட்டி எடுக்கவும்





















6. கை வளைவு வ்ரைய பொதுவாக ஒல்லியாக உள்ளவர்களுக்கு முனறை இன்சும், பருமனாக உள்ளவர்களுக்கு நாலரை இன்சும் போதுமானது.










5.பிறகு துணியில் வைத்து பின் பண்ணி துணியில் வரையும் மார்க்கரால் வரைந்து வெட்டி எடுக்கவும்









Friday, April 23, 2010

பேச்சுலர்ஸ் பிஷ் சால்னா



மீன் குழம்பு பிடிக்காதவர்கள் யாருமே கிடையாது.வெளிநாடுகளில் சமைத்து சாப்பிடும் பேச்சுலர்களுக்கு ஈசியாக செய்ய இந்த முறை உதவும்.
மீன் குழம்பு என்றாலே மசலாக்களை வதக்கி செய்வது, மிளகு சேர்த்து அரைத்து செய்வது, தக்காளி அரைத்து செய்வது இது போல் பல வகையாக செய்யலாம்.

தேவையானவை

கிங் பிஷ் = அரை கிலோ
வெங்காயம் = முன்று
தக்காளி = ஐந்து பெரியது
பச்ச மிளகாய் = முன்று
மிளகாய் தூள் = இரண்டு தேக்கரண்டி
தனியாத்தூள் (கொத்துமல்லி)= இரண்டு மேசை கரண்டி
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு தூள் = தேவைக்கு (இரண்டு தேக்கரண்டி)
புளி பேஸ்ட் இரண்டு மேசைக்கரண்டி (அ) இரண்டு நெல்லிக்கய் சைஸ் புளி
தேங்காய் பவுடர் = முன்று தேக்கரண்டி
தாளிக்க‌
எண்ணை = ஆறு தேக்கரண்டி
க‌டுகு = ஒரு தேக்க‌ர‌ண்டி
வெந்த‌ய‌ம் = கால் தேக்க‌ர‌ண்டி
பூண்டு = ப‌த்து ப‌ல்
க‌ருவேப்பிலை = ஐந்து ஆர்க்
கொத்து ம‌ல்லி த‌ழை = சிறிது





செய்முறை
1. மீனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
2. வ‌ய‌க‌ன்ற‌ ச‌ட்டியை காய‌வைத்து எண்ணையை ஊற்றி, க‌டுகு, வெந்தய‌ம், பூண்டு த‌ட்டி போட்டு, க‌ருவேப்பிலை சேர்த்து க‌ருகாம‌ல் வ‌த‌க்க‌வும்.
3. வெங்காய‌த்தை பொடியாக‌ அரிந்து சேர்த்து ந‌ன்கு வ‌த‌க்க‌வும்.
4. வெங்காய‌ம் லேசாக‌ ம‌ட‌ங்கிய‌தும் த‌க்காளியை பொடியாக‌ அரிந்து சேர்த்து ப‌ச்ச‌மிளகாயும் சேர்த்து ந‌ன்கு வ‌த‌க்கி தீயின் த‌ன‌லை இர‌ண்டு நிமிட‌ம் குறைத்து வைத்து வேக‌ விட‌வும்.
5. கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ தூள்வ‌கைக‌ளை சேர்த்து இர‌ண்டு ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் சேர்த்து மீடிய‌மான‌ தீயில் கொதிக்க‌ விட‌வும்.
6. புளி பேஸ்ட் சேர்க்க‌வும். அல்ல‌து புளியை க‌ட்டியாக‌ க‌ரைத்து ஊற்ற‌வும். கிரேவி திக்காக‌ இருந்தால் கூட‌ கொஞ்ச‌ம் த‌ண்ணீர் சேர்க்க‌வும்.

7. ந‌ல்ல‌ கொதித்து ம‌சாலா வாடை அட‌ங்கிய‌தும். மீனை சேர்த்து, தேங்காய் ப‌வுட‌ரையும் க‌ரைத்து ஊற்றி மீண்டும் 7 நிமிட‌ம் கொதிக்க‌ விட்டு இற‌க்கும் போது கொத்து ம‌ல்லி த‌ழை தூவி இர‌க்க‌வும்.















மீன் சீக்கிரத்தில் வெந்துவிடும், மீனை போட்டதும் சும்மா கரண்டிய போட்டு கிளறக்கூடாது. இல்லை என்றால் யாருக்கும் ஒரு துண்டும் கிடைக்காது. அப்படியே லேசாக சட்டியின் இருபக்கமும் துணி கொண்டு பிடித்து உலசி விடனும்.

// இப்போது வெளி நாடுகளில் எல்லா பொருட்களூம் பாக்கெட்டு களில் கிடைக்கிறது , மீன் மசாலா கூட கிடைக்கும், தக்காளி வதக்க முடிய வில்லை என்றால் தக்காளி பேஸ்ட் டின், பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. வேலையும் மிச்சம். அவசரமாக செய்யும் பேச்சுலர்களுக்கு இது ரொம்ப ஈசி.
//ஆறு நபர்கள் இதை சாப்பிடலாம்//






Wednesday, April 21, 2010

புள்சார் என்னும் ரசம்

புள்சார் என்ன பெயர் வித்தியாசமாக இருக்கா? ரசத்தை தான் இஸ்லாமியர்கள் புள்சார் என்பார்கள். புளிசாரு தான் நாளடைவில் புள்சாராகிவிட்டது.


இது அசைவ உணவு சாப்பிட்டு விட்டு கடைசியாக இந்த புள்சாரை ஒரு பிடி சாதத்தில் ஜீரணத்துக்காக சாப்பிடுவது.

பழங்காலத்தில் இஸ்லாமிய இல்லங்களில் ரசத்துக்கு முக்கியத்துவமே கிடையாது. அதை ரொம்ப கேர் எடுத்து தாளிப்பதும் கிடையாது.
இன்றும் கூட சில வீடுகளில் இப்படி தான் இதை தயாரிக்கிறார்கள்.
ரசப்பொடி இல்லா அவசர ரசம் என்று கூட இந்த புள்சார சொல்லாம்.
தேவையானவை
புளி = ஒரு பெரிய நெல்லிக்காய் சைஸ்
த‌ட்டி கொள்ள‌
மிள‌கு = கால் தேக்க‌ர‌ண்டி
சீர‌க‌ம் = அரை தேக்க‌ர‌ண்டி
ப‌ச்ச‌ மிள‌காய் = ஒன்று
க‌ருவேப்பிலை = சிறிது
பூண்டு = முன்று ப‌ல்
கொத்தும‌ல்லி காம்பு = சிறிது
தாளிக்க‌
எண்ணை = ஒரு தேக்க‌ர‌ண்டி
க‌டுகு = அரை தேக்க‌ர‌ண்டி
க‌ருவேப்பிலை = சிறிது
கொத்தும‌ல்லி த‌ழை = சிறிது க‌டைசியாக‌ மேலே தூவ‌



செய்முறை

1.புளியை சுடு தண்ணீரில் கரைத்து சுமார் இரண்டரை டம்ளர் அளவிற்கு கரைத்து வடித்து கொள்ளவும்.


2. தட்ட கொடுத்துள்ள பொருட்களை ஒரு சுத்தி எடுத்து (மண்டையில் இல்ல) பொருட்களை ஒன்றும் பாதியுமாக தட்டி வைத்து கொள்ளவும்.


3. எண்ணை கடுகு கருவேப்பிலையை சேர்த்து தாளித்து தட்டி வைத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கி, கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை சேர்த்து உப்பு போட்டு சூடு படுத்தவும் , ரசத்தை தாளித்த பிறகு கொதிக்க விட கூடாது.

4. சூடு வந்து ஓரத்தில் நுரை கிளம்பும் போது இரக்கி கொத்துமல்லி தழை தூவி தாளித்த சட்டியில் இருந்து உடனே வேறு ஒரு சில்வர் பாத்திரத்துக்கு மாற்றி விடவேண்டும்.


5. தாளித்த சட்டியில் ரசத்தை வைக்க கூடாதுன்னு சொல்லுவாங்க. அதே போல் ரசம் கவனிக்காமல் தெரியாமல் கொதித்து விட்டால் ஒரு துளி எண்ணை (அ) தண்ணீர் சேர்க்கலாம்.

குறிப்பு


எங்க அம்மா ரசப்பொடி திரித்து அதை இன்னும் நல்ல வாசமாக பல வகையாக செய்வார்கள்.


எனக்கும் ரசத்தை ஒரே சுவையில் சாப்பிட பிடிக்காது, என் சுவைக்கு தான் ரசப்பொடியும் திரித்து கொள்வது. ரெடி மேட் ரசப்பொடி எனக்கு பிடிக்காது, நானே திரித்து செய்தால் சும்மா கும்முன்னு இருக்கும்

நானே முயற்சி செய்தது, தக்காளி ரசம் இது பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும், கருவேப்பிலை கொத்து மல்லி ரசம், இஞ்சி ரசம்,பருப்பு ரசம், (தேங்காய்பால் ரசம் இதுவும் அடிக்கடி வாய் புண் உள்ளவர்களுக்கு செய்து கொடுப்போம்) மோர் ரசம்,பூண்டு ரசம், பிளம்ஸ் ரசம், கொள்ளு ரசம் ..... இன்னும் பல வகைகளை செய்ய ஆரம்பித்து ரொம்ப நல்லவும் வந்துள்ளது.

ரொம்ப ஹெவியான சாப்பாடு என்றால் மறுநாள் ஒன்லி ரசம் தான், ஒரேயடியாக வெரும் புளி ரசம் சாப்பிடுவது உடம்பிற்கு நல்ல தல்ல அதற்கு இதுபோல் விதவிதமாக வைத்து சாப்பிடலாம்

பருப்பு ரசம் மற்றும் ஈசியான தக்காளி ரசத்தை பிறகு போடுகீறேன்.
ஏற்கனவே பல வகையான ரசம் வகைகள் கொடுத்துள்ளேன். லேபிளில் ரசம் பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

டிஸ்கி: டுடே லொள்ளு

சுதாகர் சார் ஒரு வேளை சின்ன வயதில் இப்படி இருப்பாரோ, இப்ப தான் அவர் சின்ன வயதில் உள்ள சுவாரசிய கதைகள் எழுதி இருக்கிறார்.



Monday, April 19, 2010

ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்




இது வரை பொதுவாக தான் எழுதி இருந்தேன், என் மனதில் பட்ட சில டிப்ஸ்கள் ஆண்களுக்கு எழுதுகிறேன், ஏற்று கொள்பவர்கள் ஏற்று கொள்ளுஙக்ள்/




வெயில் காலம் வந்தாலே வெளியில் செல்லும் போது அதிக அனலினால் ஏற்படும் வியர்வையை தான் முதலில் சொல்லனும்.




வெளியில் போய் விட்டு வந்ததும் ஏற்படும் தாகத்துக்கு உடனே பிரிட்ஜை திறக்காதீர்கள், திறந்து ஜில் தண்ணீரை குடிக்காதீங்க. ஆறிய வெண்ணீர் அல்லது சாதா தண்ணீரேயே குடிங்க.

அடுத்து விய‌ர்வையுட‌ன் உள்ள‌ ச‌ட்டையை எடுத்து அப்ப‌டியே பீரோவில் மாட்டாதீர்க‌ள். அது அப்ப‌டியே உப்பு உறைந்து இருக்கும். காய்ந்த‌தும் அதை ம‌றுப‌டி ம‌றுநாள் ஆபிஸுக்கு போட்டு செல்லாதீர்க‌ள்/
ப‌ய‌ங்க‌ர‌ க‌ப் அடிக்கும் ஆனால் அது உங்க‌ளுக்கு தெரியாது, அதையே சென்ட் அடித்து போடுவ‌தால், எதிரில் நிற்ப‌வ‌ர்க‌ளுக்கு அல்ல‌து, நீங்க‌ள் ச‌ரி உச்சி வெயிலில் இருந்து உள்ளே நுழைந்தால் க‌ண்டிப்பாக‌ ஸ்மெல் வ‌ரும்.ஒரு ஆறு செட் வைத்து கொண்டு சிர‌ம‌ம் பார்க்காம‌ல் துவைத்து ப‌ய‌ன் ப‌டுத்துவ‌து ந‌ல்ல‌து.

அடுத்து சாக்ஸ் சாக்ஸ் மட்டும் நல்ல தரமானதாக பார்த்து காட்டனில் வாங்கிக்கொள்ளுங்கள். முக்கியமா சாக்ஸ் போடும் முன் உள்ளங்காலில் பவுடர் போட்டு கொள்ளுங்கள், வெளி நாடுகளில் ஃபுட் பவுடரே விற்கிறதாம் முடிந்தால் அதை வாங்கி கொள்ளுங்கள் , இல்லை என்றால் பியுட்டி பின்க் பான்ஸே போதுமானது.




த‌லையில் (cap)கேப்போ, ச‌ன் கிளாஸோ அணிந்து கொள்ள‌லாம்.
அடுத்து நைட் ஷிஃப்ட்க்கு போகிறவர்கள், மதியம் குளிக்க எழுந்திருக்கும் போது தண்ணீர் டீ போடும் வெண்ணீர் ஆகிடும், அவசரமா டாயிலட்டுக்கு போய் விட்டு பிறகு அவஸ்தையாகிடும்.ஒரு பக்கெட்டில் வெயில் காலம் வரை கொஞ்சம் தண்ணீர் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.




வெளியில் போகும் போது ஏதாவது சன்ஸ் கீரிம் கண்டிப்பாக போட்டு கொள்ளுங்கள். பேர் அன்ட் லவுலி அழகு கிரீம் மட்டும் அல்ல நல்ல சன் புரட்க்ஷனும் கூட அதை கூட சிறிது போட்டு கொள்ளலாம்.அப்ப்டி நீங்கள் கிரீம் பயன்படுத்துபவராக இருந்தால் முகத்தில் தடவும் போது கண்ணா பின்னான்னு தடவாதிங்க முகத்தில் கீழிருந்து மேலாக சர்குலர் மூமெண்டில் தடவுஙக்ள்.இல்லை என்றால் சதை தொய்ந்து சீக்கிரமே கிழவர் தோற்றம் வந்துடும்.




வெயில் நடந்து வருபவர்களுக்கு முதலில் வருவது கண் எரிச்சல், அந்த காலத்தில் பையன் ஊருக்கு போகிறான் என்றதும் அம்மா மார்கள் "ராசா வாரம் ஒரு முறை எண்ணை தேய்த்து குளி ராசா என்பார்கள்" அது நிறைய பேருகு சிரிப்பு வரும். ஏன் சொல்கீறார்கள் என்று யோசிப்பது கிடையாது.
எண்ணை தேய்த்து குளிப்பதால் வறண்ட சருமம் மிருதுவாகிறது. கண்ணுக்கு சூடு தனிகிறது.தலையில் உள்ள பொடுகு, முடி உதிர்தல் எல்லாவற்ற்கும் நல்லது.




எண்ணை தேய்த்து குளிக்கிறேன்னு பாத்ரூம் முழுவ‌தும் எண்ணையாக்கிடாதீங்க‌. அடுத்து நுழைப‌வ‌ரை விழ‌ வைத்து ம‌ண்டைய‌ பிள‌ந்துடாதீங்க‌.




துணி துவைக்க ஊறபோட்டு விட்டு அபப்டியே மறந்து பிளாக்கில் மெய்மறந்துடாதீங்க.



வெயில் காலத்தில் பாலிஸ்டர் மிக்ஸ்டு காட்டன் போடாதீர்கள்.100% காட்டனே உபயோகப்படுத்துங்க.
கர்சீப், சாக்ஸ் போன்றவைகளை அப்ப குளியல் சோப் கொண்டே கசக்கி பிழிந்துடலாம், நல்ல மணமாக இருக்கும்.




நிறைய‌ பேருக்கு வெயில் சூட்டினால் ஃபைல்ஸ், ம‌ற்றும் மூக்கிலிருந்து இர‌த்த‌ம் வ‌ர‌லாம்.



அத‌ற்கு, அடிக்க‌டி த‌யிர் சாத‌ம் சாப்பிட‌லாம்.இல்லை ல‌ஸ்ஸி அடித்து வ‌கையா, மேங்கோ ல‌ஸ்ஸி, பைனாப்பிள் ல‌ஸ்ஸி, ஆர‌ஞ்சு ல‌ஸ்ஸி என‌ குடிக்க‌லாம்.




அதே போல் நீராகார‌ம் நிறைய‌ சாப்பிடுவது ந‌ல்ல‌து.தின‌ம் மோர் குடிப்ப‌தை " பீர் இல்ல‌" ப‌ழ‌க்க‌த்தில் வைத்து கொள்ளுங்க‌ள்., ஜூஸ் வ‌கைக்க‌ள், ப‌ழ‌ங்க‌ள் இது போல் வெயில் கால‌ங்க‌ளில் நிறைய‌ சாப்பிடுவது ந‌ல்ல‌து.



த‌ண்ணீர் நிறைய‌ குடிங்க‌ள், முடிந்தால் இள‌ நீர், த‌ர்பூச‌னி, மாதுளை போன்ற‌ ப‌ழ‌ங்க‌ள் சாப்பிட‌லாம்.இவையெல்லாம் சாப்பிடுவ‌தால் கொப்புள‌ங்க‌ள், வேன‌ல் க‌ட்டிக‌ள் வ‌ராம‌ல் பாதுகாத்து கொள்ள‌லாம்.




பேச்சுலர்கள் ஈசியாக சாலடுகள் தயாரித்து சாப்பிடலாம்
1. கேரட்,குகும்பர், வெங்காயம், தக்காளி, இவைக்ளை வட்ட வடிவமாக அரிந்து சால்ட், பெப்பர், லெமென் பிழிந்து சாப்பிடலாம் ஈசியன சாலட் உடனடி சாலட்.
2. அல்லது மாங்காய் சாலட் ஏற்கனவே குறிப்பில் கொடுத்து இருக்கேன்.
3.மாங்காய் வேர்கடலை சாலட், வேர்கடலையை ஊறவைத்து முடிந்தால் மைக்ரோவேவில் கூட வேகவைத்து கொள்ளலாம், அதில் கேரட், வெள்ளரி தக்காளியை பொடியாக அரிந்து சாட் மசாலா, தேன், லெமன் பிழிந்து சாப்பிடலாம்/
4. இதே போல் கொண்டைகடலையிலும் செய்யலாம்

Saturday, April 17, 2010

தர்பூசனி ஜுஸ் - watermelen juice




கோடையில் குளு குளுன்னு இருங்க‌ ரொம்ப‌ தாக‌த்தை தீர்க்கும் த‌ர்பூஸ் உட‌லுக்கு ரொம்ப‌ ந‌ல்ல‌து.ரொம்ப‌ ப‌சியா உள்ள‌வ‌ர்க‌ள் தர்பூஸ் நாலு துண்டு சாப்பிட்டாலும் ந‌ல்ல‌ வ‌யிறு பில்லிங்கா இருக்கும், ப‌சி எடுக்காது,
தேவையான‌வை

தர்பூசனி துண்டுகள் = நான்கு

சர்க்கரை (அ) தேன் = சிறிது

மிளகு தூள் = ஒரு சிட்டிக்கை

சுக்கு தூள் = கால் தேக்கரண்டி

உப்பு = அரை சிட்டிக்கை

ஐஸ் கியுப்ஸ் = 6

செய்முறை
படத்தில் காட்டியுள்ள் துண்டு போல் நான்கு துண்டு தர்பூசனி எடுத்து கொள்ளவும்.
பழத்தை கழுவி, அதில் உள்ள கொட்டைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக அரியவும்.
மிக்சியில் ஐஸ்கியுப்ஸ்,சர்க்கரை,உப்பு,மிளகு தூள், சுக்கு தூள் பழம் அனைத்தையும் போட்டு நன்கு அடித்து பெரிய‌ துளையுள்ள‌ வ‌டிக‌ட்டியில் வ‌டித்து குடிக்கவும்.அப்ப‌டி வ‌டி க‌ட்ட‌ முடிய‌வில்லை என்றால், மிக்சியில் அடித்த‌தை ஒரு பாத்திர‌த்தில் ஊற்றிவைத்தால் அடியில் கொட்டைக‌ள் த‌ங்கிடும், மிக‌வும் க‌ல‌க்காமால் அப்படியே தெளிந்த‌ மாதிரி ட‌ம்ள‌ரில் ஊற்று ப‌ருக‌வும்.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ‌ அப்பாஆஆஅ என்ன‌ ஒரு புத்துண‌ர்வு.க‌ண்ணேல்லாம் குளிர்ந்து விடும்.

குறிப்பு
//த‌ர்பூசனி ந‌ல்ல‌ ஒரு நீராகார‌ம், தாக‌த்தை த‌ணிக்கும். இதை நாம் அப்ப‌டியேவும் சாப்பிட‌லாம்( அமைச்சரே இது எங்களுக்கு தெரியதான்னு கேட்பது புரியுது), பிள்ளைக‌ளுக்கு அப்ப‌டியே பெரிய‌ அரை நிலா சைஸில் பிடித்து சாப்பிட‌ ரொம‌ப் பிடிக்கும்.
இனிப்பில்லாத‌ த‌ர்பூச‌னி ப‌ழ‌த்தை சின்ன‌தா க‌ட் செய்து அதில் ச‌ர்க்க‌ரை சேர்த்து குளிர‌ வைத்து குடித்தாலும் ந‌ல்ல‌ இருக்கும்.
இதில் பால் சேர்த்தும் ஜூஸ் தயாரிக்கலாம் பால் சேர்க்கும் போது வெரும் ஐஸ் கட்டி, சர்க்கரை மட்டும் போதும். மாதுளை சேர்த்தும் செய்து குடிக்க‌லாம்//

க‌வ‌னிக்க‌

//இந்தியாவில் தெருவிற்கு தெரு த‌ள்ளு வ‌ண்டியில் த‌ர்பூஸ் கிடைக்கும், ஆனால் தெருவில் வாங்கி சாப்பிட்ட‌ ஒரு சின்ன‌ குழ‌ந்தைக்கு எயிட்ஸ் வ‌ந்து விட்ட‌தாம்.எல்லாம் டெஸ்ட் செய்து பார்த்த‌தில் ,த‌ள்ளு வ‌ண்டிகார‌ர் த‌ர்பூஸ‌ க‌ட் ப‌ண்ணும் போது அவ‌ன் கையில் வெட்டு ப‌ட்டு வெட்டியதில் கையில் வெட்டி ரத்தம் வந்து , அந்த பழத்தில் விழுந்து இருக்கு, த‌ர்பூசில் ப‌ட்டுள்ளுள்ள‌து .அந்த‌ ப‌ழ‌த்தை தான் அந்த‌ குழ‌ந்தை சாப்பிட்டு இருக்கு, த‌ர்பூஸ் கார‌னுக்கு எயிட்ஸாம். இனி தெருவில் வாங்கி சாப்பிடுப‌வ‌ர்க‌ள் உஷாராக‌ வாங்கி சாப்பிடுங்க‌ள்.(இது இர‌ண்டு வ‌ருட‌ம் முன் நான் கேள்வி ப‌ட்ட‌து)///
மேலும் கோடைக்கு ஏற்ற ஜிலு ஜிலு பானம் கீழே உள்ள லிங்குகளில் பார்க்கலாம்

இதன் தோலை வீனாக்காமல் சாம்பார் வைக்கலாம். தர்பூஸ் வெட்டியதும் முழுவது தோலிலிருந்து வெட்டி எடுக்க முடியாது அதற்கு ஒரு மேசை கரண்டி கொண்டு வழித்தெடுத்தால் ஈசியாக வந்துவிடும்.

கேரட் ஜூஸ்


ரோஸ் மில்க்


முக்கனி ஜூஸ்

ரிச் ஃப்ரூட் பாலுதா

தர்பூசனியை கட் செய்து பிரிட்ஜில் வைத்தால் தண்ணீர் அதிகமாக விடும், அது கெட்டியாக கிரிப்பாக இருக்க அரிந்ததும் பீரிஜரில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் தண்ணீர் விடாமல் கிரிப்பாக இருக்கும்

கிரிஸ்பி பிஷ் பிரை(கட்லட்)


//பேச்சுல‌ர்க‌ளும் ஈசியாக‌ செய்யும் கிரிஸ்பி மீன் வ‌றுவ‌ல்//

தேவையான‌வை
கிங் பிஷ் பெரியது = முன்று துண்டு
காஷ்மீரி மிளகாய் தூள் = முக்கால் தேக்கரண்டி (சாதா மிளகாய் தூளா இருந்தால் அரை தேக்கரண்டி போதும்.
உப்பு = தேவைக்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் = அரை தேக்கரண்டி
லெமன் சாறு = கால் தேக்கரண்டி
பிரட்டி கொள்ள‌
முட்டை = பாதி
கிர‌ம்ஸ் ப‌வுட‌ர் = தேவைக்கு
கார்ன் பிளார் (சோள‌மாவு) = சிறிது







செய்முறை

மீனை சைடில் உள்ள‌ முள்ளெடுத்து ந‌ன்கு க‌ழுவி க‌டைசியாக‌ சிறிது வினிக‌ரில் ஊற‌வைத்து மீண்டும் ஒரு முறை க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக்க‌வும்.
மிள‌காய் தூள்,உப்பு தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,லெம‌ன் சாறு சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து மீனில் த‌ட‌வி 10 நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.
பிற‌கு முட்டையை ந‌ன்கு நுரை பொங்க‌ அடுத்து பாதி அள‌வு எடுத்து முட்டையில் ம‌சாலா ஊறிய‌ மீனை பிற‌ட்டி, கிர‌ம்ஸ், கார்ன் மாவில் ந‌ன்கு கோட் செய்து சிறிது நேர‌ம் ஊற‌வைத்து டீப் பிரை அல்ல‌து ஷாலோ பிரை செய்து சாப்பிட‌லாம்.

ந‌ல்ல‌ கிரிஸ்பியான‌ ஈசியான‌ வ‌றுவ‌ல்.
பேச்சுல‌ர்க‌ளும் ஈசியாக‌ செய்யும் கிரிஸ்பி மீன் வ‌றுவ‌ல்.




டிஸ்கி:வெள்ளை காக்காவ‌ க‌ழ்ட‌ப‌ட்டு ல‌வுட்டி கொண்டு வ‌ந்தால் ஆகையால், இது என் பெரிய‌ பைய‌ன் அப்துல் ஹ‌கீம் ஏழாம் வ‌குப்பு ப‌டிக்கும் போது வ‌ரைந்த‌து இது ஜெய்லானிக்கு இந்த‌ ஓவிய‌த்தை கொடுக்கிறேன்.பார்த்து மீன‌ க‌வ்வி கொண்டு போக‌மா பார்த்துக்கொள்ளுங்க‌ள். அதுக்குன்னு ராப்ப‌க‌லா க‌ண்முழிக்க‌ வேண்டாம்.

Wednesday, April 14, 2010

குலோப் ஜாமுனுடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து - gulab jamun




என் இனிய வலை உலக தோழ தோழியர்கள் அனைவருக்கும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


இனிய சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்








.
அனைவ‌ரும் வாழ்வில் அனைத்து ந‌ல‌ன்க‌ளையும் இனிதாய் பெற்று நோயின்றி வாழ‌ வாழ்த்துகள்.












தேவையானவை


பால் பவுடர் = 200 கிராம்
ரவை = ஒரு தேக்கரண்டி
மைதா (அ) கோதுமை ஒருதேக்கரண்டி
பேக்கிங் ப‌வுட‌ர் = ஒரு தேக்க‌ர‌ண்டி
பால் = தெளிக்க குழைக்க‌
ச‌ர்க்க‌ரை பாகு
ச‌ர்க்க‌ரை = இரண்டு ட‌ம்ள‌ர்
த‌ண்ணீர் ச‌ர்க்க‌ரை மூழ்கும் அள‌வு
சாப்ரான் = சிறிது
ந‌ட்ஸ் வ‌கைக‌ள் (பாத‌ம் பிஸ்தா,முந்திரி = தேவைக்கு
ஏல‌க்காய் = இர‌ண்டு
ரெட் க‌ல‌ர் பொடி = சிறிது தேவைப்ப‌ட்டால்












செய்முறை
பால் பவுடர்,ரவை,மைதா , பேக்கிங் பவுடர் சேர்த்து சிறிது பால் தெளித்து மென்மையாக பிசைந்து சின்ன உருண்டைகளாக வேண்டிய வடிவில் உருட்டி வைக்கவும்.




சர்க்க‌ரையில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஏலக்காய் கலர் பொடி சேர்த்து பாகு காய்ச்சவும்



உருட்டிய உருண்டைகளை எண்ணை + டால்டா (அ) அசீல் சேர்த்து சூடு வந்ததும் மிதமான சூட்டில் போட்டு பொரித்தெடுத்து தனியாக வைக்கவும்.








சர்க்கரை பாகில் சாப்ரான், நட்ஸ் வகைகளை சேர்த்து ,உருண்டைகளையும் சேர்த்து கரண்டியால் கிளறாமல்(கரண்டியால் போட்டு கிண்டினால் உடைந்து விடும்) சட்டியை இரண்டு பக்கமும் பிடித்து குலுக்கி விட்டு பிரிட்ஜில் வைத்து குளிர விட்டு பிறகு சாப்பிட‌வும்.

இதில் ரவை சேர்க்க சொன்னது என் தங்கை பஷீரா. சாப்பிடும் போது கொஞ்சம் கிரிஸ்பியாகவும் இருக்கும்










Monday, April 12, 2010

ட்ரூட்டி ஃபுரூட்டி வித் பனானா கஸ்டட்/truity fruity with banana custurd




வெயில் காலம் ஆரம்பித்து விட்டது இனி கூல் கூலாகா இருப்போம்


இந்த கோடைக்கு ஏற்ற குளு குளு கஸ்டட், பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிச்சது நமக்கும் தான்.ஈசியா செய்துவிடலாம்.




தேவையான‌வை



பால் = ஒரு கப்
க‌ஸ்ட‌ட் ப‌வுட‌ர் = ஒரு மேசை கரண்டி
பாத‌ம் ஃபிளேக்ஸ் = ஒரு மேசை க‌ர‌ண்டி
ச‌ர்க்க‌ரை = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி (பெரிய‌வ‌ர்க‌ளுக்கு கொஞ்ச‌ம் குறைத்து கொள்ள‌லாம்)
ப‌னானா = ஒன்று பெரிய‌து
ட்ரூட்டி ஃபுரூட்டி = ஒரு மேசை க‌ர‌ண்டி

செய்முறை
பாலில் கஸ்டர் பவுடரை கரைத்து பிறகு பாலை காய்ச்சவும்.
சூடான பாலில் க‌ரைத்தால் க‌ட்டி த‌ட்டும்.
ச‌ர்க்க‌ரை , பாத‌ம் பிளேக்ஸ் சேர்த்து காய்ச்ச‌வும், கைவிடாம‌ல் கிள‌ற‌வும், க‌ட்டியாகி வ‌ரும், அப்ப‌டியே ஆற‌விட்டு குளிற‌விட‌வும்.
கூலாக‌ உள்ள‌ க‌ஸ்ட‌டை எடுத்து அதில் வ‌ட்ட‌வ‌டிவமாக‌ பனானாவை க‌ட் செய்து போட்டு மேலே ட்ரூட்டி ஃபுரூட்டியை தூவி குழ‌ந்தைக‌ளுக்கு கொடுக்க‌வும்.

குறிப்பு:


இத‌ பார்ர்டியில் வைத்தாலும் க‌ல‌ர்ஃபுல்லாக‌ இருக்கும்.
ப‌னானா அரிந்த‌தும் க‌ருத்துவிடும், க‌ருத்து போகாம‌ல் இருக்க‌ அரிந்த‌து சிறிது எலுமிச்சை சாறு ஊற்றி கொள்ளலாம்.
உட‌னே சாப்பிடுவ‌தாக‌ இருந்தால் எலுமிச்சை சாறு தேவையில்லை
இதில் ச‌ர்க்க‌ரைக்கு ப‌தில் ஸ்வீட்ட‌ன் க‌ண்டென்ஸ்ட் மில்க்கும் சேர்க்க‌லாம்.




வாவ் யெம்மி யெம்மி ஒன்ஸ் மோர்.....தான் போங்க‌
மேலும் குளு குளுன்னு ஜில்லுன்னு ஐஸ் ரெசிபி வேண்மா கீழே உள்ள லிங்கை பார்க்கவும்.