தேவையான பொருட்கள்
இறால் = கால் கிலோ
சேமியா = கால் கிலோ
உருளை கிழங்கு = 1 (சிறியது)
கேரட் = 1 (சிறியது)
பட்டாணி = ஒரு மேசை கரண்டி
சோளம் = ஒரு மேசைகரண்டி (புரோஷன்)
பீன்ஸ் = ஐந்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் = இரண்டு தேக்கரண்டி
வெங்காயம் = இரண்டு
தக்காளி = இரண்டு
கொத்து மல்லி தழை = சிறிது
புதினா = சிறிது
எண்ணை = முன்று மேசைகரண்டி
நெய் (அ) டால்டா) = ஒரு தேக்கரண்டி (சேமியா வறுக்க)
பச்ச மிளகாய் = ஒன்று
மிளகாய் தூள் = ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் = ஒரு பின்ச்
உப்பு = தேவைக்கு
பட்டை = அரை அங்குல அளவு
ஏலம் = ஒன்று
கிராம்பு = இரண்டு
செய்முறை
இறாலை சுத்தம் செய்து வயிற்றிலும்,முதுகிலும் உள்ள அழுக்கை கீறி எடுத்து விட்டு அரைதேக்கரண்டி வினிகர் ஊற்றி இரண்டு நிமிடம் ஊறவைத்து கழுவி தண்ணீரைவடித்து வைக்கவும்.
சேமியாவை நெய் (அ) டால்டா ஒரு தேக்கரண்டி சேர்த்து கரியாமல் சிவற வருத்து வைக்கவும்.
காய் கறிகளை நன்கு கழுவி அரிந்து வைக்கவும்.
சட்டியை காயவைத்து எண்ணை ஊற்றி பட்டை,கிராம்பு, ஏலம் போட்டு வெடிய விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு பெஸ்ட் போட்டு பச்சை வாடை போகும் வதக்கவும்.
கொத்து மல்லி, புதினா சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
தக்காளியை பொடியாக நருக்கி சேர்த்து, பச்சமிளகாயும் போட்டு தீயின் அனலை சிம்மில் வைத்து வேக விடவும்.
தக்காளி மசிந்ததும் இறால், அரிந்து வைத்திருகும் காய்கள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
காய், மற்றும் இறால் வெந்து நல்ல கூட்டு போல் எண்ணை தெளிந்து மேலே வரும், தீயை சிம்மிலேயே வைக்கவும்.
வெந்ததும் சேமியா ஒன்றுக்கு ஒன்னறை பங்கு தண்னீர் ஊற்றி கொதிக்க விட்டு சேமியாவை போட்டு அடி பிடிக்காமல் கிளறி கொஞ்சமா இருக்கும் போது அடுப்பை அனைத்து விடவேண்டும்.அந்த சூட்டிலீயே இருக்கி தம் ஆகிவிடும்.
புதினா சட்னி, நார்த்தங்காய் ஊறுகாய், இஞ்சி டீயும்.
தொட்டுக்க நல்ல இருக்கும்
குறிப்பு:
அப்படி வெளியில் கட்டி கொண்டு போவதா இருந்தால் தண்ணீர் கொஞ்சம் கூடுதல ஊற்றி கொள்ளுங்கள். இறாலை முதலே போட்டு விட்டால் ரப்பர் மாதிரி ஆகிவிடும். இறலுடன் கேரட் சேர்த்தால் சுவை அதிகம், இறால் சூடு அது கேரட் சேரும் போது ஒன்றும் ஆகாது.
இஸ்லாமிய இல்ல விஷேஷங்களில், கல்யாணங்களில் மட்டன் சேமியா பிரியாணி ரொம்ப பேமஸ் அதை இறாலில் இங்கு செய்து உள்ளேன்,
மட்டனாக இருந்தால் வேகும் நேரம் கொஞ்சம் அதிகமாகும், இதை சிகக்னிலும் செய்யலாம். காலை டிபனுக்கு முட்டையிலும் செய்யலாம்.
காய்கறிகள் மட்டும் சேர்த்தும் செய்யலாம்.
ஸ்பினாச் சூப்
ஸ்பினாச் வடை
இந்த குறிப்புகளை உம்மு மைமூனின் சமையல் உலகில் அடி எடுத்து வைக்கும் இல்லத்தரசிகளுக்காக அனுப்புகிறேன்.
Tweet | ||||||
24 கருத்துகள்:
Super! Yummy! Super!
முதல் கமெண்டுக்கு நன்றி
இது பிலாக் ஆரம்பிச்ச புதிதில் போட்ட ரெசிபி தான் லிங்க் கொடுக்கனுமேன்னு ரீபோஸ்ட் செய்தேன்
பொல பொல வென்ற சேமியா பிரியாணி கமகமகின்றதே
முட்டை சேர்த்து செய்யும் சேமியா புலாவ் செய்முறை கொடுங்கள் ஜலி
வாசனை இங்கு தூக்குது அக்கா. சேமியா பிரியாணி அருமை அக்கா. காலம் பூரா அடுப்படியிலேயே கிடக்கிறீங்க போல
ஸாதிகா அக்கா அதுவும் ரெடி
போட்டுவைத்து விட்டேன்.
இன்று முட்டை சேமியாதான் போஸ்ட் செய்வது, இது உம்மு மைமூனுக்கு லிங்க் அனுப்ப ஏதாவது ய்ம்மியா போடனுமேன்னு. முன்பு போட்ட இறால் சேமியா பிரியானிய எடுத்து போட்டுச்சு, ரொம்ப அருமையாக இருக்கும்.
இன்றும் இரவு இறால் சேமியாதான் ஹஸுக்கு ரொம்ப பிடிச்சது.
மாதத்தில் இரண்டு முறை செய்துடுவேன், கூட வே புதினா துவையல் நார்த்தங்கா ஊறுகாயுடன் சாப்பிட்டு , ஒரு இஞ்சி டீ . ம்
சசி காலம் பூரா இல்லை பா ஒரு மணி நேரத்தில் பத்து வகை செய்துடலாம்
சூப்பர்.சேமியாவை வைத்து நிறைய வெரைட்டி செய்து அசத்தலாம்.
vinegar கவணிச்சாச்சு
I used to make this with mutton or chicken, prawn must have tasted so delicious. Very clear instructions. Thank you sister for sending this to Any One Can Cook.
ஆமாம் ஆசியா நிறைய வெரைட்டி செய்யலாம்
நன்றி
சகோ ஜமால் வாங்க கவனிச்ச்சா, சொல்லிடுங்க
உம்மு நாங்க மெயினா செய்வது மட்டன் சேமியா பிரியாணி தான்.
அடுத்து இரால்,முட்ட்டை, வெஜ், சிக்கன் என்று. கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
அடடா..!!! அசத்துங்க மேடம்..!!
வாங்க பிரவின் குமார் நன்றி
அப்டியே ரெண்டு பாக்கெட் பாபாபார்சல்....!
இது பெரிய சைஸ் இராலில் ( ஒரு கிலேவிற்கு 6,7 பீஸ் மட்டும் இருக்கும் )செய்யும் போது ஆஹா சூப்பர் ருசி ....!!!! என்னோட ஃபேவரைட்டில் இதுவும் ஒன்னு..!! :-))
நன்றி சிங்கக்குட்டி
நன்றி ஜெய்லானி பெரிய சைஸ் இறால் அப்படியே வறுத்து சாப்பிடால் ரொம்ப அருமையாக இருக்கும்
சேமியா செய்து தன்னாலா சாப்பிட்டுவிடுறது.அப்புறம் வந்து நீங்க ருசிக்கலையேன்னு கொஞ்சுறது
தராம எப்படி ருசிக்கிறது..
இதெல்லாம் நல்லாயில்ல சொல்லிப்புட்டேன்.
ஆனாலும் சேமியா பார்க்கும்போதே சப்பிடனும்போலயிருக்கு..
அப்படியே வந்து என்
பொக்கிஷ தேவதை யைப் பாருங்க
http://niroodai.blogspot.com/2010/10/blog-post_12.html
ரொம்ப அருமையா இருக்கு ஜலீக்கா.. செய்துபாக்கணும்.
புதுவித காம்பினேஷன் சகோதரி..வீட்டுக்காரம்மா கிட்ட செய்ய சொல்லனும்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
அக்கா, சூப்பரா இருக்கு.
ஸலாம்.
சேமியா செய்தேன்.அருமையாக இருந்தது. இதே முறையில்தான் நானும் செய்வேன்.இன்று உங்கள் முறையில் செய்தேன் .பாராட்டுக்கள் உங்களுக்கே.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா