Tuesday, October 13, 2009

முத‌ல் குழ‌ந்தையிட‌ம் இர‌ண்டாவ‌து குழ‌ந்தை ப‌டும் பாடுமுதல் குழந்தையிடம் இருந்து இரண்டாவது குழந்தையை காப்பாத்தி கொள்ளுங்கள்.


இந்த விஷியம் ஒரு மாதமாக மண்டைய குடைந்து கொண்டு இருக்கு, ஆனால் எனக்கு எப்படி எழுத என்று தெரியல.இது க‌விதை க‌ட்டுரையா, க‌தையா எழுத‌ வ‌ர‌ல‌, என் சொந்த‌ ந‌டையில் எழுதியுள்ளேன்.

நிறைய பெரிய பதிவு ஓவ்வொரு இடத்திலும் நான் பார்க்கும் சந்திக்கும், சிலர் பிள்ளைகளை பற்றி கூறி கவலை அடைவது அனைத்தையும் மனதில் கொண்டு தான் இந்த பதிவை போட்டேன், இன்னும் ஆச்சிரியபடும் விதத்தில் பல விஷியம் இருக்கு, இங்கு சிம்பிலா எழுதி யுள்ளேன், முடிந்தால் கோர்வையாக கோர்த்து அடுத்த பாகம் எழுதுகிறேன்.

எனக்கு 7 வருட பேபி கேர் பார்த்த அனுபவம் இருப்பதால், பிள்ளைகளின் பொல்லாத்தனத்தை யூகிக்க முடியும்.எல்லோருக்கும் கல்யாணம் ஆனதும் பிறக்கும் முதல் குழந்தையின் மேல் பாசத்தை கொட்டி சிலர் ரொம்ப செல்லம் கொடுத்து வளர்கின்றனர்.
சில வருடம் முன்று நான்கு வருடம் சென்றதும் அடுத்த குழந்தை பெறும் போது, முதல் குழந்தையிடம் உள்ள பாசம் குறைகிறது.
எப்படியும் முதல் குழந்தைக்கு பொறாமை வரும். புது டிரெஸ் வாங்கினால், பால் பாட்டில் வாங்கினால் கூட பொறாமையா இருக்கும்.
இது இப்ப லேட்டஸ்டா நடந்து கொண்டு இருக்கு,
யாரும் இல்லாத போது தூளியில் படுத்திருக்கும் குழந்தை மண்டைய இடிச்சி விடுவது, போய் கடித்து வைப்பது இது போல் எல்லாம் செய்கிறார்கள்.
என்னேரமும் கண் கொத்தி பாம்பு போல் பிள்ளைகளை கவனிக்க வேண்டியதா இருக்கு இப்ப உள்ள பிள்ளைகளை.
மடியில் வைத்து கொஞ்சினால் கூட அவர்களுக்கு பிடிக்காது. ஏதாவது சாமானை தூக்கி அடிப்பார்கள்.

எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் தம்பியை மட்டும் கொஞ்சுகிறார்களே என்ற  பொறாமையில் அவர்கள் வளர்ந்து ரொம்ப காலமாக பேசாமல் இருந்து கல்யாணம் ஆன  பிறகு தான் பேசிக்கொண்டார்களாம்.
இதேல்லாம் கேள்வி படும் போது எல்லோருக்கும் ஆச்சரியமாக தான் இருக்கும்.


அதே நேரம் முதல் குழந்தையையும் சரியான முறையில் ஆதரியுங்கள்.

என்ன வாங்கி கொடுப்பதாக இருந்தாலும் முதல் குழந்தைக்கும் சேர்த்து வாங்கி கொடுங்கள்.

பள்ளி செல்லும் பிள்ளையாக இருந்தால் ஒரளவிற்கு புரிந்து கொள்வார்கள் எடுத்து சொல்லுங்கள்.

இதே நிறைய வயது வித்தியாசம் இருந்து முதலில் பெண் அடுத்தது ஆண் என்றாள் அக்காவை போட்டு தம்பி மொத்துவது என்ன அவனுடைய புராஜெக்ட் வொர்க் அக்கா செய்து கொடுக்கவில்லை என்றால்.
 சில நேரம் கிரிக்கெட்  பேட் எடுத்து அடிக்க‌ போவது இப்படி எல்லாம் நடக்கிறது.

ஆனால் இடை வெளி உள்ள இரு ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகளுக்கும் கூட பொறாமை இருக்கும், ஆனால் அது ந‌ம‌க்கு தெரியாது,வெளியில் உள்ள‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளிட‌ம் பேச்சு கொடுக்கும் போது தெரிய‌ வ‌ரும்.

அம்மாமார்க‌ள் மிக‌வும் விழிப்பாக‌ இருந்து கொள்ளுங்க‌ள்.

16 கருத்துகள்:

KALYANARAMAN RAGHAVAN said...

யாருமே தொடாத சப்ஜெக்டை எடுத்துக்கொண்டு அருமையான பதிவை கொடுத்துள்ளீர்கள். நன்றிங்க ஜலீலா மேடம் .

ரேகா ராகவன்.

கவிதை(கள்) said...

இந்த நிகழ்வுகள் எனது வீட்டில் நடந்து கொண்டு இருக்கிறது. பெரியவனை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

நிதர்சனப் பதிவு

வாழ்த்துக்கள்.

விஜய்

LOSHAN said...

நல்லதொரு பதிவு.. பல பெற்றோருக்கு பயன் தரும்.

Jaleela said...

ரேகா மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு, உங்கள் பாரட்டுக்கும் மிக்க நன்றி.

Jaleela said...

இதேல்லாம் கொஞ்ச நாட்கலுக்கு தான் வளர வளர சரியாகிவிடும்.

Jaleela said...

Loshan வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

மாதேவி said...

நல்ல பதிவு.

பொதுவாக முதல் பிள்ளையிடம் நீதான் "மூத்த பிள்ளை" விட்டுக்கொடுக்க வேண்டும் எனக் கூறுவார்கள்.இதையே மற்றைய பிள்ளைக்கும் பழக்கிக் கொடுத்தால் பிரச்சனைகள் வருவது குறைவு.

நீங்கள் கூறியது போல இருவரையும் சமனாக நடத்தினால் புரிந்து கொள்வார்கள்.

sarusriraj said...

நல்ல பதிவு . சரியாக சொன்னீர்கள் , எங்க வீட்லையும் நடக்கும் ஆனால் என் சின்ன பெண் தான் விட்டு கொடுப்பாள்

Jaleela said...

மாதேவி வந்து கருத்து தெரிவித்து பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

Jaleela said...

சாரு ஆமாம் சில வீட்டில் சின்னபிள்ளைகள் விட்டு கொடுப்பார்கள், சாப்பாடு வைக்கும் போது நடக்கும் சண்டைகள் எல்லாவீட்டிலும் அதிகமாக காணலாம்.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

'அதே நேரம் முதல் குழந்தையையும் சரியான முறையில் ஆதரியுங்கள்."

குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட உங்கள் பதிவு மிகச் சிறப்பாக இருக்கிறது.

பல பெற்றோர்கள் இவற்றைப் புரிந்து கொள்ளாமல் குழந்தைகளைத் தவறாக வழிநடத்துவதை நான் பல முறை காண நேர்ந்திருக்கிறது

GND said...

அன்புள்ள ஜலீலா,
உங்கள் படைப்புகள் அனைத்தும் அருமையாக உள்ளது. உங்கள் சமையல் குறிப்புகள் எங்கள் வீட்டில் மிகவும் பிரபலம். இப்படியே தொடருங்கள். வாழ்த்துகள்.

Jaleela said...

டியர் GND உங்கள் வருகைக்கும், பராட்டுக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி/

vanavel said...

yes , this is one of the popular problems in all house.thank u for ur good tips

Jaleela said...

தங்கள் வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி,

ஆமாம் வானவில் எல்லோரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை.

ஸாதிகா said...

அவசியமான டிப்ஸ் ஜலி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா