Monday, September 29, 2014

கிளங்கா மீன் பிரை - Lady Fish Fry





மெனு
1. பிளையின் சாதம்
2. சுறா மீன் சால்னா
3.சுறா மீன் புட்டு

4.கிளங்கா மீன் ஃப்ரை (Lady Fish Fry) 


தேவையான பொருட்கள்

கிளங்கா மீன்  (lady fish)-  400 கிராம்
உப்பு - ஒரு தேக்கரண்டி
தந்தூரி மசாலா - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னறை தேக்கரண்டி
லெமன் ஜுஸ் - ஒரு தேக்கரண்டி






செய்முறை

மீனை  தலையோடு சுத்தம் செய்து தண்ணீரை வடிக்கவும்.

மசலாவகைகளை சிறிது தண்ணிரில் கலக்கி மீனில் தடவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

ஒரு நான்ஸ்டிக் பேனில் எண்ணையை சூடு படுத்தில் மீனை போட்டு மொருவலாக பொரித்து எடுக்கவும்.


Lunch Menu - 1
இஸ்லாமிய இல்ல தாளி சாப்பாடு, மதிய உணவு,மீன் சாப்பாடு, மீன் தாளி

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, September 25, 2014

Latest New Model Burka,Hijab,Shela @ Chennai Plaza


சென்னை ப்ளாசா புர்கா/ஷேலா/மக்கானா/ஹிஜாப் /பர்தா



சிங்கபூர், சைனா,பஹரைன்,ஜப்பான் போன்ற ஊர்களில் வசிக்கும் தோழிகள்  அவர்களுக்கு பிடித்த டிசைனில் தைத்து அவர்கள் இந்தியாவிற்கு வந்திருந்த சமயம் அவர்களுக்கு அனுப்பி வைத்தோம்.அவர்களுக்கு மிகவும் திருப்தியாக அமைந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.


இந்தியாவில் பல இடங்களுக்கு விற்பனை செய்கிறோம். யாருக்கும் உங்கள் கடைகளுக்கு தேவைபட்டால் எங்களை கீழே உள்ள தொலை பேசி அல்லது ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும்.

2014 New Model Burka/Latest Collections


Web Burka



இந்த வருட பெருநாளுக்கு புது மாடல் புர்கா வகைகள் கீழே உள்ள வெப் மாடல் புர்காக்கள் சிலர் அனுப்பி கேட்டு கொண்டதால் தைத்து கொடுத்தோம்.





Web Burka



 புது மாடல் புர்கா வகைககள் @ சென்னை ப்ளாசா 



Q31 Kids Hijab


Square Type Shawl
Syrian & Italian Design




Shoulder to Hand Net Burka





B99 Cotton Shela


Q2 Fast moving Hijab




Model No:N106



கிழே உள்ள புர்கா வகைகள் கை வேலை பாடு கொண்ட புர்கா/ஃபர்தா வகைகள்.பல டிசைன்கள் இருக்கிறது சில டிசைன்கள் மட்டும் கிழே பதிந்துள்ளேன்.

 Latest Collections - Speeded Work Abaya Hand and Shela Design Available in wholesale and Retail
Design will be Hand and Shela (Duppatta) Only.














இன்னும் எங்கள் புர்காக்களை 

கீழக்கரை
முத்துபேட்டை
தஞ்சாவூர்
ராமநாதபுரம்
பரமகுடி
கோயம்புத்தூர்
நாகர் கோயில்
வல்லியூர்
மேலபாளையம்
மதுரை
கடலூர்
கும்பகோணம்
காயல் பட்டிணம்
கூத்தாநல்லூர்

பல ஊர்களுக்கு அவரவர் தேர்ந்தெடுத்த டிசைகளை அனுப்பி வைத்துள்ளோம்.

Price and other details please send us a message or
call us at +91 445566787 or Kamaluddin Dubai No(whatsapp): 00971 50 5453400

send an email to

chennaiplazaik@gmail.com (or) kamal10182@gmail.com or  Feedbackjaleela@gmail.com



Please Like and visit our - Chennai Plaza FB Page 

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975








https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, September 22, 2014

மிக்சி ப்ளேடும் குழந்தைகளும்.

குழந்தை வளர்பபு டிப்ஸ்கள் போட்டு வெகு நாட்கள் ஆகிறது, நிறைய டிப்ஸ்கள் இருந்தாலும் இப்ப எல்லாம் டைப் செய்ய சோம்பேறிதனம் .




இந்த மிக்சிக்கு வாஷர் இல்லை, வாங்குவதற்காக இதை எடுக்கும்போது தான் ஒரு டிப்ஸ் ஞாபகத்துக்கு வந்தது. 

சம்பவம்  : 1

ஒரு முன்று வருடம் முன் ஒரு வீட்டுக்கு சாப்பிட போகும் போது அங்கு ஒரு பெண் மடியில் அவளின் பெண் குழந்தை கையில் நாலு விரலிலும் கட்டு போட்டு போட்டு இருந்தது.

என்னவென்று கேட்ட போது. இப்ப தான் புதுசாக விட்டில் ப்லெண்டர் ,சாப்பர் செட் வாங்கி வந்து வைத்து  இருக்கிறார்கள், இப்ப உள்ள குழந்தைகள் தான் வெளியில் போய் வந்ததும் வாங்கி வரும் கவர்களை பிரித்து என்ன இருக்கு என்று பார்த்து அக்கு வேரா ஆணிவேர ஆக்கிவிடுகிறார்களே.
அவங்க அம்மா அதை பிரித்து எடுத்து வைப்பதற்குள் லபக்குன்னு பிளேட் உள்ள ஜாரை பிடிங்கி விட்டது, கையில் நாலு விரலும் வெட்டி இரத்தம் பீறிட்டு ஓடி இருக்கு , உடனே ஹாஸ்பிட்டலுக்கு தூக்கி போல் கட்டு போட்டு கூப்பிட்டு வந்து இருக்கிறார்கள்.


ஆகவே குழந்தைகள் உள்ள வீட்டில் ஷாப்பிங் சென்று வந்தால் இது கூர்மையான பொருட்கள் , கத்தி வகைகள், கத்திரி கோல் போன்றவை வாங்கி வந்தால் உடனே அதை கவனமாக குழந்தைகளுக்கு கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து விடுங்கள். பிறகு செய்யலாம் என்று விட்டு வைத்தால் வேண்டாத விபரீதம் உங்களுக்கு தான்.

இப்ப குழந்தைகள் எங்கே எங்க வீட்டில் பெரிய பிள்ளைகளே ( ஹனீஃப்)  கடைக்கு போய் அவங்க டாடி கவருடன் வந்தால் என்ன வாங்கி வந்து இருக்கீங்கன்னு நேராக கொண்டு வந்த கவர் பக்கம் தான் வருவான், பெரிய பிள்ளைகளுக்கே இப்படி இருக்கும் போது குழந்தைகளுக்கு எப்படி இருக்கும்.

கையில் விளையாடி கையை மட்டும் கிழித்து கொண்டது இதே கழுத்திலோ  எதிரில் வேறு குழந்தைகளுடன் விளையாடி இருந்தால் என்ன ஆகும் கொஞ்சம் யோசித்து பாருங்கள். பிள்ளைகளை வளர்ப்பது கண்ணாடி பாத்திரத்தை எப்படி பத்திரமாக பாதுகாப்போமோ அப்படி ஆகும்..



சம்பவம் – 2

போன வருடம் நான் ஊருக்கு போயிருந்த போது பக்கத்து வீட்டில் குய்யோ மொய்யோன்னு சத்தம் எல்லாரும் என்ன ஆச்சுன்னு ஓடி போய் பார்த்தால்  யு கே ஜி படிக்கும் சின்ன பையன், ஓடி கொண்டு இருந்த மிக்சியினுள் கை விட்டு விட்டான், விரல் வெட்டு பட்டு இரத்தம்.

அம்மா மிக்சி அரைக்கும் போது பையனுக்கு எப்படி வெட்டுபடும்.
ரொம்ப செல்லமாம், சமைக்கும் போது பக்கத்தில் சமையல் மேடை மீது உட்காரவைத்து தான் சமைப்பார்களாம், பக்கத்தில் மிக்சி அரைத்துட்டு திறந்து வைத்திருந்த போது ஓடவிட்டு கையை உள்ளே விட்டு விட்டான். பிறகு டாக்டரிடம் சென்று கட்டு போட்டு ரொம்ப நாட்கள் கழித்து சரியானது.

பிள்ளைகள் அடம் பிடிக்கிறார்கள் என்று பெரும்பாலும் அம்மா மார்கள் சமையலரையில் சமைக்கும் போது தொல்லை தாங்க முடியாமல் கூட  வைத்துகொண்டு  சமைக்கிறார்கள். இதனால் பிறகு பெரும் ஆபத்துகளை நீங்க சந்திக்கவேண்டிவரும் என்பதை மறந்து விடாதீர்கள்.

சம்பவம் 3
முன்பு என் தங்கை பையன் சில சமயம் மிக்சி திறந்து இருந்தால் ஆன் செய்து விட்டுட்டு ஓடிவிடுவான். அதில் உள்ள பருப்பு ,தேங்காய் எல்லாம் சிதறி சுவரெல்லாம் பருப்பு குளியலாகவும் பெயிண்ட் அடிச்ச மாதிரியும் இருக்கும்.

பிள்ளைகளுக்கு அது ஒரு ஆசை அம்மா ஏதோ மிக்சிய வச்சி விளையாடுகிறார்களே நாமும் விளையாடலாம் என்று, அம்மாமார்களே மிக்சி ,கத்தி, கத்திரிக்கோல், அயர்ன் பாக்ஸ், பெலென்டர் எல்லாம் பயன் படுத்துபவர்கள் உயரமான இடத்தில் பிள்ளைகளுக்கு எட்டாத இடத்தில் வைத்து பயன் படுத்துவது நல்லது.






https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, September 18, 2014

பச்சமிளகாய் , வெள்ளை உப்புமா - 1 - ஐய்யோ உப்புமாவா?



பேச்சுலர்களுக்கு முதல் சமையல் என்றால் முன்பெலாம் உப்புமா தான், ஆனால் அது சில பேருக்கு உப்புமாவான்னு காத தூரம் ஓடுபவர்களும்
 உ ண்டு. 
அது செய்கிற விதத்தில் செய்தால் அது உங்கள் பேவரிட்டாகிடும். 


வாரவாரம் வெள்ளி விடுமுறை முடிந்து மறுநாள் சனிக்கிழமை சமைக்க கொஞ்சம் இல்ல ரொம்ப வே சோம்பலாகிடும்.
அப்ப சட்டுன்னு ஒரு டிபன் என்றால் வெள்ள உப்புமாதான் , 
உப்புமா எல்லா ஒரு டிபனா அப்படின்னு நினைக்காதீங்க. லைட் டிபன் , சுலமாக செய்ய கூடியது.

ஆயத்த நேரம் -  5 நிமிடம்
சமைக்கும் நேரம்  - 7 நிமிடம்
பரிமாறும் அளவு - 2 நபருக்கு



தேவையான பொருட்ள்

ரவை - அரை டம்ளர் (100கிராம்)

தாளிக்க

பொடியாக அரிந்த வெங்காயம் - 3 மேசைகரண்டி
பொடியாக அரிந்த பச்ச மிளகாய் - 2
எண்ணை - 5 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு + கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
நெய் - - ஒருதேக்கரண்டி
வெண்ணீர்  - ஒன்னேகால் டம்ளர்
உப்பு - அரை தேக்கரண்டி
முந்திரி -  5 ( தேவைப்படால்)



செய்முறை

ரவையை லேசாக கருகாமல் அதே நேரம் சிவறாமல் வறுத்து ஒரு வாயகன்ற தட்டில் கொட்டி ஆறவிடவும். 2 நிமிடத்தில் வறுத்துடலாம், கொஞ்சம் தீய அதிகமாகமாக வச்சிட்டு அங்க இங்க பராக் பார்த்தீங்க அவ்வளவு தான் தீஞ்சே போய்விடும்.



பெரிய சட்டி அல்லது வாயகன்ற வானலி ( உப்புமா கிளற சின்ன பாத்திர எடுக்காதீங்க கொஞ்சம் பரவாலான சட்டியா இருக்கட்டும்.

எண்ணை ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளிக்கவும்.

வெங்காயம் சிவற கூடாது லேசாச வெள்ளை கலரில் வதங்கினால் போதும் தாளிக்கும் போதே பக்கது அடுப்பில் தண்ணீரை கொதிக்க வையுங்கள்.
ஒன்னேகால் என்று சொன்னதால் சரியா ஒன்னேகால் தண்ணீர் வைக்க வேண்டாம். கொதிக்கும் போது தண்ணீர் கொஞ்சம் வற்றும். அதுவும் இல்லாமல் கிளறும் போது உப்புமா கட்டி பிடித்தால் மேலும் ஊற்றி கிளற கூடுதல் வெண்ணீர் தேவைப்படும்.




இப்ப கொதித்து கொண்டிருக்கும் வெண்ணீரில் அளவில் குறிப்பிட்ட படி ஒன்னேகால் டம்ளர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். கொதி வெண்ணீர் ஊற்றியதால் சீக்கிரமே கொதி வந்துடும். இந்த ஸ்டேஜில் தீயின் தனலை குறைத்து விட்டு.  உப்பை தூவி விட்டு, தட்டில் வைத்திருக்கும் வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு ஒருகையால் துவி கொண்டே மறுகையால் கிளறுங்கள். சிறிது நெய்யை ஊற்றி மீண்டும்
கிளறி கெட்டி ஆகி கொண்டே வரும் போது அடுப்பை அனைத்து விடுங்கள்.
கொஞ்சம் அந்த சூட்டுட்டன் அடுப்பிலேயே இருக்கட்டும். 5 நிமிடம் தம் போல் அப்படியே விட்டு விடுங்கள். 5 நிமிடம் கழித்து கிளறி ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு தட்டில் தட்டினால் அழகான வடிவத்தில் வரும். கூட ஊறுகாய் , இல்லை வடை, வெங்காய முட்டை ஏதாவது ஒன்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
இதை காலை டிபன் என்றில்லை இரவில் கூட ஈசியான டிபனாக செய்து சாப்பிடலாம்.

இதில் தாளிக்கும் போது காஞ்சமிளகாய் இஞ்சி சேர்த்து தான் செய்வேன்,

இதில் வெரும் பச்சமிளகாய் சேர்த்து செய்துள்ளேன். பச்ச மிளகாய் வாசத்துடனும்  டேஸ்ட் அருமையாக இருக்கும்.





https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, September 15, 2014

நினைவலைகள்



ஊரின் நினைவலைகள் 


அஸ்ஸலாமு அலைக்கும் , தோழ , தோழியர்களே அனைவரும் நலமா? ஊர் சென்று துபாய் வந்து சேர்ந்து விட்டோம். இன்னும் ஊர் ஞாபாகமாகவே இருக்கு. அடிக்கடி மழை ஆகையால் எங்கும் போக முடியவில்லை.

( என்னாடா இது போய் வந்து ஒரு மாதம் ஆகபோகிறது இப்ப போடுகிறேன் என்று நினைக்காதீர்கள் முதலே போட்டு வைத்தது. படங்கள் ஏதும் சேர்க்கவில்லை அதான் கொஞ்சம் லேட்.)  ஊர் சென்று வந்த நினைவுகள் தான். கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வைத்து இருந்தேன், இப்ப தான் போஸ்ட் பண்ண முடிந்தது. 

பல வருடங்களுக்கு பிறகு எங்களுக்குன்னு கொடுக்கப்பட்டுள்ள புது வீட்டில் போய் இறங்கினோம். அல்ஹம்து லில்லாஹ்.


 இந்த முறை நோன்பு பெருநாள் எங்கள் இருவீட்டாருடனும் பல வருடங்களுக்கு பிறகு சிறப்பாக சந்தோஷமாக கொண்டாடியாச்சு. எப்போதும் துபாயில் பிள்ளைகளுக்கு ஜூலை ஆகஸ்ட் தான் லீவு வரும் ஆகையால் பெருநாள் கொண்டாட்டத்துக்கு ஊருக்கு செல்ல முடியாது. இந்த முறை தான் நோன்பு + பெருநாள் ஜூலையில் வந்துள்ளது, அதற்கும் மேல் எனக்கு ஆபிஸில் லீவு கிடைச்சது ரொம்ப பெரிய விஷியம். அல்ஹம்து லில்லாஹ் போய் வந்ததில், எல்லோருடனும் கழிந்த ஓவ்வொரு தருணமும் பொன்ன்னானது. மனசும் மிக மென்மையானது.

இரண்டு பக்கமும் போட்டோ எடுத்தால் எந்தபக்கம் பார்பப்தாம்? 


லாபிர். இமாத், பரீத் உடன் என் பையன் ஹனீபுதீன்.

ரொம்ப வருடம் கழித்து முதல் முறையாக நோன்பு திறக்க்கும் போதேல்லாம் நான் வித விதமாக நோன்பு கஞ்சி செய்தாலும் பள்ளிவாசலில் பல பேருக்கு செய்யும் நோன்பு கஞ்சியின் சுவையே தனி தான், பள்ளி வாசல் நோன்பு கஞ்சியையும் ருசி பார்த்தாச்சு .
பெருநாள் அன்று அனைவரையும் போய் சந்தித்தோம்.( என் பையனுக்கு ஒரே ஜாலி)
காலையில் பெருநாள் தொழுகை , மதியம் விருந்து.
மாலை எல்லா சொந்த பந்தங்கள் வருகை, குழந்தைகளுக்கு எல்லாம் பெருநாள் காசு கொடுத்தோம், அதை வாங்கும் போது குழந்தைகள் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை பார்க்கனுமே..



இரண்டு திருமணங்களுக்கு சென்றோம்.10.08.14 காலை  பாண்டிச்சேரியில் ஒரு திருமணம்,


அப்ப்டியே வர வழியில் மகாபலிபுரம் பீச் ஒரு விசிட் , வர வழியில் நல்ல மழை.




எனக்கு பிடிச்ச ஆள்வள்ளி(மரவள்ளி) கிழங்கு சிப்ஸ் வாங்கி சாப்பிட்டாச்சு. அடுத்து கரும்பு ஜூஸ்.




 இரவு ஒரு திருமணம், மிக அருமையான விருந்து.


மட்டன் பிரியாணி, எண்ணைகத்திரிக்காய், தயிர் பச்சடி, சிக்கன் 65
இடியாப்பம் , மட்டன் குருமா, பரோட்டா வெள்ளை குருமா, ப்ரட் ஹல்வா.

பிறகு கசாட்டா ஐஸ்கிரிம்.


அண்ணன் கூட போட்டோ எடுத்துக்குடாராம் சிரிப்பு தாங்க  முடியல சின்னவருக்கு


 கிளம்புவதற்கு, அடுத்த நாள் எங்க சாச்சி (சின்னடாடி, அவர்கள் இப்ப இல்லை)  விட்டில்   அவர்கள் மகன் Asif   திருமணம், ஆனால் கலந்து கொள்ள முடியல,

அதற்கு முன்னாடி நாள் , இஸ்லாமிய இல்லங்களில் திருமணத்துக்கு முன் மாப்பிள்ளை வீட்டில் மாலைகளம் என்று ஒரு சாப்பாடு வைப்பார்கள். 15.8.14 அதில் கலந்து கொண்டோம்.



பகாரா கானா, ஆலு கோஷ் குருமா, தால்சா, டுட்டி ஃப்ரூட்டி துல்லி/ கேசரி/ மிக அருமை. ஜாங்கிரி சாச்சி ஏ ஜலி ஊருக்கு போகிறாள் கூட இரண்டு ஜாங்கிரி சேர்த்து கொடுஙக்ள் என்று சொன்னார்கள்.




12.08.14 நாத்தனார் பட்டூரில் வீடு வாங்கி வாங்கி இருந்தார்கள். எல்லாரும் ஒன்றாக சேர்ந்து சென்று பார்த்து வந்தோம், வண்டியில் நாகூர் ஹனிபா பாட்டு கேட்டு கொண்டே வந்தோம். வீட்டுக்கு வந்து நாத்தானார் வீட்டில் அருமையான பிரியாணி , சிக்கன் 65 தயிர் சட்னி, எண்ணைக்காய்.


மாமனார் வீட்டில் ஊருக்கு கிளம்பும் முன் வீட்டில் ஒரு சின்ன கெட்டுகெதர்.






இந்த முறை அன்னுவை தவிர யாரையும் சந்திக்க முடியவில்லை. ஸாதிகா அக்கா , மர்லி, நாங்க முன்று பேரும் சந்திக்க எண்ணினோம் ஆனால் சந்தர்ப்பம் அமைய வில்லை.
 ஸாதிகா அக்கா, கதீஜா, மும்தாஜ், மர்லி, ஆஷிக்தம்பி , சிராஜ் தம்பி  ஆகியோருடன் போனில் பேசி கொண்டேன்.


இங்குள்ள தோழிகள் எங்க Chennai Plaza சென்னை ப்ளாசாவில் ஆர்டர் செய்து புர்கா ஹிஜாப் , ஷேலா வாங்கியமைக்கு மிக்க நன்றி.


மேலும் உங்கள் தோழிகளுக்கு யாருக்கும் தேவை பட்டால் சொல்லுங்கள் அனுப்பி வைக்கிறேன். அல்ஹம்து லில்லாஹ் இந்த முறை பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. எல்லா புகழும் ஏக வல்ல இறைவனுக்கே....

ஊரில் இருந்து திரும்பும் போது அன்புள்ளங்கள் வாங்கி கொடுத்தவை.. 


என் கணவரின் தம்பி ஆசையா வாங்கிகொடுத்த "தில் பசந்"





என் தங்கை பஷீரா வாங்கி கொடுத்த ஹாக்கின்ஸ் ப்ரஷர் குக்கர். அதில் அவள் பெயரையும் பதித்து கொடுத்து இருக்கிறாள். அப்ப தான் சமைக்கும் போதெல்லாம் அவளை நினைத்து துஆ செய்வேனாம்..



எங்க டாடி தங்கை மைம்பாத் தாத்தா , வீட்டில் போட்டு கொடுத்த நார்த்தங்காய் ஊறுகாய்.



என் ஆறவது நாத்தனார் லத்தி வீட்டில் காய்ச்ச மரத்து தேங்காய். 
இங்கு வந்ததும் உடனே வெட்டி துண்டு போட்டு ஃபீரிஜரில் வைத்து விட்டேன்.



அம்மா அன்பாக வாங்கி கொடுத்த மாம்பழம் 




தம்பி மனைவி இங்கு வந்து இறங்கியதும் சாப்பிட இனிப்பு சோமாஸ் கார சோமாஸ், பெட்டியில் வைத்து அழுத்தியதால் இப்படி இருக்கு.. இரண்டு நாள் வைத்து சாப்பிட்டு முடித்தோம்.


பெரிய நாத்தானார் இறால் வாங்கி சுருட்டி கொடுத்தாங்கள்.


இறால் பிரியாணி, இறால் காலிஃப்ளவர்  கூட்டு, இறால் சப்ஜி உப்புமா செய்து சாப்பிட்டாச்சு


என் தங்கை அனிசா செய்து கொடுத்த கறி முட்டை கொத்து பரோட்டா.என் பையனுக்கு ரொம்ப பிடிச்சி போச்சு.
எங்குவந்து முட்டை ரொட்டி ( முர்தபா ) செய்ய இருந்தேன், என் பையன் அனிசா ஆன்டி செய்தது போல் செய்து கொடுங்கள் என்றான்.



மேலபாளையம் ஸ்பெஷல் பாரம்பரிய இனிப்பு பணியம் , இது எனக்கு ரொம்ப பிடிக்கும்.இங்கு ஆபிஸில் ஓவ்வொருவரும் அவங்க அவஙக் பாரம்பரிய சிற்றுண்டியான , கேராளா ஸ்பெஷல் , உன்னி அப்பம், நேந்திரம் பழ சிப்ஸ், கீழக்கரை ஸ்பெஷல் தொதல், ஓட்டு மா,  மற்றும் சென்னை ஸ்பெஷல், மேலபாளையம் ஸ்பெஷல் திருநெல்வேலி ஹல்வா, கோதுமை பணியம், சீனி பணியம், சொய் (மடக்கு)பணியம் ஓட்டு மாவு ,  பிலிப்பை ஸ்பெஷல் ட்ரை மேங்கோ, என்று கொண்டு வந்து தரும் போது எனக்கும் ஸ்பெஷலாக இரண்டு பங்கு சேர்த்தே வரும் .

இந்த முறை ஊர் போய் வரும் போது , எனக்கு பிடிச்ச மேலபாளையம் ஸ்பெஷல் பணியம் ப்ரெஷ்ஷாகஆர்டர் செய்து வாங்கி வந்து எல்லாருக்கும் கொடுத்தேன். கூடவே ஆனந்த பவன் கார பூந்தி ஆளுக்கு ஒரு பாக்கெட்.




என் பையன் அவனுடைய நண்பர்களுக்காக டைரி மில்க் சில்க் அது ஊரில் மட்டும் தான் கிடைக்குமாம்  அதை வாங்கி வந்து கொடுத்தான்.





சென்னை ப்ளசா முக நூல் பேஜ் லைக் பண்ணாதவங்க லைக் கொடுங்க, உங்களுக்கு தெரிந்த வர்களுக்குஷேர் பண்ணுங்கள்,  

 , பெருநாள் நெருங்குகிறது. புது புது மாடல் புர்கா வகைகள் பர்தால் , மக்கான்னா , ஷேல ஷால் எல்லாம் வந்துள்ளது. தேவைபடுபவர்கள் சீக்கிறம் ஆர்டர் கொடுங்கள். என் மெயில் அல்லது என் முகநூல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் . துபாயில் இருந்து தைத்து அனுப்புவதால் 10 , 15 நாட்கள் ஆகும். எந்த ஊரில் இருந்தாலும் அனுப்பி வைக்கிறோம்.

feedbackjaleela@gmail.com
kamal10182@gmail.com
chennaiplazaik@gmail.com

என்ற முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/