Saturday, August 6, 2011

பெசரட் குழி பணியாரம், பாசி பயிறு இனிப்பு சுண்டல் - Pesarat kuzipaniyaram, sweet sundal



பெசரட் குழிபணியரம்

தேவையானவை

பச்சரிசி  அரை கப்
முழு பாசி பயிறு  - அரை கப்
இஞ்சி - அரை இன்ச் அளவு
பச்சமிளகாய் - இரண்டு

உப்பு - அரை தேக்கரண்டி(தேவைக்கு)
கருவேப்பிலை - சிறிது
வெங்காயம் - ஒன்று மீடியம் சைஸ்






செய்முறை

அரிசியையும் , பாசிபயிறையும் தனித்தனியாக இரவே ஊற வைக்கவும்.
அரிசியுடன் இஞ்சி பச்சமிளகாய் சேர்த்து முக்கால் அரை பதத்துக்கு அரைக்கவும்.
அடுத்து பாசிப்பயிறு, வெங்காயம்,கருவேப்பிலை உப்பு சேர்த்து கொரப்பாக அரைத்து வழிக்கவும்.
குழிபணியார சட்டியை காயவைத்து எண்ணை விட்டு மாவை ஊற்றி மீதமான தீயில் சுட்டெடுக்கவும்.

சுவையான பெசரட் குழிபணியாரம் ரெடி மிளகாய் பொடியுடன் சாப்பிட அருமையாக இருக்கு. ஹெல்தியான டிபன் அயிட்டம்.


தேவையானவை

பாசி பயிறு இனிப்பு சுண்டல்
முழு பாசி பயிறு - ஒரு டம்ளர்
சர்க்கரை - அரை டம்ளர்
நெய் - ஒரு தேக்கரண்டி
ஏலப்பொடி - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - அரை கப்
செய்முறை:
முழு பாசி பயிறை எட்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் இரண்டு விசில் விட்டு இரக்கவும்.
தண்ணீரை வடித்து அத்துடன் தேங்காய் பூ, சர்க்கரை, நெய், ஏலப்பொடி சேர்த்து கலக்கவும்.


சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்தால் சாப்பிட இலகுவாக இருக்கும்.


நோன்பா ?பட்டினியா? (சுயபரிசோதனை) இங்கு சென்று சகோதரி அஸ்மாவின் பதிவில் தெரிந்து கொள்ளலாமே.

19 கருத்துகள்:

Vimitha Durai said...

Nice healthy recipe. Do check out my blog when u find time My culinary Trial room

ஜெய்லானி said...

பேரே வித்தியாசமா இருக்கே ..!! படத்தை பார்க்கும் போது சூப்பரா இருக்கும் :-))

Lifewithspices said...

healthy n yummy very good try with pesarattu batter..kalakkunga..

அந்நியன் 2 said...

அருமையாக செய்து தந்துள்ளிர்கள் சகோ.

வாழ்த்துக்கள்.

பாரணை முடிச்ச:) அதிரா said...

கலக்குறீங்க ஜலீலாக்கா.... நோன்புக் காலத்தில் நான் உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில வந்து இருக்கப்போறேன்:))).

பாரணை முடிச்ச:) அதிரா said...

இதேமுறையில் நாங்களும் பாசிப்பயறு செய்வோம், எனக்கு இனிப்பு பிடிக்காது, அதனால பாதியைத், தாளித்துப் போட்டு விடுவேன்.

ஆமினா said...

ஆஹா....

நல்ல குறிப்பு அக்கா

ராமலக்ஷ்மி said...

பெசரட் தோசை கர்நாடகாவில் பிரபலம். அதில் பணியாரம் புதுசு ஜலீலா. சத்தான உணவு வகைக் குறிப்புகள். நன்றி.

'பரிவை' சே.குமார் said...

புதுசா இருக்கு... பகிர்வுக்கு நன்றி அக்கா.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

M.R said...

ஆஹா அருமை

இந்த இனிப்புகளுடன்

என்னுடைய

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Anonymous said...

இன்ஷா அல்லாஹ் இதை பார்த்ததும் பனியார சட்டி சீக்கிரம் வாங்கனும்னு இருக்கேன்! சூப்பரா இருக்கு அக்கா

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும்

அருமையான குறிப்புகள்.

Vikis Kitchen said...

Very nice akka.

GEETHA ACHAL said...

நல்லா இருக்கின்றது சுண்டல்...

பணியாரம் அருமை....

ஸாதிகா said...

பெசரட் மாவில் குழிப்பணியாரம் செய்து அசத்திட்டிங்க.

கோமதி அரசு said...

பேசரட் குழி பணியாரத்தை பார்க்கும் போதே சாப்பிடும் ஆவலை தூண்டுகிறது.

கண்டிப்பாய் செய்து பார்த்து விடுகிறேன்.

ஆடி பூரத்திற்கு பச்சைபயறை முளைக்கட்டி அதில் வெல்லம் தேங்காய் போட்டு அம்மனுக்கு வைத்து சாப்பிடுவார்கள்.

உங்கள் பக்குவம் நல்லா இருக்கு.

Kanchana Radhakrishnan said...

very nice.

Shama Nagarajan said...

delicious...curry

தெய்வசுகந்தி said...

nice healthy recipe!!

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா