Sunday, August 15, 2010

tri-colour agar agar

தமிழ் குடும்பத்தில் போன வருடம் மலிக்கா சுதந்திர தின பரோட்டாவும், விஜி சுதந்திர தின ஊத்தாப்பமும் செய்தார்கள். எனக்கும் அது போல் கலர் காம்பினேஷனில் ஏதாவது செய்யனும் என்று நேற்று திடீர் யோசனை உடனே இந்த கடல் பாசியை செய்தாச்சு, யாரும் நடுவில் சக்கரம் எங்கே, கொடி கம்பம் எங்கே என்று கேட்க்கக்கூடாது.
( உலகில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.)நம்மில் சாதி மத பாகுபாடின்றி ஒற்றுமை ஓங்கட்டும்)
கடல் பாசி ஒரு கை பிடி அளவு
தண்ணீர் - இரண்டு டம்ளர்
பால் - கால் டம்ளர்
சர்க்கரை - தேவைக்கு
பிஸ்தா எஸன்ஸ் மற்றும் கேசரி கலர் - சிறிது

1.கடல் பாசியை தண்ணீரில் அலசி இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
2.கடல் பாசி கரைந்து கொதித்து ஒன்னறை டம்ளர் ஆனதும் சர்க்கரை சேர்க்கவும்.
3.இரண்டு டம்ளரில் தனித்தனியா பிஸ்தா மற்றும் கேசரி எஸன்ஸை இரண்டு டிராப் அளவிற்கு ஊற்றி கொதித்த கடல் பாசியை அரை டம்ளர் அளவிற்கும் இரண்டு கிளாஸிலும் ஊற்றவும்.
4.மீதி உள்ள கடல் பாசியில் பால் கலந்து நன்கு கொதிக்கவிடவும்.
5.அடுத்து பிரிட்ஜில் வைக்கும் ஐஸ் ட்ரேவில் முதலில் ரெட் கலரையும், அடுத்து பால் சேர்த்து காய்ச்சியதை ஊற்றவும்.கீழே பச்சை கலரில் கலந்து வைத்துள்ளதை ஊற்றவும்.
6.சிறிது ஆறவிட்டு பிரிட்ஜில் வைத்து குளிரவைத்து நன்கு கிர்ப் ஆனதும் கடல் பாசி கியுப்ஸையும் டிரேவை விட்டு எடுத்து தட்டில் அடுக்கி வைக்கவும்.

கலர் ஃபுல் கடல் பாசி

ரூ ஆப்சா கடல் பாசி



கடல் பாசி சைவ உணவு, உடம்பிற்கு நல்ல குளிர்ச்சியை தரும், நோன்பு காலங்களில் இஸ்லாமிய இல்லங்களில் செய்வது. ஏற்கனவே இத பற்றி நிறைய குறிப்பு போட்டுள்ளேன்.



27 கருத்துகள்:

ஹைஷ்126 said...

ஜெய்ஹிந்த்:)

நட்புடன் ஜமால் said...

சுதந்திர தின நல் வாழ்த்துகள்!

எல் கே said...

//உலகில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் /

அனைத்து இந்தியர்களுக்கும்

Asiya Omar said...

சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்.கடற்பாசி ப்ரெசெண்டேஷன் சூப்பர்.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

வாழ்த்துக்கள்.

ஜெய்ஹிந்த்:).

ஹுஸைனம்மா said...

ஐஸ் க்யூ டிரே - நல்ல ஐடியாவா இருக்கே!!

(”சிநேகிதி” ப்ளாக்லயும் இதே போல முட்டை டப்பாவில் ஊற்றி காட்டிருக்காங்க.)

Jaleela Kamal said...

சகோ .ஹைஷ்
சகோ ,ஜமால்,
எல்.கே
ஆசியா
அதிரா எல்லோருக்கும் நன்றி
ஹுஸைனாம்மா , ஆமா இப்ப தான் சினேகிதி பிலாக் பார்த்து வந்தேன். ரொம்ப அருமையாக இருக்கு.

kavisiva said...

அகர் அகர் ஐடியா நல்லா இருக்கு.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
ஒன்று படுவோம் உயர்ச்சி அடைவோம்!

தூயவனின் அடிமை said...

சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமை. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

looks super!! Happy Independence day!!

Prathap Kumar S. said...

என்ன ஜலீலாக்கா எப்படி இருக்கீங்க? வீட்டுல எல்லாரும்ம நலமா?
விடுமுறை எல்லாம் எப்டி இருந்துச்சு.?:))

ஜெய்லானி said...

@@@ஹுஸைனம்மா--//ஐஸ் க்யூ டிரே - நல்ல ஐடியாவா இருக்கே!!

(”சிநேகிதி” ப்ளாக்லயும் இதே போல முட்டை டப்பாவில் ஊற்றி காட்டிருக்காங்க.) //

சொல்லலாமுன்னு வந்தா ஜஸ்ட் மிஸ்டு

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

ஜெய்லானி said...

ஆஹா... பதில் கமெண்டை பார்த்து சந்தோஷம் வெல்கம் டூ யூ ஏ ஈ

இலா said...

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !
நல்லா பிரசென்ட் பண்ணி இருக்கீங்க!

உங்களுக்கு ரமலான் நல்வாழ்த்துக்கள்!

சீமான்கனி said...

சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் ஜலீக்கா.

சாந்தி மாரியப்பன் said...

சூப்பரா இருக்குங்க..ஜெய்ஹிந்த்.

சிநேகிதன் அக்பர் said...

சுதந்திர தின வாழ்த்துகள்.

Jaleela Kamal said...

கவி சிவா

இளம் தூயவன்

புவனேஷ்வரி

மேனகா

நாஞ்சிலாரே ஊர் ரொம்ப நல்ல இருந்தது வர தான் மனமில்லை

ஜெய்லாணி

இலா வாங்க கருத்து தெரிவித்தது ரொமப் சந்தோஷ்ம்

சீமான் கனி

அமைதிச்சாரல்
எல்லோருக்கும் மிக்க நன்றி

சாருஸ்ரீராஜ் said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்... ரொம்ப நல்லா இருக்கு ....

இமா க்றிஸ் said...

ஐடியா, செய்திருக்கும் விதம், வெளியிட்டு இருக்கும் விதம் எல்லாமே நன்றாக இருக்கிறது ஜலீலா. பாராட்டுக்கள். ;)

சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.

GEETHA ACHAL said...

Superb...Happy Independence day

Vikis Kitchen said...

இவ்வளவு காலமா கடல் பாசி இனிப்பு எனக்கு தெரியவே தெரியாது. ரொம்ப நன்றி ஜலீலா அக்கா. சுதந்திர தின வாழ்த்துக்கள். இனிப்பு ரொம்ப அழகா இருக்கு. நானும் இந்த கடல் பாசி வாங்கனும்னு நினைக்கிறேன்:)

Thenammai Lakshmanan said...

நல்ல கலர்ஃபுல்லா இருக்கு ஜலீலா.. அருமை..

Jaleela Kamal said...

நன்றி சாரு
நன்றி இமா
நன்றி கீதா ஆச்சல்
நன்றி தேனக்கா

Vijiskitchencreations said...

வாழ்த்துக்கள்

jokkiri said...

உலகில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் என்பதே சால பொருந்தும்....

நாங்களும் சுதந்திர தின வாழ்த்துகளுக்கு பதிவு போட்டோம்...

நீங்க சுதந்திர தின வாழ்த்தோடு சேர்த்து கடல் பாசி ரெசிப்பியும் போட்டு அசத்திட்டீங்க...

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ஜலீலா.....

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா